இரு நதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 165 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுவிஸ்நாட்டில் ஆர்வ், ரோன் என்ற இருநதிகள் ஒன்று சேர்ந்து ஓடுகின்றன.

ஆர்வ் என்ற நதியின் தண்ணீர் சேறும் சகதியு மானது, மெதுவாக ஓடுகிறது. ரோன் நதியின் தண்ணீரோ சுத்தமானது; வெகு விரைவாக ஓடுகிறது.

இரண்டு நதிகளின் தண்ணீரும் பக்கம் பக்கமாய் போன போதிலும் ஒன்றோடொன்று கலக்கிறதில்லை. சுத்தமான தண்ணீர் விரைவாக ஓடுகிறபடியால். சேறும் சகதியுமான தண்ணீரில் கலக்கிறதில்லை. அவ் வாறே கடவுளுடைய பிள்ளைகள் சுறுசுறுப்பும், உற் சாகமும் கொண்டு பிறருக்கு நன்மை செய்யவும், நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் ஓடவும் தீ விரித்து நிற்கும் போது சேறும் சக்தியுமான உலகக்கறை அண்டாமல் ஜீவிக்கலாம்.

தாமரை இலை தண்ணீரில்தான் கிடக்கிறது. என்றாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் அதில் ஓட்டு வதிலலையே! நன்றாகப் பழுத்த புளியம்பழத்தைக் கையில் வைத்து ஆட்டுங்கள், ஓட்டுக்கும் பழத்துக்கும் சம்பந்த மில்லாமலே பழம் தனியே ஆடும்.

நமது உலக வாழ்வும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

“தேவனே, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” [சங்கீதம் 51:12]

“‘எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.” (எபிரேயர் 4:15)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *