கதையாசிரியர் தொகுப்பு: பா.ராமானுஜம்

9 கதைகள் கிடைத்துள்ளன.

புண்ணியம்

 

 அவ்வளவு பெரிய கடைக்குப் போகும் எண்ணமே ராகவாச்சார்யுலுக்கு இல்லை. அவரிடம் இருந்தது மூவாயிரம் ரூபாய்தான். மூவாயிரம் ரூபாய்க்குள் ஒர் உணவருந்தும் மேஜையை வாங்கமுடியுமா என்று அவருக்குத் தெரியாது; முடியாது என்றுதான் தோன்றிற்று. இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய மரச்சாமான் கடைக்குப் போய்த்தான் பார்க்காலமே என்று கிளம்பிவிட்டார். ஆனால் பெசன்ட் சாலை நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ‘ஃபர்னிச்சர் எம்பயர்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தார். என்னமோ தோன்றியது, இறங்கிவிட்டார். சாலையைக்கடந்து அந்தக் கடையின் முன்னால் நின்று பார்த்தபோது பிரம்மிப்பாக இருந்தது.


வேக்ஸினேஷன் வைபவம்

 

 ‘ஓ காட்!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. ‘இந்த ஜனசமுத்திரத்தில் இறங்கினால் நமக்குத் தடுப்பூசி கிடைக்கிறதோ இல்லையோ, கரோனா வைரஸ் கட்டாயம் கிடைக்கும். திரும்பிப் போயிடலாம், வாங்கோ.’ முகக்கவசத்தை ஒரு கையால் அழுத்திக்கொண்டு இன்னொரு கையால் திறந்த கார் கதவை மூடி கண்ணாடியையும் ஏற்றினாள். இருநூறு இருநூற்றைம்பது பேர்களை ஜனசமுத்திரம் என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த குறுகிய சந்தில் குடிசைகளுக்கு நடுவில் ஒரு தீப்பெட்டி மேல் இன்னொன்றை வைத்ததுபோல இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு


இதை என்னவென்று சொல்வது?

 

 காந்தி நகர் என்பது விஜயவாடாவில் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் ஒரு வணிக மையம். அங்கு லெபாக்ஷி காட்சி அறைக்கும் சதர்ன் க்ராண்ட் ஹோட்டலுக்கும் நடுவில் சுருக்கி மடித்துப் பொட்டலம் கட்டி வைத்தது போல இருந்தது அந்தப் பழங்காலத்துக் கட்டிடம். அதைச்சுற்றி அடர்த்தியான கிளைகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த கொண்டசிந்தா மரக்கூட்டங்கள் ஏற்கனவே சிதைந்துகொண்டிருந்த அக்கட்டிடத்தின்மீது ஆக்கிரமிப்பதுபோல கிளைகளைப் பரப்பி விரித்திருந்தன. நான் அந்தக் கட்டிடத்தையோ, மரவரிசையில் செருகப்பட்டதுபோல் இருந்த அதன் சிறிய நுழைவுவாயிலையோ முதலில் கவனிக்கவில்லை; கார் உள்ளே


பெருந்தேவிக்கு பி.ஜி.உடௌஸ் வேண்டாம்

 

 அப்பாவும் நானும் நண்பர்கள் போல்தான் பழகியிருக்கிறோம். இருந்தாலும், ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லும்போது ஏதோ வந்து தடுக்கிறமாதிரி இருந்தது. நானும் அவரும் சொந்த விஷயங்களைப்பற்றிப் பற்றிப் பேசும்போது அநேகமாக எப்போதும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். ஆனால், ஏனோ தெரியவில்லை, இந்த விஷயத்தை இங்கிலீஷில் சொன்னேன். சொல்லும்போது எனக்கே அது ஓர் அந்நிய விஷயம் மாதிரி கேட்டது. என்னுடைய சங்கடம் அப்பாவுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் புன்னகைத்தார். ‘என்ன பெயர்?’ என்று தமிழில் கேட்டார். ‘பெருந்தேவிப்பா. எல்லாரும்


சீதுரு

 

 ‘டேய், உம் பேர் என்ன?’ வழிந்து விழுந்த மூக்குக் கண்ணாடிக்கு வெளியே கண்ணை வைத்துப் பார்த்துக் கேட்டார் தலைமையாசிரியர் துரைசாமி அய்யங்கார். ‘சீதுரு.’ சொல்லிவிட்டுப் பையன் தன் அப்பனைத் திரும்பிப் பார்த்தான். கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பையனின் தகப்பனாரைப் பார்த்தார் தலைமையாசிரியர். ‘சீதுரு, சாமி,’ வாயெல்லாம் பல்லாகச் சொன்னான் கோதண்டம். ‘சீதுருவா? அப்படியெல்லாம் பேர் இருக்காதுடா. சரியாச் சொல்லு.’ ‘சீதுருதான், சாமி. பெரியய்யிரு பேரனுக்குக்கூட அதாம் பேரு. அதைப் பாத்துதான் வெச்சேன். அது தாம்பரம் கிஷ்டங்காலேஜிலே படிக்குது.


இதினிக்கோ

 

 ‘டேய், முந்திரியையும் திராட்சையையும் நெய்ல இதினிக்கோ.’ நான் குரல் வந்த திசையில் பார்த்தேன். ராஜப்பா வாத்தியார்! இலை இன்னும் போட்டாகவில்லை. முஹுர்த்தத்துக்கே இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனால் நாங்கள் ஏழெட்டு நண்பர்கள் — சேஷாசலம் ஒருவனைத் தவிர மற்ற எல்லோரும் தேனாம்பேட்டை ஏ.ஜி.ஸ். அலுவலகத்திலும் எல்.ஐ.சி.யிலும் வேலை செய்பவர்கள் — சீக்கிரம் கிளம்பிப் போயாகவேண்டும் என்பதால் எங்களை மட்டும் டைனிங் ஹாலுக்கு அழைத்து வந்திருந்தான் கிச்சாமி. கல்யாணப்பெண்ணின் சித்தப்பா அவன்; பதினோரு வகுப்பு வரை எங்களோடு


யார் பைத்தியம்?

 

 முதல்வர் அருளானந்தம் தன வழக்கமான சுற்றுக்களை முடித்துக்கொண்டு திரும்பவும் அறைக்குள் நுழையுமுன் கல்லூரி வளாகத்தை இன்னொருமுறை பெருமையுடன் பார்வையிட்டார். பெருமைப்படுவதற்கு அவருக்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. அவருடைய பத்து வருட தலைமைப் பொறுப்பில் ஏ.சி.எம். கல்லூரி அதற்கு முன்பு எப்பொழுதும் காணாத ஒரு வளர்ச்சியை அடைந்திருந்தது. இந்தியா டுடே, எஜுகேஷன் வேர்ல்ட் மதிப்பீடுகளில், கலைக் கல்லூரிகளில் மாநிலத்தில் முதல் இடம், நாட்டில் முதல் பத்து இடங்களில் ஒன்று என்ற தரவரிசையைக் கடந்த மூன்று வருடங்களாகத் தக்க வைத்துக்கொண்டிருந்தது.


இந்திய கலாச்சாரம்

 

 “…. அது தான் இந்திய கலாச்சாரம்; இந்தியன் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியத்திலும் வெளிப்படும் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை வழி. அதை விளக்கிக் கூற வாய்ப்பளித்த கலிபோனியர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.” முகுந்தன் கூட்டத்தினருக்குக் கைகூப்பிவிட்டுப் பெருமிதத்துடன் மேடையை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு மணி நேரமாக ‘மெஸ்மரைஸ்’ ஆனது போல நிசப்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் எழுப்பிய கரகோஷத்தால் அந்த வெஸ்ட்லேக் ப்ளாஸா அதிர்ந்தது. “அற்புதம், மிஸ்டர் முகுந்தன்! இந்திய கலாச்சாரத்தை இதைவிடத் தெளிவாக எங்களுக்கு


வேர்கள்

 

 “அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று அங்கலாய்த்தான் அளவுகார ராமசாமி நாயக்கன். தாத்தா வரதாச்சார், கொள்ளுத் தாத்தா சடகோபாச்சார் மற்றும் ஆசூரி பரம்பரையே பட்டாச்சார்களாக இருந்து கைங்கர்யம் பண்ணிவந்த கருமாணிக்கப் பெருமாள் கோயிலை மூடிவிட்டார்கள். அர்ச்சகம் பண்ண ஆள் இல்லை. ஊரில் இருக்கும் பிராமணர்களுக்கு மனதில்லை; வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதற்கும் முன்வரவில்லை. ஏனென்றால், கோயிலுக்கு வரும்படி ஒன்றும் அதிகம் கிடையாது. ஆகவே