ஒட்டகம் ஊசியின் காதில்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 172
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு மரநிழலில் உட்கார்ந்திருந்த பக்தன் ஒருவன் பரத்திலிருந்து இறங்கிவருகிற தேவதூதனிடம் கடவுள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டான்.
“கடவுள் இப்பொழுது யானை, ஒட்டகம், குதிரை முதலிய மிருகங்களை ஊசியின் காதில் நுழையவிட்டுக் கொண்டிருக்கிறார்’
‘முடியாத ஒன்றைக் கடவுள் செய்ய முனைவாரா? நீ முழுப்பொய் சொல்கிறாய், ஓடிப்போ,’ என்று கூறி விரட்டிவிட்டான் பக்தன்.
தூதன் வழிநடந்து போகையில் பிறிதொரு பக்தன் எதிர்கொண்டு அதே கேள்வியைக் கேட்டான். தூதன் முந்திய உத்தரவையே இவரிடமும் சொன்னான். இரண்டாம் பக்தனும் ‘பொய், பொய் ஓடிப்போ. என்று விரட்டிவிட்டான். மூன்றாம் பக்தனும் அதே கேள்வியைக் கேட்க தூதனும் அதே விடையைப் பகர்ந்தான்.
உடனே மூன்றாவது பக்தன் சொன்னான்:-
வெறுமையிலிருந்து இப்பிரபஞ்சத்தையே உண் டாக்கிய இறைவனுக்கு இது என்ன பிரம்மாதம்? ஒட்டகம் போன்ற ஐசுவரியவானான சகேயு ஊசியின் காது போன்ற இடுக்கமான வாசல் வழியாய் மோட்சத் திற்குள் பிரவேசிக்கவில்லையா?’ என்றான்.
ஆம். கடவுள் ‘யானை, ஒட்டகம், குதிரை இவை களை ஊசியின் காதில் நுழையவிட்டுக் கொண்டிருந் தார்’ என்பதின் பொருள் புரிகிறதா?
கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
“கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” [ஆதியாகமம் 18:14]
“தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.” [லூக்கா 1:37]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
