நல்ல மனம் வாழ்க!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 133
(நன்றாற்றலுள்ளுந் தவறுண்டு) திருக்குறள் பழைய கதை புதிய பாடல்.

கொட்டும் பெரிய மழையிலே
கூட்டி லொரு குருவியாம்
எட்டிப் பார்க்கும் இடத்திலே
இருந்த தொரு குரங்குதான்!
கொட்டும் மழையில் குரங்குமே
சொட்டச் சொட்ட நனைந்தது
வெட்டும் மின்னல் குளிரிலே
வெடவெடத்துப் பயந்தது!
பார்க்கக் குரங்கின் நிலையது
பாவ மாக இருக்கவே
நோக்கி யந்த குரங்கிடம்
நேசத் தோடு குருவியும்…
“எங்க ளைப்பார் நண்பனே!
இல்லை, மழைக் கவலையே!
தங்க நல்ல கூட்டினை
இங்கு நாங்கள் கட்டினோம்!
அடிக்கும் பெரிய மழையிலும்
ஆடிக் காற்று குளிரிலும்
கூடி நாங்கள் தங்கலாம்
குறையிலாது வாழலாம்!
குத்த வைத்து உன்னைப்போல்
குளிர் மழை காற்றிலே
செத்து நடுங்க எமக்கென்றும்
இல்லை தேவை என்றது!
குருவி பெருமைப் படுவதாய்
குரங்கு நினைத்துக் கொண்டது
கறுவி நெஞ்சம் கனதத்தால்
கோபம் தன்னில் கொதித்தது!
பாடம் எனக்கோ சொல்கிறாய்??
பறக்கும் அற்பக் குருவியே!
மாட மாளிகை கட்டிடும்
மனித னுக்ககே முன்னவன்!
என்ன செய்கிறேன் பாரென?
எரிச்ச லோடு குருவியின்
இருந்த கூட்டைக் கைகளால்
எறிந்து பிடுங்கிப் போட்டது!
நாலு பேருக்குலகிலே
நல்லதுநாம் செய்யலாம்!
நல்லது நாம் செய்பவர்
நல்லவராய் இருக்கையில்!
பண்பு அற்ற பேருக்கு
பாரில் உதவி செய்வது
வம்பு வழக்கை கூட்டுமே
வரிதே இருத்தல் நல்லது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026
