கோழிக் கொழம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 56 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு தொல்லாளி. அவ வேல செஞ்சுகிட்டிருக்கயில, ஒரு பெறாந்து, ஒரு கோழிக் குஞ்சத் தூக்கிட்டு வந்து, இவ் முன்னால போட்டுட்டுப் போயிருச்சு. போட்டுட்டுப் போகவும், இவ் எடுத்து வளக்குறா. பெருசாயிருச்சு. சும்மா இருக்க அண்ணக்கி, கோழி அடிக்கணும்ண்ட்டு இருக்கா. இருக்கயில, பொண்டாட்டி; கோழியடிக்கணும், கோழியடிக்கணும்ண்டு கெடக்கா. புருசனும் பொண்டாட்டியும் ஒருநா, சும்மா இருந்தாங்க. இண்ணக்கி, கோழிய அடிச்சுக் கொளம்பு வப்போமண்டு, புருச சொன்னா. 

சரிண்டு, கோழிய அடிச்சாங்க. அடிச்சுக்குடுத்திட்டு, இவ் கடவீ திக்குப் போயிட்டா. இவ, மஞ்ச மொளகா அரைக்கிறா. அரச்சு,கொழம்ப கூட்டி வைக்கியல், இவளோட அப்ப வந்திட்டா. 

அப்ப வரவும், இவளுக்கு பொறுக்க முடியல. எப்டியாச்சும் போயிருங்கப்பா அவரு வந்தா அம்மிக் கொளவியக் கொண்டு மண்டயில போடப் போறாரு. சீரு சீதனங் குடுங்கலண்டு, ஒங்க மேல் கோபமா இருக்காருண்டு சொன்னா. சொல்லவும், இவனுக்குக் கொஞ்சம் பயம் வந்திருச்சு. பயந்துகிட்டு, வீட்ட விட்டு வெளியேறிப் போறாரு. போகயில, மருமகன் பாத்திட்டா, பாத்திட்டு, என்னா? 

மாமன் போறாரு, மக கூடச் சண்ட போட்டுட்டுப் போறாரோண்டு நெனச்சு, 

வீட்டுக்கு வந்தா, வரயில், மாமன், வீட்ட விட்டு வெளியேறிப் போயிக்கிட்டிருக்காரு. வேகமா வீட்டுக்கு வந்து, என்ன? ஒங்கப்பா வந்திட்டதும் போறாருண்டு கேட்டா. கேக்கவும், இல்ல,எங்கப்பா வந்தாரு. இந்தக் கொழவிக் கல்லக் கேட்டாரு. அரச்சிட்டு தாரேண்டு சொன்னே. கோவுச்சிட்டுப் போறாருண்டு சொன்னா. 

கொழவிக் கல்லக் குடுக்கறதுதான. இதப் போயி இல்லண்டு சொல்லிருக்கியே. கொண்டா, நான் போயி குடுத்திட்டு வரேண்டு சொல்லிட்டு, கொழவிக் கல்ல தூக்கிக்கிட்டு ஓடுறா. 

மருமகன் ஓடிப்பாத்தா. மாமனப் புடிக்கமுடியல. திரும்பி வந்திட்டா. ஒங்கப்பா, என்னயப் பாத்திட்டு, நிக்காம ஓடிப் போயிட்டாருண்டு சொன்னா. சொல்லவும், அவ சிரிச்சா இவனுக்குப் புரியல. இருக்காங்க, இருக்கயில, இங்க.

கோழிக் கொழம்பு வெந்துகிட்டிருக்கு. சாப்டலாம்ண்டு இருக்கயில, இவளோட அப்பா, செத்துப் போனாருண்டு எளவு வந்திருச்சு. என்னடா! இப்பத்தா போனாரு. அதுக்குள்ள செத்துக் போனாரேண்ட்டு, இவங்க வெளியேறுறாங்க.

வெளியேறயில, கொளம்பு கொதிக்குது. இதத் திங்காம் எப்டிப் போறதுண்ட்டு, திங்கணும்ண்டா நேரமில்ல. வச்சிட்டுப் போகவும் மனசில்ல. என்னா செய்யுறது? தூக்கித் தலயில் வச்சுக்கிட்டு போறாங்க. 

ஊருப் பக்கத்துல போயி, ஒரு படப்புக்குள்ள திணுச்சு வச்சுட்டு, அப்பன், வீட்டுக்குப் போறா. போயிப் பாக்கயில, அப்பனச் சாத்தி வச்சிருக்கு. இந்தப் பக்கம் வெளக்கமாறக் கெட்டித் தொங்க விட்றுக்காங்க. இந்தப் பக்கம் செருப்பக் கெட்டித் தொங்கவிட்டுறுக்காங்க. எல்லாரும் ஒக்காந்திருக்காங்க. 

இவ போகவும், மக வந்திட்டா – மக வந்திட்டாண்டு! கூட இருந்தவங்க சொல்றாங்க. இவ போனதுமே, கெட்டுச் சேந்து புடுச்சு, 

அப்பே! நேத்துதானப்பே 

ஏ…. வீட்டுக்கு வந்த – 

ஒரு கோழிய ஒருமிக்கா 

அடிச்சுப் போட்டேனே அப்பே! ….. 

இண்ணக்கி செத்துப் போனயே …… யப்பே – ண்டு 

ஊரு மெக்ய அழுகுறா. இப்டிச் சொல்லி அழுகவும், வெளம் வந்து, எந்திரிச்சு, வெளக்க மாத்தயும் செருப்பயுங் கொண்டு மாத்தி – மாத்திப் போட்டானாம். ஞோளிமக, ஒரு கோழியயும் ஒருமிக்கா போட்டாளாம்ல்ல, போடி சிறுக்கி மகளேண்டு வெரட்டி விட்டுட்டு, மக செத்துப் போனாண்டு சொல்லி, தலகாலு முழுகிட்டு இருந்தானாம். 

இவ, அடி பொறுக்கமாட்டாம புருசனக் கூட்டிக்கிட்டு, ஊருக்கு ஓடுனா. ஓடயில, கோழிக் கொழம்பு நாபகம் வந்திருச்சு. படப்புக்குள்ளபோயி பாத்தால், பூராத்தயும் நாயி திண்டுபிட்டுப் போயிருச்சு. பொட்டி மீனும் போயி, புடிச்ச மீனும் போயி வீட்டுக்குப் போனாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *