மயிறு
கதையாசிரியர்: ராஜராஜ சோழன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 146

சாலையின் நடுவே நானும் சரவணனும் வண்டியில் வந்து கொண்டு இருந்தோம். சரவணன் பேச்சு கொடுத்தான்.
மாப்புள இன்னைக்கு சரியான வேல, உடம்பு வலிக்குது.
உடம்புனா வலிக்க தான் செய்யும்.
சாப்புட்டு படுத்தா எல்லாம் மறந்து போகும். தூக்கம் உடனே வந்துறும்.
நான் என்ன சொல்ல வரேனா.
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.
சரி சரி ரோட்டுல பாதி பேரு புதுசா கல்யாணம் பண்ணுனவன் மாதிரி பொண்டாட்டிய புடிச்சிக்கிட்டு இருக்கர மாதிரி செல்ல புடிச்சிக்கிட்டு வண்டிய ஓட்டுறான்.
நீ பாத்து போ மாப்புள. உனக்கு உடம்பு வலிக்கல?
வலிக்குது ஆனா சொல்றது இல்ல அதனால வலிக்கறது இல்ல.
சரி அங்க பாரு.
யாரு .
அதான் அந்த பெருசு இந்த வயசுல முருங்க போத்தை தோள்ல வச்சு கிட்டு அதுலையும் சைக்கிள் வேற.
ஆமா அவராச்சும் பரவால, நீயெல்லாம் நடப்பியான்னு தெரியல. இப்பயே முருங்க காய் காச்சிருந்தா ஒரு வீட்ட கூட வுடுரது இல்ல, பேசாம வா .
சரி வுடு பார்த்து மெதுவா போ. பெருசு சரியா வண்டிய பார்க்காம குறுக்கே வந்து அந்த பக்கம் போகுது பாரு. ஒரு சவுண்டு உடு.
பாவம் விடு.
நாங்களும் அந்த பெரியவரும் சாலையை பாதி கடந்து விட்டோம். இன்னொரு பாதியை கடக்க முடியாமல் நின்று விட்டோம். ஐந்தாறு வண்டிகள் கடந்து விட்டது. 20 அடி தூரத்தில் அடுத்து ஐந்தாறு வண்டிகள் பறந்து வந்து கொண்டு இருந்தது.
உடனே சரவணன் மாப்புள இவனுங்க காலையில வேளைக்கு போகும் போதும் பறக்குரானுக. வீட்டிற்கு போகும் போதும் Drone Camera மாதிரி பறக்குரானுக. நீ போ இல்ல ரோட்டுலேயே நிக்க வேண்டியது தான் என்று என்னை தள்ளினான். என்னை ஏதோ தடுத்து நிறுத்தியது. தெரியவில்லை. சாலையின் அதீதமான சத்தமும் வெளிச்சமும் என்னை நொறுக்கிக் கொண்டு இருந்தது. நான் வண்டியை நிறுத்தி விட்டேன்.
என்ன மாப்புள என்று சரவணன் ஏமாந்து போனான்.
அந்த பெரியவர் சைக்கிளையும் மரத்தின் கிளையையும் ஒரு தோலில் வைத்து கொண்டு மெதுவாக கடக்க முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் பறந்து வந்தவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. கொஞ்சம் வேகத்தை குறைத்தார்களே தவிர நிறுத்த வில்லை. உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையையும் சொல்லி விட்டார்கள்.
அதில் ஆச்சர்யம் பெரியவர் என்று கூட பார்க்காமல் ஒரு இளம் பெண் கூட விதி விலக்கு இல்லை.
சரவணன் கூட ‘ஆ’ என்று வாய் திறந்து ஆச்சர்ய பட்டான்.
அதற்குள் கடைசியாக ஒத்த கையால் ஓட்டி வந்தவன், வண்டியை நிறுத்தி விட்டான். அதற்குள் நாங்கள் சாலையை கடந்து விட்டோம்.
பெரியவரை அவன் திட்ட தொடங்கி விட்டான். நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் வண்டியை நிறுத்தி விட்டோம்.
பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை அவர் காதில் அவன் கூறும் வார்த்தைகள் கேட்கிறதா என்று கூட தெரியவில்லை. அவர் அப்படியே நின்று விட்டார்.
நான் அவனை சமாதான படுத்த முயன்றேன். அவனால் அவனை நிறுத்த முடியவில்லை.
என்ன மயிருக்கு வர என்றான் அந்த பெரியவரை.
நானும் ஒரு நாளில் இந்த வார்த்தையை பல முறை கூறி இருக்கிறேன்.
இப்போது அந்த வார்த்தை என்னையே என் நெஞ்சை குத்தி கிழித்தது.
நான் என்ன செய்வது என்று அறியாமல் முதல் முறையாக அப்படியே நின்றேன்.
ஏன் என்று தெரியவில்லை.
ஒரு அரை விழும் சத்தம் கேட்டது.
சரவணன் தான் அரை விட்டான்.
என்ன மாப்புள சின்ன பையன் பேசுறான் பாத்து கிட்டு இருக்க.
பெரியவரை பார்த்தேன் அவருக்கு இப்போது தான் புரிந்தது போல.
நடுக்கம் குறைய வில்லை சைக்கிளை பிடித்து கொண்டு நகராமல் நின்றார்.
நான் உடனே அவரை பார்த்து போங்க ஐயா என்றேன்
அதன் பிறகு அந்த வார்த்தையை பெயருக்கு கூட சொல்வது இல்லை.
மறந்தே போனேன்.