கதையாசிரியர் தொகுப்பு: சிவதீபன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

புலியூரும் புளியூரும்

 

 “ஐயா!! ஐயா!!” என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் “உங்கள தேடி பெரிய பெரிய ஐயமாருங்களாம் வராங்க” என்றான் “என்னது!! ஐயமாருங்களா?? என்ன தேடியா, என்னடா சொல்ற?” என்றபடி அவர் வாசலில் வந்து எட்டி பார்த்தார், இதென்ன அதிசயம்!! இத்தனை ஐயமாருங்க எதுக்கு இங்க வராங்க!? என்று கருதியவராய் தம் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொண்டார், உச்சிகுடுமியும் உத்தரீயமும் கச்சங்கட்டிய வேட்டியும் முண்டத் திருநீற்று


இரத்தப்படுக்கை

 

 தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன் கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்தனன் போலும், பொழுது புலராத அந்த வேளையில் தீக்ஷிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்பாய் விவாதித்து கொண்டிருந்தனர், அந்த அதிகாலை வேளையிலும் சீக்கிரமாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு ஈரக்கைகளுடன் மடிசார் சரசரக்க சில பெண்களும் வந்து கூடத் தொடங்கினர், எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!என்று


ஏது காரணம்!? ஏது காவல்!?

 

 புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின் எல்லை பகுதியாக இருந்தது, மக்கள் வசிக்கும் ஊர்புறங்களும் கூப்பிடும் தூரத்திலேயே இருந்தது, அவர்களது கூட்டத் தலைவருக்கு தனிக்கூடாரம் அடித்திருந்தார்கள் அவரது மெய்காவலர்களும் பணியாளார்களும் இன்று அதிகாலையிலேயே எழுந்து புறப்பாட்டுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் அப்பொழுது தொண்டர்கள்


பித்து

 

 நீ பார்த்துள்ளாயா!? நீ அறிவாயா!? என்று ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர், மக்களின் ஆச்சர்யம்தான் கட்டுங்கடங்காமல் இருந்தது, பிறந்து வளர்ந்தது முதல் இந்த ஊரையே தாண்டிபோகாத பல முதியவர்கள் கூட வாயில் விரல் வைத்து யோசித்து பார்த்தனர், ஒருசில வாய்ச்சொல் வீரர்களான முதியவர்களே!! சிற்சில பொய்மொழிகளையும் கூறிக் கொண்டிருந்தனர் “முன்பு நம்ம ஊர் வடக்கு தெருவில் இவர் வசித்தது உண்மைதான் பின்பு சிதம்பரம் பக்கம் போய்விட்டார்!” என்று அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் அது அப்பட்டமான


அஸ்வத்தாமா

 

 அன்னைக்கு நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு!!, சில கனவுகள் உண்மையாகவே நடந்தது மாதிரி இருக்கும், ஆனால் கண் விழித்ததும், “ச்ச!! கனவு!!” என்று சலித்து கொண்டு அதனை மறந்து விடுவோம்!! ஆனால் அன்னைக்கு எனக்கு நடந்த அனுபவம்!! அதிலும் அந்த பெரியவரின் பேச்சும் தோற்றமும் மறக்குற மாதிரியா இருந்தது!!? அது கனவா!? நனவா!? எதுவும் யோசிக்க விரும்பல, அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையே பெரிய மாற்றத்தை அடைஞ்சிருச்சி!! அன்னைக்கு அந்த சம்பவம் நடந்ததுலருந்து இரண்டு


செப்பேடு

 

 கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு கைலாசமுடைய நாயனார் என்னும் மகாதேவர் கோயிலின் வாசலானது அந்த அதிகாலை வேளையில் கூட்டமாய் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அந்தணர்கள். அங்கு இருந்த சிறு கல்மேடையில் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். நெற்றியில் திருநீறுபூசி மார்பின் குறுக்கே யங்கோபவீதம் என்னும் பூணூலோடு கழுத்தில் பெரும்பாலானோர் தங்கநகைகள் அணிந்திருக்க ஓரிருவர் உருத்திராட்ச மாலைகளும் அணிந்திருந்தனர். கைலாசமுடைய நாயனாருக்கு உஷத்கால பூஜை


மங்கார்னன்

 

 சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர் வளநாட்டு திருசெம்பொன்பள்ளி கூற்றத்திற்கு தென்திசையிலும் திருக்கடவூர் கூற்றத்துக்கு மேல் திசையிலும் இருக்கும் மேலமாத்துர் கிராமத்திற்கு கிழக்கு திசையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறியகுடிசைக்குள் நுழைகிறோம். உள்ளே கணவன் மனைவி என்று வர்ணிக்கதக்க வகையில் இருக்கும் இளம் தம்பதியினரான ஆணும்பெண்ணும் அமர்ந்து உரையாடி கொண்டிருகின்றனர். அந்த ஆண்மகனின் பெயர் அரனையான். கறுத்த நிறத்தில் கட்டிளம் காளையென


முற்பகல் செய்யின்…

 

 புடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டார் பூசம். குளிர்ச்சியான காற்றுடன் சன்னமான தூறலும் சேர்ந்து கொண்டு நடுக்கியதால் டீ குடிக்க வேண்டும் போல இருந்தது அவருக்கு. இன்னும் ஒருமணி நேரமாவது கடந்தால்தான் பால்காரன் வருவான், பிறகு அரைமணி நேரம் கழித்துதான் மறுமகள் எழுந்து வந்து டீ போட துவங்குவாள். ஒடுக்கு டம்ளரில் அது கைக்கு வரும்போது மணி ஏழரையை தொட்டுவிடும் ஆனால் அஞ்சு மணிக்கெல்லாம் மண்டைகுளிர் தெறிக்கிறமாதிரி டீ குடிக்கிறதுதான் பூசத்துக்கு பிடிக்கும். “ம்ஹும்… அதெல்லாம் ஒருகாலம்” என்று