நாரதர் தூது!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 343
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[1964ம் ஆண்டில் இலங்கையில் – அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மாரி பொய்த்து நாடு வரண்டு வழங்குன்றியது. அப்பொழுது யாழ்ப்பாண மக்களுக் காக இரங்கி நாரதர் வருணனிடம் தூது சென்ற கதைதான் இது!]
“ஹலோ நாரதரா? வருக வருக! எங்கி ருந்து வருகிறீர்? என்ன காரணமோ!” என்றார் வருணபகவான்.
“நேரே பூலோகத்திலுள்ள – ஆசியாவிலுள்ள சிலோனிலுள்ள – யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறேன். காரணமில்லாமலா வருவேன்? அவ்வூர் மழையின்றி வரண்டுபோகிறது. ‘வெல்’லுகளுக்குள்ளேகூட ‘வாட் டர்’ வற்றி வருகிறது. நெற்பயிர் எல்லாம் நாசமாகி விட்டன. மக்களெல்லாம் வரப்போகும் பஞ்சத்தை எண்ணி எண்ணி நெஞ்சம் நொந்து வாடிப்போய் இருக்கிறார்கள். அடுத்த விதைப்புக்கு விதைநெல்லுக் குக்கூட மக்கள் தவிக்கப்போகிறார்கள். இதனால் இவைகளெல்லாவற்றிற்கும் காரணமான உன்னை மக்களெல்லாம் இரக்கமற்ற அரக்கனெனத் திட்டு திட்டெனச் சதா திட்டியவாறு இருக்கிறார்கள்…”
“ஊம்…” என்று அசட்டையாகப் பெருமூச் செறிந்தார் மழைக்கடவுள்.
“உண்மையில் உனக்கு இரக்கமென்பது இல்லைத்தானா? மக்களின் வேதனையைப் பார்த்து விளை யாடிக்கொண்டிருக்கிறாயே! அப்பாவி மக்களின் வயிற் றில் மண்ணை அள்ளிப்போடாதே. உன் கடமையைச் செய். மாதம் மும்மாரி பெய்யத்தான் உனக்கு முடிய வில்லையானால் மாரியிலாவது பெய்யக்கூடாதா? நாரதர் பொரிந்து தள்ளினார்.
“என்ன அந்த றாஸ்கல்களுக்கா இரங்குகிறாய்? இவ்வளவுகாலமும் மழை பொழிந்து மழை பொழிந்து நான் கேட்ட திட்டுகள் கொஞ்சமா? இந்த முறையாவது அவர்களுக்கு ஒரு பாடம் படிப்பித்தே தீருவேன். மை டியர் நாரதர், பிளீஸ், இந்த விஷயத் தில்மட்டும் நீ தலையிடாதே. இது என் சொந்த விசயம். நீ போய்விடு…” என்றார் வருணன்.
“என்ன, மழை பொழிந்ததற்காகத் திட்டினார் களா? என்ன வருணா, உனக்கு வர வர மூளை மக்கர் ஆகி வருகிறதா!”
“உனக்கு உலகமெல்லாம் திரிந்தும் உலகம் தெரியவில்லை நாரதரே! போன வருடம் நடந்ததைத் தான் கேளேன். அங்கு நான் பகல் நேரத்தில் மழை பொழிந்தபோது பாடசாலை மாணவர்கள், கந்தோர் களுக்கு போவோர் போன்றவர்களெல்லாம் ‘இந்தக் கோதாரி மழை இப்பொழுதுதான் பெய்யவேண்டுமா’ என்று திட்டினார்கள்”
“நியாயம்தானே, உனக்குப் போயும் போயும் மழை பெய்வதற்குக் கிழமைநாட்கள் தான் அகப்பட் டதா? அப்படிப் பெய்தால் பொதுவாக எல்லோருக் குமே தொல்லை தானே!”
“என்ன நீயும் அவர்களோடு சேர்ந்து பாடு கிறாயா? சரிதான். கிழமை நாட்களில் பெய்வதில்லை யென்று ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்தபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘இந்தப் பாழாய்ப்போன மழை ஞாயிற்றுக்கிழமைதான் பெய்யவேண்டுமா? ஓய்வாக இருக்கும் இந்த ஒரே நாளிலும்கூட ஓர் உடுப்பைத் தோய்த்துக் காயவைக்க இந்த சனியன் விடுகிறதில்லையே!’ என்று திட்டினார்கள்.”
“நீயும் அவர்களோடு சண்டித்தன முறையில் தான் நிற்கிறாய். ஏன் இரவில் பெய்வதற்கு என்னவாம்?”
“அதையும்தான் கேளேன். அப்படிப் பொழிந்த போது ‘செக்கன்சோ’ பார்த்துவிட்டு சைக்கிளிலும் நடந்தும் வீடுதிரும்பும் வாலிபர்களெல்லாம் என்னைத் திட்டுகிறார்களே!”
“வருணா ! நீ இந்த வீண் கௌரவங்களை யெல்லாம் விட்டு விட்டு மக்கள் விரும்பும் நேரத்தில், அதாவது இரவு ஒரு மணி தொடக்கம் காலை ஆறு மணிவரை பொழியலாமே.”
“அப்படிப் பெய்தாலும் அந்த மக்கள் விடுகிறார். களா? ‘சோ’ என்ற இரைச்சல் நித்திரை செய்ய விடுகிறதில்லையாம். இந்த நேரத்தில் கள்ளர் வந்தால் கத்தினாலும் ஒருவரும் துணைக்கு வரமுடியாதே என் பதை நினைத்தால் நித்திரை வருகிறவர்களுக்கும் வராதாம்!”
“நியாயமான பயம்தான். அப்படியானால் ஒன்று செய்யலாமே…” நாரதர் முடிக்கவில்லை.
”நிறுத்து… நிறுத்து, அவர்கள் வேண்டியபோது பெய்யவும் வேண்டாதபோது பெய்யாது விடவும் அவர் களின் பகடைக்காயல்ல நான், இதற்கு நீ வேறு தூது வந்திருக்கிறாயா? யாழ்ப்பாண மக்களின் அகங்காரத்துக்கு நான் இந்தமுறை எப்படியும் ஒரு பாடம் படிப் பித்தே தீருவேன், நாரதரே! நீர் எழுவீர்! இங்கிருப் பதில் பயனில்லை!”
“வருணா! இப்பொழுது எந்தநாளில் பெய் தாலும் எப்போ பெய்தாலும் அதை அவர்கள் வரவேற்பார்கள். நீர் பெய்யலாம்.”
”முடியாது, பழிக்குப் பழிவாங்கியே தீருவேன். வேண்டுமானால் அடுத்த ஆண்டு பார்க்கலாம்.”
வருணன் இரங்க மறுத்தார். நாரதர் திரும்ப மறுத்தார். “அப்படியானால் வேறு வழியே இல்லையா?” என்றார்.
“வள்ளுவர் என்ற ஓர் ஏஞ்சன் பூலோக றைற்றர் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று பாடியிருக்கிறாரே! அப்படியானால் தினமும் கணவனைத் தொழுது எழும் கற்புள்ள பெண்களிடம் ‘மழைபெய்’ யெனக் கூறுமாறு கூறிப்பாருங்களேன்.”
“அதுதான் முடியாதே! அது சாத்தியமில்லை.”
“ஏனோ!” என ஆச்சரியப்பட்டார் வருணன்.
“கணவனைத்தொழுது எழும் பெண்களைவிட மனைவியைத் தொழுது எழும் கணவன்மார்களே அங்கு அதிகம். அப்படிக் கணவனைத் தொழுது எழும் பெண்களைக் கண்டுபிடித்து ‘பெய்’ என்று சொல்லு மாறு சொன்னாலும் அவர்கள் சொல்லமாட்டார்கள்”.
“ஏன் நாரதரே அப்படிச் சொல்லுகிறீர்கள்!” என மீண்டும் வருணன் ஆச்சரியப்பட்டார்.
“இன்றைக்கு யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் மழை பெய்தாலும் வர வேற்பார்கள் என்று சொன்னேன். ஆனால் கணவன் மார்களைத் தினமும் தொழுது எழும் பெண்கள் மட் டும் அதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் கணவ னைத் தொழுது எழும் பெண்ணுக்கு கணவன் எப்பொ ழுதும் உச்சி குளிர்ந்து ‘சம்திங்’ கொடுப்பானல் லவா? அதைக்கொண்டு ஷொப்பிங்’ செல்லும் போது மழை பெய்தால் அவர்களுடைய ‘டிரெஸ்’ எல்லாம் ‘டேட்டி’யாகி விடுமல்லவா? கோடியிலெல் லாம் ‘கரும்பயன் ‘ பிடித்துவிடுமல்லவா? எனவே அவர்கள் மழை பெய்யும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.”
“அப்படியானால் நாரதரே யாழ்ப்பாணத்துக்கு மழை பொழிய இந்தமுறை ஒரு வழியுமில்லை. தயவு செய்து போய்விடும்.”
“கொடும்பாவி கட்டியிழுத்தால்…?” நாரதர் கேட்டார்.
“முடியாதென்றால் முடியாதுதான். நீர் போகி றீரா இல்லையா? போகாவிட்டால் ‘பிறதருக்கு’ப் போன்பண்ணி நீர் எந்த மக்களுக்காகத் தூது வந்தீ ரோ அதே மக்களுக்கு மேலும் இன்னல்களைக் கொடுக்கப்போகிறேன், பார்” என்ற வருணன், டெலிபோன் இருக்குமிடத்திற்குப் போனார்.
“ஹலோ…ஐ ஆம் வருணன் ஸ்பீக்கிங்… மிஸ்டர் வாயு இஸ் தெயர்…”
[இதன்பிறகுதான் நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை யும், உடைமைகளையும் கொள்ளைகொண்ட கோரப் புயல் வீசியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.]
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
