கொழும்புப் பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மட்டக்களப்பான் யாழ்ப்பாணத்தான் மலை நாட்டான் எனச் சிலர் தமிழர்களை அரசியல் காரணங் களுக்கோ என்னவோ தெரியவில்லை வேறுபடுத்திச் சொல்வதுண்டு. அப்படிச் சொல்பவர்கள், யாரையா வது எனக்குக் காட்டி இவர் மட்டக்களப்பா? யாழ்ப் பாணமா? மலைநாடா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது; வேறுபாடுகளைக் கண்டுபி டிக்க முடியாது. ஆனால் அவர்கள் யாரையாவது ஒரு பெண்ணைக் காட்டி ‘இவர் கொழும்புப் பெண்ணா இல்லையா?’ என்று கேட்டால் ஒரு வினாடியில் பதில் சொல்லிவிடுவேன். இதில் என்னை ஒருவராலும் வெல்ல முடியாது! 

இது எப்படி அவ்வளவு சுலபமாக எனக்குக் கைவர முடிகிறதென்று பலருக்கும் வியப்பாக இருக் கலாம். ஆனால் இதற்காக நான் கடந்த ஐந்து ஆண் டுகள் கொழும்பில் தங்கி அரிய ஆராட்சிகள் நடத்தி யது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது! இதோ எனது ஆராய்ச்சியின் முடிவுகள்- 

வேறு பகுதிகளிலுள்ள பெண்கள் தங்கள் இடையை இரண்டு அங்குலத்துக்கு மேல் காட்ட மாட்டார்கள். கொழும்புப் பெண்களாயிருந்தால் அவர்களது இடை மூன்று அங்குலத்திலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். அதுபோலவே அவர்க ளது கழுத்தும் சில கிராமப் பெண்களைப்போல் ‘குறுக் குக்’ கட்டியிருக்கிறார்களோ என எண்ணும்படியாக ஆடையின்றி வெறுமையாகக் காட்சியளிக்கும். ஆக இடுப்பிலிருந்து கழுத்துவரையுள்ள மன்னிக்கவும் மார்புவரையுள்ள சட்டையின் உயரம் நாலு அங்கு லத்திற்கும் குறைவாகவே கொழும்புப் பெண்களுக்கு இருக்கும் என்று சுருக்கமாகக் கூறலாம். 

இது ஒன்றே கொழும்புப் பெண்களைக் கண்டு பிடிக்கப் போதுமானதாயினும் எளிதில் கண்டுபிடிப் பதற்காக இன்னும் சில குறிப்புகளைத் தருகிறேன். 

பெண் ஒருத்தியின் மேலாடைக்கு அரை யார் துணி மிச்சம் மிச்சமாகப் போதுமென்றாலும், அவள் அணியும் சேலை விலையில் நூறு ரூபாவிற்கு மேலேயும் நிறையில் எட்டு அவுன்சுக்கு உள்ளேயும் இருந்தால் அவள் ஒரு கொழும்புப் பெண்ணே ! 

பெண் ஒருத்தி சேலைக்கடைக்குச் சென்று அங்கு திரௌபதை துகிலுரி படலம்’ கடைபெற் றதோ என எண்ணும்படியாக கடையை மாற்றிய மைத்துவிட்டு வெறுங்கையோடு வெளியேறி வேறு கடைக்குத் தாவி பின் முன்போலவே அங்கும் நடை பெற்று…… இப்படியே நிகழ்ச்சி தொடர்கிறதென்றால் அந்தப் பெண்ணும் நிச்சயமாகக் கொழும்புப் பெண் என முடிவுகட்டி விடலாம். கொழும்புப் பெண்ணுக்கு ஒரு சேலை வாங்குவதென்றால் குறைந்தது மூன்று முழு நாட்கள் வேண்டும். அப்படியே ஒரு மூக்குத்தி வேண் டுமாயினும் முன்னூறு நகைக்கடைகளில் துப்பறியும் வேலை நடத்தவேண்டியிருக்கும். 

கண்ணாடிமுன் நிற்பதைக் கொண்டும் கொழும் புப் பெண்ணைக் கண்டறியலாம். தினமும் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் கண்ணாடிமுன் நின்று அலங்காரம் செய்பவளென்றால் அவளும் கொழும்புப் பெண்ணே! இதற்குமேலும் கண்ணாடிக்கு முன் நிற் கும் நேரம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளை அசல் பரம்பரைக் கொழும்புப் பெண் என்று சொல்லலாம். 

நித்திரைக்கு, உணவுக்கு, அலங்காரத்திற்குத் தவிர ஏனைய நேரங்களில் வீட்டிலே தங்காதவளா யும் அந்த நேரங்களிலெல்லாம் வீதிவலம் வருவதை யும், துணிக்கடை நகைக்கடைகளுக்குத் தரிசனம் செய்வதையும் ஒரு பெண் தன் தவிர்க்கமுடியாத கடமைகளாகக் கொண்டவளாயிருந்தால் அவளும் ஒரு கொழும்புப் பெண்ணே! 

பஸ் பிரயாணத்தின்போது வேறு இடங்கள் காலியாக இருந்தும் – பெண்கள் இருக்கும் சீட்டிலேயே இன்னும் ஒரு பெண்ணுக்கு இடம் இருந்தும்கூட பெண் ஒருத்தி பஸ்சில் ஏறி ஆணுக்குப் பக்கத்தில் இருந்தால் – அதுவும் நெருங்கி இருந்தால், அவள் கூட நிச்சயமாக ஒரு கொழும்புப் பெண்ணே! 

ஒரு பெண் முகத்தில் எவ்வளவுதான் வியர்வை அரும்பினாலும் கைக்குட்டையால் முகம் துடைக்க மிகவும் தயங்குபவளாயும் பின் மிகுந்த தொல்லையு டன் மெதுவாகவும் கவனமாகவும் துடைக்கிறாள் என் றாலும் அவள் ஒரு கொழும்புப் பெண்ணே! (கொழும் புப் பெண்கள் அதிகமாகவும் கட்டாயமாகவும் ஏதோ சில மைகளைக் கண் புருவம் அதரம் ஆகியவைகளில் பூசுகிறார்களென்பதை இங்கு நினைவில் வைக்கவும்) 

ஒருமுறை நான் ஒரு பெண்ணைக் கண்டு விழுந்து பல்லையும் உடைத்து கை விரல்களையும் காயப்படுத்தி விட்டாளே’ என்று உதவி செய்யும் எண்ணத்துடன் அவளை அணுக முயன்றேன். அப் பொழுது எனது கொழும்பு நண்பர் என்னைத் தடுத்து ‘அப்படி ஒன்றுமில்லை அவள் கொழும்புப் பெண்’ என்றும் ‘அவள் பல்லை உடைக்கவும் இல்லை. கை விரல்களைக் காயப்படுத்தவும் இல்லை. அவள் சொண்டுக்கும் நகங்களுக்கும் சிவப்பு மை பூசியிருக்கிறாள் என்றும் சொன்னார். என்னைப் போல் உங்களுக்கும் பெண்களைக் காணும்போது இப்படியான எண்ணம் ஏற்பட்டால் நீங்களும் அவர்கள் கொழும்புப் பெண் கள் என எண்ணிக்கொண்டு கவலையின்றி அப்பால் போகலாம். 

இவைகள் தவிர ஒரு பெண் மிகுந்த கவலை யுடன் காணப்பட்டாலும் (இவ்வளவு பணம் செலவு செய்தும்.’ இவ்வளவு நேரம் அலங்காரம் செய்தும் அழகு ஏற்படவில்லையே என்ற கவலை) தெருவில் விழுந்து எழுந்தாலும் ( இது குதி உயர்ந்த காலணி யால் ஏற்படுவது ) அவளது பின்னல் கொண்டை முதலியன தெருவில் கழன்று விழுந்தாலும்கூட (அவைகள் செயற்கையானதால்) அவளும் ஒரு கொழும்புப் பெண் என்பதை முடிவு கட்டி விடலாம். 

எனது ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவல்ல. இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவ்வளவை யும் சொன்னால் பெண்களின் எந்த ஓர் அங்கத்தைப் பார்த்தாலுமோ அல்லது அவர்களது சிறு அசைவு கள் சிறு செய்கைகளைக் கண்டாலுமோ அவள் கொழும் புப் பெண்ணா இல்லையா என்பதை நீங்களும் என் னைப்போலவே நொடிப் பொழுதில் சொல்லி விடலாம். 

ஆனால் இப்பொழுது ‘யாழ்தேவி’ வரும் நேரமாகி விட்டது. யாரோ சில கொழும்புப் பெண் கள் எங்கள் வீட்டுக்கு வருகிறார்களாம். அவர்களது கண்களில் இந்தக் கட்டுரை பட்டுவிட்டால் பல விபரீ தங்கள் ஏற்படுவதுடன் உங்களுக்குக்கூட கட்டுரை கிடைக்காமல் போகலாம். எனவே இதோ கட்டு ரையை முடித்துவிடுகிறேன். 

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *