தாலிக்குள் இல்லை தங்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்:
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

பிள்ளையை விடுதியில் சேர்த்ததும் சுரேந்தருக்குத் துளிர் விட்டுப் போயிற்று. மனைவியின் ஒத்துழைப்பு பூ ரணமாக கிடைக்க உற்சாகம் அதிகமாகி கொண்டாட்டம் குதுாகலமாயிற்று அன்றைக்கு அப்படித்தான் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அது ரொம்ப நல்ல பத்திரிக்கை. தரமானது என்று பேரெடுத்தது மட்டுமில்லாமல் உண்மையை எழுதும் பத்திரிக்கை. ஆங்கிலத்தில் அது பிரசித்தமென்றாலும் மாதத்திற்கு இரு முறை அனைத்து இந்திய மொழிகளிலும் வரும் பிரபலமான பத்திரிக்கை.

‘கலந்து உறவாடும் ஜோடிகள்!’ என்று கொட்டை எழுத்தில் தாம்பத்திய உறவை பற்றி ஒரு ஆய்வையே எழுதி வெளியிட்டிருந்தது.

மனிதன் நீலப்படத்தையும் தாண்டி மேலே போய் விட்டான். கார் சாவி மாற்றுக் கலாச்சாராம் மேல் தட்டு மக்களை மட்டுமில்லாமல் நடுத்தர மக்களையும் தொட்டுள்ளது. ஜோடி மாற்றி இன்பம் அனுபவிக்கின்றார்கள். அதற்கு இந்த இந்த பத்திரிக்கைகள் உதவி. என்று விலாசி தள்ளியிருந்தார்கள். படித்து முடித்த சுரேந்தர் அதிர்ச்சி, ஆச்சரியமாய் அடுத்து அமர்ந்திருந்த நண்பனிடம் காட்டினான்.

பாலு பத்திரிக்கையைத் தொடாமல் தலையங்கத்தை மட்டும் பார்த்து, “படிச்சாச்சு!” – அலட்சியமாய்ச் சொன்னான்.அவன் பெண்கள் விசயத்தில் கில்லாடி.

இவனுக்குத் துாக்கி வாரிப் போட்டது. பார்த்தான்.

“உண்மை! ஐயா போய் வந்தாச்சு!” அவன் அடுத்தவெடியை வெடித்தான்.

“என்னப்பா சொல்றே?!” – சுரேந்தர் அரண்டு போய் அவனைப் பார்த்தான்.

பாலு இவன் காதருகில் குனிந்து சின்ன குரலில், “அதுல இன்னின்ன பத்திரிக்கையெல்லாம் உதவுதுன்னு போட்டிருக்கில்லே. அதுல ஒன்னு வாங்கி ஒரு விலாசத்துக்குக் கடிதம் எழுதினேன். இன்ன இடம் தேதிக்கு மனைவியோட வாங்கன்னு பதில் வந்துது. பொண்டாட்டியை அழைச்சேன். உசுரை விட்டுடுவேன்னு முரண்டு பண்ணினா.” – நிறுத்தினான்.

சுரேந்தருக்குள் ஆவல் அதிகமாகியது.

“அப்புறம்?” தன் காதை அவனிடம் இன்னும் நெருக்கினான்.

“ரொம்ப வற்புருத்தி அழைச்சிப் போய் உல்லாசமாய் இருந்து வந்தேன்!” பாலு தன் அனுபவத்தைச் சொன்னான்.

சுரேந்தருக்குள் தனக்கும் அப்படி அனுபவிக்க ஆசை வந்தது. அதேசமயம் மனைவி அழைத்தால் வரமாட்டாள் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. பாலு மனைவி கணவன் மனம் கோணாமல் நடந்திருக்கும் போது பிரவீணாவையும் ஒத்துக்கொள்ள வைக்கலாம் நினைக்கும் போது ஏன் எவளையாவது வாடகைக்குக் கொண்டு போகக் கூடாது என்று குறுக்குப் புத்தி வேலை செய்தது. தன் மனத்தில் நினைத்ததைச் சொன்னான்.

“அப்புடி தில்லுமுல்லு பண்றதுக்கே வேலை இல்லே. சாட்சாத் சொந்த மனைவி. திருமண ஆல்பத்தோட வரனும். அவனும் அப்படி வருவான்!” என்று அவன் திட்டவட்டமாக சொன்னான்.

சுரேந்தருக்கு மனமும் முகமும் சேர்ந்து விழுந்தது.

“இதுல ரொம்ப வசதி வாய்ப்பு சுரேந்தர். நமக்கு விபச்சாரிக்கிட்ட போற குற்ற உணர்வு கெடையாது. அதனால வியாதி, எய்ட்ஸ் வரும்ங்குற பயம் இல்லே. நாம மட்டும் தப்புப் பண்றோம் மனைவிக்குத் துரோகம் செய்யுறோம்ங்குற குறை இல்லே. அடுத்து நம்ம வசதி வாய்ப்பைப் பொறுத்து சாப்பாடு, இடம். எல்லாவகையிலும் நிறைவா இருக்கு” – நிறுத்தினான். இவன் பேசவில்லை.

“கையில காசு இருந்தா ஸ்டார் ஓட்டல் அது இதுன்னு போகலாம்.. இல்லேன்னா பசங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பிட்டு அவுங்களை நம்ம வீட்டுக்கு வருந்தாளியாய் அழைச்சு கொண்டாடலாம். அக்கம் பக்கத்துக்கு உள்ளே நடக்குற விசயம் தெரியாது. சாதாரண விருந்தாளின்னு நெனைப்பாங்க. ரெய்டு, போலீஸ் பயம் கெடையாது.. அநாவசிய செலவு கெடையாது. சிக்கனத்துக்குச் சிக்கனம். கொண்டாட்டத்துக்குக் கொண்டாட்டம்.” – நிறுத்தினான்.

சுரேந்தருக்கு நாக்கில் எச்சில் ஊறி ஆசை விருட்சமாய் மாறி விட்டது.

‘பிரவீணா ஒத்துக்கொள்வாளா?’ மனசுக்குள் மீண்டும் கேள்வி, பயம் எழுந்தது.

எப்படி ஒத்துக் கொள்வாள்..?!. ஒருத்திக்கு ஒருவனென்று வாழ்ந்த தமிழ்ப் பெண் கலாச்சாரம். சொன்னாலே உயிரை விடும் அபாயம். நீயெல்லாம் மனுசனா? என்ற கேள்வியும் பிறக்கும். வாயைத் திறப்பதே தவறு. நடுங்கினான்.

இதில் குறிப்பிட்டவர்களும் தமிழ்ப் பெண்தான். பாலு மனைவி தமிழ்ப் பெண் அவர்களும் தமிழ், இந்திய பண்பாடு கலாச்சாரத்தில் ஊறி உழன்றவர்கள். அவர்கள் மட்டும் இதற்கு ஒத்துக்கொண்டு அனுபவிக்கும் போது. பிரவீணாவை வளைக்கலாம்! மனசுக்குள் நம்பிக்கையை வளர்த்தான்.

மனைவியை வீட்டில் விட்டுவிட்டு கணவன் வியாபார விசயமாக வெளிநாடு வெளியூர் என்று கிடப்பான். டாக்டர் கிளினிக் மருத்துவமனை என்று பழியாய்க் கிடப்பான். மனைவி வீட்டில் பின்ளைகள் பள்ளிப் போக தனியே கிடப்பாள். எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்க முடியும்? மனசு புருச சுகம் தேட…தவறு. அவர்களும் மாற்றம் விரும்ப… தவறு.!

சுரேந்தர் மீண்டும் அந்த கட்டுரையைப் படித்தான்.

மாறலுக்குக் காரணம் ஒரே ஆண் ஒரே பெண் அலுப்பு சலிப்பு! – தடாலடி அடித்தது.

சுரேந்தர் துாக்கிவாரிப் போட சிந்தித்தான்.

தினம் ஒரே சாப்பாடு, ஒரே உடை, அதே முகம், அதே கட்டில், யாருக்கு அலுப்பு வராது?! அனுபவரீதியான உண்மை! அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது,

இந்த அலுப்பு சலிப்பு காரணத்தினால்தான் தாம்பத்தியத்தில் ஆரம்பத்தில் உள்ள வேகம் ஈடுபாடு பின்னாளில் இல்லை. வயதானாவர்கள் விலகிப் படுத்துக் கொள்கிறார்கள். இந்த தாம்பத்திய தொய்வைத் தடைபடுத்தத்தான் படுக்கையறைக்குச் செல்லும்போது தினம் புதிய சிந்தனை வேண்டும்! என்று கட்டுரை நேர்மை தவறாமலிருக்க புத்தி வேறு சொன்னது.

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் கணவன், மனைவி என்பவர்கள் வெறும் இயந்திரமாக இருக்கின்றார்கள். தாம்பாத்தியம் என்பது ஒரு கடமை, சடங்கு, கட்டாயமாக இருக்கிறதே தவிர அத்தியாவசியமாக இல்லை. இந்நிலையில் மாற்றம் என்பது உற்சாக மருந்து. நினைத்தான்.

எல்லார் மனசுக்குள்ளும் அலுப்பு இருக்கின்றது. மாற்றம் தேவையாய் இருக்கிறது. அதனால்தான் மனைவி அழகாய் இருந்தாலும் ஆண் அடுத்தவளைப் பார்க்கிறான். திருமணம் முடித்து நான்கு பிள்ளை பெற்றவளாய் இருந்தாலும் அடுத்தவன் பார்த்தால் அவளுக்குள் ஒரு சின்ன கிளுகிளுப்பு நடை உடையில் மாற்றம். இதையெல்லாம் ஆசை சபலம் என்று கட்டம் கட்டுவது பொய், பம்மாத்து. இவையெல்லாம் சலிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

வளர்ந்த நாடுகளிலெல்லாம் கணவன் மனைவி உறவில் சிக்கல் இல்லை. சுதந்திரம்! விருப்பப்பட்டவர்களுடன் சேர திருமண உறவு தடையாய் இருப்பதில்லை. அப்படி அது இருந்தால் துாக்கிப் போட்டு விவாகரத்து பெறுகிறார்கள்.

மனிதனின் பழக்க வழக்கங்கள்தான் பண்பாடு கலாச்சாரம் எல்லாம். பூமியில் பிறந்தவர்கள் எல்லாரும் மக்கள்தான். வளர்ந்த பூ நாடுகளில் சுதந்திர தாம்பத்தியம் இருக்கும்போது இங்கே இருப்பதிலும் தவறு இல்லை. சுரேந்தர் நியாயப்படுத்திக்கொண்டான்.

எப்படி இருந்தவளை எப்படி எப்படியோ மாற்றி விட்டோம் இதற்கா சம்மதிக்க வைக்க முடியாது! – மனசுக்குள் மெல்ல தைரியத்தை வரவழைத்தான்.

எப்படி ஆரம்பிப்பது? – சிந்தனையில் ஆழ்ந்தான்.

அத்தியாயம் – 5

சுரேந்தர் வீட்டிற்குள் நுழைந்தபோது பிரவீணா வாசலுக்கு முதுகு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். தொலைக்காட்சிப் பெட்டியில் கார்த்திக், ரம்பா ஆடிக் கொண்டிருந்தார்கள். அவளின் ஜன்னல் வைத்த ஜாக்கெட் முதுகிற்கு எடுப்பாக இருந்தது. ஜாக்கெட்டிற்கும் புடவைக்கும் உள்ள இடைவெளி பளீரென்று அடித்தது.

எல்லாம் இவன் செய்த மாற்றம்.

பெண் பார்த்தபோது கழுத்தை ஒட்டி முழங்கை தெரியாத அளவிற்கு ஜாக்கெட். குனிந்த தலை நிமிரவில்லை.

‘பட்டப் படிப்புன்னாலும் பொண்ணு ஆரவாரமில்லாம அடக்கமா இருக்காடா!” – அம்மா பாராட்டினாள்.

“எனக்குப் புடிச்சிப் போச்சு!” – அப்போதே சொல்லி விட்டாள்.

அப்பாவும் திருப்தியாய் தலையாட்டி சம்மதம் தெரிவித்து விட்டார்.

முதலிரவில் பிரவீணா புடவையைத் தொடவே விடவில்லை. ஏக கூச்சம். இப்போது?

நைட்டி, சுடிதார், ஜன்னல் வைத்த ஜாக்கெட, ஏறிய கை, இறங்கின கை, திறந்த முதுகு, எடுப்பான மார்பு. பொண்டாட்டிங்குறவ புருசன் விருப்பப்படி இருக்கனும்டி என்று இவன் எல்லாம் வற்புருத்தி வற்புருத்தி வலிய வலிய மாட்டிவிட்டது. அப்படி உள்ளவளையே இப்படி மாற்றி இருக்கும் போது. இது என்ன சுண்டைக்காய்!மனதில் இன்னும் துணிச்சலைக் கூட்டிக் கொண்டு சத்தம் போடாமல் பின்னால் சென்று அப்படியே கட்டிப் பிடித்தான்.

“ஐயோ! இது என்ன? யார்?“ என்றெல்லாம் பிரவீணா கூச்சல் போடவில்லை. மிரளவில்லை, முரண்டவில்லை. மாறாக, “கதவைச் சாத்திட்டு வந்திருக்க வேண்டியதுதானே!” என்று சொல்லி இவனை அசரவைத்தாள்.

“ஏய்! நான்தான் உள்ளே வந்தேன், உன்னைக் கட்டிப்பிடிச்சேன்னு உனக்கு எப்புடித் தெரியும்?!” அதிசயமும் ஆச்சரியமும் சேர்த்துக் கேட்டான்.

”ஐயே…! அலுவலகம் விட்டு இந்த நேரத்துல நீங்கதான்தான் வருவீங்கன்னு எனக்குத் தெரியும். அதுக்காத்தான் வாசல் கதவைத் திறந்தே வைச்சிருக்கேன். அப்புறம் டி.வி பெட்டியில கதவு திறந்திருக்கிறது தெரியும்.. யார் நுழைஞ்சாலும் அதன் கண்ணாடியில் நிழல் உருவம் தெரியும் கண்டுபிடிச்சுடலாம். அடுத்து உங்க வாசனைத் தெரியும், நடை தெரியும், கட்டிப் பிடிப்புத் தெரியும், அணைப்புத் தெரியும், இறுக்கம் தெரியும்., மொத்தத்துல உங்களைப் பத்தி எல்லாம் தெரியும்!” சொல்லி அசர வைத்தாள்.

அப்படியே மிரண்டு போனான். அதேசமயம் அவளை நினைக்கவும் பெருமையாக இருந்தது.

”நீ கள்ளிடி!” – செல்லமாக கன்னத்தைக் கிள்ளி ஒட்டி அமர்ந்தான்.

:இருங்க காபி எடுத்து வர்றேன்.” – இருந்தால் தொடுவான், அணைப்பான் என்று அவள் எழுந்தாள்.

‘ஐயாவுக்கு வேற மூடு. காபியை எடுத்துக்கிட்டு அறைக்கு வா‘ சுரேந்தர் சொல்லி இவர்கள் படுக்கை அறையை நோக்கி நடந்தான்.

“ஐயோ! அதெல்லாம் இப்ப முடியாது” – பிரவீணா கண்டிப்பாக சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள். “அது இல்லே. வேற” இவனும் அவளுக்குப் பதில் சொல்லி அறைக்குள் நுழைந்தான்.

“எதுவா இருந்தாலும் ஹால்லதான். அறைக்கு வர்றதெல்லாம் பத்து மணிக்கு மேலதான்!” – அவள் கண்டிப்பாய்ச் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள்.

சுரேந்தர் அறைக்குள் நுழைந்து லுங்கிக்கு மாறி, கையில் அலுவலகத்தில் படித்த புத்தகத்துடன் வெளியே வந்தான். முதல் வேளையாய் வாசல் கதவை அடைத்து தாழ்போட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் அடுத்த ஜோடி இழைய இழைய ஆடினார்கள். பார்க்க கிளுகிளுப்பாக இருந்தது.

‘இதையெல்லாம் பார்த்துதானே சிறிசுகள் கெடுகிறார்கள்!’

யோக்கியன் போல் ஞானம் வந்தது.

பிரவீணா முன்னமேயே பக்கோடா தயாரித்திருந்தாள். அதோடு காபியையும் சேர்த்து மணக்க வந்தாள்.

கதவு தாழிட்டிருப்பதைப் பார்த்து பயந்து “நான் அங்கே வர மாட்டேன்!“ துாரத்திலேயே நின்றாள்.

“அட வாம்மா. என்னமோ புதுப் பொண்ணு போல அங்கேயே நிக்கிறே?” – இவன் போய் அவளைக் கையைப் பிடித்து அணைத்து அழைத்து வந்தான்.

அவள் எடுத்து வந்த காபி பக்கோடா தட்டையும் வாங்கி டீபாயில் வைத்துவிட்டு…

“இப்படி உட்கார்!” – சொல்லி அவளையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் சேர்த்து அணைத்தான்.

அவள் எடுத்து வந்த காபியையும் பக்கோடா தட்டையும் வாங்கி டீபாயில் வைத்துவிட்டு “இப்புடி உட்கார்!” சொல்லி அவளையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் சேர்த்து அணைத்தான்.

“அதை ஏன் அணைக்கிறீங்க?” தொலைக்காட்சி பெட்டி அணைந்ததில் அவளுக்கு வருத்தம். நல்ல மெகா சீரியல்.

“வேலை இருக்கு.” – என்றவன் தான் தயாராய் கொண்டு வந்திருந்த பத்திரிக்கையை அவள் கையில் கொடுத்தான்.

சுரேந்தர் சாதாரணமாகவெல்லாம் பத்திரிக்கைகளை மனைவியிடம் கொடுக்க மாட்டான். ஏதாவது அந்த மாதிரி செய்தி, புகைப்படங்கள் இருந்தால்தான் நீட்டுவான்.

சரி இதில் ஏதோ வில்லங்கம்! அவளுக்குப் புரிந்தது. “என்ன விசேசம்?“- பிரித்தாள்.

“அம்பத்திரண்டாம் பக்கம் ஒரு விசேச கட்டுரை இருக்கு பார்.” பக்கோடாவைக் கொரித்தான்.

புரட்டி நாலு வரி படித்தவள், “அதானே பார்த்தேன். விசயமில்லாம இப்புடிப்பட்ட பத்திரிக்கையெல்லாம் உங்க கைக்கு வராதே!“ நொடித்தாள்.

“முழுசும் படி சொல்றேன்!”

உன்னிப்பாக படித்தாள். இரண்டு பத்தி தாண்டியதுமே,

“என்னங்க இது அநியாயம்?” அலறினாள்.

“படி!” – உத்தரவிட்டு அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே காபிக்குத் தாவினான்.

பிரவீணாவின் முகத்தில் வியப்பு திகைப்பு… எல்லாம் மாறிக் கொண்டே வந்தது. கொஞ்ச நேரத்தில் முடித்தவள் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தாள்.

“இதைப் பத்தி நீ என்ன நெனைக்கிறே?” – கொக்கியைப் போட்டான்.

“நெனைக்கிறதென்ன கர்மம். பொய்!“

“உண்மை!”

“ஜோடி மாத்திக்கிறது அநியாயம். நெனைக்கவே கொமட்டுது”.

“கொமட்டுறது இருக்கட்டும். அதுக்கான காரண காரியமெல்லாம் போட்டிருக்கான் பார்”.

“புருசன் பொண்டாட்டிக்குள்ள அலுப்புத் தட்டும்ன்னு சொல்றதெல்லாம் சுத்த மடத்தனம்.”

“உண்டு பிரவீணா. நம்மை விடு. பத்து வருசம் வாழ்ந்த புருசன் பொண்டாட்டிகிட்ட நேத்து இருந்த ஈர்ப்பு இன்னைக்கு உண்டான்னு கேட்டா கண்டிப்பா இல்லேன்னுதான் சொல்வாங்க. ஏன், இன்னும் நாலு வருசம் போனா நமக்கே அலுத்துப் போகும் காரணம் என்ன. இதுதான். வாழ்க்கையில கஷ்டமே அனுபவிச்சிக்கிட்டு இருந்தா வெறுத்துப் போய் தற்கொலை. மகிழ்ச்சியையே அனுபவிச்சிக்கிட்டு ருந்தாலும் கண்டிப்பாய் சலிப்பு வரும். வாழ்க்கை சுவாரஸ்யமாய் இருக்கிறதுக்குக் காரணம் இன்பம் துன்பம், லாபம் நஷ்டம் வெற்றி தோல்வி எல்லாம் மாறி மாறி வர்றதுனாலதான். வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழ்றவங்ககிட்ட ஏன் சலிப்பு வராது. கண்டிப்பாய் வரும். கண்டவங்க கண்டபடி திட்டாம இருக்கிறதுக்காகத்தான் நாம் கட்டுப்பெட்டியாய் வாழறோம். அவ்வளவுதான்.”

பிரவீணா பேசாமலிருந்தாள்.

வெகு நேரம் கழித்து, “துரோகம் தப்பு!” முணுமுணுத்தாள்.

“புருசனுக்குத் தெரியாம பொண்டாட்டியும் பொண்டாட்டிக்குத் தெரியாம புருசனும் தப்பு பண்றதுதான் தப்பு, துரோகம்,. அநியாயம், அக்கிரமம் எல்லாம் எனக்கென்னமோ ரெண்டு பேரும் இது தெரிஞ்சு செய்யுற தப்பு நியாயமாப் படுது.”

“அப்புடின்னா?!” – ஆச்சரியமும் அதிர்ச்சியும் சேர்த்துப் பார்த்தாள்.

“எனக்கும் ஆசை வந்துடுச்சு” – கண்ணடித்தான்.

“என்ன சொல்றீங்க?!” – தீயைத் தொட்டவள் போல் அலறினாள்.

“வாயைக் கழுவுங்க” – சீறினாள்.

“கோபப்படாத கண்ணா !” கொஞ்சி தாடையைப் பிடித்தான்.

தட்டிவிட்டாள்.

சுரேந்தர் அசரவில்லை.

“நேத்திக்கு புருசன் தப்பு செய்ஞ்சுட்டு உள்ளே வந்தான். பொண்டாட்டி செய்ஞ்சா கண்டிச்சான். நம்மை போலத்தானே ஆசாபாசம் இருக்கும்ன்னு நெனைச்சி உணர்ந்து இன்னைக்குத் திருந்தி நீயும் வான்னு சுதந்திரம் கொடுக்கிறான். இது பெரிய நல்ல மாற்றம் இல்லியா பிரவீணா?” -கேட்டான்.

“மண்ணாங்கட்டி!” – அவளுக்கு உடலும் உள்ளமும் சேர்ந்து பதைதைத்தது.

“வாழப் போறது கொஞ்ச காலம். மனசிருந்தா நல்லா அனுபவிச்சு வாழ்ந்து பார்த்துட்டுப் போகலாமே?!“

“வேற பேச்சுப் பேசுங்க நான் பத்ரகாளியாய் ஆகிடுவேன்.” சுரேந்தருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. முகம் தொங்கினான்.

ஆண்டாண்டு காலமாய் ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்று வாழ்ந்து பழக்கப்பட்ட சமுதாயம். பழகியதை எழுதி பழக்கத்தை விட்டுப்போன சமுதாயம். ராமனையும் சீதையையும் ஏன் கொண்டாடுகின்றார்கள்? அவன் ஏக பத்தினி விரதனாய் இருந்தான். அவள் மறந்தும் மாற்றானைப் பார்த்ததில்லை. அசோகவனத்தில் ராவணிடம் பேசும் சந்தர்ப்பத்தில்கூட அவள் இலையைக் கிள்ளி தரையில் போட்டு அதைப் பார்த்துதான் அவனிடம் பேசினாள்.

கணவனே கண்கண்ட தெய்வம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். சகலமும் நீயே என்று பெண்ணை ஆணுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த சமுதாயம். வெறும் மாலை மோதிரமும் மாற்றி கையெழுத்துப் போட்டு திருமணத்தைக் கேளிக்கூத்தாக்காமல் இவன் இவளுக்கு மாப்பிள்ளை இனி இறக்கும் வரை இவர்கள் இணை. என்று ஊரைக் கூட்டி மேளம் தட்டி மாங்கல்யம் கட்டி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்வில் ஆணும் பெண்ணும் இப்படித்தான் இணையவேண்டும் தலை முறை தலை முறையாய் நடத்தி வந்த சமுதாயம். அப்படி ஏற்றுக் கொண்டவளை ‘விரிந்து பறப்போம் வா!’ ‘வேறொருத்தனுடன் படு!’ என்றால் எப்படி ஒத்துக்கொள்வாள்?

வாழ்வில் இரண்டு வகை. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நெறிமுறையாய் வாழ்வது. அடுத்து எப்படியும் வாழலாம் என்பது.

இந்தியா நாட்டில்தான் உறவுகள் கொச்சைப்படுத்தாமல், தாம்பத்தியம் கேவலப்படுத்தாமல், ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்டு, கலாச்சாரம் பண்பாடுகளைக் காற்றில் விடாமல் காப்பாற்றி வருகிறது. இதுதான் மேலை நாடுகளுக்கு நம் மீது மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றது. பிள்ளைகள் பிரச்சனை இல்லாமல் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். மேலை நாடுகளில் இது காற்றில் பறக்க எல்லாம் அலங்கோலம்.

இங்கு கட்டியவர்களுக்குள் ஒன்றென்றால் ‘ஐயோ!’ துடிக்கிறார்கள். ஆத்மார்த்த அன்பு பாசம். அங்கு இந்த அன்பு பாசம் துளியும் இல்லை. கொஞ்சம் மனம் வேறுபட்டாலும் விவாகரத்து. நீ வேறு நான் வேறு நிலை. ஆளாளுக்குத் தெருவில் நிற்கிறார்கள். பிள்ளைகள்அனாதையாய் திரிகிறார்கள்..- பிரவீணா பேசவே இல்லை. உள்ளுக்குள் கொதித்தாள்.

சுரேந்தரும் அவள் கொதிப்பு அடங்கட்டுமென்று காத்திருந்தான். நான்கு நாள் பேசாதிருந்தால் தானே வருவாள் என்கின்ற வழியையும் தெரிந்து வைத்திருந்ததால் மனம் கஷ்டப்பட்டவனைப் போல் மௌனமாக எழுந்து அறைக்குள் சென்றான்.

வருவாளா? அவனுக்குள்ளே கேள்வி வலியாக பிறந்தது.

அத்தியாயம் –6

காலையில் இவன்பாட்டுக்கு உம்மென்றிருந்தான். அவளும் பேசாமல் வேலையைப் பார்த்தாள். அவன் அலுவலகம் சென்ற பிறகுதான் பிரவீணாவிற்கு ‘கணவன் கோபித்துக் கொண்டு விட்டான், கோபித்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும்!’ வருத்தம் வந்தது.

“நளாயினி தன் கணவன் விருப்பப்பட்டான் என்பதற்காக அவனைக் கூடையில் வைத்து சுமந்து தாசி வீட்டில் விட்டு அவன் ஆசையை நிறைவேற்றினாளே அவள் எப்படிப்பட்ட பெண்? அவள் பத்தினியா பதிவிரதையா வேறு எவளோவா?” – யோசிக்க வைத்தது.

“அவள் அவன் விருப்பத்திற்காக கொண்டு விடவில்லை. நோயானவன் இருந்தால் தனக்குத் தொல்லை கொடுப்பான். தொடுவான். நமக்கும் வியாதி ஒட்டிக்கொள்ளும் என்கிற பயத்தில்தான் துாக்கிச்சென்றான்!” – என்று படிக்கும் காலத்தில் பட்டி மன்றத்தில் வெட்டிப் பேசி கைத்தட்டல் வாங்கியது நினைவிற்கு வந்தது.

கணவன் கோபித்திருந்திருந்தால் குடும்பம் சுகப்படுமா? வாழ்க்கை தேறுமா? – யோசனையும் வந்தது.

கணவன் சந்தோசம்தான் தன் சந்தோசம்.. அப்படி நடந்ததால்தான் இது வரை சிறு விரிசல் இல்லை. அதனால்தான் அவன் ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடினாள். திருமணத்திற்கு முன் பெற்ற வீட்டில் இருந்தபோது என்ன அடக்க ஒடுக்கம். சிறுதுணி விலகி படுத்திருந்தது கிடையாது, அம்மாகூட இவள் தங்கை விமலியைத் திட்டுவாள்.

“அக்கா போல அடக்க ஒடுக்கமா படுடி. ஆம்பளை மாதிரி காலையும் கையையும் பரப்பிக்கிட்டுத் துாங்கறே. நான் வந்து பதை பதைச்சி இழுத்து மூட வேண்டியிருக்கு. அப்பா என்ன பொண்ணு வளர்த்திருக்கிறே முதுகுல ஒன்னு போடுன்னு திட்றார். பிரவீணாவைப் பார் குதிகாலை விட்டு புடவை விலகறதே இல்லே உனக்கு மாராப்புத் துணி மார்லேயே நிக்க மாட்டேங்குது. அவளுக்கு அதை விட்டு விலக மாட்டேங்குது. இன்னைக்குப் பொண்ணுன்னு பொறுத்துக்கிறோம். பெத்த தோசத்துக்கு சகிச்சிக்கிறோம். நாளைக்கு புருசன் வீட்டுக்குப் போனா என்ன பொண்ணுடின்னு எட்டி உதைப்பான். எவ வளர்ப்புன்னு என்னைத் திட்டுவான்.” என்று கத்துவாள்.

அப்படியெல்லாம் இருந்துவிட்டு இப்போது.? படுக்கையில் உடம்பில் ஒரு பொட்டுத் துணி போர்த்த விடுவதில்லை. போர்த்திகிறேன் கெஞ்சினாலும் நான்தான் போர்வை என்று கணவன் கவிழ்கிறான்.

ஏனிப்படி மாறிப்போனோம். புருச சுகத்துக்காகவா. இல்லை அவன் சந்தோசத்துக்காக. இப்படியெல்லாம் மாறிவிட்டு இப்போது மாறவில்லையென்றால் வலி.

மனைவி கணவனுக்குத் தாசியாக இருக்கலாம் தவறில்லை. அடுத்தவனுக்கும் இரு என்பதுதான் அபத்தம்.

“சரி புருச சந்தோசம் வாய்யா!” – சென்றால்..?. நினைக்கவே குமட்டியது. உடல் பற்றி எரிவது போலிருந்தது. அடுத்த வீட்டுப் பொருள் எடுப்பவன் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம்.

“ராத்திரி என் புருசன் ரொம்ப மோசம். உடம்பெல்லாரம் ஒரே வலி.” – தினமும் பக்கத்து வீட்டு பங்கஜம் புராணம். அவள் கண்களில் மின்னலடிக்கும். அது மாதிரி அதை நினைக்க முடியாது.

அவன் எப்படி நடந்தானென்று எவரிடமும் கூற முடியாது. ஏன் அழைத்துச் சென்ற கணவனிடம் கூட மனம் விட்டுப் பேச முடியாது.

“நீங்க எப்புடி இருந்தீங்க. அவ என்னை மாதிரி உங்க ரசனைக்கேத்த மாதிரி நடந்துக்கிட்டாளா. என்கிட்ட கிடைக்காத சுகம் அவகிட்ட கெடைச்சுதா?“ கேட்கலாம்.

அவன் உண்மையைச் சொல்லாம்.

“எல்லாம் ஒரே சுகம்தான் ஆள் மட்டும்தான் வேற” – கூறலாம்.

எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.

அப்படி எடுத்துக் கொண்டாலென்ன? – தனக்குள்ளேயே கேள்வி கேட்டாள்.

வாழ்க்கை ஒரு தரம். எதையும் சமாளித்து கைக்கு எட்டும் வரை அனுபவித்து மகிழ்ச்சியாய் இருப்பதில் என்ன குடி முழுகிப் போகிறது. தெரியாமல் தவறு செய்யவில்லை. தொட்டுக்கட்டின கணவன் அழைக்கிறான். இதில் மனக்கஷ்டத்திற்கு வேலையே இல்லை. ஒருத்திக்கு ஒருவன் ஒருவனுக்கு ஒருத்தி படைக்கப் பட்டிருக்கின்றது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று. ஐந்து பேருக்கு பாஞ்சாலி ஒருத்தி மனைவியாக இருந்தாள்.! எப்படி.? ஆக முன்னோர்கள் இப்படியெல்லாம் வாழலாம் என்று காட்டிவிட்டுப் சென்றுவிட்டார்கள். அப்போதே வாழ்ந்து கட்டுப் பெட்டியாய்க் காலங்காலமாய் வாழ்ந்த விளைவு தடுமாற்றம். கொஞ்சம் தளர்த்தலாம்.

அடுத்தவன் மொரடா நடந்துப்பான்னு பயம் வருதா..? அவன் தராசு தட்டு என் கையில இருக்கும்போது எப்புடி நடக்க முடியும். உனக்கு ஒரு வில்லங்கம் வினைன்னா அடுத்த நிமிசம் அவன் உடமைக்குச் சேதம்ன்னு அவனுக்குத் தெரியும் இது கூட ஒரு நல்ல கலாச்சாரம் பிரவீணா. எல்லாரும் இப்படிபழகினாங்கன்னா கொலை, கொள்ளை, கற்பழிப்பு குறையும். அடேய் ! எம் பொண்டாட்ாயை ஏன்டா தொட்டே ?- எவனும் அரிவாளைத் துாக்க மாட்டான். அந்த கோபதாபமே அழிஞ்சி போயிடும். அநாவசிய கற்பழிப்பெல்லாம் காணாம போயிடும்.- தனக்குள்ளேயே பேசினாள்.

மேல் தட்டு மக்களை பணம் மூடி மறைத்து விடுகிறது. பணம் எதையும் மூடி மறைக்கும்.!

ஊர் உலகத்திற்குத் தெரிந்தால் ? இவளே கேள்வி கேட்டாள்.

“இங்க பாருடி! ஜோடியை மாத்திக்கிறாங்களாம்! வெட்கம் கெட்டதுங்க” – பேசுவார்கள்.

தெரிந்தால்தானே பேச?!

மறுப்பு வேணாம் பிரவீணா. புருசனுக்குத் தெரியாம பொண்டாட்டி ஊர் மேய்ஞ்சுட்டு வர்றா. இது எதுல சேர்த்தி?! – திணறினாள்.

ஆமாம் அவர்களெல்லாம் அனுபவிக்கிறார்கள். பொன்னுக்கோ பொருளுக்கோ புகழுக்கோ என்று எது எதற்கெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அது துரோகம் தப்பு. இது ? கணவன் விருப்பத்திற்காக சமைத்துப் போடுவது போல.

பிரவீணா மனசுக்குள் மெல்ல துணிவு வந்தது. அவனே விருப்பப்படுகிறான். நாளைக்கு நம் மீது பழி வராது. தைரியம் எட்டிப்பார்த்தது.

“எனக்காக ஒத்துக்க பிரவீணா. புடிக்கலைன்னா அறைக்குள் நுழைஞ்சதும் அவன்கிட்ட கத்தியைக் காட்டு. அரை மணி நேரம் தாக்குப் பிடி. நான் முடிச்சிட்டு வந்துடுறேன். புடிக்கலைன்னா அந்த ஒரு முறையோட நிறுத்திக்கலாம். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே. அது எப்புடின்னு ஒரு முறை பார்க்க ஆசை!” – சுரேந்தர் கெஞ்சுவது போல் கற்பனை வந்தது. பிரவீணா மெல்ல மெல்ல…

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *