அமைச்சு
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,948
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அங்கவியல்
அமைச்சு
மந்திரியின் குணம் செயல்கள்
பசுவின் கன்றைத் தேர்ச்சக்கரத்தில் இட்டுக் – கொன்ற குற்றத்திற்காகத் தன் மகன் வீதிவிடங் கனை மனுவேந்தன் தேர்ச்சக்கரத்தில் இட்டு அவ் விதமே கொல்லும் படியாக அமைச்சனுக்குக் கட் டளையிட்டான். அரசன், நீதி நூல் வழியின் படி சொல்கிறான் ; உலகத்து இயற்கையை அறியாமல் நமக்குக் கொடுத்த உத்தரவை நாம் நிறைவேற்றி னால் நம்மை உலகம் பழிக்கும்; அவ்விகம் பழிப்பை அடைவதைவிட . நாமே இறந்து விடுதல் நல்லது” என்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டான். பின் அரசன் அவ்விதமே செய்ய நீதிக்கடவுள், மகன் கன்று இவர்களைப் பிழைப்பித்து, உலக முறை மாறிச்செய்ய மனம் இல்லாது, இறந்த மந்திரியையும் எழுப்பினார். வள்ளுவரும் நீதி நூலை அறிந்தாலும், “உலகத்தில் அப்பொழுது நடக்கும் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்த மந்திரிகள் நடத்தல் வேண்டும் என்று” கூறியுள்ளார்.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (47)
செயற்கை = (நீதி நூல்களில் சொன்ன வழியால்) தொழில் செய்யும் திறங்களை
அறிந்தக் கடைத்தும் = அறிந்த விடத்தும்
உலகத்து = உலகத்தில்
இயற்கை = (அப்பொழுது நடக்கின்ற) இயற்கை
அறிந்து = தெரிந்து
செயல் = (அதனோடு பொருந்தச்) செய்க
கருத்து: நீதி நூலுக்கும், உலக இயற்கைக்கும் தக்க வாறு செயல் புரிதல் வேண்டும்.
கேள்வி: அமைச்சர் எவைகளை ஆராய்ந்து செயல் புரிதல் வேண்டும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே….
கே.என்.சுவாமிநாதன்
September 3, 2026
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026