றிப்போட் தயாரிப்பது எப்படி?
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 347
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாணவர்களால் மாணவர்களுக்காக நடாத்தப் படும் ‘மாணவன் குரல்’ பத்திரிகையில் ‘றிப்போட்’ தயாரிப்பது எப்படி? என்ற நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரைதான் கீழேயுள்ளது:-
‘ஆசிரியரை ஏமாற்றுவது எப்படி?’ ‘பாடசா லைக்குக் கள்ளம்பண்ணுவது எப்படி?’ ‘கொப்பி’ அடிப்பது எப்படி?’ முதலிய நூல்களை எழுதி ஏராளமான மாணவர்களது பெருமதிப்பைப் பெற்ற மாணவ கண்பன்’ தான் ‘றிப்போட் தயாரிப்பது எப்படி?’ என்ற இந்த நூலையும் ஆக்கியுள்ளார். நூலாசிரியர் தனது அனுபவத்தையும் ஆராய்ச்சித் திறனையும் இதில் நன்கு கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.
“பல மாணவர்கள் தங்கள் ‘றிப்போட்’ பத்தி ரத்தைப் பெற்றோர்களுக்குக் காட்டத் தயங்குவதையும், ஏதாவது காரணம் சொல்லிக் காட்டாது விட்டாலும் பாடசாலைத் தொடக்கத்தில் பெற்றோரின் கையொப்பத் துடன் ஆசிரியர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொல்லை அவர்களுக்குக் காத்திருப்பதையும் கண்டு மனம்பொறுக்காது இதை எழுதினேன்” என ஆசிரியர் தனது முன்னுரையில் கூறியிருப்பது அவரின் இரக்க சிந்தையையும், மாணவர்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையையும் காட்டுகிறது.
இந்நூல் பத்து முக்கிய தலையங்கங்களாக வகுக்கப்பட்டுள்ளது. எல்லாத் தலையங்கங்களும் நன்றாக அமைந்திருப்பினும் ‘றிப்போட் பெறுவது’, ‘பிறரைப்போல் எழுதுவது,’ ‘எழுத்தை அழிப்பது’ முதலியன நூலுக்குச் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளன.
‘றிப்போட் பெறுவது’ என்ற தலைப்பின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ‘றிப் போட்’ டை ஒன்றும் எழுதாமலேயே புதிதாக (அதாவது அச்சு எழுத்துக்கள் மட்டும் உள்ளவை) அப் பாடசாலையிலிருந்து தந்திரமாகக் களவாடும் வழி கூறப் பட்டுள்ளது. இப்படியாகப் பெற்ற ‘றிப்போட்’ டை வைத்துக்கொண்டு ‘பிறரைப்போல் எழுதுவது’ என்பதன்கீழ் சொல்லப்பட்டிருப்பதைக் கையாண்டு ஒரு மாணவன் தானாகவே ‘றிப்போட்’ தயாரித்துப் பெற்றோர்களை ஏமாற்றலாம். பின் பாடசாலையால் வழங்கப்பட்ட ‘றிப்போட்’டில் பெற்றோர்களின் கையொப்பத்தைப் போடலாம். ‘எழுத்தை அழிப்பது’ என்னும் தலைப்புமூலம் ‘றிப்போட்’ களவாட முடியாதவர் களுக்கும் பிறரைப்போல் எழுத நன்கு கைவராதவர் களுக்கும் வழி கூறப்பட்டுள்ளது. எப்படியெனில், ‘றிப்போட்’டிலுள்ள எண்களைமட்டும் அழித்துவிட்டு வேறு எண்களை எழுதிப் பெற்றோர்களுக்குக் காட்டலாம். பின் அதை அழித்துவிட்டு பழைய எண்களையே மீண்டும் எழுதிப் பள்ளிக்கூடத்தில் கொடுக்கலாம்.
பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தேர் வில் வெற்றி பெற்றால் போதாது; கூடிய புள்ளிகளும் எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதுதவிர அநேகமாகப் பிள்ளைகள் விடுமுறை நாட் களில் பெற்றோர்களிடமிருந்து அடி, உதை, திட்டுகள் வாங்காது தேர்வில் வெற்றிபெற்றதற்கான பரிசுகளை வாங்குவதும்; விடுமுறை நாட்களை உல்லா சமாகப் போக்குவதும் ‘றிப்போட்டி’ லேயே தங்கியி ருக்கிறது. இப்படியான பிரச்னைகளுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கும் மாணவர்களுக்கு இந்நூல் தற்காலிகமாக வேனும் உதவும் என்பது நமது நம்பிக்கை.
இந்நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ‘றிப்போட்’ தயாரிப்பதற்கான பொருட்களின் பட்டியல் அவைகளின் விலைகள், அவைகளைப் பெறக்கூடிய இடங்கள் ஆகியவை மாணவர்கள் இந்நூலை எழிதில் பின்பற்ற வழிகாட்டுகிறது.
இந்நூலில் ஆங்காங்கே காணப்படும் எழுத் துப்பிழைகளையும் சொற்பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் மறுபதிப்பில் தவிர்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மாணவர்களின் முடிவிற்கே விட்டுவிடலாம்! மொத்தத்தில் இந்நூல் மாணவர்கள் கைகளில் தவறாது இருக்கவேண்டிய ஓர் அரிய நூலாகும்.
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
