விதவிதமாக – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,374
வஸந்த் தன் மனைவி ப்யூலா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. வஸந்த் ஒரு பெரிய விஞ்ஞானி.
நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு மந்திரக் கலவையை கண்டு பிடித்திருந்தான். அதை குடித்து விட்டு எதிரில் உள்ளவர்கள் யார் மாதிரி ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்கள் சில மணி நேரத்திற்கு அப்படியே ஆகி விடுவார்கள்.
வஸந்த் ப்யூலாவிடம் ஒவ்வொரு ராத்திரியும் நீ விதவிதமான உலக அழகியாக மாறினால் என்னுடைய எல்லா ஆசையும் நிறைவேறும் என்று சொன்னான்.
ப்யூலாவும் தன் கணவன் வெறெங்கும் போகாமல் தன்னிடம் தானே கேட்கிறான் என்று ஒத்துக்கொண்டாள்.
வஸந்த்க்கு ஒரே மகிழ்ச்சி. தினமும் ஒரு உலக அழகி கூட உல்லாசமாக இருந்தான். ஆனால் ஒரு மாதத்தில் அந்த மந்திர கலவையை தூர எறிந்த விட்டான்.
ஏன்? வஸந்த் தற்செயலாக கண்ணாடியில் தன்னை பார்த்த போது சல்மான்கான் ஆகியிருந்தான்.
– என்.சோமசுந்தரம் (மார்ச் 2013)
தொடர்புள்ள சிறுகதைகள்
டயட் டயட் டயட்
மனோகர் மைசூரு
April 18, 2026
கைக்கடிகாரம்
கோசின்ரா
April 18, 2026
கடவுள் ஒரு பாவி
எஸ்.ராமமூர்த்தி
April 18, 2026