கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 163 
வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

விழிப்பு வந்ததும் லுங்கியில் ஈரத்தை உணர்ந்தேன், உடனே எழுந்திருக்க மனம் வரவில்லை. சோம்பலாகவும் சோர்வாகவும் இருந்தது. படுத்தவாறே ஈரம் காய்வதற்கு ஏற்றாற்போல் லுங்கியின் ஈரப்பகுதி உடலின் மேல் படாமலும் உலர்வதற்கு ஏற்றாற்போலவும் விரித்துக் கட்டிகொண்டேன். நேற்றும் இப்படிதான் ஒரு கனவு வந்தது. நேற்றைய கனவு ஞாபகமில்லை. இன்றைய கனவு வேற்று கிரகஜீவிகளின் உடற்சேர்கையை வேடிக்கை பார்ப்பது போல.

அபி சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டது. நான் எழுந்து அவளுக்குக் காபி தயாரித்து தரவில்லை என்ற கோபம் அவள் உருட்டும் பாத்திரங்களின் ஓசையில் வெளிப்பட்டது. நான் கட்டிலில் இருந்து தரையில் இறங்கி நின்றுகொண்டு அவிழ்ந்த லுங்கியை மீண்டும் விரித்துப் பட்டும் படாமல் கட்டிக் கொள்ளும்போது, எனக்காக காபியை எடுத்து வந்த அபியின் கண்கள் லுங்கியின் ஈரத்தில் மொய்த்து மீண்டது. அவள் பார்த்ததை கண்ட நான், அதை அவள் நன்றாகப் பார்கட்டும் என்று லுங்கியை நன்றாக பிரித்து அதில் ஈரமான பகதியை அவள் பார்வையில் நன்றாகப்படும்படி காட்டிவிட்டு பிறகு குளியலறையில் புகுந்தேன்.

தனிக் குடித்தனம். எனக்கு அம்மா இல்லை. அப்பாவும் எனது ஒரே உடன்பிறப்பான அண்ணன் விட்டில் வாசம். அதனால் இது போன்ற அபிராமியின் மொழியில் சொல்வதென்றால் இது போன்ற ‘கண்றாவிகளுக்கு’ குறைவில்லை.

குளியல் முடித்து வெளியே வந்து பார்த்தபோது மேசையின் மேல் வைத்திருந்த காபி ஆறிப்போய் இருந்தது. அபியைத் தேடினேன். அபி வீட்டில் இல்லை. எதிர்பார்த்ததுதான். அபி அவள் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள் அதன்பிறகு அவள் என்னிடம் போனிலும் பேசவில்லை. நானும் பேசவில்லை. இரண்டு நாள் கழித்து அபி என் செல்போனுக்கு அனுப்பி இருந்த இரண்டு குறுந்தகவல்களைக் கண்ணுற்றேன் ‘ஐ ஹேட் யூ’, ‘ஐ லவ் யூ’ தொடர்ச்சியாக இவை இரண்டும்தான் குறுந்தகவல் பெட்டியில் நிரம்பி இருந்தது. சாதாரணமாக நாங்கள் பேசாமலும் பிரிந்து இருப்பதற்காகவும் கால இடைவெளி அதிகபட்சம் இரண்டு வாரங்கள்தான். நாளைக்கு அபியின் வீட்டிற்குச் சென்று அவளை அழைத்து வரலாம் என எண்ணிக்கொண்டு இருக்கும்போது அவளே இங்கு வந்துவிட்டாள்.

அபி என்னிடம் பேச்சைத் துவங்குவதற்கு முதல் பேச்சாக, ‘கனவில் வந்தது யாரென?’ என்று கேட்டாள். திடீரென இப்படி ஒரு கேள்வியை அவள் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் எதைப் பற்றி கேட்கிறாள் என்பதை புரிந்து கொள்ளவே கொஞ்சம் நேரம் ஆயிற்று. பிறகுதான் அன்று நான் அவளுக்குக் காட்டிய என் கனவில் நான் வரைந்த காமதேச வரைபடத்தின் ஈரப்பிரதி ஞாபகம் வந்தது. அவளை நோக்கி ‘நிச்சயமாக நீ இல்லை’ என்றேன். அபியின் முகம் மாறுதல் அடைந்தது. மீண்டும் அபி அவள் அம்மா வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள். கிளம்பியும் விட்டாள். நான் என் திருவாயை வைத்துக்கொண்டு எதும் பேசாமல் இருந்திருக்கலாம்.

எனக்குப் பைத்தியம் பிடித்தும், அணிந்திருக்கும். ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தெருவில் நிர்வாணமாக ஓடாதது ஒன்றுதான் குறை, அபியை மணம் புரிந்துகொண்ட பின் இந்த மூன்று வருடங்களில் பித்து நிலை எனக்கு ஏற்படாதது ஆச்சிரியம்தான். எங்கள் இருவருக்கும் இடையேயான இத்தகைய விசித்திர மளநிலை வெளிபாடு நிகழ்வுகளில் நான் அபியை அனுசரித்து வாழ்வதற்கான காரணம் – நான் அவளை மனபூர்வமாக நேசிப்பதுதான். ஆனால், எத்தனை காலம்தான் நான் ‘இப்படி’ வாழ்ந்து கொண்டு இருப்பது? எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டும் அல்லவா, எனது நீண்டகால யோசனையை செயல்படுத்தத் துணிந்து விட்டேன். அதுதான் விவாகரத்து, ஆனால், இதுவும் சும்மா ஒரு பாவ்லாதான். நாம் இப்படி வாழ்வதைவிட விவாகரத்து செய்துகொண்டு பிரிந்து விடலாம் என்று அபியிடம் பல சமயங்களில் சொல்லி பயமுறுத்தி இருக்கிறேன். ஆனால், அதற்கு ஒரு செயல்வடிவத்தை இப்போது கொடுத்தாக வேண்டும். முதலில் ஒரு வக்கில் மூலம் அபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அபியை பயமுறுத்த இது போதும் என எண்ணிணேன்.

விவாகரத்து நோட்டீஸ் செயல்வடிவ எண்ணம் எழுந்தவுடன் என் பழைய நெருங்கிய நண்பனின் ஞாபகம் வந்தது, ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தோம். இளங்கலை பட்டத்திற்கும் ஒரே கல்லூரியில் ஒன்றாக பயின்றோம். நாங்கள் R.K. நகரில் வசித்தபோது நான்கு தெருக்கள் தள்ளி அவன் வீடு, எனது அண்ணனின் வேலை மாற்றத்தின் காரணமாய் எனது குடும்பம் வேறு ஊரில் குடிபுக அவனுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்பங்கள் குறைந்து மறைந்தே விட்டது. எப்போதாவது சந்திக்கும் பழைய நண்பர்கள் மூலம் அவனைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்வேன்.

R.K. நகரில் அவன் வசித்த வீடு, அவன் தந்தை சொந்தமாக நிலம் வாங்கிக் கட்டிய சொந்த வீடு என்று ஞாபகம் வந்தது. என் நினைவுகளின் வழிதடத்தில் சென்று அவள் வீட்டை அடைந்தேன். நல்ல வேளையாக அவன் அதே வீட்டில்தான் இப்போதும் குடியிருந்தான். அவனுடைய வயதான பெற்றோர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் சம்பிரதாய பேச்சுகளுக்குப் பிறகு என் நண்பன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதாயும் தங்களின் ஒரே பிள்ளையை இப்படி தனிமரமாக விட்டு விட்டு இறந்தால் அவர்களின் ஆன்மா சாந்தி அடையாது எனவும் கூறி அழுதார்கள். நான் அவனை சந்திக்க வந்த நோக்கத்தை அவர்களிடம் கூறவில்லை. எனக்கு மணமாகி விட்டதையும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும் ஏதோ திடிரென அவன் ஞாபகம் வந்ததாகவும், அதனால் அவனை சந்திக்க வந்ததாகவும் கூறி, அவன் செல் நம்பரையும் கோர்ட்டில் சந்திக்க அவனின் சேம்பர் முகவரியையும் பெற்றுக்கொண்டேன்.

இரண்டு நாட்கள் கழிந்தது. அபி இன்னும் வீடு திரும்பவில்லை. இதை இப்படியே விடகூடாது என்றும் இன்னும் எத்தனை காலம் தான் இப்படியே இருப்பது என்ற எண்ணமும் என் மனதில் எழுந்தது. என் நண்பனை போனில் பிடிக்க இயலவில்லை. அதனால் அவனை இன்று கோர்ட்டில் சந்திக்கலாம் என்று ஆபிஸுக்கு லீவு போட்டுவிட்டு கோர்ட்டுக்குக் கிளம்பினேன்.

சேம்பரில் அவன் இல்லை. அவன் பெயரைச் சொல்லி விசாரித்தபோது யாருக்கும் அவனைத் தெரியவில்லை. பிறகு சேம்பரின் முகப்பில் இருந்த பல பெயர் பலகைகளில் அவன் பெயரைச் சுட்டியபோது ஓ கே.எஸ் ஸாரா. அவர் வந்தால் வருவார், இல்லாவிட்டால் இல்லை. ஆனால், இன்று இன்னும் வரவில்லை. இனி வருவாரா, இல்லை நாளை வருவாரா, என்று தெரியாது என பதில் கிடைத்தது. நான் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது எதிர்பாராவிதமாய் அவன் அப்போது சேம்பருள் நுழைந்தான். தோற்றத்தில் பெரும் மாற்றம். தேகம் தளர்ந்து என்னைவிட வயதானவன்போல் இருந்தான். அவன் என்னைக் கண்டு திடுக்கிட்டதைப் போல் உணர்ந்தேன். பல வருடங்கள் பிரிவு இல்லையா. என்றாலும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியுமா என்ன? உற்சாகத்துடன் என்னை வரவேற்று அவன் இருப்பிட மேசையின் முன் இருந்த நாற்காலியில் அமரச் செய்தான். நான் “உன் முழுப்பெயரைச் சொல்லி இங்கு விசாரித்தபோது யாருக்கும் உன்னை தெரியவில்லை. கே.எஸ்- இதுகூட நல்லாதான் இருக்கு. நானும் உன்னை இப்படியே கூப்பிடுறேன்” என்றேன். தொடர்ந்த எங்கள் பேச்சில் கல்லூரி காலம் ஞாபகம் வந்தது. அந்நாட்களில் நண்பர் குழாத்துடன் கூடி களித்த கும்மாளங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் எங்கள் நண்பர்களிடையே, சந்தர்ப்ப ஞ் சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தும், மாங்கனிகள் போன்ற பெண்கள் எங்கள் மடியில் தானாய் வந்து வீழ்ந்தும் அவர்களை ருசிகாமல் விட்டது நானும் அவனும் மட்டும்தான். அவனுக்கு இன்னும் மணமாகவில்லை என்பதால் அவன் இன்னும் ‘ஸெலிபேட்’ என்பதை அவனைப் பற்றி நன்கறிந்த என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

எங்களின் பேச்சு சுவாரசியத்துடன் தொடர்ந்தது. திடீரென, “நீ எதுக்கு என்னைப்பாக்க வந்தேனு சொல்லவேயில்லையே என்ன விஷயம் சொல்லுடா” என, நான் சற்றுத் தயங்கி பின், “டேய் நீ என் கல்யாணத்துக்குக் கூட வரலயில்ல. என் ஒயிப் யாருனு தெரியுமில்ல, இல்ல மறந்திட்டியா? நம்ம அபிராமிடா, ஸிரி நகர்ல சிக்ஸ்த் கிராஸ் ரோட்டு வேப்பமர வீடு” என்றதும் கே.எஸ். “ஆமாமாம்” என்று தலையசைத்தான். சொல்லப் போனால் அந்தக் காலக்கட்டத்தில் அபியிடம் என்னைவிட அவனுக்குத்தான் நல்ல பழக்கம்.

“சரி, ரகு என்ன விஷயம் சொல்லு” என்றான் மறுபடியும், நான் “அபிக்கு ஒரு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்கணும்டா” என்றேன். “என்னடா சொல்றே” என்ற கே.எஸ்ஸூக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரம் மவுனத்தில் கழிந்தது. பிறகு கே.எஸ் “மத்த விஷயமெல்லாம் இன்னொரு நாள் பேசிகிடலாம். இப்ப போய் லன்ச் சாப்பிடலாம் வா” கே.எஸ் அவன் இருக்கையில் இருந்து எழுந்து நடக்க நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

2

அடுத்து இரண்டு நாட்கள் போயிற்று. அபி வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள். நான் இரண்டு நாட்களுக்கு முன் கே.எஸ்ஐ சந்தித்தபோது என் பிரச்சினைகளை, குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரமாக எதுவும் பேச முடியவில்லை. நான் அதைப்பற்றி அவனிடம் பேச முயன்ற போதெல்லாம் அசிரத்தையுடன் தவிர்த்து விட்டான். அதன் பிறகும் போனில் அவனிடம் விவாகரத்து நோட்டீஸ் தயார் செய்ய உன்னிடம் விரிவாக பேச வேண்டும் எப்போது வரலாம் என கேட்கும் போதெல்லாம், குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு சண்டைச் சச்சரவுகள் சகஜம். உனது விவாகரத்து எண்ணத்தை கைவிடு என அறிவுறுத்திய கே.எஸ்ஸிடம் நான், “இந்த டிவோர்ஸ் நோட்டீஸ், டிவோர்ஸ் பண்ண போறேனு சொல்றது எல்லாம் சும்மா அபியை பயமுறுத்ததான். உங்கிட்ட டீடெய்லா பேசினாதான் உனக்கு புரியும். எப்படா நாம மீட் பண்ணறது”, என பலமுறை பேசியபிறகும் அவன் என்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பதாகத் தோன்றியது. ஆனால் அப்படியெல்லாம் இருக்காது என்று என்னுள் எழுந்த சமாதான எண்ணத்துடன் இன்று காலையிலேயே அவன் சேம்பருக்கு சென்று அவனைப் பிடித்து விடலாம் என்று, அபியிடம் ஆபிஸ் போகிறேன் என்று சொல்லிவிட்டு கே.எஸ்ஐ பார்க்கக் கிளம்பினேன்.

சேம்பரில் கே.எஸ்ஐ எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தபோது எதேச்சையாக அவன் அறையில் இருந்த மற்ற வழக்கறிஞர்களிடம் பேச நேர்ந்தபோது கிடைத்த புது தகவல், கே.எஸ் மகா குடிகாரனாம். எந்த நேரமும் ‘பார்’லேயே குடியாய் இருந்துத் தொழிலை கவனிக்காமல் இருப்பவனாம். “இது எல்லோருக்கும் தெரியுமே, அவரோட கிளைண்ட்ஸ் எல்லாம் கேஸ் கட்டை திரும்பி வாங்கிட்டு போயிட்டாங்களே. நீங்க புது கிளையண்டா”, என்றார்கள். கே.எஸ்ஸின் தளர்ச்சியான உருவ மாற்றத்திற்கு எனக்கு இப்போதுதான் காரணம் புரிந்தது. இப்படி எல்லோரிடமும் பெயரை கெடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறானே என்று வருத்தமாகவும் இருந்தது. கே.எஸ் ஏன் இப்படி குடிச்சு குடிச்சு சீரழியறாரு. ஆனா ரொம்ப நல்ல மனுசன். தொழில்லையும் கெட்டிகாரர்தான். ஏன் இப்படி மாறிட்டார்ன்னு தெரியல. நீங்க கெளம்புங்க ஸார், அவரு இந்த நேரம் எங்கயாவது தண்ணியடிச்சுட்டு ரோட்டுல விழுந்து இருப்பாரு” இந்தக் கூற்று மிகைப்படுத்தி கூறுவதைப் போல் எனக்குத் தோன்றியதால் கே.எஸ்ஸூக்கு போன் செய்து அவனுக்காக சேம்பரில் காத்துக்கொண்டு இருப்பதாகக் கூறினேன். “இதோ வந்து விடுகிறேன்”, என்ற கே.எஸ் வரவேயில்லை, பிறகு போனிலும் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வந்து விடுவான், வந்து விடுவான், எனப் பிற்பகல்வரை காத்திருந்தும் அவன் வரவில்லை.

அன்று மாலை கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டிலேயே ஓர் அறையை ஆபிஸாக உருமாற்றி இருந்தான். அங்கும் அவன் இல்லை. அவனுடைய பெற்றோர்களின் பரிதாப நிலையைதான் மீண்டும் காணவேண்டி இருந்தது. “நீ சொன்னாவாவது அவன் கேட்கறானானு பாப்போம். நீ கொஞ்சம் சொல்லுப்பா. எங்க ஒரே வாரிசு இப்படி தனிமரமா நிக்கறானே.” என அழுகை. அவன் திருமணவிஷயத்தைப் பற்றி பேசுவதற்காகவே அவனுக்காக காத்திருக்க முடிவு செய்தேன். இரவு பத்து மணிக்குமேல் வந்தான். குடிபோதையுடன், எங்கேயோ குப்பை தொட்டியில் விழுந்து புரண்டவன் போலத் தோற்றம், ஆட்டோவில் வந்தவனை ஆட்டோ டிரைவர் எறகுறைய தூக்கிக்கொண்டு வந்து வீட்டினுள் கிடத்தினார். இந்த நிலையில் அவனிடம் என்ன பேசுவது? கே.எஸ்ஸின் அம்மா அவன் தலையில் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றினாள். அப்போதும் போதைத் தெளியவில்லை. தினமும் இதே கதைதானாம். மறுநாள் அவனைச் சந்திப்பதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டேன்.

மறுநாள் காலை கே.எஸ்ஸூக்கு போன் செய்தபோது சேம்பரில் எனக்காக காத்துக்கொண்டு இருப்பதாகக் கூறினான் என்னைத் தவிர்க்க இயலாத நிலையில்தான் அவன் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாக எனக்குத் தோன்றியது. நேற்று அவன் இருந்த நிலையைப் பற்றி அவனிடம் எதுவும் பேசக்கூடாது என எண்ணிக்கொண்டேன்.

கே.எஸ். என்னிடம், “அபிக்கு ஏதும் நோட்டீஸ் கோடுக்க வேண்டாம்டா, புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை சச்சரவு எல்லாம் சகஜம்டா, கொஞ்சம் பொறுமையாய இருடா” என்றான். நான் அவனிடம், “எங்களுக்குள்ள என்ன பிரச்சினையின்னு இன்னும் சொல்லவே இல்லையே” என்றதும், “என்னவா இருந்தாலும்” என்று பேசத் தொடங்கியவனை இடைமறித்து, “வெளியில் எங்கையாவது போகலாம், வா என அழைத்தேன். அதற்கு கே.எஸ், “வெளியில போய் தனியா பேச என்னடா இருக்கு. நீங்க ரெண்டு பேருமே எனக்குத் தெரிஞ்சவங்க. பழக்கமானவங்க. நான் எப்படிடா இது அபிக்கு நோட்டீஸ் அனுப்புறது. சரி, நீ என்னை மீட் பண்ணியதை அபிகிட்ட சொல்லிட்டியா என்ன?” என்றான். ‘இல்லை’ என்று பதிலளித்த எனக்கு கே.எஸ்ஸின் தர்மசங்கடம் புரிந்தது. கே.எஸ் நெர்வஸ்ஸாக நடுங்கும் தனது கரங்களை மேசையின்கீழ் மறைத்துக்கொண்டு, “ரகு நான் கிளம்பறேன்டா. ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று சொன்னான். அவன் குடிக்கத்தான் இப்படித் தவிக்கிறான் என்று அறிந்துகொண்ட நான், “நீ எங்கே, எந்த முக்கியமான வேலையா போனாலும் நானும் கூட வருவேன்”, எனவும் வேறு வழியில்லாமல் என்னையும் உடன் அழைத்துக்கொண்டுப் புறப்பட்டான்

பாரில் கே.எஸ் தனது கடமையே கண்ணாக இருந்தான். எனக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து அபியின் காரணமாய் நானும் மதுவை பழகி இருந்தேன் ஆனால் கே.எஸ்ஸூடன் ஒப்பிடும்போது நான் எவ்வளவோ மேல். நான்தான் முதலில் மவுனம் கலைத்தேன்.

“கே.எஸ். நான் உங்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டு பேசனும் குடிக்கறத நிறுத்திட்டு நான் சொல்லுறத கேளுடா. நீ ஏன்டா இப்படி இருக்கே. உன்னோட அம்மா, அப்பா எவ்ளோ வருத்தபடறாங்க தெரியுமா? உனக்காக இல்லனாலும் அவங்களுக்காகவாவது நீ ஒரு கல்யாணம் செஞ்சிகிட்டா என்ன? பிரச்சினை எதுவாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுடா” கே.எஸ் வாயைத் திறக்கவில்லை. எழுந்து நின்று கிளம்பப் போனவனை தடுத்து அமர வைத்தேன். சரி கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று எண்ணிக்கொண்டு, “சரி எங்கதையாவது கொஞ்சம் கேளு, என்னோட பாரத்தையும் கொஞ்சம் எறக்கி வச்ச மாதிரி இருக்கும். இதுவரைக்கும் இத யார்கிட்டையும் சொன்னதில்லைடா” எனத் தொடர்ந்தேன்.

“நானும் உன்ன மாதிரிதான் ரொம்ப நாளா கல்யாணம் செய்யணுமுன்னு நெனப்பே இல்லாம இருந்தேன் குறிப்பா காரணம் எதுவும் இல்லைனாலும் சரியான வேலை. மத்த குடும்ப பிரச்சினையினு என் கல்யாணம் டிலே ஆயிட்டேயிருந்தது. அப்பத்தான் அபியோட வரன் ஒரு கல்யாண புரோக்கர் மூலமா வந்தது. மொதல்ல அது நம்ப அபியினு எனக்குத் தெரியாது. பொண்ணு பாக்கப் ‘போனப்பத்தான் நம்ம அபிராமியினு தெரிஞ்சது. அபியைப் பார்த்ததும் இவளுக்காகதான் நான் இத்தனை நாளா காத்துகிட்டு இருந்தேன்னு தோணிச்சு. ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் கொஞ்சம் அதிகம். அதத் தவிர, ஜாதகம் எல்லாம் பொருத்தமா இருந்தது. என்னையும் அவங்க வீட்டுல பிடிச்சிருந்தது. அபியும் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா. அப்புறம் என்ன, ஒரு நல்ல நாள்ல எனக்கும் அபிராமிக்கும் கல்யாணமும் நடந்து முடிஞ்சது. டேய் கே.எஸ் நான் சொல்லறத கேட்கறியா இல்லையா. நான் அனுபவிக்கற கஷ்டத்த சொன்னாதான் என்னோட பாரம் குறையும். என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவன் நீ. நான் சொல்லறதக் கொஞ்சம் கேளுடா” போதையில் மூழ்கி இருந்த அவனை உலுக்கி விட்டுத் தொடர்ந்தேன்.

“கல்யாணம் முடிஞ்சு சாந்தி முகூர்த்தம். இத்தனை வருஷமா கிடைக்காத அனுபவம், முதல்முதலா என்னோட அபி மூலமா எனக்குக் கிடைக்க போறத நெனைச்சி ரொம்ப சந்தோஷமா இருந்தேன் இனிமே ஆயுசு முழுக்க அபி எனக்குச் சொந்தம், அப்படிங்கிற நெனப்பே என்னை ஆகாயத்தில பறக்க வைச்சது. அலங்காரத்துல தேவதை மாதிரி முதலிரவு அறைக்கு வந்த அபி எங்கிட்ட ரொம்ப சகஜமாவும் நட்பாவும் பேசினா. நேரம் பாட்டுக்கு ஓடிகிட்டே இருக்கு அபி பேச்சினூடே திடீர்னு, நாம ரெண்டு பேரும் எற்கனவே அறிமுகமானவங்களா இருந்தாலும் அவ்வளவு நெருக்கம் இல்லை, இல்லையா என்றாள். அவ சொன்னது உண்மைதானே நானும் ஆமா அபி” என்றேன்.

“அபி என் கண்களை நேரடியா பார்த்துக்கொண்டே, அதனால மொதல்ல நாம ரெண்டு பேரும் நல்லா பழகி ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுப்போம். அதுக்கப்புறம்… அதனால் இன்னிக்கு. வேண்டாம் என்றாள் தணிந்த குரலில். என்னோட உற்சாகமெல்லாம் சட்டுனு வடிஞ்சி போச்சு. வாடிப்போன என் முகத்த பாத்த அபி, ‘இது ஒரு சஜெஷன் மட்டும்தான். உங்களுக்கு வேண்ணுமினா…’ என்றவளை மேலும் பேச விடாமல் தடுத்து நீ சொல்றதும் சரிதான் அபி என்றேன். ஆனா அதெல்லாம் அவ போட்ட டிராமான்னு அப்புறம்தான் புரிஞ்சுகிட்டேன்”,

“அதுக்கு அப்புறம் அவளை நான் நெருங்கின போதெல்லாம் தலைவலி, இடுப்புவலி, மாசவிலக்கு, அம்மா வீட்டுல ஜாகையினு, என்னை அவ கிட்டயே சேக்கல. காலம் பாட்டுக்கு ஒடினே இருக்கு. அப்புறம்தான் என்னோட மரமண்டைக்கு ‘இந்த’ விஷயத்துல அபி என்னை அவாய்ட் பண்ணறானு புரிஞ்சிபோச்சு. என்னோட விரலாலகூட அவள தொடவிடல. அப்புறம் ஏன் என்னை சுண்டு கல்யாணம் பணிணிகிட்டானு கோபமா வந்தது. எத்தனை நாள்தான் நான் பொறுமையா இருக்கறது. ஒரு நாள்… கொஞ்சம் பலவந்தமா ஓடுன அவள பிடிக்க ஓடி ஓடி மூச்சு வாங்கினதுதான் மிச்சம். ஆனா கத அத்தோட முடியல. காய்கறி நறுக்கிற கத்தியை எடுத்து என்னைக் காயபடுத்திட்டு அவ அவளோட கை நரம்ப அறுத்துகிட்டா. கிச்சன் உள்ள போய் கதவச் சாத்திகிட்டு சிலிண்டரை தெறந்து விட்டுடா. கதவ ஒடச்சு மயக்கமான அவள நான் காப்பாத்த பட்டிபாடு எனக்குதான் தெரியும். இனிமேல் இந்த மாதிரி நடந்துக்கவே மாட்டேனு எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் அவ அமைதியானா”

கே.எஸ் இறுகிப்போன முகத்துடன் எங்கேயோ பார்த்தவாறு குடித்துக்கொண்டு இருந்தான். நான் இன்னொரு கோப்பை மதுவை ஒரே மடக்கில் விழுங்கிவிட்டு அவனிடம், “டேய் உன்னைத் தவிர யார்கிட்டயும் இந்த விஷயத்யெல்லாம் சொன்னதில்லை. நீ பாட்டுக்கு நான் சொல்லறதயெல்லாம் கவனிக்காம எங்கேயோ வேடிக்கைப் பாத்துகிட்டு இருக்கே. நான் சொன்னதெல்லாம் கேட்டியா இல்லையா. ஏதாவது வாயைத் தெறந்து பேசுடா” என்றேன். கே.எஸ் மிகுந்த தயக்கத்துடன், “ஏதாவது ஸைகாலேஜூகல் ப்ராபளம்மா இருக்குமோ” என்றான்.

நான் தொடர்ந்தேன், “ஆமாம்டா. யூ ஆர் கரெக்ட் ஆனா, அதுக்கப்புறமும் அவ மேல எனக்கு அன்பு கொறையல அவள ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிப் போக முயற்சி பண்ணினேன். அதுலயும் தோல்விதான். எதுக்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல். வேற யார்கிட்டயும் இந்த விஷயத்தப்பத்தி பேச தோணலை. கல்யாணம் ஆகி இந்த மூணு வருஷத்துல என்னன்னமோ பண்ணிப் பாத்துட்டேன். எதுக்கும் அவ மசியல படம்போட்ட புக் – பலான படம்கூட போட்டுக் காமிச்சேன். உங்கிட்ட சொல்லறதுக்கு என்ன. அவ முன்னாடி நிர்வாணமாகூட கோவிச்சிகிட்டு அம்மா வீட்டுக்குப் போனவளை பிரிஞ்சி இருக்க முடியாம நான்தான் போய் அவளக் கூட்டிகிட்டு வந்தேன். தன் கையே தனக்குதவின்னு வாழ்க்கை போய்கிட்டு மத்தவங்கயெல்லாரும் நாங்க சந்தோஷமா இருக்கிறோமுனு இருக்கு. நெனைச்சிகிட்டு இருக்காங்க. அதே நேரத்துல அபிக்கு என்மேல எந்த வெறுப்பும், கோபமும் இல்லை. சொல்லப்போனா என்னை பிரிந்தும் அவளாள இருக்க முடியாது. கே.எஸ்… நான் அபிக்கு அனுப்ப நெனக்கிற டீவோர்ஸ் நோட்டீஸ்ஸூம் ஒரு ஷாக் டீரிட்மெண்ட் மாதிரி வேலை செய்யுமுன்னு நெனைக்குறேன்டா. அவள நிரந்தரமா பிரிய போறதா சொன்னா, அவ நிச்சயமா மாறிடுவான ஒரு நம்பிக்கை. கே.எஸ். இந்த விஷயத்துல நீ தான்டா எனக்கு ஹெல்ப் பண்ணணும். சரி, கே.எஸ் நோட்டீஸ்ஸ உன் பேர்ல அனுப்பவேண்டாம். வேற யாராவது அட்வகேட் உன்னோட ப்ரெண்ட்ஸ் பேர்ல அனுப்பலாமே. நீ இந்த விஷயத்துல சம்பந்தம் பட்டு இருக்கேனு யாருக்கும். அபிக்கு தெரியாம பாத்துகிறேன்… அதுக்குதானே நீ தயங்குறே. இந்த விஷயத்துல புதுசா வேற யாரையும் அப்ரோச் பண்ண எனக்கு பிடிக்கலேடா…” என்றதும், கே.எஸ். அதற்கு வெகுவான தயக்கத்திற்குப் பிறகு சம்மதித்தான்.

அடுத்து ஒருவார இடைவெளியில் கே.எஸ். என் விருப்பப்படியே அபிக்கு டீவோர்ஸ் நோட்டீஸை வேறு ஓர் அட்வகேட் மூலம் அவரின் பெயரில் அனுப்பியுள்ளதாக என்னிடம் போனில் தெரிவித்தான். அபியின் பெற்றோர் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்ததால், அபியின் பெயருக்கு வந்த நோட்டீஸை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த என் மாமனார் அதை அபியிடம் கொடுத்தார். இருவருக்கும் மிகுந்த ஆச்சரியம். ஒரு அட்வகேட்டிடமிருந்து அபியின் பெயருக்குத் தபால் வருவதற்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லையே! அதைப் பிரித்து படித்த அபி வெளிரிய முகத்துடன் அதை அவள் அப்பாவிடம் கொடுத்தாள்.

அபிக்கும் எனக்கும் திருமணம் ஆனதில் இருந்து மன ஒற்றுமை இல்லை. கருத்து வேறுபாடுகள் காரணமாய் அடிக்கடி கோபித்துக்கொண்டு தாய் வீடு சென்று அங்கேயே வசிக்கும் பழக்கமுள்ள அபி இப்போது தொடர்ந்து என்னைப் பிரிந்து அங்கேயே வசித்துவரும் அபியுடன் நான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், மறுக்கும் பட்சத்தில் விவாகரத்துக்கு சம்மதம் தர வேண்டியது… இதுதான் நோட்டீஸின் சாராம்சம். கே.எஸ் பட்டும் பாடமல் லேசான வாசகங்கள் மூலம், எனக்கும் அபிக்கும் இடையில் நிலவிய உண்மை நிலைகளை மறைத்து நோட்டீஸை எழுதி இருந்தான்.

அதைப் படித்து பார்த்த என் மாமனாருக்கு அதை நம்ப முடியவில்லை. “என்ன மாப்பிள்ள இப்படி பண்ணிட்டிங்க, என்னால இதை நம்பவே முடியலியே. உங்களுக்குள்ள என்ன பிரச்சினையினு சொல்லுங்க…” என்றார். பாவம் நல்ல மனுஷன் இடிஞ்சி போய் விட்டார். யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. என்னென்றால் கல்யாணம் ஆனதிலிருந்து அபியும் நானும் மற்றவர்கள் பார்வையில் மகிழ்ச்சியான தம்பதிகளாகவே இருந்து வந்தோம். அபி அவரை மேலும் ஏதும் பேச விடாமல் தடுத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள்.

கே.எஸ்ஸூக்கு போன் செய்து நோட்டீஸை பெற்ற விவரத்தை கூறினேன். “சரி, ரியாக்ஷன் என்னனு பொருத்திருந்து பார்கலாம்” என்றான். அதே வாரத்தில் ஒரு நாள் கே.எஸ்ஸிடமிருந்து போன். “உன்னோட ஒய்ப்புக்கு உன்னோட சேர்ந்து வாழ சம்மதமாம், கோர்ட்டு, கேஸ் எல்லாம் வேண்டாம்னு, என்னோட கொலிக், அதான் அவரு பேர்லதானே நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கிட்ட உன்னோட மாமனார் பேசி இருக்கார். நீ அபிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புனுதுக்கு காரணம் கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லேங்கிறதுதான் அப்படினு நெனச்சிகிட்டு இருக்காறாங்க ஐ விஷ் யூ எ ஹேப்பி மேரிட் லைட்ட வாழ்த்துக்கள். உன்னோட பிளான் பலிச்சுடுச்சு போல இருக்கு” என்றான்.

அன்று மாலையே அபி வீட்டிற்குத் திரும்பி வந்தாள். உடன் என் மாமனாரும் மாமியும். அவர்கள் என்னிடம், “மாப்பிள்ள சிலருக்கு கல்யாணமாகி எவ்வளவோ வருஷம் கழிச்சு கூட கொளந்தங்க பெறந்து இருக்கு. உங்களுக்கும் அபிக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம்தானே ஆகிறது. நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் குழந்த பெத்துகிறத தள்ளி வச்சியிருக்கிங்கனு நாங்க நெனைச்சிகிட்டு இருக்கோம். வேணுமினா ஒரு நல்ல டாக்டரை பாக்கலாம் மாப்பிள்ள’ என்றார்கள். அதற்கு நான், “ஏதோ அவசரபட்டு என்னவோ நடந்து போச்சு. என்னை மன்னிச்சுடுங்க” என்றேன் அபியைப் பார்த்துக்கொண்டே அபிராமியை பார்க்க பார்க்க, ஏதோ புது மனுசியை பார்ப்பதுபோல் இருந்தது. அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் எனக்குத் தோன்றியது. அபியும் என்னிடம் எதுவுமே நடக்காததுபோல் நடந்து கொண்டாள். நான் போட்ட பிளான் சக்ஸஸ். டீவோர்ஸ் நோட்டீஸ் ஒரு ஷாக் டிரிட்மெண்ட் போல ஒர்க் பண்ணியிருக்கு. நான் அவளவிட்டு பிரிஞ்சிட போறேனு அபி உண்மையாவே நம்பிட்டா. அதான் அபிகிட்ட இந்த மாற்றம் தெரியுதுனு நெனைச்சிகிட்டேன். அன்னிக்கு ராத்திரி வரைக்கும் அபி கூடவும் அவளோட அப்பா அம்மாகிட்டயும் பேசிகிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியில அபி அவுங்ககிட்ட “இனிமேல எங்க கெளம்பி வீட்டுக்கு போகப்போறிங்க. நைட்டு இங்கேயே தங்கிட்டு காலையில போகலாம்” என்றாள். அபியும் அவுங்ககூடவே ஹால்ல படுத்துகிட்டா. இத்தனை வருஷமா அவளுக்காக காத்துகிட்டு இருந்தவன் இன்னும் ஒரு நாள் காத்திருக்கமாட்டேனா என்ன? அடுத்த நாள் இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்தேன். கல்யாணம் ஆகி மூன்று வருடம் கழித்து முதலிரவு! மூன்று வருடங்கள் எப்படி இவ்வளவு விரைவாய் கடந்தது என நினைத்துப் பார்க்கவே வியப்பாய் இருந்தது.

3

மறுநாள் இரவு படுக்கையறையில் கட்டிலில் என்னருகே தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த அபியிடம் நான் மென்மையாக பேசத் தொடங்கினேன்.

“எனக்கு வேற வழி தெரியில அபி, அதனாலதான் அந்த டீவோர்ஸ் நோட்டீஸ்சை உனக்கு அனுப்பினேன். என்னோட நிலையில நீ இருந்து யோசிச்சு பாரு. கல்யாணமாகி ஒரு மாசம், ரெண்டுமாசம் இல்ல மூணு வருஷம் உன்னை தொடாம உங்கூட வாழ்ந்திருக்கேன். நீயே சொல்லு. எந்த ஆம்பிள இப்படி இருப்பான்னு. என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா கதையே வேற மாதிரி ஆகியிருக்கும். ஒண்ணு உன்னை கழட்டிவிட்டுட்டு ஓடியிருப்பான். இல்ல.. சரி, அதெல்லாம் ஏன் இப்ப பேசிகிட்டு.. ஆனா நான் ஏன் இவ்ளோ பொறுமையா இருக்கேன் தெரியுமா?_யெஸ். ஐ லவ் யூ அபி அபிராமி நீ இல்லாம என்னால வாழ முடியாது. ஒரு விதத்துல இது ப்ளேடோனிக் லவ்தான் அபி.

என்னால உன்னைத் தொடாம ஆயுசு முழுக்க வாழ முடியும் அபி. ஆனா நமக்குனு ஒரு வாரிசு வேண்டாமா? மேரேஜ்ஜோட பர்பஸ்ஸே அதுதானே. நமக்கு என்ன குறையிருக்கு அபி. சரி இதுவரைக்கும் போனது எல்லாம் போகட்டும், நாம இன்னியிலிருந்து புது வாழ்க்கைத் தொடங்குவோம். அபி, நான் என்னைவிட உன்னைதான் நேசிக்கிறேன். அபிராமி ஐ லவ் யூ” பேசிக்கொண்டே அவளின் கை விரல்களை மெல்லத் தொட்டேன். அபி நெருப்பு பட்டதுபோல் அவள் கையை விலக்கி கொண்டாள். எனக்கு ‘சே’ என்றாகிவிட்டது. இப்போது அவளின் முக பாவனையும், உடல்மொழியும் அவள் இன்னும் மாறவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. கசந்த மனத்துடன் அவளைவிட்டு விலகினேன்,

“என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற ஒருத்திய கல்யாணம் செஞ்சிகிட்டு சந்தோஷமா வாழலாமுனு பாக்கிறியாடா நாயே… அது என் உயிர் போனாலும் நடக்காது”. இது அபியிடம் இருந்து மூச்சிரைப்பினூடே ஆக்ரோஷமாய் வெளிப்பட்ட வார்த்தைகள்.

“அபி ஏம்மா இப்படியெல்லாம் பேசறே, உன்னைத்தவிர வேற ஒரு பெண்ணை நான் மனசாலகூட நினைச்சது கிடையாது. உனக்காகத்தானே அபி நான் இத்தனை வருஷமா காத்துகிட்டிருக்கேன். இன்னுமா நீ என்னை புரிஞ்சிகில… அபி என்னை வாழ விடு. இல்ல சாகவிடு. ஏன் இப்படி சித்திரவதை பண்றே.. அந்த நோட்டீஸ்கூட உன்னைப் பயமுறுத்தத்தான் அனுப்பினேன். ஆனா இப்ப சொல்றேன். அபி கேட்டுகோ, இனிமேல இந்த வாழ்க்கை நமக்கு வேண்டாம்…இந்த நிமிஷத்துல நான் நிச்சயமா முடிவு பண்ணிட்டேன், உன்னை டீவோர்ஸ் பண்ணறது நிச்சயம்.”

இதை கேட்ட அபியின் இதழ்களில் குறுநகை படர்ந்தது. அதன் பொருள், நீ என் அடிமை என்னை விட்டு எங்கும் போகமுடியாது. கலைந்த கேசமும் கண்ணீர் படர்ந்த சிவந்த வழிகளுமாய் அசையாமல் இலைபோல, என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் நான் ஏன் இப்படி இருக்கறேன்! ஏன் என்னால் இவளைவிட்டு விலக இயலவில்லை. இதற்கு மேல் என்னால் யோசிக்க முடியவில்லை. முடியவில்லை. என்பதைவிட விரும்பவில்லை என்பதுதான் உண்மை. இது போன்ற மனநிலையில் உடனடி தேவையாக கொந்தளிக்கும் மனத்தை சமன் செய்ய நான் மதுவை நாடுவேன். கே.எஸ்ஸின் ஞாபகம் வந்தது வீட்டை விட்டு கிளம்பி கே.எஸ்ஸூக்கு போன் செய்தேன் நான் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு பாரின் பெயரைச் சொல்லி அங்கு வரச் சொள்ளான்.

இருண்ட குகை போன்ற அமைப்பில் இருந்த அங்கு கேஎஸ்ஐ தேடிக் கண்டு அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அவளிடம். “அபி இன்னும் மாறலேடா. என் பிளான் ஊத்திகிச்சு. இப்ப என்னடா செய்யறது” என்றேன். அவன் தன் கையில் இருந்த மது கோப்பையை உயர்த்திக் காட்டிவிட்டு அதைக் குடிக்கத் தொடங்கினான். நானும் மேசை மேலிருந்த மது பாட்டிலை எடுத்து அதை அப்படியே ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவனிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.

“கே.எஸ். நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறேன். ஆனா உன்னைத் தவிர என்னோட மனசுல இருக்கிற சோகத்தை ரகஸ்சியத்தை வேற யார்கிட்ட சொல்லமுடியும்… உளக்குக்கூட கோவம் வரும். என்னடா இவன் இப்படி இருக்கானேனு. இப்படி வழவழ, கொழ கொழன்னு வெண்டைகாய் பார்ட்டியா இருக்கானேனு.. ஒன்னு எதையாவது செஞ்சி அபியைட இல்லை சரிதான் போடினு டிவோர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானேனு. இவனுக்கு ஊரு உலகத்துல வேற பொண்ணா கெடைக்கலைனு ஆனா என்னு எனக்கு சொல்லத் தெரியல அபிராமி இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைடா” பேசிக்கொண்டே மேலும் மேலும் குடிக்கத் தொடங்கினோம். நான் குடித்துக்கொண்டே என் மனதில் உள்ளவைகளையெல்லாம் அவனிடம் சொல்ல தொடங்கினேன்.

“கே.எஸ்-நீ கூட நௌக்கலாம் அபிராமிக்கு உடம்புல ஏதாவது குறை இருக்குமோ, அதனாலதான் அவஅப்படி. இருக்கானு. ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. அபியோட பேமலி டாக்டர் எங்க ரிலேஷன்தான். கல்யாணத்துக்கு முந்தியே அவுங்க மூலம் அபிக்கு எந்த குறையுமில்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இன்பாக்ட் கல்யாணத்துக்கு முந்தியே நானும் அபியும் எல்லா மெடிகல் டெஸ்ட்டும் செஞ்சிகிட்டோம். இன்கூலிடிங் H.I.V. எங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் இல்லைட அன்னிக்கு நீ சொன்னயில்ல. சைகாலேஜிகல் ப்ராப்ளமா இருக்குமோனு அவள சைக்கியாட்ரிஸ்ட்கிட்டயும் கூட்டிகிட்டு போக முடியல. எதுக்கெடுத்தாலும் சூசைட் பண்ணிப்பேன்னு பயமுறுத்தல் அபியோட வாழ்க்கையில் அவளுக்கு யார் மூலமாவது செக்ஸ் பலவந்தம் நடந்து அதனால அவளுக்கு இந்த விஷயத்துல வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஐ மீன் செக்ஸ் அவர்ஜீ…”

“ம். அப்புறம் கல்யாணத்துக்கு முந்தி அபிக்கு ஏதாவது வி அஃபேர் இருந்திருக்குமோனுகூட எனக்குத் தோணுச்சு. ஆனா அப்படியும் இல்லை. அப்புறம் இப்படியும் தோணுச்சு. அபிக்கு ஏதாவது இன்செக்ஸ் உறவு இருக்குமோனு, ஏன்னா அப்படி இருந்தாகூட இப்படி மனசு ரெண்டா பிரிஞ்சு இந்த மாதிரி ஆக சான்ஸ் இருக்கு இல்லையா… என்னடா இவன் இப்படியெல்லாம் சொல்றானேனுகூட உனக்கு தோணும். இப்படிகூட நெனைச்சேன் லெஸ்பியனா இருப்பாளோனு. அப்படியும் இல்ல. இப்ப சொன்ன இந்தச் சந்தேகத்துக்கு எல்லாம் எந்தத் தடயமும் கெடைக்கல அபியோட வாழ்ந்த வாழ்க்கையில இன்னிக்கு வரைக்கும் அவகிட்ட எந்தத் தப்பு இருக்கிறதாவும் எனக்குத் தெரியில….. அபி எனக்கு வேணும்டா. அவ இல்லாம என்னால வாழ முடியாது. ஆனா புருஷன் பொண்டாட்டினா தாம்பத்திய உறவு இல்லாம இருக்க முடியுமா….அவ என்னை புரிஞ்சிக்கவே மாட்டேன்கிறாளே… அவ கடைசிவரைக்கும் மாறவே மாட்டானு தோணுது.. அப்படினா இதுக்கு என்னத் தீர்வு-. எனக்கு மட்டும் ஏன், இப்படி- நான் என்ன தப்பு செஞ்சேன்.. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி “அபிராமி ஏன் இப்படி இருக்கிறாங்கிறதுக்கு எந்தக் காரணம் இருந்தாலும் அதைப் பத்தி எனக்கு கவலை இல்லைடா”

என் மனத்தில் இருந்தவைகளையெல்லாம் அவனிடம் கொட்டித் தீர்த்து விட்டேன். கே.எஸ். ஏதும் பேசாமல் மது அருந்திக்கொண்டேயிருந்தான். நான் மௌனத்தை சிதைத்து சுயபச்சாதாபம் மேலிட மீண்டும் அவனிடம் கேட்டேன். “கே.எஸ். என் லைப்பில மட்டும் ஏண்டா இப்படி? இதுக்கு என்னதான் முடிவு?”

அவன், “ரகு உன்னோட நெலமையை என்னால புரிஞ்சிக்க முடியுதுடா. அது – அது ஒரு ‘மாயவலை’. அதுல சிக்கிட்டா வெளியில வரமுடியாதுடா” என்றான். அவனின் வார்த்தைகளின் வழியே அவனும் ஏதோ ஒரு மாயவலையில் சிக்கி உள்ளான் என்று புரிந்துகொண்டேன். அவன் வாழ்விலும் ஏதேனும் கதை, காதல் கதை இருக்ககூடும். காதல் தோல்வியோ. அதனால்தான் அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறானோ, எனக்குத் தெரிந்து அவன் எந்தப் பெண்ணிடமும் காதல் வயப்பட்டது இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே தொடர்பற்ற காலத்தில்தான் அவன் அந்த மாயவலையில் சிக்கி இருக்க வேண்டும். யார் அவள்? நான் இவனை சந்தித்ததிலிருந்து என் சோகக்கதையைதான் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறேன். என்ன நண்பன் நான். என் மனதில் கே.எஸ்ஸின் பெற்றோர்களின் சோக உருவங்கள் வந்து போயிற்று. கே.எஸ். மீண்டும் மது வகைகளை ஆர்டர் செய்ய இருவரும் தொடர்ந்து போதையில் மூழ்கத் தொடங்கினோம்.

நான் கே.எல்.ஸிடம், “உன்னைப் பார்த்ததில் இருந்து என்னைப் பத்தியே பேசிகிட்டு இருக்கேன். நீ ஏன்டா இப்படி இருக்க, என்ன் விஷயமுனு சொல்லுடா. நான் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்” என்றேன்.

மேசையின் மேல் கைகளை ஊன்றியபடி தலை கவிழ்ந்து இருந்த கே.எஸ் குனிந்தபடியே தலையை இடமாகவும் வலமாகவும் ஆட்டத் தொடங்கினான். தலையாட்டல் தானாய் நின்றபின் நிமிர்ந்து என்னைப் பார்த்துச் சொன்னான். “தாங்ஸ்டா ரகு. நீ எம்மேலவச்சியிருக்குற அக்கறைக்கு நன்றி ஆனா, காலம் கடந்துபோச்சு. இப்ப ஒண்ணும் செய்ய முடியாதுடா”

“என்னடா, லவ்ஸ்ஸா… யாருடா அது எனக்குத் தெரியாம”

கேஎஸ் பதில் ஏதும் சொல்லவில்லை.

“என்ன விஷயமுனு சொல்லுடா, ஒரு தலை காதலா?”

“இல்லை, அவளும் என்னைக் காதலித்தாள். ஆனால், அவள் என் அன்பை நிராகரித்து விட்டாள்”.

கே.எஸ் சொன்ன வாசகத்தின் பொருள் எனக்குப் புரியவில்லை.

“நீ என்ன சொல்றேனு எனக்குப் புரியல. ஒருவேளை.. சரி. இப்ப; அவ யாரு எங்க இருக்கானு சொல்லு. உனக்காக நான் அவகிட்ட போய் பேசறேன்டா”

“அது முடியாதுடா அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு”

“போடா முட்டாள். அப்படினா அவளைத் தலைமுழி கிட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு லைப்புல செட்டில் ஆவுற வழியப் பா… வாழ்க்கையில் இப்படித் தனிமரமா இருந்து குடிச்சு குடிச்சே சாகப் போறியா? உனக்காக இல்லேனாலும் உன்னோட அப்பா,, அம்மாவை நெனைச்சுப் பாருடா. அவங்களுக்காகவாவது நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணிகினும்டா. அது சரி. ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாம போச்சு”

‘தெரியல’ என்ற சொல்லை இரு கைகளின் விரல்களையும் விரித்துத் தோள்களைக் குலுக்கி உடல் அசைவுகள் மூலம் வெளிபடுத்தியவன், “விதியைதான் காரணமாய் சொல்ல முடியும். வேற என்ன சொல்றது” என்றான்.

“டேய், நீ சரியான பைத்தியம்டா. இதுயெல்லாம் ஜஸ்ட் ‘பயாலேஜீகல் அர்ஜ்டா, ஸெக்ஸ் நத்திங்பட்…”

“டேய், இரு, இரு. ரொம்ப வார்த்தையை வுடதே.. நான் கேட்குறக் கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? உன்னால ஏன்டா உன் ஒயிப்பை விட்டு விலக முடியல?”

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தும் சமாளித்து, “அது.. என் கதை வேறடா. நான் கல்யாணம் செஞ்சு, குடும்பம்கிற பந்தத்துல சிக்கி இருக்கேன்டா”.

“சரி, அதுல இருந்துதான் வெளியில வரமுடியுமே. அது ஏன் உன்னால முடியில… அது மாதிரிதான்டா இதுவும்… என்னோட லவ்வும் ப்ளடோனிக் லவ்டா. அவளைக் கல்யாணம் செஞ்சிக்க முடியிலனாலும், அவ ஒருத்தியைத் தவிர வேற பொண்ணுக்கு என் வாழ்க்கையில் இடம் இல்லடா”

அவனிடம் சொல்வதற்கு என்னிடம் பதில் ஏதும் இல்லை. அவன் சொல்வது உண்மைதானே. அபியை பிரிந்து என்னால் இருக்க இயலாது. அவளுக்கு ஏதோ ஒரு காரணத்தால் உடலுறவு கொள்வது பிடிக்கவில்லை. அதனால் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு குழந்தையைப் பெற முடியாது என்பதால், ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ள கூடாது என்றும் அல்லது நவீன மருத்துவ முறைகளின் மூலம் எனது உயிர் அணுவை அபியின் கருவில் செலுத்தி கருவுற செய்தோ அல்லது வாடகைத் தாய் போன்ற முறையில் எங்களின் இருவரின் உயிர் அணுகளை இணைத்து வேறொரு பெண்ணைக் கரு சுமக்கச் செய்து ஏன் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் திடீரென ஓர் எண்ணம் என் உள்ளத்தில் உதித்தது. அந்த எண்ணம் ஏன் எனக்கு முதலிலேயே தோன்றவில்லை என்று என்னையே நான் கோபித்துக்கொண்டேன்.

மற்றவர்களுக்கு என் அந்தரங்கம் தெரியாது என்பதும் அதை தெரிந்தவன் கே.எஸ் மட்டும்தான் என்று எனக்கு நிம்மதியாய் இருந்தது. மற்றவர்களுக்கு எனது அந்தரங்கமும், இப்போது உதித்த திடீர் எண்ணத்தைச் செயல்படுத்த முனைகையில் அதன் பின்ணணியும் மற்றவர்களுக்குத் தெரிந்தால் முக்கியமாக அப்பாவும், அண்ணனும் என்னையும் அபியையும் பிரித்துவிட்டு எனக்கு மறுகல்யாணம் செய்து விட்டுதான் வேறு வேலையைப் பார்பார்கள். ஆகவே இதை ரகஸ்சியத்திலும் அதி ரகஸ்சியமாய் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

மேசையின் மேல் கவிழ்ந்து விழ்ந்திருந்த கே.எஸ் எழுந்து, “என்னடா ரகு பேச்சையே காணும்” என்றான். “இல்லடா. புதுசா ஒரு ஐடியா ஸ்ட்ரைக் ஆச்சு. அதை அப்புறமா சொல்லறேன். சரி, அந்தப் பொண்ணு யாருடா, எனக்குத் தெரிஞ்சவளா? யாருடா அவ?”

கே.எஸ். இப்போதும் மேசையின் மேல் முழங்கைகளை ஊன்றிக்கொண்டு தலையாட்ட துவங்கினான். அவன் இல்லை என்று சொல்கிறானா ஆமாம் என்று சொல்கிறானா எனப் புரிந்து கொள்ள முடியாத உடல் மொழியை அவன் வெளிப்படுத்தினான்.

“சரியா சொல்லுடா யார்ரா அவ எனக்குத் தெரிஞ்சவளா “, கே.எஸ். மீண்டும் அதே உடல்மொழியை வெளிப்படுத்த, இப்போது நான் அதற்கு, அவன் காதலி, எனக்குத் தெரிந்தவள் என்ற பொருளை எடுத்துக் கொண்டேன்.

“சரி, அவ பேரை சொல்லுடா” கே.எஸ்ஸிடம் மீண்டும் அதே உடல்மொழி வெளிப்படத் துவங்க, அவனிடம் நான் தீர்க்கமாக பேச துவங்கினேன். “இதோ பார் கே.எஸ். நாம இன்னிக்கு நேத்து ப்ரெண்ட்ஸ் இல்ல. நம்மோட நட்பைப் பத்தி இப்போ பேசறது அவசியமில்லாத ஒண்ணு. என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும், ஆமா எல்லாத்தையும் உங்கிட்ட சொல்ல முடிஞ்சது. எதனால? நம்மோட நட்புதானே காரணம். நம்மோட இத்தனை வருஷ நட்பு உண்மையானதா இருந்தா, அவ யாருனு எனக்கு நீ இப்ப சொல்லியாகணும்”.

அவனிடம் இருந்து இப்போது வெளிப்பட்ட உடல்மொழிக்குச் ‘சற்று பொறு’ என்பதாக பொருள் கொண்டேன்.

இருவருமே மதுமயக்கத்தின் உச்சத்தில் இருந்தோம். இன்னும் சில நிமிடங்களில் யோகியரின் சமாதிநிலை போன்றதொரு நிலையை நாங்கள் அடைவது உறுதி. கே.எஸ். இன்னும் ஏதும் பேசாமல் இருந்தான். என் கேள்விக்குப் பதில் இல்லை. வினாடிகள் யுகங்களாக நீண்டு கொண்டு இருந்தது. அல்லது யுகங்கள் வினாடிகளாய் குறுகிக்கொண்டு இருந்தது. நழுவும் நினைவை இறுகிப் பற்றி புலன்களுக்கு உணர்வூட்டி மீண்டும் கேட்டேன். “அவ யாருனு தெரிஞ்சு எனக்காகப்போறது ஒண்ணுமில்ல. ஆனா நீ எங்கிட்டயே மறைக்கிறியே அதுக்கு என்ன அவசியம். நீ நம்மோட நட்பை மதிக்கல இல்ல. நம்மோட நட்பு மேல ஆணையா கேட்கறேன். சொல்லு யார் அவ?”

கே.எஸ் தனது நழுவும் சுய நினைவை மிகுந்த சிரமத்துடன் கண்களில் நிறுத்தியபடி அவன் உதடுகளால் உச்சரித்த பெயர்…

நான் நழுவும் எனது சுய நினைவை மிகுந்த சிரமத்துடன் என்னில் நிறுத்தியபடி என் செவிகளால் கேட்ட பெயர்…

“அ..பி..ரா..மி.”

– மே 2009, உயிர் எழுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *