நெற்குன்றவாணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொண்டைமண்டலத்திலே சில நூற்றாண்டுகட்கு முன்னே நெற்குன்றவாணன் என்னும் பெயருடைய முதலியார் ஒருவர் இருந்தார். அவர் கள்ளங் கபடு வஞ்சகம் முதலிய தீய குணங்கள் சிறிதும் இல்லாதவர். ஏழை எளியவர்களிடத்திலே தண்ணருள் மிகுந்தவர். பிற உயிர்களை யெல்லாம் தம்முயிரைப் போலவே எண்ணும் இனிய தன்மையுடையவர். 

அவர் மிக நல்லவராக இருந்தபடியால் அவருக் குச் செல்வம் மிகுதியாகக் குவிந்தது. அழகிய வீடு வாசல்களைக் கட்டினார். விளைநிலங்கள் மிகுதியாகச் சேர்ந்தன. அதனால் ஆண்டுதோறும் விளையும் நெல் மலைமலையாகக் குவிந்தது. அவ்வாறு நெல்லை மிகுதி யாகப் பெற்றபடியினாலே தான் அவருடைய பெயர் நெற்குன்றவாணர் என்று காரணப் பெயராக அமைந்தது. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்து ஏழை எளியவர்கட்குப் பேருதவியாக இருந்தார். வஞ்ச மற்ற நெஞ்சையுடையவர் இனிய நலங்களைப் பெறு வார்கள் என்பதற்கு இம் முதலியாரே தக்க எடுத்துக் காட்டாக அமைந்தார். 

“திரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் 
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும் 
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும்
தருஞ்சிவந்த தாமரையாள் தான்.” 

(உரை.) சிவந்த தாமரையாள் – செந்தாமரையில் எழுந் தருளிய திருமகள், வஞ்சம் இலார்க்கு – வஞ்சமற்ற நெஞ்சி னர்க்கு, நீரும் – நீர்வளத்தையும், நிழலும்-நிழல் வளத்தையும், நிலம் பொதியும் நெற்கட்டும் – நிலத்திலே நிறையும் நெற் போரையும், பேரும் – நல்ல பேரையும், புகழும் – கீர்த்தியையும், பெருவாழ்வும் – பெரிய வாழ்க்கையையும், ஊரும் – சிற்றூரையும், வருந்திருவும் – வளர்கின் ற செல்வத்தையும், வாழ்நாளும் – நிறைந்த வாணாளையும், என்றும் தரும் – எந்நாளும் கொடுத் தருள்வாள். 

(கருத்து.) வஞ்சமற்ற நெஞ்சம் உள்ளவர்கள் இவ்வுல கத்திலே எல்லா நலங்களையும் இனிது பெற்று வாழ்வார்கள். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *