நீதி மன்னன் நெடுஞ்செழியன்
கதையாசிரியர்: ஞானம்
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை தமிழ் முரசு (ம.பொ.சி)
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 47
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகளைக் காண்கிறோம். மதுரைக் காண்டத்தில், பாண்டி நாட்டில் பொற் கொல்லன் சொற் கேட்டுக் குற்றமற்ற கோவலனைக் கொலை செய்ய உத்தரவிடுகின்றான் பாண்டியன். இதனால் அ செங்கோல் கொடுங்கோ லாகிரி லாகிறது. எனவே, கண்ணகி ஆவேசம் கொண்டவளாய் அரசை அழிக்கவும் அணி மதுரையைத் தீக்கிரை யாக்கவும் காரண மாகின்றாள்.
பொதுவாக நோக்குமிடத்துக் கோவலன் கொலையால் பாண்டியன் நெடுஞ்செழியன் கொடுங்கோல் மன்னனாகக் காணப்பட்டாலும் அக் கொலைக்கு முன்னும் பின்னும் அவன் நடந்துகொள்ளும் முறையிலிருந்தும், இதர சான்றுகளி லிருந்தும் நெடுஞ்செழியன் நீதி மன்னன் என்று நிச்சயிக்கலாம்.
குடிமக்களுக்குத் தீங்கிழைத்தமைக்காக அழிக்கப் பட்ட முடி மன்னர் பலரின் சரித்திரத்தைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இவற்றில் உலகோர் கவனத்தி லிருந்து இன்னும் அகலாம லிருப்பது இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னன், ரஷ்ய ஜார் சக்கரவர்த்தி ஆகியோரின் வீழ்ச்சியே யாகும். ரஷ்ய ஜார் மன்னன் குடிகளுக்குச் செய்த கொடுமை கொஞ்சமன்று. ஜார் ஆட்சியில் ‘இம்’ என்றால் சிறை வாசம். ஏனென்றால் வனவாசம் என்கிறார் பாரதியார். புரட்சிக்காரர்களால் கோச வதை செய்யப்படும் வரை ஜார் மன்னன் தன் தவறை உணர்ந்து அதற்காக வருந்தித் தானாகவே கழுவாய் தேடினான் இல்லை. இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லஸ் நிகழ்ச்சியும் அப்படியே.
மேற் சொன்ன மேலை நாட்டுக் கொடுக்கோலர்களுக்கும் நமது தமிழ் மன்னன் நெடுஞ்செழியன் செங்கோல் பிறழ்ந்ததற்கும் மிகுந்த வேற்றுமை உண்டு. மேற்படி மன்னர்கள் மக்களால் வீழ்த்தப்பட்டனர். ஆனால் பாண்டி. வேந்தனோ தன் தவறை உணர்ந்த அளவே அதற்குக் கழுவாயாகத் தானே வீழ்ந்து பட்டான். இதை இளங் கோவடிகள் பின்வரும் வெண்பாக்களில் சித்திரக் தீட்டிக் காட்டுகின்றார்.
“காவி யுகுநீரும், கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும் – பாவியேன்
காடெல்லாம் குழ்ந்த கருங்குழறும் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்
மெய்யிற் பொடியும், விரிந்த கருங்குழலும்
சையில் தனிச்சிலம்பும், கண்ணீரும் வையைக்கோன்
கண்டளவே தோற்குன்; அக் காரிகைதன்; சொஸ்ரேவியில்
உண்டளலே தோற்றன் உயிர்”
பாண்டியன் நெடுஞ்செழியன் அற்றைநாள் வசை தவறு செய்யாதவன் என்பதும், கோவலன்பால் அவன் இழைத்த கொடுமையும் மதிப் பிசகால் நிகழ்ந்ததே என்பதையும் வேறு பல சான்றுகனாலும் அறிகின்றோம்.
திருக்குறனில் வள்ளுவனார் அரசனுக்கு இலக்கணம் கூறுகையில் காட்சிக் கெளியனாகவும், கடுஞ்சொல்லன் அல்லனாகவும், செவிகைப்பச் சொற் பொறுப்பவனாகவும் இருப்பவனே பண்புடை வேந்தன் என்கின்றார். வள்ளுவர் கூறும் இந்த இலக்கணத்திற்கு முற்றும் இலக்கா யிருந்தான் நெடுஞ்செழியன்.
தன்னிடம் முறையிட்டுக்கொள்ளக் கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்திருப்பதை அறிந்ததும் “அவளைத் தருக” என்றதனால், நெடுஞ்செழியன் குடிகளின் காட்சிக் கெளியவனா யிருந்தமையும், தன்முன் நின்ற கண்ணகி தன்னைத் “தேரா மன்னா!” “நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!” என்றெல்லாம் சுடுசொல் சொல்லிய போது பொறுத்ததால் “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்” என்பதையும் அறிகிறோம்.
மற்றும், கண்ணகி அடங்கா ஆவேசங்கொண்டு சினந்து பேசிய போதும் “பெண் அணங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று” என இனிய மொழிகளால் தனது கட்சியை எடுத்துரைத்ததால் கடுஞ் சொல்லன் அல்லன” என்பதையும் காண்கிறோம்.
இனி, ஐரோப்பாவில் மன்னர்களை வீழ்த்திய மக்களின் மனோ நிலைக்கும், பாண்டி நாட்டில் நெடுஞ்செழியன் வீழ்ந்து பட்டதற்குக் காரணமா யிருந்த தமிழ் மகளாம் கண்ணகியின் மனோ நிலைக்கும்கூடப் பெருத்த வேற்றுமையைக் காண்கிறோம். அங்கே அக் கொடுக்கோல் மன்னர்களால் மக்கள் சமுதாயம் முற்றும் கவலை கொள்ளத் தக்க நிலையில் அந்நாடுகளின் “செம்மை யெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்துவிட்ட” போது தான் ஜனசக்தி எழுந்து கிளர்ச்சி செய்தது.
ஆனால், பாண்டி நாட்டில் நெடுஞ்செழியன் தனது ஆட்சியில் இழைத்த முதல் தீங்கு கோவலனைக் கொன்றதே யாகும். “வளையாத செங்கோல் வளைந்ததே” என்று இளங்கோவடிகள் கூறுவதும்
“….காதின்
மறைநா வோசை யல்லது யாவதும்
மணிநா வோசை கேட்டதும் இலனே;
அடிதொழுது இறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனு மல்லன்”
என்ற மதுராபுரி தெய்வத்தின் கூற்றும் இதை வலியுறுத்தும்.
மற்றும், மதுரை மக்கள் பாண்டியன் நீதி பிழைத்ததைக் கண்ணகியால் அறிந்த பின்னரும், “மண் குளிரச் செய்யும் மறவேல் நெடுந்ததை தண்குடை” என்று அவன் கொற்றக் குடையின் தன்மையைப் போற்றுவதாலும் அறிகிறோம். அப்படி யிருந்தும் கண்ணகி “தீ வேந்தன் பாற்சென்று திறம்கேட்பல் யான்” என்று அரண்மனையை நோக்கி விரைந்ததாலும் “ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும் ” என்று வஞ்சினம் கூறி மதுரையைத் தீக்கிரை யாக்கியதும் உணர்த்துகிறது? “அரசன் ஒரு முறை நீதி பிழைக்கினும் அவனது ஆட்சி அழித்தற் குரியதே ஒழிய ஆளுதற்குரியது அன்று” என்ற தமிழ் மக்களின் மனோ பாவத்தையும் காண்கிறோம்.
பாண்டி மன்னன தான் செங்கோலனா யிருத்தல் வேண்டும் என்ற பேராவல் கொண்டவன் என்பதைப் புறநானூற்றிலுள்ள அவனது பாட லொன்றினாலும் அறிகின்றோம். தன்னை யெதிர்த்துப் புறப்பட்ட ஒன்பதின் மரைத் தலையாலங்கானத்தில் போரிடப் புறப்பட்டபோது அப் பகைவரைப் புறங்கண்டு வெற்றி காணாவிடில்,
எந்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
‘கொடியன் எம்இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
என்று தன் செங்கோல் மீது ஆணைவைத்துச் சென்றமையால் அறிகிறோம்.
பாண்டி வேந்தனின் நீதியை இளங்கோவடிகளும், மதுரைக் குடிகளும் புகழ்ந்ததை மேலே கண்டோம். சேரன் செங்குட்டுவனும் நெடுஞ்செழியன் இறந்ததைக் கேள்வியுற்றதும்,
”எம்மனோ ரன்ன வேந்தர்க் குற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது “
என்று நீதிக்கு உயிர் கொடுத்த நெடுஞ்செழியன் தியாகத்தைப் போற்றுகின்றான். இதுவரை கூறியவாற்றால் பாண்டியன் நெடுஞ்செழியன், குடிமக்கள் போற்றும் கொற்றவன், கவியரசர் போற்றும் காவலன், புவி மன்னர் வாழ்த்தும் புரவலன் என்பதை அறியலாம். அதுமட்டுமல்ல ; “புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின் உலகொடு வரினும் கொள்ளலர்” என்ற பழந்தமிழ் மரபுக்கு நெடுஞ்செழியன் வரலாறு மற்றோர் எடுத்துக்காட்டு.
– 01 ஜனவரி 1947, தமிழ் முரசு (ம.பொ.சி).
தொடர்புள்ள சிறுகதைகள்
உணர்வும் உறவும்
மு.வரதராசன்
July 11, 2026
குளத்தங்கரை உரையாடல்
எஸ்.மதுரகவி
June 29, 2026
தமிழால் பிழைத்தேன்
எம்.லட்சுமிபதி
June 29, 2026