இனிய இரட்டையர்கள்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 417
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கேரளாவில் ஓர் ஆச்சரியமான இரட்டையர்கள், எண்ணம், செயல், விருப்பு, வெறுப்பு அனைத்தும் ஒன்றாகவே அமைந்த அற்புதமான இரட்டையர்கள், கோவிந்தராமன் என்ற ஒரே பெயரை இருவரும் பங்கிட்டு கோவிந்தன்-ராமன் என்று சூட்டிக்கொண்டனர்.
இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தது மட்டுமன்று, இரட்டையர்களாகவே வளர்ந்தனர், படித்தனர். படுத் தனர், தொழில் செய்தனர்.அனைத்துக் காரியங்களி லும் இருவரும் ஒன்றாகவே செயல்பட்டனர். பேசும் போதும் ஒரே நேரத்தில் சேர்ந்தே பேசுகின்றனர். விவசாயம், ஆயூர்வேதம் என்ற இரு தொழில்களையும்கூட சேர்ந்தே செய்கின்றனர்.
இருவருக்கும் பதினோரு வயதானபோது ஜானகி என்ற ஒரு பெண்ணை இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டனர். மூவருக்கும் சேர்ந்து ஒரே படுக்கைதான்.
இப்பொழுது அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள்; குடும்ப உறவினர் பன்னிருவர்.
அறுபத்தொன்பது வயதாகும் இவர்கள் சமீபத்தில் சுகவீனமுற்றனர். மருத்துவ மனையிலும் ஒரே படுக்கையில் தான் இருவரும் படுத்திருந்தனர். ருவரின் முகத் தோற்றத்திலும் வேறுபாடு கிடையாது.
அற்புதமான இந்த இரட்டையர்களின் மனைவியாக இருப்பது குறித்து ஜானகி பெரும் மகிழ்ச்சிகொள்கிறாள்.
(செய்தி: 1985 ஜூன்)
”இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது.” – [சங்கீதம் 133:1]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
