சாத்தானின் கேள்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 172 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாத்தான் ஒரு பக்திமானைப் பார்த்து; நீ தேவ னுடைய ஊழியக்காரன் என்கிறாயே, நான் செய்கிற தற்கு மேல் நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.

நான் உபவாசம் எடுக்கிறேன் என்க, சாத்தான் ‘நானும்தான் உபவாசம் எடுக்கிறேன்’ என்றான். நான் தினமும் ஜெபிக்கிறேன்’ என்க, ‘நானும்தான் தினமும் ஜெபிக்கிறேனே, நீ என்ன அதிகமாகச் சாதித்து விட்டாய்’ என்றான் சாத்தான்.

இப்படியே ஒவ்வொருபதிலுக்கும் அதைவிடத் தான் அதிகமாகச் செய்வதாகப் பிசாசு பெருமையுடன் பதிலிறுத்தது. இறுதியாக, ‘நான் என்னை வெறுக் கிறேன்; நீ உன்னை வெறுக்க முடியுமா?’ என்று கேட்ட போது பேய் பேச வாயின்றி ஓடியது.

“நான் என்னை அருவருத்து. தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.” [யோபு 42:6]

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” [மத்தேயு 16:24]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *