தண்ணீர் மருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,077 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்கை நதியோரக் கிராமம் பல்லியா. 12 வயதுச் நிறுவன் பாம்பு கடித்து மரித்துப்போனான்.

அவ்வூர் வழக்கப்படி வாழைத்தண்டில் இறந்த உடலை வைத்துக் கட்டி ஆற்றில் வீசிவிட்டனர்.

ஆற்றில் அடித்துச் செல்லும் பொருள்களை மீட்டு வந்து ஆதாயம் பார்க்கும் ஒரு குழுவினர் – இந்த வாழைத் தண்டையும் எடுத்து வந்தனர்.

அது ஒரு அழகுச் சிறுவன், பன்னிரெண்டு வயதுப் பாலன். கால் அசைந்தது. உயிர் இருந்தது.

உடனே கட்டை அவிழ்த்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பினர். பையன் நன்கு பிழைத்துக்கொண்டான்.

சிறுவன் கங்கை நீரை நிறையக் குடித்துவிட்டபடியால் உடலில் இருந்த விஷம் வெளியேறிவிட்டது.

தண்ணீரைப்போன்ற சிறந்த மருந்து இவ்வுலகில் வேறெதுவுமில்லை. தண்ணீரைக் கடவுள் இலவசமாகத் தந் திருக்கிறார். இயேசு கிறிஸ்து முதலாவது செய்த அற்புதம் கானான் ஊரில் நடந்த கலியாண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதேயாகும்.

“எல்லாரும்… ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.” – [1 கொரிந்தியர் 10:4] .

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *