சினிமாப் பித்தன் செல்வராசன்!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 349
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வராசன் பார்க்காத சினிமாப்படங்களே இல்லையெனலாம். சினிமாப்படங்கள் ‘சென்சார் போட்’ டுக்குத் தப்பினாலும் தப்பலாம்; ஆனால் நமது செல்வராசனுக்கு அவை தப்பமுடியாது. அவன் எல் லாச் சினிமாப் படங்களையும் பார்ப்பது மட்டுமல்ல, அவைகளைப் பல தடவைகளும் பார்ப்பான்.
செல்வராசனுக்குத் தெரியாத சினிமா நடிகர் கள், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கதை வசன கர்த்தாக்கள் என்று யாருமே இல்லை. அவர்கள் எல்லாருடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறுகள் யாவற்றையும் அவன் தெரிந்து வைத்தி ருப்பதுடன் அவர்களது புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறான். அவர்கள் எல்லோருடனும் அவன் கடிதத் தொடர்புகளும் கொண்டிருக்கிறான். இதில் பாதி வெற்றி, பாதி தோல்வி!
சினிமாப் படங்களைப் பார்ப்பதுடன் செல்வராசன் நின்றுவிடமாட்டான். சினிமாப் படங்களைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பான்; குறைந்தது தினசரி ஆறுதடவைகளும் சனி ஞாயிறு பத்துத் தடவைகளும் சினிமாபற்றி யாரு டனாவது உரையாடாவிட்டால் அவன் அன்றைய நாளை அவமாகப்போன நாள் என்றே கருதுவான்.
செல்வராசனுக்குப் பக்கத்தில் இருந்து சினிமா பார்ப்பதென்றால், அதைவிடத் தொல்லை வேறொன்று மில்லை. கதாநாயகனின் பெயர் காட்டும்போது-கதாநாயகனை முதல் முதல் காட்டும்போது கதாநாயகி ஆபத்தில் சிக்கிய நேரத்தில் கதாநாயகன் அங்கு திடீ ரென்று தோன்றும்போது- கதாநாயகன் சண்டைக் காக கொடுக்கிழுத்துக் கட்டும்போது- கதாநாயகன் வில்லனுக்குக் கொடுக்கும் ஒவ்வோர் அடியின்போது- அவன் கைதட்டி விசிலடித்து ஒரே ஓலமிடுவான். அதுமட்டுமா? அடிக்கடி “இந்தா புலி வரப்போகுது,” ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் எம். ஜி. வருவார்” “இதிலைதான் காதல் காட்சி இருக்கு,” “சரோசாதேவி யின் பாட்டொன்று இனித்தான் வரும்” என்றெல்லாம் அலட்டியபடியும் இருப்பான்.
எந்த சந்தர்ப்பமானாலும் யாராயிருந்தாலும் அங்கு செல்வராசன் இருந்தால்-அவன் பேசவேண்டி வந்தால் – அது சினிமாவை அடிப்படையாகக் கொண்ட உவமைகள், எடுத்துக் காட்டுகளுடன்தான் வெளியாகும்.
“ஓ அவரா? அவர் நல்ல அழகனாயிற்றே! உடம்பு எம்.ஜி.ஆரைப்போல இருக்கும். முகவெட்டு நம்ம ராஜேந்திரன் மாதிரியே இருக்கும். தலை நெளி வெல்லாம் சரியா ஜெமினியைப்போல்தான் இருக்கும். நிறம் முத்துராமனை அப்படியே ஒத்திருக்கிறது. ஆனால் குரல்தான் கொஞ்சம் எம். ஆர். ராதாவைப்போல் கர கரப்பாக இருக்கும். ”
“அவளுக்கென்ன குறை? பத்மினியை உரித் துப் படைத்தமாதிரி இருக்கிறாள். துடுக்குத்தனத்தை யும் கோபம் வந்தால் முகம் படுகிறபாட்டையும் பார்த் தால் அசல் பானுமதிதான்! ஆனால் உருவம்தான் வர வரக் கொஞ்சம் அங்கமுத்துபோல வரப்பார்க்கிறது”.
“அடியென்றால் சரியான அடிதான், ‘பொலீஸ் காரன் மகளி’ல் அவன் சகஸ்ரநாமம் விஜயகுமாரியைப்போட்டு அடி அடியென்று அடித்தானே தெரி யுமா? அதுமாதிரித்தான் நடந்தது.”
பத்திரிகை படிக்காதவர்களுக்கும் படிக்கத் தெரியாதவர்களுக்கும் செல்வராசன் சினிமா விமர்சக னாகவும் விளங்கிவருகிறான். பலர் அவனிடம் “இப்பொழுது ஓடுகிற படங்களில் எது நல்லது?” என்று அபிப்பிராயம் கேட்பார்கள். அதற்கு அவன் ஓடுகிற படங்களில் நல்லதைச் சொல்லி அதிலுள்ள சிறப்பு அம்சங்களை விவரித்து, அது சென்னையில் எத்தனை வாரங்கள் ஓடின என்ற குறிப்புகளையும் கொடுத்து உதவுவான்.
பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கர் சினிமா ஒழிப்புப் பிரசாரம் செய்தபோதும், பிலிம் கட்டுப் பாட்டை இந்திய அரசாங்கம் மேற்கொண்டபோதும், அவைகளைக் கண்டித்து, சம்பந்தப்பட்டவர்களுக்குக் காரசாரமான நீண்ட கடிதங்களை முதலில் எழுதிய பெருமை நமது செல்வராசனுக்கே உண்டு.
இப்படியாக, சினிமாவே பேச்சாக, சினிமாவே மூச்சாக சினிமாவிலேயே ஊறித் திளைத்த செல்வராச னைச் சினிமாப் பித்தன் என்று அழைப்பதில் என்ன தவறிருக்கப்போகிறது?
“என்னகாணும் ‘பாவைவிளக்கிலே’ சிவாசி கணேசன் யோசித்து யோசித்து எழுதிக்கெண்டிருந்த மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறீர்களே!”
நிமிர்ந்து பார்த்தேன் “ஓ… நம்ம செல்வராசனா? வாருங்கள் வாருங்கள்.”
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
