ஓய்வுநாள் ஆசரிப்பு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 203
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு காரியாலய அதிபர் தம் வேலையாளை அழைத்து ‘ஓய்வு நாளன்றும் நீ கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினார்.
‘நான் ஓய்வுநாளில் வேலைக்கு வரமுடியாது’ அந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பது என் வழக்கம்’ என்றான் அவன்.
‘ஓய்வுநாளில் உன் கழுதை குழியில் விழுந்து விட்டால் தூக்கமாட்டாயா? இது உன் பைபிளில் சொல்லப்பட்ட சத்தியம் தானே?’ என்றார் அதிபர்.
வேலையாள் மிகவும் துணிச்சலோடு பதில் சொன்னான்:
‘ஒவ்வொரு ஓய்வுநாளும் என் கழுதை குழியில் விழுமேயாகில் ஒன்று குழியை மூடுவேன். அல்லது கழுதையை விற்றுவிடுவேன்’ என்றான்.
அதிபர் கதிகலங்கி நின்றார்.
“என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்ட மானதைச் செய்யாதபடி… அதை மகிமையாக எண்ணு வாயானால், அப்பொழுது கர்த்தரில் மன மகிழ்ச்சியாயிருப்பாய்” (ஏசாயா 58:13,14)
“ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (லூக்கா 23:56)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
