சோதிட வித்தகன் சொக்கலிங்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 348 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொக்கலிங்கம் ஒரு பிரபல சோதிடன் மட்டுமல்ல அவரை ஒரு சோதிட வித்தகன் என்றே சொல்லிவிடலாம். அவர் சொன்னால் சொன்னது தான். சொல்லியது சொல்லியவாறே நடந்து தீரும். 

சொக்கலிங்கத்திடம் சோதிட அறிவிலும் பார்க்கப் பல மடங்கு புத்திக்கூர்மையுண்டு. ஏன் அவ். வளவு தூரம் சொல்லுவான், அவரிடம் சோதிட அறிவு இல்லையென்று கூடச் சொல்லலாம். ஆனால் அவரிட முள்ள புத்திக்கூர்மையே அவரைச் சோதிட வித்த கன் ஆக்கிவிட்டது. 

“உங்கள் மகளுக்கு இந்த ஆண்டிலும் சம்பந் தம் ஒப்பேறாது என்றுதான் சாதகம் சொல்லுது. எதற் கும் பிள்ளையாரை நன்றாக நேர்ந்து ஒரு மோதக பூசை செய்யுங்கள். பிள்ளையாருடைய கடாட்சம் பிள்ளைக்குச் சிலவேளை கிடைத்தாலும் கிடைக்கும் ” என்று சொக்கலிங்கம் ஒரு குறிப்பைப் பார்த்துச் சொல் லுவார். 

இதன் பின் அந்தப் பேர்வளிக்கு அந்த ஆண் டில் திருமணம் நிறைவேறினாலும் சரி நிறைவேறாவிட் டாலும் சரி சொக்கலிங்கத்தின் சோதிடம் பலித்ததா கத்தான் முடியும். திருமணம் நிறைவேறினால் “நான் சொன்னதுபோல் பிள்ளையாரது கடாட்சம் பிள்ளைக் குக் கிடைத்துத்தானே விட்டது!’ என்பார். 

திருமணம் நிறைவேறாவிட்டாலும் “நான் தானே இந்த ஆண்டும் சம்பந்தம் ஒப்பேறாது என்று முன்பு சொன்னேனே!” என்பார். 

யாராவது குறுக்கிட்டு “பிள்ளையாரை நேர்ந்து மோதக பூசை செய்தால் பிள்ளையாரது கடாட்சம் கிடைக்கும் என்றீர்களே!” என்று சொன்னால் சொக்கலிங்கம் அவர்கள் “சிலவேளை கிடைத்தாலும் கிடைக்கும்’ என்றுதானே சொன்னேன்” என்று அந்த வசனத்தை அழுத்தமாகச் சொல்லுவார். இல்லா விட்டால் “நீங்கள் ஒரு நிலைப்பட்ட மனத்துடன் பிள்ளையாரை வேண்டவில்லைப்போல் இருக்கிறது. அதனால்தான் அவரது கடாட்சம் கிடைக்காமல் போய் விட்டது” என்பார். 

“உங்கள் மகனுக்கு வெள்ளி திசை பிறந்தி ருக்கிறது. இந்தமுறை நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பதே முக்கால் வீதமும் அவன் பரீட்சையில் தேறி விடுவான் என்று நம்பியிருக்கலாம்” என்று இன்னொரு குறிப்பைப் பார்த்துக் கூறுவார். 

அதன்பின் அந்தப் பையன் பரீட்சையில் தோல்வியடைந்து, அவனது தகப்பனார் இவரிடம் வந்து “என்ன ஐயா பையனுக்கு நல்லகாலம்; அவன் சித்தியடைவான் என்றீர்களே! அவன் இப்போது பரீட்சையில் மண்கவ்வி விட்டானே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?” என்று கேட்டால் சொக்கலிங்கம் சோர்ந்துவிடமாட்டார். “அப்படியா சங்கதி? மான் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பதே முக்கால் வீதம் சித்தியடைவான்’ என்று சொன்னேனே தவிர ‘நூற்றுக்கு நூறு வீதம் சித்தியடைவான்’ என்று சொல்ல வில்லையே! பையன் பாவம் அந்தக் கால் வீதத்திற்குள் அகப்பட்டு விட்டான்போல் இருக்கிறது” என்பார். 

நமது சொக்கலிங்கத்தைக் கண்டாலோ அல் லது நினைத்தாலோ எனக்குக் கூடவே என்றோ ஒரு முறை – எங்கோ தெரியவில்லை கேள்விப்பட்ட ஒரு வானிலை அறிக்கைதான் ஞாபகத்துக்கு வருவதுண்டு.

“நாட்டின் சிற்சில பகுதிகளில் இலேசாகவோ மிதமாகவோ மழை பெய்யக்கூடும்” என்பதே அந்த அறிக்கையின் முக்கிய பகுதியாகும். 

இந்த அறிக்கையை ஒருகணம் எண்ணிப் பாருங்கள். நாட்டின் எந்தப் பகுதியில் மழைபெய்தா லும் இந்த அறிக்கையைப் பிழை என்று சொல்ல முடியாது. அங்கு சின்ன மழை பெய்தாலும் பெரிய மழை பெய்தாலும்கூட இந்த அறிக்கை சரியே! ஏன் மழை பெய்யாவிட்டால்கூட அறிக்கையைப் பிழை யென்று கூறமுடியாது. ஏனெனில் “பெய்யக்கூடும்” என்றுதானே அறிக்கை கூறுகிறது. 

சுருக்கமாகச் சொல்லுவதாயிருந்தால் மேற்படி அறிக்கையை தீர்க்கதரிசனமாகத் தயாரித்தவரை அவரது வானிலை அறிவுக்காக இல்லாவிட்டாலும் அவரது புத்திக்கூர்மைக்காக நாம் அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதுபோலவே நமது சோதிட வித்தகன் சொக்கலிங்கத்தை அவரது சோதிட அறி வுக்காக இல்லாவிட்டாலும் அவரது தீர்க்கதரிசனத் துடன் சோதிடம் சொல்லும் புத்திக்கூர்மைக்காக வேனும் அவரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

வாழ்க சோதிட வித்தகன் சொக்கலிங்கம்! வெல்க அவரது பணி! 

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *