வெற்றி நமதே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,869 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கஜினி முகமதுக்கு ஒரே கலக்கம். எதிரிகள் முற்றுகை யிட்டுள்ளனர். இரவு நேரம். உயரமான மாளிகை மீதிருந்து பார்க்கிறான். தனித் தனியான ஒளிக்கற்றைகள் மின்னி மின்னி மினுங்குகின்றன.

கஜினி தம் படைவீரர்களில் ஒருவனை என்னவென்று கேட்டான். எதிரிகள் சமையல் செய்கிறார்கள் என்றான். அப்படியானால் ஒரே ஒரு அடுப்பாக அல்லவா எரிய வேண்டும்? இவை தாரகைபோன்று மின்னி மின்னி மிலுங்கு கின்றனவே என்றான். அதற்கு அவன், “அவர்கள் நம்மைப் போன்று அன்று, தனித் தனியாகச் சமைத்து உண்பார்கள்” என்றான்.

கஜினிக்கு ஒரே கொண்டாட்டம். வெற்றி நமதே என்று கூறி குதித்து ஆர்ப்பரித்தான்.

முதலாளித்வ சக்திகளும் முரண்பாடுகள் நிறைந்த தனித் தனி சக்திகளே. ஆனால் உழைப்பாளி சக்தி வர்க்கபேதம் கொண்ட-ஒருமித்த உணர்வுகொண்ட-உறுதிவாய்ந்த சக்தியாகும். எனவே அவர்களை வெல்வது உறுதி.

“கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.” [சங்கீதம் 139:1]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *