கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 205 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இங்கிலாந்து பர்மிங்காம்பட்டணத்தில் குடிகாரக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் இரட்சிப்பின் கூட்டத் திற்குச் சென்று குணப்பட்டான். அவனுடைய பழைய நண்பனுக்கும் குணப்பட்ட குடிகாரனுக்கும் கீழ்க் காணும் உரையாடல் நடந்தது.

பழைய நண்யன்: என்னப்பா, நீ கிறிஸ்தவனாகி விட்டாயாமே, இயேசு கிறிஸ்துவின் தாயார் பேரென்ன?

இரட்சிக்கப்பட்ட குடிகாரன்: தெரியாது,

ப. நண்பன்: இயேசு எந்த ஊரில் பிறந்தார்?

இ. குடிகாரன்; அதுவும் தெரியாது.

ப. நண்பன்: இயேசு கிறிஸ்து எத்தனை வருடம் ஊழியம் செய்தார்?

இ. குடிகாரன்: ஒன்றும் தெரியாது.

பழைய நண்பன் பரிகாசமாகச சிரித்துக்கொண்டு “வேறு என்னதான் உனக்குத் தெரியும்?” என்று கேட்கவும் குடிகாரன் சுடச்சுடச் சொன்னான்:

“இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்து மீட்டார், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்” என்றான் தெளிவாக.

பழைய நண்பன் பதில் பேச வகையறியாது சென்றான்.

“உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”. [சங்கீதம் 13:5)

“நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்”. [யோவான் 9:25]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *