எல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 3
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிரம்பவழகியார் என்னும் பெயருடைய ஒருமுனிவர் ஒரு பெரிய மலையிலே பதினாறு ஆண்டுகள் அருந்தவம். புரிந்துகொண்டிருந்தார். பிறகு அவருக்கு இறைவன் திருவருளும் மெய்யறிவும் உண்டாயின. அதன்பின் தவத்தைவிட்டு உலகத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்.
ஓரிடத்தில்ஓர் எளியவன்ஒரு செல்வனைப்போற்றிப் பாராட்டிக்கொண்டிருந்தான். முனிவர் அந்த மனி தனைப் பார்த்து, ‘நீ அவனைப் போற்றி வழிபட்டுக் கொண் டிருக்கிறாயே! எதன் பொருட்டு?” என்று உசாவினார். “அவன் நல்ல பணக்காரன். சாப்பாட்டுக் கேதாவது தருவான். அதன்பொருட்டே அவனைப் போற்று கிறேன்.” என்று கூறினான். பின்னர் ஒரு பிச்சைக் காரனைக்கண்டு, “நீயேன் பிச்சையெடுக்கிறாய்?” என்று உசாவினார். அவனும், “சாப்பாட்டுக்காகத்தான்.” என்று கூறினான்.
பிறகு வெளிநாட்டுக்குச் சென்று பொருள் தேடிக்கொண்டு திரும்பிய ஒரு மனிதனைக் கண்டு, “எதற்குக் கடல் கடந்து சென்றாய்?” என்று உசாவி னார். அவனுஞ், “சாப்பாட்டிற்காகத்தான்,” என்றான். பிறகு ஓர் அரசனைக் கண்டு, “நீர் எதற்காக அரசாட்சி செய்கிறீர்?” என்று உசாவினார். அவ்வரசன், “சாப்பாட்டிற்காகத்தான் அரசாட்சியை மேற்கொண் டிருக்கிறேன்,” என்றான். பிறகு செல்வர்கள்மீது புகழ்ச்சியாகப் பாடல்கள் இயற்றிக்கொண்டு அவர்களின் வீடுதோறுந் திரிந்த ஒரு புலவரைக் கண்டு, “எதற்காக நீங்கள் இவ்வாறு பாடல்கள் இயற்று கிறீர்கள்?” என்று உசாவினார். புலவர், “எல்லாஞ் சாப் கேட்ட இதனைக் பாட்டிற்காகத்தான்,” என்றார். முனிவர் “அந்தோ! இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாரும் வயிற்றுப் பெருமான் பொருட்டு முயற்சி செய்கிறார்களே தவிர வறுமைக்கு நன்மை தரத்தக்க வீடுபேற்றின் பொருட்டு முயற்சி செய்வார் ஒருவரை யும் காணோமே,” என்று சொல்லி வருந்திக்கொண்டே சென்றார்.
“சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.”
(உரை) வயிற்றின் கொடுமையால் – வயிற்றினுடைய பசிக் கொடுமையாலே, சேவித்தும் – பிறரைப் போற்றியும் சென்று இரந்தும் – பலரிடத்துச் சென்று ஐயமேற்றும், தெள்நீர்க் கடல் கடந்தும் – தெளிவாகிய நீரையுடைய பெரிய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் ஒருவரைப் பெரிய வராகப் பாவித்தும், பார் ஆண்டும்-நில உலகத்தை அரசாட்சி செய்தும், பாட்டு இசைத்தும் – பிறரைப் புகழ்ந்து பாட்டுப் பாடியும், நாம் உடம்பை -நாம் நம்முடைய உடம்பை, நாழி அரிசிக்கே – நாழி அரிசியின் பொருட்டே, பாழின் – வீணாக, போவிப்பம் – செலுத்துகின்றேம்.
(கருத்து) இவ்வுலகத்தில் நடைபெறுந் தொழில்கள் யாவும் வயிற்றை நிரப்பும் பொருட்டே நடைபெறுகின்றன.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026