கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 1,665 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

தொடையை இறுக்கிப் பிடிக்கும் வெள்ளை வெளேர் அரைக்கால் டிரௌசர். மேலே இளமையை எடுப்பாய்க் காட்டும் ஷர்ட். ரப்பர் பேண்டினால் இறுக்கப்பட்ட குதிரை வால் முடி. காலில் வெள்ளை சாக்ஸ் கேன்வாஸ் ஷீ. சிம்ரன், ஜோதிகா, மீனா, மாலா, சுபாஷிணி எல்லாரும் இருபது வயசுக்கு மேல்படாத இளசுகள். எல்லோரா அழகு. கஜீரேகா கவர்ச்சி.

ஆளுக்கொரு லேடி பேர்டு சைக்கிள். கேரியரியல் ஹாக்கி மட்டைகள்.

நகரத்திற்கு வெளியே ஒதுக்குப் புறமான பெரிய விளையாட்டு மைதானத்தை விட்டு சைக்கிள்களைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

எல்லாருமே சிவில் மெக்கானிக் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் என்று என்ஜினியரிங்க் படிப்பு.

“இன்னைய ஆட்டம் சூப்பர்டி”

சிம்ரன்தான் பேச்சை ஆரம்பித்தாள்.

“சிம்ரன் செம கோல் போட்டா”

“அதை ஜோதிகா கட் பண்ணினது அருமை”

அவர்கள் ஆட்டத்தைப்பற்றிக் பேசிக் கொண்டு சாலையின் குறுக்கே தாண்டினார்கள்.

அந்த விளையாட்டு மைதானத்தின் முதல் வாசலுக்கெதிரே சாலையின் எதிர்புரம் பிரம்மாண்டமான துாங்கு மூஞ்சி மரம். நிழல் சாலையை அடைத்து குளிர்ச்சியாக இருந்தது.

‘சிம்ரன்! யார் செலவு?” – ஜோதிகா கேட்டாள். தினம் ஆட்டம் முடிந்து வெளியே வந்ததும் யார் செலவிலாவது டீ காபி சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். இது அவர்கள் அன்றாட பழக்கம்.

“நான் இல்லேடி.”

“அப்போ இன்னைக்கு யார்?”

“மீனா!“ – மாலா சொன்னாள்.

“நான் மாட்டேன்!“ மீனா மறுத்தாள்.

“ஏன்டி?“

“நான் காசு எடுத்து வரலை”

“சேப்டி லாக்கரைப் பார்க்கலாமா?” – கேட்டு சுபாஷிணி அவள் மார்பை பார்த்தாள்.

மீனா கவலை படவில்லை.

“நல்லா பாரு!” கூச்சமில்லாமல் தன் டீஷர்டைஅவளுக்கு இழுத்துக் காட்டினாள்.

“ஐயோ! இதென்னடி அநியாயம்!” – பார்த்தவள் அலறினாள்.

“என்னடி?”

“இவ வட்டுடை ரொம்ப இறுக்கமா போட்டிருக்கா.”

“ம்ம் அப்படி இறுக்கிக் கட்டினாத்தான் ஓடுற ஓட்டத்துல குலுங்காது.” – மீனா பதில் சொன்னாள்.

“முச்சு முட்டாது?!” – சுபாஷிணி ஆச்சரியமாகக் கேட்டாள்.

“முட்டாது!“

“எல்லாருமா இப்புடி போட்டிருக்கீங்க”

“ஏன் நீ அப்புடி இல்லையா?” – மீனா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.

“எனக்கு இறுக்கம் தாங்காதுப்பா” சொல்லி உடலைக் குலுக்கினாள்.

“ரொம்ப அலட்டிக்காதே. நீ போட வேண்டிய அவசியமே இல்லே. நெஞ்சு டென்னிஸ் கிரவுண்ட் போல இருக்கு”.

“பாருடி!” – மீனா சிம்ரனைத் தொட்டு சிணுங்கினாள்.

“விடுங்கடி. யார் செலவு?” – அவள் விசயத்திற்கு வந்தாள்.

ஆளாளுக்குக் கம்மென்றிருந்தார்கள்.

“சுபாஷிணி நீ!” – சிம்ரனே கை காட்டினாள்.

“சரி.” அவளும் வேறு வழி இல்லாமல் தலையசைத்தாள். துாங்கு கூஞ்சி மரத்தினடியில் மரப்பலகைகளால் ஆன பெட்டிக்கடை. கூரை தகரம். சின்னக் கடையாய் இருந்தாலும் எடுப்பாய் இருந்தது. பாட்டில்களில் கடலை மிட்டாய், மஞ்ச், பைவ் ஸ்டார், பிஸ்கட் வகைகள் என்று நொறுக்குத் தீனிகள். ராக்கைகளில் உயர்ரக சிகரெட், தீப்பெட்டிகள். குளிர்சாதன பெட்டியில் ஃபேண்டா, கொக்கோ கோலா, ஸ்பிரிட் குளிர்பான வகைகள். உள்ளே அமர்ந்திருப்பவரின் முகம் மட்டும் தெரியுமளவிற்கு ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன் தொங்கல்கள். வெளியே ஒரு தார் வாழைப்பழம் ரஸ்தாளி.

பங்க் கடையை ஒட்டி மேஜை மேல் ஒரு பாய்லர் ஸ்டவில் பால் பாத்திரம். நான்கைந்து டபரா செட்டுகள் கிளாஸ்கள் என்று டீக்கடை. வசதியாய் மரநிழலில் உட்கார்ந்துசாப்பிட பல நிறங்களில் பத்துப் பதினைந்து பாலிமர் நாற்காலிகள்.

விளையாட வரும் பெண்களுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட கடைகள் இவைகள். கடை உரிமையாளி ஒரு மலையாளி. அவர்களுக்குத்தான் எங்கே என்னனென்ன கடைகள் ஆரம்பித்தால் வியாபாரம் நடக்குமென்று தெரியும். வியாபாரமே ஆகாது என்று ஒதுக்குப்பட்ட இடங்களில்தான் துணிந்து பெட்டிக்கடை வைப்பார்கள். திருட்டுத் தம் பார்ட்டிகளெல்லாம் அங்கே குவிந்து வியாபாரம் பிய்த்துக் கொண்டு போகும். அப்புறம் டீக்கடை, ஸ்னாக்ஸ் என்று கடை விரியும் காசு பார்ப்பார்கள். தமிழ்நாட்டுக்காரர்களெல்லாம் அப்புறம்தான் யோசிப்பார்கள்

இதே சாலையில் கிழக்கே நூறு மீட்டர் தள்ளி விளையாட்டரங்கின் அடுத்த வாசலுக்கெதிரே இதே மாதிரி இன்னொரு துாங்கு மூஞ்சி மரம். இதே மாதிரி பெட்டிக்கடை, டீக்கடை. ஸ்டிக்கர் பொட்டு, ஹேர்பின, ரிப்பன் வகையறாக்களைத் தவிர்த்து குர்தா, பான்பராக், சிகரெட் வகையறாக்கள். விருப்பப்பட்டவர்களுக்கு பீடி பீடி சுருட்டுகள் உண்டு. கஞ்சா, ப்ரவுன்சுகர் என்று போதை வஸ்துகள் கண்டிப்பாக கிடையாது, அப்படி இருப்பது மாதிரி தெரிந்தாலும் விளையாட வரும் இளைஞர்கள் போலீசில் போட்டுக் கொடுத்து பிடித்துக் கொடுத்துவிடுவார்கள். இளைஞர்களின் எதிர்காலம் போதைகளுக்கு அடிமையாகிவிடக்கூடாதென்கின்ற நல்லெண்ணம்.

ஆண்கள் கடைப்பக்கம் பெண்களும் பெண்கள் கடைப்பக்கம் ஆண்களும் கண்டிப்பாக வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். மீறினால்..

“போ அப்பால” என்று அம்முகுட்டி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து துரத்துவாள் விரட்டுவாள். விபரம் தெரியாத புதுமுக ஆண்கள் வந்தால்கூட வியாபாரம் உங்களுக்கு அங்கே என்று கை காட்டுவாள். மறந்தும் சாமான்கள் தரமாட்டாள். இப்படி சொல்லி சொல்லிப் பார்த்து பெண்களுக்காக மட்டும் என்று கொட்டை எழுத்தில் எழுதி போர்டே வைத்துவிட்டாள். பெண்கள் இந்த இடத்திலாவது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனால் பெண்கள் இங்கிருந்து அங்குள்ள ஆண் நண்பர்களுக்குக் கையசைக்கலாம் டாடா காட்டலாம். அவர்களும் அங்கிருந்து சைட்டடிக்கலாம் பிளையிங் கிஸ் அனுப்பலாம். அம்முகுட்டி கண்டுகொள்ளமாட்டாள்.

பெண்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கும்பலாய் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

“நாயர்! டீ!“ – சிம்ரன்தான் ஆர்டர் கொடுத்தாள்.

நாயர் அறுபதைத் தொடும் வயசாளி. அம்முக்குட்டி ஆண்களைத்தான் துரத்துவாளென்றால் இவர் தப்பித்தவறி நாற்காலிகளைத் தொடும் சிறுவர்களையும், “போங்கடா அப்பால” விரட்டுவார்.

“சிம்ரன் பொரை!“ – மாலா அவளைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.

“சுபா! காசு இருக்காடீ?” – சிம்ரன் செலவு செய்பவளைக் கேட்டாள்.

“இருக்கு” – அவள் தலையசைத்தாள்.

“எடுத்துக்கலாம்.” – சிம்ரன் சொல்ல மாலா எழுந்து பாட்டிலைத் திறந்து கைவிட்டு அள்ளி ஆளுக்கு இரண்டிரண்டு கொடுத்தாள்.

நாயர் டீயை ஆற்றி சூ டாக கிளாஸ்களில் நிரப்பினார். சுபாஷிணி விநியோகம் செய்தாள்.

இளைஞிகளுக்கு பொரையும் டீயும் உள்ளே போயிற்று. ஜோதிகா சும்மா இல்லாமல் ஆண்கள் டீக்கடைப்பக்கம் இருக்கும் இளைஞர்களில் எவனோ ஒருவனுக்கு, “ஹாய்!” கையைத்தாள்.

“யாருடி அவன்?“ – மீனா கேட்டாள்.

“யாருக்குத் தெரியும்?”

“கை ஆட்டினே?!”

“அவன் சிரிச்சான். நான் கையசைச்சேன்!“

“ஆபத்துடி” – மாலா எச்சரித்தாள்.

“என்ன ஆபத்து?”

“இதை சாக்கா வைச்சு நாளைக்கு உன் எதிர்ல நின்னு வழிவான்”.

“போடா அப்பாலன்பேன்!”

“காதலிக்கிறேன்னு சொன்னான்னா?”

“செருப்பால அடிப்பேன்!”

“என்னடி இது வம்பு?” – மீனா துணுக்குற்றாள்.

“அவன் சிரிச்சான். நான் கை ஆட்டினேன். ஜாலிக்கு ஜாலி சரியாப் போச்சு. இதை தப்பாப் புரிஞ்சிக்கிட்டு காதலிக்கிறேன்னு சொன்னா அடிக்காம என்ன பண்றது?”

“சாரின்னு சொல்லி நாசூக்காய் ஒதுக்கலாமே?”

“அப்புறம் தயவு பண்ணுங்கன்னு கெஞ்சுவான். அதனால வாயைத் திறந்ததும் போட்டா அடுத்து திரும்பிப் பார்க்கமாட்டான் நெனைக்க மாட்டான்!“

“எதுக்கு இந்த வம்புன்னு கையசைக்காம இருந்திருக்கலாமில்லே?”

“தொணதொணக்காம பிரச்சனையை விடுங்கடி.” என்ற மாலா “சுபா! சிகரெட்!“ ஒற்றை விரலை நீட்டிக் காட்டினாள்.

“எடுத்துக்கோ”

மீனா “நானும் “- எழுந்தாள்.

இருவரும் பங்க் கடைக்குச் சென்றார்கள். ஆளுக்கொரு சிகரெட் வாங்கிக்கொண்டு கடை பின் பக்கம் மறைந்தார்கள்.

அப்போது வழியில் சென்ற யமஹா ஒன்று வேண்டுமென்றே பெண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்து நின்றது. அதை ஓட்டி வந்த இளைஞன் நல்ல கறுப்பு நிறம் ஒற்றைக் காதில் கடுக்கன் முடி முளைத்த மொட்டை தலை. மேலே பூ ப்போட்ட சட்டை. கீழே கறுப்பு பேண்ட் ஏறக்குறைய கருணாஸ். தோற்றம் தெனாவட்டாக இறங்கினான்.

ஆளைப் பார்த்த சிம்ரன் முகம் இருண்டது.

அத்தியாயம் – 2

அடுத்த கடையிலிருந்த பத்துப்பதினைந்து இளைஞர்களும் இவன் இறங்குவதைப் பார்த்தார்கள்.

“மச்சான் யாரு குட்டிங்களுக்கு உட்பியா?” – அருகில் தம் அடித்துக் கொண்டிருந்தவனை நரேன் கேட்டான்.

“தெரியலை?“

“ஒருத்திங்க மொகத்திலேயும் ஈயாடலை. அம்முகுட்டிகிட்ட வம்பு பண்ணனும்ன்னே இறங்கின பார்ட்டி போல தெரியுது?” – விமல் அந்த கடையை கூர்ந்து பார்த்துக் கொண்டு தன் ஊகத்தைச் சொன்னான்.

“அநேகமா வம்பு புடிச்சவனாய்த்தான் தெரியறான். வா என்ன பண்றான்னு பார்க்கலாம்!” நடந்தான் நரேன். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் நடந்தார்கள். இறங்கிய இளைஞன் பெண்களுக்கெதிரில் காலியாக உள்ள நாற்காலி ஒன்றில் அமர்த்தலாக அமர்ந்தான்.

“நாயர்! டீ போடு” – உத்தரவிட்டு கால்மேல் கால் போட்டான்.

அம்முகுட்டி பெட்டிக்கடையைவிட்டு வெளியே வந்தாள்.

அவளைத் தொடர்ந்து ‘தம்’மை முடித்த மீனா மாலாவும் உடன் வந்தார்கள்.

“டீ இல்லே!” – அவனிடம் அம்முகுட்டி சூடாக சொன்னாள்.

“ஏன்?”

“போர்டை பாரு” – கையைக் காட்டினாள்.

போர்டைப் படித்த அவன், “ஏன் ஆண்கள் குடிச்சா காசு தரமாட்டாங்களா?” என்றான்.

“நக்கல் வேணாம். இடத்தைக் காலி பண்ணு.” அவள் குரல் கறாரானது.

“காலி பண்ணலைன்னா?”

“தகராறு பண்றேன்னு போலீசை வரவழைப்பேன்”.

“அப்ப சரி. நான் அவுங்க வந்தே போறேன்.” – அழுத்தமாக அமர்ந்தான்.

சிம்ரன், ஜோதிகா ஒருவரையொருவர் பார்த்து மெல்ல எழுந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சுபாஷிணியும் எழுந்தாள். மூவரும் மீனா, மாலா பக்கம் வந்தார்கள். சிம்ரன் கண் காட்ட எல்லாரும் தங்கள் சைக்கிள் பக்கம் வந்தார்கள்.

பெண்கள் கலைவதைப் பார்த்த அம்முகுட்டிக்குக் கோபம் கொப்பளித்தது.

“போலீசுக்குப் போன் பண்றேன்!“ – நடந்தாள்.

“செய்!” அவன் கொஞ்சம் கூட அசையாமல் திமிராய்ப் பதில் சொன்னான்.

அவ்வளவுதான். சிம்ரன் “ஜீட்!” என்றாள். அடுத்தவினாடி பெண்கள் சைக்கிளிலுள்ள ஹாக்கி மடடைகளை உருவி இளைஞன் மேல் பாய்ந்தார்கள். கன்னா பின்னாவென்று விளாசினார்கள்.

இப்படியொரு திடீர் தாக்குதலை அவன் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. அடி பலமாக மழையாக பெய்ய அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. “ஐயோ! அம்மா! அப்பா” கத்தினானேத் தவிர எதிர்த்து அடிக்க வழி இல்லாமல் கீழே புரண்டான். அவன் புரள புரள பெண்கள் பந்தை அடிப்பதைப்போல் அடித்தார்கள்.

கூட்டமாய் வந்த இளைஞர்கள் அப்படியே திக் பிரமை பிடித்தவர்கள் போல் நின்றார்கள்.

“பொரட்டிப் பொரட்டி எடுக்கிறார்கள் பொம்பளை ரவுடிங்கடா!“ ஒருவன் பக்கத்தில் நின்றவன் காதில் குசுகுசுத்தான்.

“டேய்! ஒருத்தன் இந்த இடத்துல வந்து நம்ப பொண்ணுங்க கிட்ட வந்து தகராறு பண்றான். அவளுங்க பொரட்டி எடுக்கிறாளுங்க. நாம் பொட்டைங்க போல பார்த்துக்கிட்டு நிக்கிறோம். வாங்கடா.” வேகம் வந்தவனாய் வந்தான்.

அவனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் வீரம் பிறக்க….

இளைஞர்கள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த இளைஞனுக்கு இனி தப்பிக்க முடியாது தெரிந்தது. உயிர் பிழைத்தால் போதும். பயம் வந்தது. அடிகளையும் மீறி எழுந்து ஓடினான். நிறுத்தியிருந்த யமஹாவில் தாவி அமர்ந்து கிளப்பி…. ஆள் தப்பிய பிறகும் சிம்ரனுக்கு வேகம் தணியவில்லை.

“படவா!” – ஆத்திரத்துடன் கையிருந்து மட்டையை வீசினாள். அது அவன் வண்டியின் பின்புறம் அடித்து துார விழுந்தது.

அவன் காணாமல் போனான்.

பெண்கள் வேர்த்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்கள்.

அம்முகுட்டி கூடி இருந்த இளைஞர்களைப் பார்த்து, “போய்க்கோங்கோ” என்றாள். என்ன நடந்ததென்று விசாரிப்பார்கள். அப்புறம் அப்படியே ஒட்டுவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

இந்த சாக்கிலாவது இவர்களிடம் பேச்சு கொடுக்கலாம் என்று நினைத்தவர்கள் கூட ஏமாந்து, “வாங்க போவோம்” நகர்ந்தார்கள். நகரவில்லையென்றால் நமக்கும் நாலு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற கிலியிலும் சிலர் நகர்ந்தார்கள்.

“என்னம்மா இப்புடி பண்ணிட்டீங்க?” – அம்முகுட்டி அவர்களைத் திகிலாய்ப் பார்த்தாள்.

“ஒன்னுமில்லே. இது பழைய கணக்கு”. – சிம்ரன் எழுந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் சைக்கிளை எடுத்து விட்டார்கள்.

“என்ன பழைய கணக்கு?” – அம்முகுட்டி சைக்கிள்களில் செல்லும் இளைஞிகளின் முதுகை வியப்பு திகைப்பாய்ப் பார்த்தாள்.

அத்தியாயம் – 3

கணக்கு சென்ற வருடம் இதே நாளில் நடந்தது.

அன்றைக்கும் இப்படித்தான் சிம்ரன, ஜோதிகா, மீனா, மாலா ,சுபாஷிணி ஐந்து பேர்களும் இதே மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பினார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் அவர்கள் தனித்தனியே பிரிந்து செல்ல செல்ல வேண்டிய கட்டாயம். ஜோதிகா மீனா சேர்ந்து பிரிவார்கள். மாலா, சுபாஷிணியும் அப்படி. சிம்ரன் மட்டும் தனி. அவர்கள் பிரிவிலிருந்து அரைக்கிலோ மீட்டர் சென்றால் சிம்ரனுக்கு வீடு, கொஞ்ச தூரம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வரும் போதுதான் சைக்கிள் செயின் கழன்றது.

அது ஒழுங்காக இருந்த சைக்கிள்தான். அப்பா பண்ணிய வேலை. காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இவள் வழக்கம் போல் விளையாட்டு மைதானத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

வாக்கிங் செல்வதற்காக வெளியே வந்த இவள் தந்தை தர்மலிங்கம், “முனியா!“ தோட்டக்காரனை அழைத்தார்.

குரோட்டன்ஸ்களுக்குக் குழாய் வழியே தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவன் அப்படியே போட்டு விட்டு, “எசமான்!” ஓடி வந்து அவர் எதிரில் நின்றான்.

வாசலில் நின்ற சிம்ரன் சைக்கிளைக் காட்டி, “எவ்வளவு அழுக்கா இருக்கு பார் சீக்கிரம் துடைச்சு வை அவ கிளம்பிக்கிட்டிருக்கா” சொல்லிவிட்டுப் போனார்.

எள்ளென்றால் எப்போதும் எண்ணெயாக இருப்பவன் அவன். எந்த வேலை செய்தாலும் எதையும் சரியாய் சுத்தமாக செய்வான். பழந்துணியை எடுத்தான். சைக்கிளைப் பளீரென்று துடைத்தான். எண்ணெய் போட வேண்டிய இடங்களுக்குப் போட்டு செயினுக்கும் சேர்த்து விட்டான்

கொஞ்சம் தளர்ந்திருந்த செயினில் எண்ணெய் விட்டதும் இன்னும் கொஞ்சம் தளர்ந்து வரும்போதே இரண்டு மூன்று இடங்களில் கழன்றது. இப்போதும் கழன்றது. சிம்ரன் சைக்கிளைப் போக்குவரத்திற்கு இடைஞ்சலில்லாமல் சாலையோரமாக நிறுத்தி இறங்கினாள். ஒரு சின்ன குச்சியைத் தேடி எடுத்து குனிந்து அமர்ந்து சரி செய்தாள்.

இவளை ஒட்டி ஆட்டோ வந்து நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்து மூன்று பேர்கள் இறங்கி இவளை அப்படியே அள்ளி அள்ளி ஆட்டோவில் ஆட்டோவில் போட்டு சிட்டாக பறந்தார்கள். எதிர்பாராத தாக்குதல் அதிர்ச்சியில் உறைந்து போன இவளின் வாயை இறுக்கமாக பொத்தி கத்தக்கூட முடியாமல் செய்தார்கள். சிம்ரன் கைகால்களை உதைத்து முரண்டு செய்யவும் முடியாமல் அழுத்திப் பிடித்துக்கொண்டு சென்றனர்.

ஆட்டோ மகாபலிபுர சாலையில் பறந்தது. ரொம்ப துாரம் சென்று ஒரு சவுக்குக் காட்டில் நுழைந்து மறைந்தது. நடுக்காட்டில் இவள் கதற கதற.

கஷ்டப்பட்டு கண்விழித்த போது…….

“பயப்படாதே! உன் உசுருக்கு ஒன்னும் ஆபத்து கெடையாது, உனக்கு ஏன் இப்புடி நான் யார்ன்னு தெரியனும் அவ்வளவுதானே. சொல்றேன். நான் சுல்தான் பேட்டை சுலைமான். உன்னை நான் ஆசைப்பட்டுத் துாக்கி வரலை. பணம் குடுத்து யார் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வேன். புதிய பாதை படம் பார்த்திருக்குறீயா?… அதுல வர்ற பார்த்திபன் கேரக்டர் நான். எங்களை மாதிரி ஆளுங்கனைப் பார்த்துதான் அவர் அந்த கேரக்டரையே அமைச்சார். உனக்கு இது ஏன்னுன்னு யோசிக்கிறீயா? உங்க கல்லுாரியில ரமேசுன்னு ஒரு போலீஸ் கமிஷ்னர் பையன் படிக்கிறான். அவன் உன்மேல ஆசைப்பட்டு ஒரு நாள் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னானாம். புடிக்கலைன்னா சாரின்னு சொல்றதை விட்டுட்டு நீ ரொம்ப கோபப்பட்டு போடா பொறுக்கின்னு திட்டி செருப்பால அடிச்சியாம். பையன் ரொம்ப அவமானப்பட்டுட்டான். அவன் பொறுக்கி. உன்னை எப்புடியாவது பழி வாங்கனும்ன்னு துடிச்சி என்கிட்ட வந்தான். ஐயாயிரம் ரூபாயை நீட்டி உன்னை எங்கேயாவது தூக்கிப் போய் கற்பழின்னான். முடிச்சுட்டேன். இந்த ஆட்டோ டிரைவரும் துணைக்கு வந்தவனும் கொசுறு. பொண்ணுன்னா எல்லாருக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்?!”

“நீ போலிசுக்குப் போறதா இருந்தாலும் போ. எனக்கு கவலை இல்லே. என்னைக் கண்டா அது நடுங்கும். அப்புறம் இந்த புதிய பாதை சீதா மாதிரி கெடுத்தவனையேக் கலியாணம் பண்ணிக்கலாம்ன்னு நெனைக்காதே. அந்த வகையில எனக்கு ஏற்கனவே அம்பது பொண்ணு பொம்பளைங்க வரிசையில நிக்கிறாளுங்க. அடுத்து அதெல்லாம் எனக்குப் புடிக்காத காரியம். என்ன சினிமா கதை சென்டிமென்ட்டு. கடுத்தவனையேக் கலியாணம் பண்றது? ஒரு பெண் கற்பழிச்சவனையேத் தேடிப் போறாள்ன்னா அது நம்ம நாட்டு பண்பாடு கலாச்சாரம் இல்லே. அவன் கற்பழிப்பு அவளுக்குத் திருப்தி விருப்பமா இருக்குன்னு அர்த்தம்ன்னு ஒருத்தர் சொன்னார், எனக்கும் அப்புடித்தான் தோணுது, உனக்கு விருப்பம்ன்னா ஒருவாட்டி ரெண்டுவாட்டி வந்து போ. நல்ல பொண்ணு வரமாட்டேன்னு நெனைக்கிறேன். ஆனாலும் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது. அதனால சொல்றேன். ஊருக்குக் கையில காசு இருந்தா வந்து சேரு வர்றோம்.” அவன் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினான். அவர்கள் பறந்தார்கள்.

சிம்ரனுக்கு உடம்பெல்லாம் கண்டு கண்டாக வலி. எழவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்தாள். உடையெல்லாம் ஒரே அழுக்கு தூசு. தட்டுத்தடுமாறி சாலைக்கு வந்தாள். பர்சிலிருந்த நுாறு ரூபாயை எடுத்து ஆட்டோ பிடித்து மஞ்சுளா டாக்டரிடம் சென்றாள். அவள் கருக்கலைப்பில் கெட்டிக்காரியென்று பெயரெடுத்தவள்.

“மொதல்ல வயித்தைச் சுத்தம் செய்யனும் மேடம். வெறி நாய்ங்க கொதறிட்டு”. – விபரம் சொன்னாள் சிம்ரன்.

“பாவிங்க நாசமாப் போக” டாக்டர் சபித்துவிட்டு ஆயத்தமானாள்.

மகளைக் காணேமென்று அம்மா அப்பா தேடுவார்களே! என்று இவளுக்குத் திடீர் யோசனை.

“ஒரு நிமிசம் மேடம்!” – சொல்லி எதிரிலிருந்து தொலைபேசியைத் தொட்டு எண்களைச் சுழற்றினாள்.

அம்மா எடுத்தாள்.

“அம்மா! சுபாஷிணி வீட்டிலேர்ந்து பேசறேன். நான் இங்கே இருக்கேன். ஒரு அவசர வேலை. விளையாடிட்டு நேரா வந்துட்டேன். உனக்கு சேதி சொல்ல முடியலை. நாளை காலையில வர்றேன். கவலை வேணாம் அப்பாகிட்டேயும் சொல்லிடு.” வைத்தாள்.

அடுத்து சுபாஷிணி வீட்டிற்கு எண்களைச் சுழற்றி தொடர்பு கொண்டு, “சுபா! உடனே மஞ்சுளா டாக்டர் வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணத்தோட வா அவசரம்.” சொல்லி வைத்தாள்.

என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வந்த சுபாஷிணி, சிம்ரன் வாடிய அல்லித் தண்டாய் துவண்டு கிடப்பதைப் பார்த்ததும் அதிர்ந்தாள். அவளால் விபரம் சொல்லப்பட்டதும் இடி விழுந்தவளாய் உறைந்தாள். பட் பட்டென்று விசயம் மற்ற தோழிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது, அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

“இதுக்கு ஏதாவது செய்ஞ்சே ஆகனும்!” – ஜோதிகா கொதித்தாள். அவள் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டவள். கராத்தே வேறு கற்றுக் கொண்டவள். அவளுக்கு அநியாயம் பிடிக்காது. தப்புத்தண்டா பொறுக்காது.

“அவன் ரௌடிடீ. என்ன பண்ண முடியும்?” – மாலா அடக்கினாள்.

“எல்லாம் பண்ண முடியும் மொதல்ல ஏவி விட்டவனைப் போட்டுத் தாக்கனும்” – அவள் இன்னும் கோபம் குறையாமல் குதித்தாள்.

“அவன் கோழைடி. ஒரு அறைக்கே ஓடி ஒளிஞ்சு பணத்துக்கு ஆள் புடிச்சுட்டான். புடிச்சுட்டான். அவன் அவன் நெஞ்சுல தைரியம் இருந்துதுன்னா ஆள் புடிக்காம நேரா மோதி இருப்பான் பணம்ன்னா எது வேணும்ன்னாலும் செய்வீயான்னு வந்தவனைத்தான் போட்டுத் தாக்கனும்”. என்றாள்.

“தாக்கிடுவோம்!” சிம்ரன் பல்லைக் கடித்தாள்.

“அவசரப் படக்கூடாது காலம் நேரம் பார்த்து சரியா முடிக்கனும்.” – சுபாஷிணி அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள். அவள் எப்போதுமே நிதானம்.

“என் விசயம் வீட்டுக்குத் தெரியனும்டி” – சிம்ரன் கஷ்டப்பட்டு படுக்கையை விட்டு எழுந்தாள்.

“ஏன்?“ – எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

“பின்னால ஏதாவது தொந்தரவுன்னா உதவுவாங்க.”

“அதான் சுத்தம் பண்ணியாச்சே! என்ன தொந்தரவு வரப்போவுது?’

“இதனால பிரச்சனை இல்லே. இந்த விசயத்தை மூடி மறைக்கிறது நல்லதில்லே. இப்போ நான் வீட்டுக்குப் போகலைன்னா பெண் உடுத்தின துணியோட போனா. சுபாஷிணி வீட்டுல தங்கி இருக்கிறேன்னு சொல்றா. அப்படியென்ன நாள் முழுக்க முடிக்கிற வேலை? ஏதாவது தப்புத் தண்டான்னு சந்தேகம் வரும். அடுத்து நான் இன்னும் ஒரு வாரம் ஓய்வெடுத்தாதான் உடம்பு பழைய நிலைக்கு வரும். அம்மா அப்பாவுக்கு எப்படியும் விசயம் தெரிஞ்சுதானாகனும்!” – பிடிவாதமாக சொன்னாள்.

சிம்ரன் சொல்வதிலும் நியாயம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

“உன் அம்மா அப்பா உடைஞ்சுடுவாங்கடி” மீனா சொன்னாள்.

“வேற வழி இல்லே. பெண்ணைப் பெத்தவங்க சில இடிகளைத் தாங்கித்தானாகனும்!” – சிம்ரன் பிடி தளரவில்லை. அவள் முடிவு எல்லோருக்கும் கலக்கமாக இருந்தது.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *