கதையாசிரியர் தொகுப்பு: கே.விஜயன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கால்கள்

 

 கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான். அவன் கால்களை நீட்டிய போது இடது கால் பெருவிரலை கௌவுவது போல் பற்றிக் கொள்ளும் பார்வதி, இழுத்து அதனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டாள். கிருஷ்ணனின் முகம் வேதனையில் பொங்கி வாடிக்கிடக்கிறது. பற்கள் நெரிபட கண்கள் மூடுண்டு, இமைகள் அழுந்திக் கிடக்க, சகிப்புடன் ‘மறுசூடு எப்பொழுது விழும்’ என மனம் துடிக்கிறது. ஆணி குத்திய இடத்தின் அடிபாகத்தில் முதல் சூட்டை வைத்த நேரத்தில் சுளீரெனச் சதையைப் பியத்துக் கொண்ட


அப்புவின் கடிதம்

 

 அப்புவின் வாழ்க்கை ஒரு புதுக் கவிதையாகும். கிழக்கில் வெள்ளியின் துளிர்கள். அவன் எழுவான். காளி பூஜை. நெசவாலை சங்கின் அலறல். குடுகுடுவென ஓட்டம். பொய்லர்களின் அக்கினி முகம். சவளும் கையுமான போர் ஜீவப் போர்.. வியர்வைத் துளிகள் இரத்த மலர்களின் உதிர்வு ஓ… மாலைப் பூஜை. அவன் வாழ்க்கை இப்படித்தான் கரைகின்றது. கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருடங்கள். கடந்த காலத்தின் மரண குறிப்புகள். இன்று காலையில் வேலைக்குப் போனான். சந்தோஷமாகத்தான் போனான். அவனுடைய அத்தியந்த நண்பர்கள், சகோதரர்கள்,


கடிதம்

 

 சுந்தா! சுந்தா! குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது. இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது? மனுஷன்ட உசுறு போவுது’ மனதிற்குள் வெறுப்பும் கசப்புமாகச் சொல்லிக்கொண்ட சரஸ்வதியம்மாள் “அடியே! நாசமா போறவளே! என்னடி செய்யுராய்? அந்த புது டவுல எடுத்துக் கொண்டு வா…” சர்ப்பத்தின் சீற்றமாக குரல் பறக்கிறது. சுந்தாவின் சந்தடி இல்லை. அந்த விசாலமான பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் புயலென சென்ற சரஸ்வதியம்மாளின் அலறல், எதிரொலியாகத் திரும்பியதே தவிர, சுந்தாவின் பதில்


கனவான் அவதாரம்

 

 சுவர்க்கடிகாரம் நான்கு முறை ஒலித்து ஓய்ந்தது. கந்தசாமி பதறியடித்துக் கொண்டு எழும்புகிறார். ‘கடவுளே கடவுளே மணி நாலாயிற்றே’ என்று குழறிக் கொண்டு ‘பட் பட் ‘டென நெற்றியில் நாலு குட்டுகளுடன் குளியலறைக்குத் தாவுகிறார். குழாயைத் திறந்தார். சளசளவென பீச்சியடித்த தண்ணீரில் காக்காய் குளியல். மனிதவுரிமை சங்கத்தின் கூட்டம் நாலரை மணிக்கு. சமூக சேவா மினிஷ்டர் திருமதி… வருவதாகத் தகவல். கூட்டத்தில் பேசுவதற்காக அருமையான சொற்பொழி வொன்றினை தயார் செய்து ஒத்திகை செய்து கொண்டிருந்த போதுதான் மத்தியானச் சாப்பாட்டின்


அன்னையின் நிழல்

 

 மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம் துயில்கிறது. கிழக்கின் விளிம்பில் வெளிச்சக்கோடுகள் கோலமிடாத போதிலும், பட்சி ஜாலங்களின் ஆர்ப்பரிப்பு முதிர்ச்சியடைந்த இரவின் அமைதி உதிர்ந்து கொண்டிருக்கின்றது. வீதியின் ஓரமிருந்து உட்புறம் நோக்கிச் செல்கின்ற ஒரு குறுகலான சேற்றுப் பாதை, நதிக் கரையோரம். கறுத்த ஜலதாரை தொங்களில்….! பலகைச் சுவர்களைக் கொண்டு நெரிசலாக கல்லறைகள் போல் காட்சியளிக்கும் குடிசைகள். கதவை வேகமாக மூடிவிட்டு, வெளியில் வந்து வாசலில் அதிர்ச்சியடைந்தவளாக நிற்கிறாள் றெஜினா மாமி. மனக்கடலில் கொந்தளிப்பு. தலையை அணைக்கும்