கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அருள் பெற்ற அருளாளர் ஆதம் ஸ்மித். நற் செய்தி எழுப்புதல் கூட்டமொன்றில் அவர் செய்தி கொடுத்து முடிந்தபின், இப்பொழுது அந்நிய நாடு களில் நடைபெறும் ஊழியத்திற்காகக் காணிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன் வரிசையிலிருந்த ஓர் அம்மாள் எழுந்து நின்று, “ஐயா, இரட்சிப்பு இலவசம்’ என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம். அப்படியானால் காணிக்கை எதற்கு?” என்றாள்.

இருவருக்கும் உரையாடல் நிகழ்ந்தது.

“அம்மா, நீங்கள் தண்ணீர் விலை கொடுத்து வாங்குகிறீர்களா?”

“இல்லை, இலவசம்”.

“இலவசமாகத் தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர, இரண்டு மைல் தூரத்தில் பம்பிங்ஸ்டேஷன் கட்டி திரங்கள் பொருத்தி பூமிக்கடியில் குழாய்கள்பதித்து தண்ணீரை உங்கள் வீட்டில் கொண்டு இலவசமாய்க் கொடுக்க எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்?”

“ஐயா, நான் முட்டாள்தனமாய்க் கேட்டு விட்டேன், மன்னியுங்கள்!”

இரட்சிப்பு இலவசம்தான். அதை அறிவிக்க ட்கள் தேவை. தேவ நாம மகிமைக்கே காணிக்கை.

“என் இரட்சிப்பு தாமதிப்பதில்லை.” [ஏசாயா 46:13]

“கிறிஸ்துவின் திருப்பெயர்… அறிவிக்கப்படாத இடங்களில் அருட்செய்தியை அறிவிக்க வேண்டும்.” (ரோமர் 15:21)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *