அன்பின் குரூரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இங்கிலாந்தில் இரயில், மோட்டார் ஏற்படு முன்பு இரட்டைக் குதிரை வண்டிகள் உபயோகிக்க பட்டன.

கொடிய குளிரான ஒரு நாளில் ஒரு தாயும் கை குழந்தையும்தான் பிரயாணிகள்.

குளிர் நடுக்குகிறது. அவளிடம் குளிர் உடுப்புகள் இல்லை. அவளால் குளிரைத்தாங்க முடியவில்லை. குழந்தை வெடவெடக்கிறது. சூடுண்டாகும்படி வண்டிக்காரன் விரைவாக வண்டியை ஓட்டினான் பயனில்லை. அவளின் உதடு ஒட்டிக்கொண்டது. தன அங்குமிங்கும் ஆடியது. குழந்தை பிழைக்குமா என் சந்தேகம் எழுந்தது.

வண்டிக்காரன் வண்டியை நிறுத்தினான். குழந்தையை அவளிடமிருந்து வாங்கினான். தன் உடுப்பால் குழந்தையை மூடி அணைத்துக்கொண்டு தாயை வண்டியிலிருந்து கீழே தள்ளினான், வண்டியை வேகம் வேகமாக விரட்டினான்.

“ஐயோ, என் குழந்தை; ஐயோ……என் குழந்தை” என்று அலறிக்கொண்டு பின்னால் வண்டிக்குப் ஓடினாள். தலைவிரி கோலமாக ஓடினாள்.

வண்டியை நிறுத்தி குழந்தையை அவளிடம் கொடுத்தான். அவள் உடல் நன்கு சூடேறி இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது.

வண்டிக்காரனின் செய்கை குரூரமானதா? கடவுள் அன்புள்ளவர். சில வேளைகளில் அவரின் அன்பும் குரூரமாகத் தெரியும்.

“ஆண்டவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்” [யோபு, 5:18]

“என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே; அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே.” (எபிரேயர். 12:5)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *