குருவானவரும் வியாபாரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 201 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோப்பு செய்யும் வியாபாரியும், குருவானவரும் சேர்ந்து பேசிக்கொண்டு கடைத்தெருவழியே போகிறார் கள். வியாபாரி குருவானவரிடம். “என்ன ஐயா, உங்கள் கிறிஸ்து மார்க்கம் இரண்டாயிரம் வருஷமாக இருந்துவருகிறதே, துன்மார்க்கம் ஏதாவது குறைந் திருக்கிறதா? கொடுமைதானே தலைதூக்கி நிற்கிறது; சன்மார்க்கத்தைக் காணவே காணோம். எங்கு பார்த் தாலும் அக்கிரமங்கள், பாவங்கள், அநியாயங்கள் தானே தலைவிரித்தாடுகின்றன எனச் சலித்துகொண் டார், சோப்பு வியாபாரி.

குருவானவர் பதில் பேசவேயில்லை.

இருவரும் மெளனமாக நடந்து செல்லுகிறார்கள்.

திடீரென்று குருவானவர் சோப்புவியாபாரியிடம், “அதோ பாருங்கள், அந்தக் குழந்தையை எவ்வளவு அழுக்காயிருக்கிறது, பாருங்கள். எத்தனையோ வரு டங்களாகச் சோப்பு செய்கிறீர்களே, ஏதாவது பிர யோசனமுண்டா” என்க, வியாபாரி குருவானவரிடம், “சோப்பை உபயோகித்தால்தானே நன்மை உண்டு’ என்றார்.

அப்படியே ‘கிறிஸ்துமார்க்கத்தை உபயோகித்தால் தானே நன்மை உண்டு’ எனப் பளிச்சென்று குருவானவர் சொல்லி முடித்தார்.

“அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும் வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்”[மல்கியா 3:21]

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக் கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின; எல்லாம் புதிதாயின. [11 கொரிந்தியர் 5:17]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *