பட்டி நாய்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 206
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆடு தவறிப்போனால் மேய்ப்பன் தன் பட்டி நாயை அனுப்பி ஆட்டைப் பிடித்து வரும்படி செய்கிறான். ஆட்டை அடித்துக் கொன்று விடுவதற்காக அல்ல. ஆட்டைப் பட்டியில் கொண்டு சேர்க்கவே அப்படிச் செய்தான். அப்படியே நல்ல மேய்ப்பனும் தனது பட்டியின் ஆடுகள் கீழ்ப் படியாமல் ஓடிப்போகையில் சோதனை, வேதனை, துன்ப துயரம், கஷ்ட நஷ்டம்; வறுமை, வாட்டம், நோய், நொடி, பஞ்சம், பசி போன்ற பட்டி நாய்களை அனுப்பி நம்மை மீட்கிறார்.
துன்பமாகிய பட்டி நாய் நமக்குத் தேவைதானே!
“நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடு வன்: நீர் என்னைக் கேட்டருள்வீர்.” (சங்கீதம் 86:7)
“ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட் கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக் கடவன்.” [1 பேதுரு 4:16]
திருமொழிகள்
ஈரமான விறகுக் கட்டையை அடுப்பில் வைக்கும் போது அது எரியுமுன்னே இரைச்சலும் புகைச்சலு முண்டாகும். அப்படியே தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜெபத்தைத் தேவனுக்கு ஏறெடுக்கு முன் அவர்கள் இதயத்திலிருந்து அலறுதலும், புலம்பலும் உண்டாக்கி, அதன் பிறகே ஜெபம் கொழுந்து விட்டு எரிவது போலிருக்குமாம்.
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
