சடையப்ப முதலியார்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 5
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னாளில் சடையப்ப முதலியார் என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் திருவெண்ணெய் நல் லூரிலே வாழ்ந்திருந்தார். அவருக்குச் செல்வம் மிகுதி யாக இருந்தது.
செல்வத்தைப் பெற்றவர்கள் செய்யவேண்டியது நல்லறம். இதனை நன்குணர்ந்த சடையப்ப முதலியார் தரமும் அறஞ்செய்தலை மேற்கொண்டார். ஏழை எளியவர்கள் வந்தால் அவர்கட்கு எந்த வேளையிலும் உணவிட்டார். பொருளை விரும்பியவர்கட்குப் பொரு ளுங் கொடுத்தார். அதனால் அவருடைய புகழ் எங்கும் பரவிற்று. எப்பொழுதும் பலபேர் முதலியார் வீட்டில் கூட்டமாக இருந்துகொண்டே இருந்தனர். பழைய வர்கள் பத்துப்பேர் புறப்பட்டுச் சென்றால் புதியவர்கள் இருபதுபேர் வந்து கூடுவார்கள். எவ்வளவு பேர் வந்தாலும் முதலியார் சிறிதும் தயங்காமல் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்துப் பெரும் புகழ் பெற்றார்.
கம்பராமாயணத்தைப் பாடிய கம்பநாட்டாழ் வாரைப்போற்றி ஆதரித்தவரும் இவர்தாம். உலகத்தார் அனைவரும் இவருக்கு உறவினராகவே அமைந்திருந் தார்கள். சடையப்ப முதலியார் இத்தகைய பரந்த மனப்பான்மையுடையவராக அமைந்திருந்தபடியினால் தான் கம்பராமாயணம் என்னும் அரிய நூல் தோன்றுவ தற்கு ஏதுவாயிற்று. ஆகவே, ஒவ்வொருவரும் மற்றவர் கட்குத் தக்கவாறு உதவி செய்து அவர்களை உறவின ராகக் கொள்ளுதல் வேண்டும்.
”மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரு மங்கில்லை – சுரந்தமுதம்
கற்ற தரல்போல் கரவா தளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.”
(உரை.) மரம் பழுத்தால் – மரம் பழுத்திருந்தால், வா என்று – பழத்தைத் தின்பதற்கு வருவாயாக என்று, வௌவாலைக்கவி இரந்து அழைப்பார்-வௌவாலைக்கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை – அம் மரத்தினிடம் ஒரு வரும் இல்லை, கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் – கன்றை யுடைய ஆவான து பாலைச் சுரந்து கொடுத்தலைப்போல, கரவாது அளிப்பரேல்-ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத். தார் (அவ்வௌவாலைப் போல) தாமே வந்து உறவினராவர்.
(கருத்து.) பிறருக்கு உதவி செய்பவர்களைக் கண்டால் பிறர் தாமே வந்து அவர்களைச் சூழ்ந்திருப்பர்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026