ஆத்மதிருப்தி
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வெள்ளிக் கிழமை. கோவிலுக்கு ஜனங்கள் கையில் பூத்தட்டுடன் சாரி சாரியாகப்போய்க் கொண்டிருந்தனர். வனஜாவுக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருந்தது. “என்ன ஜனங்கள்! என்ன குருட்டு நம்பிக்கை!” என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் அவளுடைய மன்னி கிரிஜா கையில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலிய வற்றை எடுத்துக் கொண்டு அர்ச்சனை செய்து வருவதற்காகக் கோவிலுக்குப் புறப்பட்டாள். அதைப் பார்த்த வனஜாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; ‘எத்தனையோ படித்த மன்னி கிரிஜாவும் கூட அல்லவா குருட்டு நம்பிக்கையுடன் கோவிலுக்குப் போகிறாள்?” என்று எண்ணினாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வனஜா என்ன எண்ணிக் கொண் டாளோ, தெரியாது! அழகாக ஆடை அலங்காரம் செய்து கொண்டு கோலிலுக்குப் புறப்பட்டாள். கோவிலுக்குப் போய்த் தன் மன்னிக்கு முட்டாள் பட்டம் கட்டிவிட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டாள்.
‘இதுதான் உன் பகவானா ? இதில் என்ன இருக்கிறது? இந்தக் கல் சிலைக்கு ஆத்ம சக்தி ஏது? கலைக்கண்ணோடு நோக்கும் பொழுது இதில் கைதேர்ந்த சிற்பியின் கைத்திறன் தெரிகிறது. ஆனால் இதில் பூஜைக்கு உகந்த சக்தி என்ன இருக்கிறது என்று கேட்டுத் தன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை!’ மன்னியை மடக்க வேண்டும் என்று அவள் மனத்தில் தீர்மானித்துக் கொண்டாள்.
ஆனால்……
கோவிலின் கோபுரவாசலுக்குள் நுழையும்போதே அவளு டைய அந்த எண்ணங்கள் எல்லாம் எங்கோ மாயமாய் மறைந்து விட்டன. அநாயாசமாக நிரந்தர சுகத்தைத் தரும் சக்தி ஒன்று அவளுடைய உள்ளத்தில் குடி புகுந்தது. ஒய்யாரமாக அன்ன நடை பயின்று வந்த அவளுடைய கால்கள், தன் சஞ்சல சுபா வத்தை உதறித் தள்ளிவிட்டு, சாந்தமும், கம்பீரமும் நிறைந்த போக்கைப் பின் பற்றின. அவளையறியாமலே கால்கள் அவளைக் கோவிலுக்குள் இழுத்துச் சென்றன. உல்லாசமும் அமைதியும் ஒருங்கே ஒளி வீசக் கையில் அர்ச்சனைச் சாமான்கள் ஏந்திச் செல்லும் எண்ணற்ற ஆண் பெண்களை அவள் கண்டாள். பக்தர்களின் வாயிலிருந்து வெளிவரும் பக்திப் பரவசப் பாடல் களும் கோயில் கண்டாமணியின் இனிய நாதமும் ஒன்று கூடி, யாருமே கண்டறியாத ஒருமை மனப்பான்மையையும், அமைதி வாய்ந்த சூழ்நிலையையும் உண்டு பண்ணியிருந்தன. முன்பின் அறிமுகமில்லாத ஒரு சக்தி தன் தளிர்க் கரங்களை நீட்டிக் காரிருளிலிருந்து தேஜோமயமான பிரகாசத்தின் ‘பக்கம் தன்னை இழுத்துச் செல்வதுபோல வனஜாவுக்குத் தோன்றியது.
படிகளைத் தாண்டிக்கொண்டு வனஜா ராதாரமணன் கோவி லுக்குள் நுழைந்தாள். மனமோகன உருவம் படைத்த கிருஷ்ண விக்கிரஹத்தையும் ராதையின் விக்கிரஹத்தையும் கண்ட பொழுது பரிசுத்தமான அன்புதான் இப்படி உருவமெடுத்து வந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது: ‘வனஜா ! நீ சாந்தியும் சுகமும் வேண்டும் என்று விரும்புகிறாய். சுக போகங்களும் இன்பக் கேளிக்கைகளும் தான் வாழ்க்கையின் பிரதானக் குறிக்கோள்கள் என்று எண்ணுகிறாய்: ஆனால்…’ என்று யாரோ சொல்ல வருவது போலத் தோன்றியது.
அவள் மறுமடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள். கடமை, உணர்ச்சி இவற்றுக்கு எடுத்துக் காட் டாக விளங்கும் ஸ்ரீராமரும் சீதையும் கண்களெதிரே காட்சி யளித்தனர். அவர்களது பாதார விந்தங்களிலே ஊழியமும் உபாஸனையுமே உருவெடுத்த அனுமன் காட்சி அளித்தான். ஆகா, இந்தச் சிலைகளில்தான் என்ன பாவம்! என்ன பாவம் ! அவை உயிர்ப் பிரதிமைகளாகவே அல்லவா தோற்றுகின்றன ? உயிர்க்களையுடன் உரையாடும் இந்தச் சிலைகளைக் கற்சிலை என்று எப்படிச் சொல்வது? கண்களில் தான் என்ன காந்தி ! கற் சிலைக்கு எப்படித்தான் ஜீவன் வந்ததோ ? இதைப் பாராத கண்கள் என்ன கண்கள்?
இம்மாதிரியான சித்திர விசித்திரமான எண்ணக் குவியல் கள் அவள் உள்ளத்தில் குடிகொண்டன. தன்னை மறந்து சிந்தனையில் லயித்துவிட்ட அவளுடைய கண்களிலிருந்து எப்பொழுது ரு துளிக் கண்ணீர் பெருகிக் கன்னத்தின் வழியே ஓடிக் காய்ந் தனவோ, தெரியாது! இவ்வாறு வனஜா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தபொழுது பின்னாலிருந்து அவள் தோள்களைப் பிடித்து உலுக்கி, “சீ, அசடு! எதற்காக அழுகிறாய்?” என்று கேட்டாள் கிரிஜா.
“மன்னி! நான் அழவில்லையே! ஆனந்தக் கண்ணீர் அல்லவா இது! இவ்வளவு நாட்களும் சத்தியம், சிவம், சுந்தரம், மங்களம் என்னும் சொற்களைப் பிறர் சொல்லத்தான் கேட்டி ருக்கிறேன். இன்றோ, அவற்றைப் பற்றிய உண்மை அநுபவமே என் உள்ளத்தில் எழுந்திருக்கிறது. அதனால் தான் இந்த ஆனந்த பாஷ்பம்!” என்றாள் வனஜா.
வனஜாவின் வாயிலிருந்து இம்மாதிரியான சொற்களைக் கேட்டதும் கிரிஜாவுக்கு வியப்பாக இருந்தது. தர்க்கத்தில் சளைக்காத வனஜாவா, தர்மத்தை அலட்சியமாக மதிக்கும் வனஜாவா இப்படிப் பேசுகிறாள்? கிரிஜா அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள். வனஜாவினால் வாய் திறந்து அதிகமாகப் பேசமுடியவில்லை. கிரிஜாவின் பார்வையில் அர்த்தம் விளங்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. தன் தோய்ந்திருந்த வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைப் பற்றிச் சிந்தித்தாள். இதைத் தன் தோல்வி என்று ஒப்புக்கொண்டு விடுவதா? அல்லது திடீரென்று உண்டான உணர்ச்சி என்று உதறித் தள்ளி விடுவதா?’ என்று அவளால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடிய வில்லை. வனஜா வாய் திறக்காமல் நிற்பதைக் கண்ட கிரிஜா ‘வனஜா, வா! இந்தப் புஷ்பத்தையும் மல்லிகைச் சரத்தையும் தெய்வத்துக்குச் சாற்றச் சொல்லுவோம். இது உன் பக்திக்கு அறிகுறியாக அந்தப் பகவானின் பாதாரவிந்தத்துக்கு போய்ச் சேரட்டும்; தெய்வத்தின் பாதாரவிந்தங்களில் அர்ப்பி கப்பட்ட நம் வாழ்க்கைமலர் நம்மைப் பாவம், புண்ணிய இவற்றினின்றும் காப்பாற்றிக் கடமையின் கண்ணே செல்ல தூண்டும்; பச்சாத்தாபத்தினால் பெருகும் கண்ணீரைக் கொண் உள்ளத்தின் அழுக்கை அலம்பலாம். ஆனால் அத்துடன் ந கடமை பூர்த்தியுற்று விடுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொ நிமிஷமும் விலை மதிப்பற்றது. சாத்துவீகமான கடமையின் பக்கம் நம்மைத் தூண்டக் கூடியது. வா, நம் கடன் பல செய்து கிடப்பதாகவே இருக்க வேண்டும் ” என்று சொன்னாள்.
வனஜா அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. அவளுடை உள்ளத்து உணர்ச்சிகள் மௌனம் சாதித்தன. ஆனால் தன் அழகிய விழிகளால் ஒருமுறை தன் மன்னி கிரிஜான பார்த்தாள். அந்தப் பார்வையில் அவள் எதையோ அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா கொண்டிருப்பதாகத் தோன்றியது.
அவள் கையில் பூத்தட்டு ஏந்திக் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்றாள்: அவளுடைய கண்களில் நீர் முட்டியது; வரவரக் கண்ணீர் அதிகரிக்கவும் செய்தது. அதைக் கண்ட கிரிஜா தன் அன்பான கரங்களினால் அவள் தலையை வருடினாள்.
வனஜாவுக்கு ஏற்பட்டது என்னவோ தோல்விதான். இருந் தாலும் அவளுக்கு உள்ளூற ஆத்ம திருப்தி ஏற்பட்டிருந்தது. கிரிஜாவின் முகத்தில் ஒருவிதப் பெருமிதம் தாண்டவமாடியது. வழி தவறியவனுக்கு வழி காட்டினோம் என்ற பெருமிதம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதானே? கிரிஜாவின் முகத்தில் அப்பொழுது தோன்றியிருந்த மகிழ்ச்சியைப் போன்ற மகிழ்ச் சியை உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.
இருவரும் கோவிலைப் பிரதக்ஷிணம் செய்து கொண்டு வீட் டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஏன் வனஜா ! நான் சொன்னது உண்மைதானே? ” என்று கேட்டாள் கிரிஜா.
“என்ன?”
-அப்பொழுதுதான் தூங்கி விழித்தவள் போல அக்கேள்வி யைக் கேட்டாள் வனஜா.
“நம்பிக்கையும் அநுபூதியும் கற்சிலையில்கூட உயிர்ச் சத்தை உண்டாக்கி விடுகின்றன என்று நான் ஒருநாள் உன்னிடம் சொன்னேன். நீ என்ன இருந்தாலும் கற்சிலை கற்சிலைதான் என்று சொல்லி என்னை ஏளனம் செய்தாயே, நினைவிருக்கிறதா? இன்று உன் கண்களில்கூட அந்தக் கற்சிலைகளைப் பார்த்து நீர் சுரந்து விட்டதே ! அதே கற்சிலைக்கு நீ இன்று பக்தி சிரத்தை புடன் புஷ்பம் கூடச் சாற்றச் சொன்னாயே! ஏன்?” என்று கேட்டாள் கிரிஜா.
வனஜாவுக்கு ஏதோ உணர்ச்சி உந்தித் தள்ளித் தன்னை அப்படிச் செய்யுமாறு தூண்டிவிட்டது என்று தோன்றிற்று. தோ ஒரு வெறியில் ஆழ்ந்து, தான் அந்த வேலைகளைச் செய்து ட்டதாகவே அவள் எண்ணினாள். இருந்தாலும் அவள், பக்தியும் சிரத்தையும் கட்டாயம் தேவைதான். இருந்தாலும் ற்சிலை பக்திக்கு உகந்ததுதானா என்று யோசிக்க வேண்டும். ந்தக் கற்சிலையில் பகவானின் கற்பனை உருவம் எப்படிக் குடி குந்தது? உருவமற்ற பகவானை ஒரு கல்லுக்குள் ஆவாகனம் சய்து விடுவது என்பது கெட்டிக்காரத்தனம் ஆகுமா? அதுதான் னக்குப் புரியவில்லை” என்றாள்.
“நீ எண்ணுவது தவறு, வனஜா ! பகவானை ஒரு கற்சிலை குள் ஆவாகனம் செய்து விடுவதனால் அவர் ஒரு எல்லைக்கு பட்டவராக ஒரு நாளும் ஆகிவிட மாட்டார். ஒரே பரம்பொ ளான அவருக்குப் பல உருவச் சிலைகள் உண்டாக்கப் பட்டிரு பதே அவர் எங்கும் நிறைந்தவர் என்பதற்குப் பிரமாணட ஒருமைப் பட்ட உள்ளத்தைப் பெறுவதற்காக நமக்கு ஒ ஆதாரம், ஒரு பிடிப்பு, ஓர் உதவி தேவையாக இருக்கிறது அந்தக் குறையைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்காக மனி கடவுளுக்கு ஓர் உருவத்தை வழங்கியிருக்கிறது. மனத்தை ஒரு நிலையில் நிறுத்த ஒ பிடிப்பைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு தவறா?” என்றாள் கிரிஜா.
“அப்படியானால் மூர்த்தி பூஜையில்லாமல் பகவானை பெறுவது என்பது இயலாத காரியமா? ஆமாம், நாம் வே கோவில்களில் குடிகொண்டுள்ள பகவானைப் பக்தி செலுத்த கூடாதா?” என்று கேட்டாள் வனஜா.
“செலுத்தக் கூடாது என்று யார் சொன்னார்கள்? ஆனா அதற்கு ஒரு கடுமையான நிச்சய புத்தியும் ஆத்ம சக்தியு வேண்டும். அது சாதாரண மனிதனிடத்தில் காணக் கிடைப்பதில்லை. நமது அன்றாட வாழ்க்கை ஒரே ஓட்டமாக ஓடுகிறது எத்தனையோ பொருள்கள் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை யாக இருக்கின்றன. ஆயினும், அவை கிடைப்பது குதிரை கொம்பாயிருக்கின்றன. அவை வ மனிதனுடைய சிந்தனைக்கே எட்டாத பொருள்களாகி விடுகின்றன,” என்றாள் கிரிஜா ஆனால் அடுத்த நிமிஷமே, இதோ பார்!’ என்று சொல்லி பக்கத்திலிருந்த ஒரு மேஜையைக் காண்பித்தாள். இது ஒ சாதாரண மேஜைதானே ? இம்மாதிரி எத்தனையோ மேஜைக கிடைக்கக்கூடும். அப்படி யிருந்தும் இந்த மேஜையின் மீ உனக்கு ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன ? உன்னால் சொல்ல முடியுமா ?” என்று கேட்டாள்
“இதை என் அம்மா எனக்குக் கொடுத்தாள். இது எனக் அவளுடைய ஞாபகார்த்தமாக இருக்கிறது. இது அவள் என்னிடம் காட்டி வந்த அன்புக்கும் ஓர் அடையாளம் ஆகும் அல்லவா?” என்றாள் வனஜா.
“இந்த மேஜையின் மூலம் உனக்கு எப்படிப் பழைய நினை களும் அன்பின் அநுபவமும் ஏற்படுகின்றனவோ, அதேபோல கோவில்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பரப் பிரும்ம தின் நினைவும் அநுபவமும் உணர்ச்சி பெற்றெழுந்து நம் கண் ளுக்கெதிரே நிற்கின்றன. வாழ்க்கையில் மற்றச் சமயங்களி அவை நம் மனத்துக்குள் மறைந்து நிற்கின்றன.”
“அதுசரி, அதற்கு வீடு போதுமே! ஞாபகம் உண்டாவதற்கு ஒரு இடம் தானே முக்கியம்? அதற்கு எந்த இடமாயிருந்தால் என்ன?”
“நீ சொல்லுவது நியாயமான வார்த்தை தான். ஆனால் மனத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதற்கு அமைதியான ஒரு இடம் தேவை. கோலாகலம் நிறைந்த உலகத்தில் மனித னின் மனம் ஒருமைப்பட முடியாது. ஒருமைப் பட்ட மனம் ஏற்படாமல் சாத்துவீக பாவனைகள் எழுவது சிரமம். மனம் ஒருமைப்படாமல் அடிக்கடி சிதறித்திரிய ஆரம்பித்து விடும்.
“ஆமாம், அதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். முகம்மதி பர்களும் கிறிஸ்தவர்களும் மூர்த்தி பூஜை செய்வதில்லையே ! அப்படியானால் அவர்களுடைய உபாசனை அரை குறையானது தானா?”
“ஆனால் அவர்களுக்கும் ஒரு ஆதாரம் இருக்கிறது. கிறிஸ்து பர்கள் ஏசுநாதரின் சிலுவையையும் பைபிளையும் ஆதாரமாகக் 5ருதுகிறார்கள். முகம்மதியர்களோ ?- அவர்களுக்குக் கண்ணில் படும்படியான ஒரு ஆதாரமும் இல்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்கள் காதுகளைக் கைவிரல்களால் அடைத்துக் கொண்டு, ‘அல்லாஹோ அக்பர்’ என்ற த்வனியினால் ங்கள் மனத்தை ஒருமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் ம் ஹிந்து கலாசாரம் மிகவும் பழமையானதால்-விஸ்தாரமான நால் தன் ஆராதனைக்கு ஒரு உருவம் கொடுத்துச் சாந்தியுற்ற னத்துடன் ஆராதனையில் ஈடுபடுகிறது.”
“என்னதான் சொன்னாலும் மூர்த்தி பூஜையின் விஷயம் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. ”
“காந்திஜீயை எடுத்துக் கொள்ளேன். அவர் மகா புருஷர். மாந்தருக்குள் ஒரு தெய்வம். தம் காலத்தில் ஒரு யுகத்தையே நிர்மாணித்தவர். சத்தியமும் அஹிம்சையுமே உருவானவர். இந்த எண்ணம் மட்டுமே அவரை நினைவில் இருத்திக் கொள்ளப் போதுமானதல்லவா? ஆனால் நாம் அவருடைய படத்துக்கு மாலை சூட்டுகிறோம். அவருடைய சமாதிக்குப் புஷ்பம் போடுகி றாம். அவருக்கு ஞாபகச் சின்னம் எழுப்புகிறோம். ஆகவே, மக்குத் தெரிவது என்ன ? மூர்த்தி பூஜைதான் அவரிடமுள்ள பக்தியையும் சிரத்தையையும் நாம் காட்டுவதற்குச் சிறந்த சாத னம் என்று ஆகிறது,” என்றாள் கிரிஜா.
“உண்மைதான், மன்னி. இன்று தான் நான் முதல் தடவை பாக உன்னுடன் கோவிலுக்கு வந்தேன். இவ்வளவு நாட்களும் நான் கோயிலுக்குப் போய்ப் பொழுதை வீணாக்குவது தான் மிச்சம் என்று கூட எண்ணியதுண்டு. அதைவிடச் சினிமாவுக்குப் போவது எவ்வளவோ மேலானது. கல்வியறிவு வளரும் என்று கூட நினைத்தது உண்டு. ஆனால் மன்னி, உண்மையைக் கேட்டால் இன்று கோவிலில் கிடைத்த சாந்தியும் சுகமும் இன்பமும் ஆனந்த மும் இன்றுவரை எனக்கு எந்தக் கேளிக்கையிலும் கிடைத்த தில்லை. இப்படிப் பட்ட சுகம் இருக்கிறது என்று கூட நான் கனவு கண்டதில்லை. மன்னி, நீதான் எனக்குத் தர்மகுரு. உன் தர்ம காரியங்களில் என்னையும் பங்கு எடுத்துக் கொள்ள அனு மதிப்பாயா?” என்று கேட்டவாறே வனஜா மன்னியின் மடியில் தலையைச் சாய்த்தாள்.
வனஜாவின் வாழ்க்கையில் வியப்பை அளிக்கும் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. அவள் வாழ்க்கையில் எளிமையும் சாத்வீக பாவமும் தாண்டவமாடின. முகத்தில் ஒரு இணையற்ற ஒளி வீசி யது. காலையும் மாலையும் அவள் தன்னை மறந்து பாடுவாள்:
ரகுபதி ராகவ ராஜாராம்
பதித பாவன சீதாராம்
ஈச்வர், அல்லா தேரே நாம்,
சப்கோ சன்மதி தே பகவான் (ரகுபதி)
இந்தப் பாட்டைக் கேட்போர்கள் அப்படியே அசைவற்று நின்று விடுகிறார்கள்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.