கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 5,623 
 
 

ராஜேஷ் தன் மஞ்சள் நிற CSK ஜெர்சியை சரி செய்து கொண்டே, மற்றொரு கிங்ஃபிஷர் பாட்டிலைத் திறந்தான்.

“ஃபிரண்ட்ஸ், அடுத்த வாரம் இதே நேரம், IPL பைனல். ஜியோ ஹாட்ஸ்டாரில். டிஸ்னிக்கு மட்டுமே ஸ்ட்ரீமிங் உரிமை இருக்கு.”

“என்னாலே இன்னும் நம்ப முடியல… எப்படித் தான் நாம பைனலுக்கு வந்தோம்னு,” விக்ரம் பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்து கொண்டே முணுமுணுத்தான்.

“எதுவா இருந்தாலும், அடுத்த வார பைனல்ல மும்பை இந்தியன்ஸ் நம்மளை வம்சம் பண்ணிடப் போறானுங்க. அவங்க பிளேஆஃப் ஓட்டம் பார்த்தியா?”

பிரவீண் தலையசைத்தான். “ஒரு மேட்சுக்கு சராசரி இருநூறு ரன்ஸ். நம்ம பௌலிங்கை கிழிச்சிடுவாங்க.”

“பதினஞ்சு வருஷமா இந்த CSK அணி என் நம்பிக்கைகளை உடைச்சுக்கிட்டே இருக்கு,” என்றான் ராஜேஷ் சோகமாக.

“2019 பைனல் ஞாபகம் இருக்கா?” என்றான் விக்ரம் சலிப்புடன். “கண்டிப்பா நாம ஜெயிச்சிருக்கணும். ஆனா கடைசில…”

“வேண்டாம்,” என்றான் பிரவீண் கடுப்புடன். “அந்த பைனலை பத்தி ஞாபகப்படுத்தாதே.”

ராஜேஷ் தன் ஐபோனிலிருந்து கண்களை எடுக்காமல் “எல்லா எக்ஸ்பர்ட்டுமே மும்பை குறைந்தது 50 ரன்கள்ள ஜெயிக்கும்னு சொல்றாங்க. வெட்கக்கேடு!” என்று அலுத்துக் கொண்டான்.

“அசிங்கமா இருக்கப் போகுது,” என்றான் விக்ரம். “பேசாம பைனலை பார்க்காமலே இருக்கலாம்.”

ராஜேஷ் பெருமூச்சுவிட்டான். “ஆமாம். CSK அடி வாங்கப் போகிற மேட்சைப் பார்க்கிறதுக்குப் பதிலாக AI உருவாக்கின மேட்சையேப் பார்க்கலாம்.”

“என்னடா சொல்றே?”

“நான் இப்போ புதுசா வந்த AI வீடியோ ஜெனரேட்டர்ல விளையாடிக்கிட்டு இருக்கேன்டா. சூப்பரா இருக்கு. போன வாரம் ஒரு முழு CSK-RCB மேட்சை கம்ப்யூட்டரில் உருவாக்கினேன்… அது பிரமாதமாக வந்தது.”

விக்ரம் புருவத்தை உயர்த்தினான். “போலி மேட்சா?”

“ஆமாம். AIயால ஒரு முழு மேட்சையுமே கம்ப்யூட்டரில் உருவாக்கி விட முடியும். விளையாட்டு வீரர்கள், அம்பையர்கள், கமெண்டரி, கூட்டத்தோட ரியாக்க்ஷன் எல்லாத்தையும் நிஜ மேட்ச்சில் இருப்பது போலவே கொண்டு வர முடியும். இதுல ஒரு முக்கியமான விஷயம்…” என்று நிறுத்திய ராஜேஷ் மெதுவாக விசில் அடித்தான். “மேட்ச்சின் முடிவை நம்மால் தீர்மானிக்க முடியும்!”

“இண்ட்ரஸ்டிங். அப்படி ஒரு போலி மேட்சைப் பார்க்க நான் ரெடி.” என்றான் விக்ரம்.

பிரவீண் சிரித்தான். “ஏன் நீங்க ரெண்டு பேரு மட்டும்? இந்த நாட்டையே ஒரு போலி மேட்ச்சைப் பார்க்க வைக்கலாமே!”

“என்னடா சொல்ற?”

“நான் சைபர் செக்யூரிட்டியில வேலை பார்க்கறேன்கிறது ஞாபகம் இருக்கில்லே… ஜியோ ஹாட்ஸ்டார் நெட்ஒர்க் ஒன்றும் அவ்வளவு செக்யூர் இல்லை, தெரியுமா?”

“அப்படீன்னா…”

“ஆமாம்டா. ஹாட்ஸ்டார் நெட்ஒர்க்கிலிருந்து வரும் மேட்ச்சின் லைவ் ஒளிபரப்பை வழி மறித்து, நம்முடைய போலி மேட்ச்சை ஒளிபரப்புவது ஒன்றும் பெரிய காரியமில்லை.”

அவர்கள் ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டனர். பிறகு ராஜேஷ், “டிஸ்னிக்கு இந்த வருஷம் பிரத்தியேகமான ஸ்ட்ரீமிங் உரிமை இருக்கு. அப்படின்னா அடுத்த வார பைனல் ஒளிபரப்பின் கன்ட்ரோல் முழுவதும் நம் கையில்.” என்று சிரித்தான்.

பிரவீண் தலையசைத்தான். “கடந்த வருஷம் நடந்த போன் வெடிகுண்டு விபத்து ஞாபகம் இருக்கிறதல்லவா? அதனால் இந்த வருஷம் விளையாட்டு அரங்கில் மொபைல் போன் தடை…”

“ஆமாம்,” விக்ரம் தொடர்ந்தான். “அரங்கிற்குள் போன் அனுமதி இல்லை. அதனால் ஸோஷியல் மீடியா அப்டேட்ஸ் எதுவும் அரங்கிலிருந்து வரப் போவதில்லை.”

அந்த ஐடியாவின் முக்கியத்துவமும் தீவிரமும் மெதுவாக அவர்கள் மனதில் பதிய, அறை சற்றே அமைதியானது. முதலில் சுதாரித்துக் கொண்டது ராஜேஷ் தான்.

“ஃபிரண்ட்ஸ், கமான். வேலையை ஆரம்பிப்போம்!”

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *