ஸதாநந்த போதக சாமியார்
கதையாசிரியர்: வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 36
(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-6.2 | அத்தியாயம்-6.3 | அத்தியாயம்-7

ஆனால் அந்தக் கடிதம் அவருடைய பகைவரிடத்தி லிருந்து வந்ததல்ல. அது கிருஷ்ணமூர்த்தி ஐயரால் எழுதப் பட்டதென்பது மேல்விலாசத்தின் எழுத்தினாலேயே உடனே தெரிந்துபோயிற்று. எஸ். ஆர். ஐயர் அந்தக் கடிதத்தின் உறையைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்துப் படிக்க, அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:
மகா-ள-ஈ-ஸ்ரீ தீர்த்த ரூபியான ஸ்ரீமான் மாமா அவர் கள் சமுகத்திற்கு பாலன் கிருஷ்ணமூர்த்தி அநேக சாஷ் டாங்க நமஸ்காரம் செய்து எழுதுவது. உபயகுசலோபரி.
மாமி இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு நான்கு தினங்க ளாகின்றன. அவள் க்ஷேமமாய் உங்களிடம் வந்து சேர்ந்ததற்கு இதுவரையில் அங்கிருந்து தகவல் வரவில்லை.
இப்போது அவ்விடத்து நிலைமை முற்றிலும் அநு கூலப்பட்டிருக்குமென்று நினைக்கிறேன். நம்முடைய எதிரி அடங்கிப்போய்விட்டானென்று நீங்கள் சுமார் ஒருவார காலத்திற்கு முன் எழுதிய உங்கள் கடைசிக் கடிதம் வந்த பிறகுதான் எங்கள் எல்லோருடைய மனவேதனையும் அடங் கியது. மாமி சௌக்கியமாக அங்கே வந்து சேர்ந்திருப்பா ளென்று நம்புகிறோம்.
உங்கள் இருவரையும் விட்டுப் பிரிந்து தனியாயிருப் பது சௌ. ஸ்வர்ணாவுக்கு கொஞ்சமும் சகிக்கவில்லை. எனக்கும் அப்படியே. குழந்தை சுந்தரி, “தாத்தா எங்கே?”, “பாட்டி எங்கே?” என்று அடிக்கடி கேட்டு நச்சுப் படுத்துகிறாள்.
ஆகையால் கூடிய சீக்கிரம் நாங்களும் அங்கேயே வந்து விடுவது உசிதமாயிருக்குமென்று நினைக்கிறேன். இது விஷயத்திலும் உங்கள் அநுமதியை எதிர்பார்க்கிறோம்.
மாமி சௌகரியமாய் அங்கே வந்து சேர்ந்ததைப் பற்றி மறுதபாலிலேயே ஒரு வரி எழுதி யனுப்பவும்.
இப்படிக்கு உங்கள் விதேயன்,
கிருஷ்ணமூர்த்தி.
என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை எஸ். ஆர். ஐயர் படிக்கவே, அவர் திடுக்கிட்டு, பெருத்த திகிலும், வியப்பும் கொண்டவராய் முற்றிலும் கலங்கி வேதனைப்படலானார்.
தம்முடைய மனையாள் நான்கு தினங்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி ஐயர் முதலியோரை விட்டு வந்து விட்டா ளென்ற செய்தி அவர் சிறிதும் எதிர்பாராத பேராச்சரியமா யிருந்தது. தமது உத்தரவின்றி அவள் ஏன் புறப்பட்டு வந்தாள், யாரோடுகூட வந்தாள், கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவளை ஏன் தனிமையில் அனுப்பினார், நான்கு நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து வந்தவள் தம்மிடம் வராமல் எங்கு போயிருப்பாள் என்பன போன்ற நினைவுகளும், கவலை களும் எழுந்து அவரது மனத்தை உலப்பத் தொடங்கின. சில தினங்களுக்கு முன்னர் தம் பகைவன் தம்மை பயமுறுத் திக் கடிதம் எழுதியதற் கிணங்க, ஏதேனும் தந்திரம் புரிந்து தம் மனையாளை அபகரித்துக்கொண்டு வந்திருப்பானோ வென்றும், அப்படியானால், அவன் அவளை எவ்விதமான கொடுமைகளுக்கு உட்படுத்தி இருப்பானோ என்றும் நினைக்க நினைக்க, அவருடைய மனக் கலவரமும், சங்கடமும் சகிக்க இயலாதபடி பெருகி உச்ச நிலையை யடைந்து விட்டனவாத லால், தாம் அந்த விபரீத சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்பதை நிச்சயிக்க மாட்டாதவராய்ப் பைத்தியங் கொண்ட வர்போல விழித்து, தம் அறைக்குள் அங்குமிங்கும் உலாவத் தொடங்கினார். அவருடைய தேகம். கட்டிலடங்காமல் பதறிப் பறக்கிறது. கை கால்கள் யாவும் படபடத்துத் தள்ளாடுகின்றன.
அவ்விதம் எஸ்.ஆர். ஐயர் பரம சங்கடமான நிலைமை யில் கிடந்து சுமார் அரை நாழி கை காலம் தவித்த பின்னர் ஒரு விதமான தீர்மானத்திற்கு வந்து, தந்திக் காகித மொன்றை எடுத்து கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு அடியில் வருமாறு தந்திச் செய்தி எழுதலானார்:-
உம்முடைய கடிதம் வந்தது; பார்த்து திடுக்கிட்டுப் போனேன். மாமி இன்னமும் இங்கே வரவில்லை. அவள் என்னுடைய தகவல் இல்லாமல் அங்கிருந்து ஏன் புறப்பட் டாள், அவளை அங்கிருந்து யார் அழைத்து வந்தார்கள் என்பன போன்ற விவரங்களைத் தெளிவாக மறு தந்தியில் உடனே தெரிவிக்க வேண்டும்.– என்று எழுதப்பட்ட தந்திக் காகிதத்தையும், அதற்குத் தேவையான பணத்தை யும் ஓராளிடம் கொடுத்து உடனே தந்தியாபீசுக்கு அனுப்பி வைத்தார். அவன் அங்கு சென்று தந்தியை அனுப்பி விட்டு சுமார் கால் நாழிகைக் கெல்லாம் வந்து சேர்ந்தான்.
அதன் பிறகு மறுமொழித் தந்தி கிடைப்பதற்கு அவர் சுமார் நான்கு மணி காலத்திற்குமேல் காத்திருக்க வேண்டியதாயிற்றாதலால், அதுவரையில் அவர் சிறிதும் மன அமைதியின்றி சகிக்கவொண்ணாத வேதனைக் கடலில் கிடந்து அன்னம், தண்ணீர் முதலிய தேகபோஷணையில் கூட நாட்டங் கொள்ளாமல் தவித்தபடியே பொழுதைப் போக்கினார்.
அவர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் முதலியோரை அனுப் பிய தினம் மாலையில் எவ்வித மன நிலைமையை அடைந்திருந்தாரோ அந்த நிலைமை மறுபடி திரும்பி விட் டது. தாம் திரும்பவும் தமது பாங்கி வியவகாரங்களை நடத்த வேண்டுமென்றும், தம் மனைவி முதலியோரை வர வழைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அதற்கு முன் செய்துகொண்டிருந்த தீர்மானம் ஒரே நொடியில் பறந்துபோய் விட்டது. தமது சொத்துக்களில் பெரும் பாகமும் இம்பீரியல் பாங்கியில் இருந்ததுபற்றி, தம் எதிரி அவைகளை அபகரிக்க இயலாதென்ற உறுதி அவருடைய மனதில் ஏற்பட்டதானாலும், அவன் எந்த சமயத்தில் எவ் வித தந்திரம் செய்து தமக்கும், தம் மனிதர்களுக்கும் என்ன விதமான அபாயம் விளைவிப்பானோ என்ற பீதி யொன்றே அவரை ஓயாமல் கலக்கியபடி இருந்தது.அவர் அன்றைய தினம் எங்கும் வெளியில் போகாமல் தமது பங்களாவிலேயே இருந்து மறுமொழித் தந்தியின் வருகையை எதிர்பார்த்துப் பார்த்து ஆவலே வடிவாக மாறிப்போயிருக்க, அவர் எ திர் பார்த்த தந்தி வந்து சேர்ந்தது.
எஸ். ஆர். ஐயர் அதை வாங்கிப் பிரித்துப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
உங்கள் தந்தி வந்தது. பார்த்து பெருத்த திகில் கொண்டோம். நம்முடைய பாங்கியில் பெருக்கும் மினியம் மாள் ஒரு மோட்டார் வண்டியில் நான்கு நாட்களுக்கு முன் இங்கே வந்து சேர்ந்தாள். நம்முடைய பாங்கி டலாயத் அப்பாத்துரை அந்த மோட்டார் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த வண்டி மூடு பெட்டியோடு கூடிய புதிய வண்டி; சுமார் பதினாயிரம் ரூபாய் பெறக்கூடியது. அது உங்களுடைய சொந்த மோட்டார் வண்டி போலவே இருந் தது. உங்கள் சொந்த மோட்டார் வண்டியின் நெம்பர் தகடு அதில் காணப்பட்டது. திடீரென்று வந்த அந்த வண்டியைப் பார்த்தவுடன், காவல்காரர்கள் சந்தேகங் கொண்டு, அதை வளைத்துக் கொண்டனர். மினியம்மாள் அவர்களிடம் மிக நயமாகப் பேசி, நீங்கள் ரகஸ்யமாய் உங் கள் வண்டியில் அவர்களை அனுப்பியதாகவும், மாமிக்கு நீங் கள் சில சங்கதிகள் சொல்லியனுப்பி இருப்பதாகவும், தானும், மோட்டார் ஒட்டியும் பாங்கியில் வேலை செய்கிறவர் கள் என்றும் சொல்ல, காவல்காரர்கள் வந்து மேற்படி விவரங்களை எங்களிடம் தெரிவித்தார்கள். மாமி உடனே மினியம்மாளை அழைத்துவரச் செய்து உண்மையை விசா ரிக்க, மினியம்மாள் நம்மிடம் அந்தரங்கமாக நடந்து கொள் பவள் போல நடித்து, நீங்கள் அவர்களை உங்களுடைய மோட்டாரில் வைத்து ரகஸியமாய் இங்கே அனுப்பியதாக வும் எதிரி ஒடுங்கி ஓய்ந்து போய் விட்டதாகவும், இனி அவ னால் நமக்கு எவ்வித அபாயமும் உண்டாகாதென்றும், ஆனா லும், நாங்கள் எல்லோரும் ஒருமிக்க ரயில் வழியாகப் பிரயா ணம் செய்து பட்டணம் வருவது உசிதமான காரியமல்ல வென்றும், ஆகவே, ஒருவர் ஒருவராய் மோட்டார் வண்டியில் வந்துவிடவேண்டு மென்றும் முதலில் மாமியை அழைத்து வரச் சொன்னதாகவும், இப்படியெல்லாம் எங்களிடம் சொல்லி மாமியை ரகஸியமாய் வண்டிக்குள் வைத்து அழை த்து வரும்படி நீங்கள் அவர்களிடம் சொல்லி அவர்களை உங்களுடைய மோட்டார் வண்டியில் அனுப்பியதாகவும் தெரிவித்தாள். மோட்டார் வண்டி உங்களுடைய வண்டி திரியே இருந்ததன்றி, உங்கள் வண்டியின் நம்பர் தகடும் அதில் இருந்தது. வந்தவர்களும் நம் பாங்கியில் வேலை செய்பவர்கள். ஆகையால் நாங்கள் மினியம்மாள் சொன் னதை யெல்லாம் நிஜமென்று நம்பி விட்டோம்; உடனே அவர்கள் இருவருக்கும் சாப்பாடு போட்டோம். மாமியும் அதற்குள் தன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஆயத்த மானாள். உடனே மினியம்மாளும், மாமியும் மோட்டார் வண்டிக்குள் உட்கார்ந்து கதவுகளை மூடிக்கொள்ள, அப் பாத்துரை பட்டணம் ரஸ்தா வழியாக வண்டியை விட்டுக் கொண்டு வந்துவிட்டான். மாமி க்ஷேமமாய் உங்களிடம் வந்திருப்பாளென்று நாங்கள் இதுவரையில் நினைத்திருந் தோம். உங்கள் தந்தியைப் பார்க்க, எங்களுக்குக் குலை நடுக்கம் உண்டாகி விட்டது. நாங்கள் முன்னிலும் அதிக ஜாக் கிரதையாக இருக்கிறோம். நீங்களும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு, மாமி இருக்கு மிடத்தை உடனே கண்டு பிடித்து அவளை மீட்டு அழைத்துக்கொண்டு வருவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யவும். மாமி உங்களிடம் வந்து விட்டாளென்ற சந்தோஷச் செய்தி வந்தால் தான் எங்களுக்கு உயிர் திரும்பும். உங்களிடமிருந்து நல்ல செய்தி வருகிற வரையில் நாங்கள் தூங்கவும் மாட்டோம், சாப்பிட வும் மாட்டோம். மாமி விஷயத்தில் உடனே தக்க நட வடிக்கை எடுத்துக்கொள்ளவும். – கிருஷ்ணமூர்த்தி
-என்று எழுதப்பட்டிருந்த தந்திச்செய்தியைப் படித்த எஸ். ஆர். ஐயர் பெரிதும் திக்பிரமை கொண்டு, இரண்டொரு நிமிஷகாலம் மெய்ம்மறந்து மயக்கத்தில் ஆழ்ந்துபோ யிருந்தபின் தெளிவடைந்து, தாம் என்ன செய்வதென்பதைப்பற்றி எண்ண மிடலானார். தாம் தமது எதிரியின் துஷ்ட நினைவுகள் பலியாமல் மிக சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்துவிட்டோமென்று அவர் நினைத்து பெரிதும் தைரியமாயும் அசட்டையாயு மிருக்க, அவன் தம்மைக் காட்டிலும் பன்மடங்கு அதி கத் திறமையாகக் காரியங்களை நடத்தி, தம் உயிருக்குயி ரான மனையாளையே மிக சுலபத்தில் அபகரித்துக் கொண்டு போனது பெருத்த திகிலையும், மலைப்பையும், சகிக்க வொண்ணாத விசனத்தையும் உண்டாக்கி விட்டது. தாம் தமது புத்திசாலித்தனம் முழுதையும் உபயோகப்படுத்தி எவ்வளவு அதிக சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், எதிரி எப்படியும் தம்மை அழித்துவிடுவான் என்ற அச்ச மும் கலக்கமும் எழுந்து நிமிஷத்திற்கு நிமிஷம் பெருகி வதைக்கலாயின.
தாம் தமது மனையாளைத் தேடி மீட்க முயற்சி செய்வ தும் அத்யாவசியமானதாகத் தோன்றியது. ஆனால் அவ ளைத் தாம் எங்கே போய்த் தேடுவதென்பதும் அவருக்கு விளங்கவில்லை. அவ்வளவு ஆழ்ந்த யோசனையோடு வேலை செய்து தம் மனையாளை அபகரித்து வந்திருப்பவன் அவளைக் கொணர்ந்து தன் வீட்டில் வைத்திருக்கமாட்டா னென்பது எளிதில் தெரிந்தது.சுமார் முப்பது மயில் பரவியுள்ளதும்,பல லக்ஷக்கணக்கான வீடுகளையுடையதுமான சென்னைப் பட்ட ணத்தில் எந்த இடத்தில் தம் மனையாள் மறைக்கப்பட்டிருக் கிறாள் என்பதைத் தாம் கண்டு பிடிப்பது முற்றிலும் சாத் தியமற்ற காரியம் என்ற நினைவு அவருக்கு உடனே உண் டாகி விட்டதாகையால், தாம் தம் மனைவியை விடுவிக்கா மலிருந்தால், தம் எதிரி அவளைக் கொன்று விடுவானோ, அல்லது, அவளை வேறு எவ்விதமேனும் மானபங்கப்படுத்து வானா என்று அவர் பலவாறு எண்ணமிட்டு, எவ்விதமான பரிகாரத்தையும் காணாமல் சோர்ந்து தளர்ந்து சுமார் பதி னைந்து நிமிஷகாலம் சாய்மான நாற்காலியில் வீழ்ந்து ஓய் ந்து கிடந்தபின் ஒரு விதமான தீர்மானத்தோடு எழுந்து டெலிபோனண்டை போய், அங்கிருந்த குமாஸ்தாவை தூர அனுப்பிவிட்டு டெலிபோன் மூலம் போலீஸ் கமிஷனரை அழைத்து, நிகழ்ந்த விஷயங்களை அவரிடம் விரிவாகத் தெரிவித்தார்.
அதைக் கேட்ட போலீஸ் கமிஷனர் பெரிதும் வியப்பும் திகைப்பும் அடைந்தவராய், “ஆ, அப்படியா! காரி யம் அவ்வளவு தூரம் நடந்துபோ யிருக்கிறதா! ஆசாமி மிக சாமர்த்தியமாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறானே! எங் ளுடைய சேவகர்களும், சப்-இன்ஸ்பெக்டர்களும் இந்த விஷ யத்தில் எத்தனையோ முயற்சிகள் செய்து பார்க்கிறார்கள். இதுவரையில் எவ்விதமான பலனும் உண்டாகவில்லை. அன் றையதினம் மாலையில் கடற்கரையில் உம்மைக் கத்தியால் குத்த எத்தனித்த உம்முடைய எதிரி எங்கே இருக்கிறா னென்று கண்டு பிடிக்க, அவர்களால் ஆன பிரயத்தனங் களை யெல்லாம் செய்துபார்க்கிறார்கள். இதுவரையில் அவ னைக் கண்டுபிடிக்க முடியவில்லை ; அவனுடைய வீட்டிற்குள் போய்க்கூடப் பலதடவைகளில் சோதனை போட்டுப் பார்த்து விட்டார்கள். ஆள் வீட்டிலும் இல்லை. எப்போதாவது அவனோ, அவனுடைய நண்பர்களோ எவரேனும் அவனு டைய வீட்டிற்கு வந்து போகிறார்களாவென்று கவனித்துக் கொண்டிருக்கும்படி, சில ஜெவான்களை உத்தியோக உடுப்பில் லாமல் அவனுடைய வீட்டிற்கு அண்டையில் எவரும் சம் சயிக்காதபடி நிறுத்தி வைத்திருக்கிறோம். இதுவரையில் எவ்விதமான புலமும் அகப்படவில்லை. இப்போது நீங்கள் சொன்னதிலிருந்து, உங்கள் பாங்கிச் சிப்பந்திகளும் அவ னுக்கு அநுசரணையாயிருக்கிறார்கள் என்பது நிச்சயமாகிறது. இந்த மினியம்மாளும், அப்பாத்துரையும் இப்போதும் உம் மிடம் வேலையில் அமர்ந்திருக்கிறார்களா?” என்றார்.
எஸ். ஆர். ஐயர் :-அவர்கள் இருவரும் இப்போ என்னிடம் வேலை செய்யவில்லை. நான் என் பாங்கியை மூடிய காலத்தில் இரண்டொருவரை மாத்திரம் வைத்துக் கொண்டு, மற்றவரை அவரவர்களுக்குச் சேர வேண்டிய சம் பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டேன். அப்படி அனுப்பப்பட்டவர்களில் மினியம்மாளும் அப்பாத்துரையும் சேர்ந்தவர்கள்.
கமிஷனர்:- இவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? வீட்டு விலாசங்களைச் சொல்லுங்கள். ஆள்களை அனுப்பி தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறேன்.
எஸ். ஆர். ஐயர்:-ஆம். அப்படிச் செய்தால்தான் நமக்கு ஏதாவது புலம் கிடைக்குமென்று நினைக்கிறேன்; மினியம்மாள் என்பவள் அப்பாத்துரையின் வைப்பாட்டி. இருவரும் ஒரே இடத்தில்தான் இருந்தார்கள். திருவல் லிக்கேணி வெங்கட்டரங்கம் பிள்ளை தெருவில் கட்டைத் தொட்டிச் சந்தில் பல குடிசைகள் இருக்கின்றன. அங்கே ஒரு குடிசையில் இவர்கள் இருவரும் இருந்தார்கள். ஜெவான்கள் அங்கே போய் விசாரித்தால், இன்ன இடமென் பது உடனே தெரிந்துபோம். நீங்கள் எப்படியாவது முயற்சி செய்து என் மனைவியை மீட்டுக் கொடுத்தால், இந்த உபகா ரத்தை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். அவளை ஒரு வேளை எதிரி கொல்ல நினைத்தாலும் நினைக்கலாம். ஆகையால் நீங்கள் இந்த விஷயத்தில் சீக்கிரம் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.
கமிஷனர் :- அவர்கள் உம்முடைய மனைவியைக் கொல்ல நினைத்தால், சென்னைப்பட்டணத்திற்கே கொணர்ந் திருக்கமாட்டார்கள் ; வழியிலேயே கொன்று தூக்கி எங்கே யாவது காட்டில் எறிந்துவிட்டு வந்திருப்பார்கள். நாம் இந்த ஊரில் தேடுவது மாத்திரம் போதாது; நாமக்கல்லிலிருந்து இந்த ஊருக்கு வரும் ராஜபாட்டையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் இன்றையதினமே இதைப்பற்றிக் கடிதங்கள் அனுப்பினால், அவை நாளையதினம் எல்லா ஸ்டே ஷன்களுக்கும் போய்விடும். அங்கங்கு இருக்கும் போலீஸார் இதைப்பற்றி முயற்சி எடுத்துக்கொண்டு பார்த்தால், ஏதா வது புலம் கிடைக்கலாம்; இல்லாவிட்டாலும், இனிமேல் இது சம்பந்தமாக ஏதாவது சம்சயமான சம்பவம் நேரிட் டால், அவர்கள் உடனே ஆசாமிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு நமக்குத் தெரிவிப்பார்கள்.
எஸ். ஆர். ஐயர்:- ஆம், தாங்கள் சொல்வது சரியான யோசனை தான்; தயவு செய்து இன்றைய தினமே கடிதங்களை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்.
கமிஷனர்:-ஒ, அவசியம் செய்கிறேன். உம்மிடம் நான் இன்னொரு விஷயம் கேட்க விரும்புகிறேன். மினியம் மாளும் அப்பாத்துரையும் ஏறிக்கொண்டு போன மோட் டார் வண்டி உம்முடையதா அல்லவா?
எஸ். ஆர். ஐயர்:-என்னுடைய வண்டி விடப்பட்டிருக்கும் லாயம் என் அறைக்கெதிரிலேயே இருக்கிறது. என் வண்டி எப்போதும் லாயத்திலேயே இருக்கிறது. நான் ஒவ் வொரு நாளும் அந்த வண்டியில் ஏறிக்கொண்டு பாங்கி முதலிய இடங்களுக்குப் போய் வந்துகொண் டிருக்கிறேன். கமிஷனர்: உம்முடைய மோட்டார் வண்டியின் நம் பர் தகடு விலக்கப்படாமல் அப்படியே இருக்கிறதா?
எஸ். ஆர். ஐயர் :- ஆம், அப்படியே இருக்கிறது.
கமிஷனர்:-சரி; உம்முடைய எதிரி முன்யோசனை யோடு இந்த யுக்தியைச் செய்திருக்கிறான். உம்முடைய மோட்டார் வண்டியைப்போல் இருக்கும் வேறொரு வண் டியை சம்பாதித்து, அதிலிருந்த நம்பர் தகட்டை எடுத்து விட்டு, உம்முடைய வண்டியிலுள்ள நம்பர் தகட்டைப் போல் ஒரு புதிய தகட்டை உற்பத்திசெய்து, அதை வைத் துக்கொண்டு உம்முடைய மாப்பிள்ளை முதலியோரை ஏமாற்றச்செய்திருக்கிறான்.
எஸ். ஆர். ஐயர் :- அந்த வண்டி மறுபடி இந்த ஊருக்கு வந்தவுடன் பொய்த்தகட்டை எடுத்தெறிந்து விட்டு, அதன் சொந்தத் தகட்டை மாட்டியிருப்பார்கள்.
கமிஷனர் : ஆம். அதைப்பற்றி சந்தேகமென்ன. அவசியம் அப்படியேதான் காரியம் நடந்திருக்கும்.
எஸ். ஆர். ஐயர்:-என் வண்டியைப் போலவே இருக் கும் வண்டிகள் இந்த ஊரில் எத்தனையோ இருக்கின்றன. அவன் யாருடைய வண்டியை இரவல் வாங்கிக்கொண்டு போனானென்பதை நாம் கண்டு பிடிப்பது சாத்தியமில்லை போலிருக்கிறதே.
கமிஷனர்:- இருக்கட்டும்; எங்களால் ஆனவரையில் பிரயத்தனப்பட்டு அந்த விஷயத்தைப்பற்றியும் துப்பு விசா ரித்துப் பார்க்கிறோம். சரி; எனக்கு நேரமாகிறது. நான் இந்த விஷயத்தில் பலவிதமான முயற்சிகள் செய்யவேண் டும். இவ்வளவுதானே? நீங்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளவேண்டியது வேறெதுவுமில்லையே?
எஸ். ஆர். ஐயர் :- வேறொன்றுமில்லை. என் சம்சா ரம் தனிமையில் அந்த துஷ்டனிடம் அகப்பட்டுக்கொண் டிருக்கிறாள். அவளுக்கு எவ்வித உபத்திரவமுமில்லாமல் அவளைத் தப்பவைக்க, நீங்கள் உடனே தக்க நடவடிக்கை கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் நான் உங்களி டம் விக்ஞாபனம் செய்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்.
கமிஷனர்:- (சிரித்துக்கொண்டு) நாம் இவ்வளவு தூரம் பேசியது அதைப்பற்றித்தானே ; அதை நான் இதற் குள் மறந்து போய் விட்டேனென்று நினைக்கிறீரா? நீர் இந்தக் காரியத்தை மிக சுலபமாக நினைத்துப் பேசுகிறீர். உம்முடைய சம்சாரத்தை அவர்கள் வெளியூரிலேயே வைத் திருக்கிறார்களோ அல்லது இந்த ஊருக்குக் கொண்டு வங் திருக்கிறார்களோ என்பதையும், இந்த ஊரில் கொணர்ந்து த்திருந்தால், எந்த விடத்தில் ஒளியவைத்திருக்கிறார்கள். என்பதையும் நாம் தெரிந்து கொள்வது இலேசான காரி யமல்ல. அது தெரிந்து போனால், நாம் அந்த அம்மாளை உடனே மீட்டு விடலாம். நீர் ஒரு காரியம் செய்யும். அந்த அம்மாளுடைய போட்டோப்படம் சமீபத்தில் எடுத்தது உம் மிடம் இருந்தால், உடனெ ஒரு படத்தை யாரிடத்திலா வது கொடுத்து என்னிடம் அனுப்புங்கள். நான் அதற்குப் பல நகல்கள் தயாரித்து, வெளியூர் போலீஸ் ஸ்டேஷன்க ளுக்குப் போகும் கடிதத்தோடு ஒவ்வொரு பிரதி அனுப்புகி றேன். அதைப் பத்திரிகையிலும் பிரசுரித்து, இந்த விஷ யத்தை விளம்பரப்படுத்தி, இந்த அம்மாளைக் கண்டால், மீட்டுக்கொடுப்பவருக்கு, அல்லது, உடனே அதைப்பற்றி போலீஸாருக்குத் தகவல் கொடுப்பவருக்கு சன்மானம் தருவதாகத் தெரிவிப்போம். அந்த சன்மானத்தொகையை நீர்தான் கொடுக்கவேண்டும்; ; தொகையை எவ்வள வென்று குறிக்கலாம்?
எஸ். ஆர். ஐயர் :- ஆயிரம் ரூபாயென்று குறிப்பிடுங்கள். நான் இதோ ஒரு போட்டோப் படத்தை ஓர் ஆள் மூலம் அனுப்புகிறேன். அதையும் நீங்கள் சொன்னபடி உபயோகப்படுத்துங்கள் – என்றார்.
அவ்வளவோடு அவர்களுடைய டெலிபோன் சம்பாஷணை முடிவுற்றது.
எஸ். ஆர். ஐயர் இரண்டுமாத காலத்திற்கு முன்னர் பிடிக்கப்பட்ட தமது மனையாளின் படமொன்றை உடனே எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, தமது மோட்டார் ஒட்டியிடம் கொடுத்து, அவன் மோட்டார்வண்டி யிலேயே போய் சீக்கிரத்தில் அதைப் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துவிட்டு வரும்படி திட்டம் செய்து அவனை த் தமது மோட்டாரில் அனுப்பிவைத்தார்.
அவன் அவ்வாறே சென்று அதைக் கமிஷனரிடம் கொடுத்துவிட்டு கால் மணி காலத்திற்கெல்லாம் திரும்பி வந்து சேர்ந்தான். அந்த சந்தர்ப்பத்தில் எஸ். ஆர். ஐயரு டைய மோட்டார் வண்டி அங்கே போனபோது கமிஷனர் துரை அந்த வண்டியும், அதன் நம்பர் தகடும் பளிச்சென்று தெரியும்படி அவைகளுக்கும் ஒரு போட்டோப் படம் பிடித்துக்கொண்டு வண்டியை உடனே அனுப்பிவைத்தார்.
அதன் பிறகு போலீஸ் கமிஷனர் தமது கீழதிகாரி களை வரவழைத்து, அந்த விஷயத்தில் அவசரமும், அவசிய முமான நடவடிக்கைகளை உடனே நடத்தும்படி உத்தர விட, அவர்கள் அவ்வாறே முனைந்து வேலை செய்யத் தொடங்கினர்.
ஒரு சப்-இன்ஸ்பெக்டர்பலஜெவான்களோடு கட்டைத் தொட்டிச் சந்திற்குப் போய், அப்பாத்துரையும் மினியம்மா ளும் வசித்த குடிசையை வளைத்துக் கொண்டு, அதன் உள் பாகத்தை சோதித்துப் பார்த்தனர். அந்தக் குடிசையில் அப்போது பொன்னுசாமி நாயகர் என்பவர் தமது குடும் பத்தோடு குடியிருந்தார். அந்தக் குடிசை காலியாயிருப்ப தாய் ஒரு நண்பர் மூலம் கேள்வியுற்றுத் தாம் இரண்டு தினங்களுக்கு முன்னரே அங்கு குடி வந்ததாக அவர் கூ கூறிய தன்றி, அந்தக் குடிசையின் சொந்தக்காரர் இன்னார் என்ற தகவலையும் தெரிவித்தார்.
போலீசார் உடனே ஷை சொந்தக்காரரிடம் போய் விசாரித்து, மினியம்மாளும், அப்பாத்துரையும் ஆறு தினங் களுக்கு முன்னர், தமக்குச் சேரவேண்டிய வாடகை முழு தையும் கொடுத்துவிட்டு, தங்கள் சாமான்களை எடுத்துக் கொண்டு போய்விட்டதாகவும், அவர்கள் எங்கே போனார் கள் என்ற தகவல் ஷை சொந்தக்காரருக்குத் தெரியா தென்பதையும் தெரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு கமிஷனரிடம் போய்த் தங்கள் ஏமாற்றத்தை வெளியிட்டனர்.
உடனே போலீஸ் கமிஷனர் எஸ். ஆர். ஐயரோடு மறு படியும் டெலிபோன் வழியாகப் பேசி, மினியம்மாள், அப்பாத்துரை ஆகிய இருவருடைய வயது, உயரம், பரு மன், நிறம் முதலிய அங்க மச்ச அடையாளங்களை விவர மாகத் தெரிந்துகொண்டு, ஷ தகவல்களை சென்னையி லுள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவிக்கச் செய்து, ஒவ்வொரு போலீஸ் சிப்பந்தியும் அவைகளை கவ னத்தில் வைத்துக்கொண்டு தம்தம்மா லேன்ற வரையில் தேடிப்பார்த்து, ஷ நபர்கள் இருவர்களையும் பிடித்துக் கொடுக்க வேண்டுமென்றும், அப்படிச் செய்வோருக்கோ, அல்லது, ஷ நபர்கள் இருக்குமிடத்தைத் தெரிவிப்போருக் கோ நூறு ரூபாய் சன்மானம் அளிப்பதாகவும் அறிக்கை யொன்றை வெளியிட்டார்.
அதுவன்றி, எஸ். ஆர். ஐயருடைய மனையாளின் போட்டோப் படம், அவருடைய மோட்டார் வண்டியின் போட்டோப் படம் ஆகிய இரண்டிற்கும் ஏராளமான பிரதிகள் தயாரிக்கப்பட்டன. அந்த அம்மாளை நாமக்கல் லிற்கு அருகிலுள்ள ஜெமீன் கிராமத்திலிருந்து மினியம் மாள் முதலியோர் மோசடியாய் மோட்டார் வண்டியில் வைத் தழைத்துக் கொண்டு வந்த வரலாற்றையும், அந்த அம்மாள் இருக்குமிடத்தைத் தெரிவிப்போருக்கு, அல்லது, அந்த அம்மாளை மீட்டுக் கொடுப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன் மானம் கொடுக்கப்படு மென்பதையும் ஒரு விளம்பரமாகத் தயாரித்தனர். அதில் மினியம்மாள் அப்பாத்துரை ஆகி யோரின் அங்க அடையாளங்களும், அவர்களைப் பிடித்துக் கொடுப்போருக்குநூறு ரூபாய் சன்மானமளிக்கப்படுமென்ற தகவலும் சேர்க்கப்பட்டிருந்தன. ஷ விளம்பரமும் இரண்டு படங்களும் சகலமான பத்திரிகைகளிலும் வெளி யாக்கப்பட்டன. அதோடு நாமக்கல்லிலிருந்து சென்னைக்கு வரும் ராஜ பாட்டையிலுள்ள ள எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், சென்னையிலும் அதைச் சுற்றிலும் உள்ள எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அவற்றின் பிரதிகள் அனுப்பப்பட்டன. ஷ விளம்பரத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தில் காட்டப்பட்டிருந்த மோட்டார் வண்டியைப் போலவே இருக்கும் மோட்டார் வண்டிகள் சென்னையில் யார் யாரிடம் அல்லது எந்தக் கம்பெனியாரிடம் இருந்தன வோ, அவர்கள் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தன்று அத்தகைய தங்கள் வண்டியொன்று காணாமல் போனதுண்டா, அல்லது, தங்களால் எவருக்கேனும் வாட கைக்குக் கொடுக்கப்பட்டதா என்பதை தயவு செய்து கமி ஷனருக்குத் தெரிவிக்க வேண்டு மென்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இவ்விதம் கமிஷனர் துரிதமான பல நடவடிக்கைகளை நடத்தி, காணாமல் போன ஸ்திரீயையும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க எல்லோ ரையும் தூண்டவே, எங்கும் அதே பேச்சாக முழங்கியது. போலீஸார் ஒவ்வொருவரும், பொது ஜனங்களில் பலரும் பெருத்த சன்மானத் தொகையைப் பெற்றுவிடலாமென்ற ஆசையினால் உந்தப் பட்டு, நபர்களைப் பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யத் தலைப்பட்டனர். ஷ விவரங்கள் யாவும் அப்போதைக்கப்போது எஸ். ஆர். ஐயருக்கும் எட் டியபடி இருந்தனவாதலால், அவர் பெரிதும் நம்பிக்கையும் மனோதைரியமும் அடைந்து, போலீஸார் எப்பாடு பட்டாயினும் தமது மனையாளைக் கூடிய விரைவில் மீட்டுக் கொணர்ந்து தம்மிடம் சேர்த்து விடுவார் கள் என்றும்,மினியம்மாள் அப்பாத்துரை ஆகிய இருவரை யும் பிடித்து, அவர்களுடைய வாக்குமூலத்தின் ஆதாரத் தைக்கொண்டு தம் எதிரியையும் சிறைப்படுத்தி, மூவரும் தண்டனை பெறச்செய்வார்கள் என்றும், அதற்குமேல் தாம் எவ்வித அச்சமுமின்றி பழைய நிலைமையில் குடும்பத்தோ டிருந்து பாங்கியின் வியவகாரங்களை நடத்தலாமென்றும் நினைத்துப் பகலிலும் கனவு கண்டபடி, கமிஷனரிடத்தி லிருந்து தமக்கு எந்த நிமிஷத்தில் எவ்விதமான சந்தோஷச் செய்தி வருமோ வென்று எதிர்பார்த்து டெலிபோனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்.
அப்படி சுமார் இரண்டு தினங்கள் கழிந்தன. போலீஸ் கமிஷனர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளினால், எஸ்.ஆர். ஐயருடைய குடும்ப சம்பவங்கள் இந்த ராஜதானி முழுதிலு முள்ள பெரும்பாலான ஜனங்களுக்குத் தெரிந்து போயின வாதலால், எல்லோரும் அதைப்பற்றியே பேசிப்பேசி அலுத் துப் போயினரானாலும், அதனால் எவ்வித பலனும் ஏற்பட வில்லை. எஸ்.ஆர். ஐயருடைய மோட்டார் வண்டியைப் போலவே இருந்த மோட்டார் வண்டி உள்ள ஒவ்வோர் இடத்திற்கும் போலீஸ் சிப்பந்திகள் போய்த் துப்பு விசாரித்துப் பார்த்தனரானாலும், மினியம்மாளும், அப்பாத் துரையும் உபயோகித்த மோட்டார் வண்டி யாருடை யது என்பதைக் கண்டு பிடிப்பது சாத்திய மற்ற வேலையாய் முடிந்தது.மினியம்மாள், அப்பாத்துரை ஆகிய இருவரை யும் கண்டு பிடிக்கவேண்டு மென்று சென்னையிலிருந்த போலீஸார் எல்லோரும் தெருத் தெருவாயலைந்து வீடு வீடாய் நுழைந்து பார்த்தனரானாலும், அவர்களுடைய பாடு கள் எல்லாம் வீணாயின.
நாமக்கல்லிலிருந்து சென்னைக்கு வரும் ராஜபாட்டை யின் மீதிருந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் அயல் கிராமங்களின் முன்சீப் முதலியோரது உதவியைப் பெற்று ராஜபாட்டையின் இருபுறங்களிலும் நெடுந்தூரம் வரையில் ஆள்களை அனுப்பி, எஸ்.ஆர். ஐயருடைய மனையாள் எங்கேனும் கொல்லப்பட்டுக் கிடக்கிறாளோ வென்பதை ஆராய்ந்து பார்த்து, எந்தக் குறிப்பையும் காணாமல் அலுத்துத் திரும்பினர்.
இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனரது விளம்பரம் முதலியவற்றால் ஊர் அல்லோலஹல்லோலப்பட்டுப்போ யிற்று. அது கிருஷ்ணமூர்த்தி ஐயர், ஸ்வர்ணாம்பாள் முதலி யோருக்கும் எட்டியது.பத்திரிகைகளில் வெளியான விவரங் களையும் அவர்கள் நேரில் படித்துப்பார்த்து வர்ணிக்க இய லாத ஆவலும் திகிலும் கொண்டு, நெருப்பின்மேல் நிற்பவர் போல் தத்தளித்துப் பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டிருந்தனர்.
எஸ். ஆர். ஐயர் அடிக்கடி டெலிபோன் யந்திரத்தை மாட்டி போலீஸ் கமிஷனராபீஸ் மானேஜரோடு பேசி, “ஏதாவது தகவல் கிடைத்ததா?” என்று குசலம் விசா ரித்தபடி நரகவேதனை யநுபவித்தவராய் இருந்துவந்தார். அவர் அவ்வாறு அமிதமான சஞ்சல மடைந்ததற்கு முக்கிய மான ஒரு காரணமுமிருந்தது.
எதிரிகளால் அபகரிக்கப்பட்டுப் போன அவருடைய மனையாள் அபூர்வமான அழகு வாய்ந்தவள். அவளு டைய தோற்றம் தத்ரூபம் கந்தர்வ ஸ்திரீயின் தோற்றமாக வே இருக்கும். அப்போது அவளுக்கு சுமார் முப்பத்தைந்து வயதே ஆயிருந்தது. அவள் எஸ்.ஆர். ஐயரு டைய இரண்டாவது மனைவி யென்பதை நாம் இங்கு அவ சியம் குறிக்கவேண்டும். அவளுடைய தந்தை சர்க்கார் கலாசாலையில் பேராசிரியர் பதவி வகித்தவர். அவருடைய மாதச் சம்பளம் ரூ.1200. அவர் ஹிந்துக்களின் மதாசார சட்ட திட்டங்களின் வரம்பை முற்றிலும் கடந்து, சகல விஷயங்களில் வெள்ளைக்காரர் பழக்க வழக்கங்களையே அநுசரித்து, புது நாகரிக மோகத்தில் மதிமயங்கி இருந்தவர். அவர் தமது புதல்வியை இளம்பிராயத்திலேயே மணந்து கொடுக்காமல், அவள் பிரவிடையான பிறகும் கன்னிகை யாகவே வீட்டில் வைத்திருந்தார்.
அந்தப் பெண் நடையுடை பாவனைகளிலும், தோற்றத் திலும், பார்ஸீலேடி போலவே இருந்த தன்றி, விசேஷ மான அழகும், பக்குவகாலக் கவர்ச்சியும் வாய்ந்தவளா யிருந்தாளாதலால், எஸ். ஆர். ஐயர் அவளுடைய மோகவலை யில் வீழ்ந்து, அதன் பொருட்டே, ஏதேதோ சில முகாந் தரங்களைக் கற்பித்துத் தமது முதல் மனையாளை விலக்கி விட்டு, இரண்டாவது மனையாளை அடைந்தார். அவருக்கு அநேக லக்ஷம் ரூபாய் பெறத்தக்க சொத்துக்கள் வந்து குவிந்துபோயிருந்தனவானாலும், அவ்வளவு அதி அபாரமான சம்பத்தின்மேல் அவர் வைத்திருந்த மதிப்பைக்காட்டி லும் ஆயிர மடங்கு அதிகமாய்த் தமது இளைய மனைவிமீ. வைத்து அவளையே தமது உயிர் நிலையாக மதித்திருந்தார். ஆகவே, அவர் தமது பாங்கி வர்த்தகம் நின்று போனதைப் பற்றி அவ்வளவாக வருந்தவில்லை யானாலும், பஞ்சவர்ணக் கிள்ளைபோன்ற தமது இளைய மனைவி தம் எதிரியால் அப கரிக்கப்பட்டுப் போனதைப்பற்றி ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து, விவரிக்கவொண்ணாதபடி வேதனை அனுபவித்திருந்தார். அவருக்கு நேரிட்ட அபாயங்களில் தம் இளைய மனைவியைத் தம் பகைவன் வஞ்சித்து அபகரித்துக்கொண்டு போனது இந்த உலகமே இருண்டு பாழடைந்து போனது போலத் தோன்றியது. தமது உயிரும் மன உறமும் அடியோடு தம்மை விட்டு விலகிப் போனது போலவே, அவர் உணர்ந்தார்.
அவ்வாறு எஸ்.ஆர். ஐயர் நிரம்பவும் பரிதாபகரமான நிலைமையில் கிடந்து தவித்திருக்க, நான்காம் நாட் காலையில் தபால் மூலமாய் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் அதை மிகுந்த ஆவலோடு வாங்கிப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:
நாய் வாலின் கோணலை நிமிர்க்க யாராலும் முடியாது. அதுபோல, உன் புத்திப் போக்கை மாற்ற, உன்னைப் படைத்த பிரம்மாவே நினைத்தாலும், அது முடியாதென்று எண்ண வேண்டி யிருக்கிறது.
உன்னுடைய மூளையின் வேகம் அசாதாரணமானது. ஆரம்பத்தில் கேவலம் அன்னக்காவடியாயிருந்த உன்னை உன் மூளை வேகம் ஆகாயம் வரையில் உயர்த்தி, உலகப்பிரசித்தி பெற்ற பாங்கர் எஸ். ஆர். ஐயர் ஆக்கிவைத்திருக்கிறது. ஆகையால் அது எந்த சமயத்திலும் பொய்க்காது என்று நி நினைத்து, உன் மனப்போக்கின் படியே காரியங்களை நடத்துவது சகஜமே.
ஆனாலும், முண்டனுக்கு இரண்டாள் என்று ஜனங்கள் சொல்லுகிறபடி, உன் மூளையைக் காட்டிலும் அதிகத்திறமை யாக வேலை செய்யக் கூடிய பெருமூளை படைத்த ஒருவன் உனக்குப் பகைவனாக வந்து முளைத்தால், உன்பாடு திண்டாட்டமாகிவிடும் என்பதை மாத்திரம் நீ நினைக்கவில்லை. ஏனென்றால், அப்பேர்ப்பட்ட பகைவன் உனக்கு இதுவரை யில் ஏற்படவில்லை. ஆதிமுதல் நீ எண்ணிய மோசக்காரியங்க ளெல்லாம் உனக்கு ஜெயமாகவே முடிந்தன. அவற்றைத் தடுத்து, உன்னை வெல்லக்கூடிய பகைவர் எவரும் ஏற்பட வில்லை.ஆகவே, நீ இறுமாப்படைந்து, நம்மை வெல்லக் கூடியவன் எவனுமில்லை யென்று கருதி மனப்பால் குடிப்பது சகஜமே.
ஆனால் இப்போது உன் குருட்டுயோகம் மாறிப்போ யிருப்பதையும்,உன் சாமர்த்தியம் ஊத்துக்கு நிற்காமையால் நீ தவித்துத் திண்டாடி நிற்பதையும் உணர்ந்து இப்போதா கிலும் நீ உன் இயற்கை இறுமாப்பை விட்டு, இது வரையில் நீ செய்துள்ள எண்ணத் தொலையாப்பாவங்களுக்குப்பிராயச் சித்தம் செய்து கொள்வா யென்று நினைத்து உனக்குக் கடைசியாக நான் எழுதிய கடிதத்தை நீ முற்றிலும் அசட் டையாக எறிந்துவிட்டாய். அதன் பலன் கைமேல் கிடைத் திருக்கிறது.உனக்குச் சேர வேண்டிய முதல் தண்டனையை நான் நடத்திவிட்டேன். இனி தொடர்ச்சியாக மற்ற தண் டனைகளும் ஒன்றன்பின்னொன்றாக வந்து கொண்டே இருக் கப்போகிறது. நம்முடைய சென்னைப் போலீஸ் கமிஷன ரோடு இந்த உலகத்திலுள்ள போலீஸ் புலிகள் எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து திரண்டு இரவுபகல் உனக்குத் துணை யிருந்தால்கூட, ஷ தண்டனைகள் நிறைவேறுவதைத் தடுக்க இயலாதென்பதை நான் இதன் மூலமாய் உனக்குத் தெரிவிக்கிறேன்.
நீ எந்த இளைய மனைவியின் மோகத்தால் மதி மயங்கி, மகா உத்தமியான உன் மூத்த மனைவிக்கும் எனக்கும் பொய் முடிச்சுப் போட்டு, அவளுடைய வயிற்றில் பிறந்த உன் சொந்தக் குழந்தையையே கொன்று, அந்தப் பழியை அபாண்டமாக என்மேல் சுமத்தி என்னை அழிக்கப் பார்த் தாயோ, அந்த இளைய மனையாளையே முதலில் அரவான் பலியாகக் கொடுத்து இந்த பாரதப்போரை ஆரம்பிப்பது பொருத்தமான விஷய மாதலால் அதை நான் தொடங்கியதை நீயே ஆமோதிப்பாயென்று நம்புகிறேன்.
நீ உயிருக்குயிராய் மதித்து, இரவுபகல் பாத பூஜைநடத் தும் உயிர்த்தெய்வமான இளைய மனைவியைத் திரும்பவும் அடைய போலீஸ் கமிஷனரைத் தூண்டி பகீரதப் பிரயத் தனம் செய்வதும், அதற்காக ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப் பதாய் விளம்பரப் படுத்துவதும் பொருத்தமான காரியங்க ளே யானாலும், அவைகளால் நீ எதிர்பார்க்கும் அநுகூலம் மாத்திரம் உனக்கு ஏற்படா தென்பதை உனக்கு அறி அறுத்தவே நான் மறுபடி உனக்கு இந்தக் கடிதத்தை எழு கிறேன். அதுவன்றி உனக்கு நான் தொடர்ச்சியாகச் செய்து வைக்கத் தீர்மானித்துள்ள தண்டனைகளைத் தடுப்ப தும் உன்னால் கூடாத காரியம் என்ற உறுதி மொழியை உனக்குத் தெரிவிப்பதற்காகவும் நான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். உன் இளைய மனைவிக்கு நான் எவ் விதமான சிட்சை விதித்தேனென்பதை நாளையதினம் காலைக்குள் நீ முகதாவில் தெரிந்து கொள்வாய். நாளைய தினம் காலைக்குள் அவளை நீ உன் கண்களால் காணப்போகி றாய்! அவள் என்ன நிலைமையில் உன்னிடம் வருகிறாளோ அதே நிலைமையில் கூடிய சீக்கிரம் ஸ்வர்ணாம்பாளையும், சுந்தரியையும், கிருஷ்ணமூர்த்தியையும் நீ காணப்போகிறாய்.
அதோடு என் தண்டனையில் முக்கால் பாகமும் தீர்ந்து போகும். பிறகு கடைசியாக உன் முறை ஆரம்பமாகப் போகிறது. உனக்கு என்ன விதமான தண்டனை கிடைக்கப் போகிறதென்பதை நீ இப்போதே தெரிந்துகொள்ள ஆவலுடையவனா யிருக்கலாம். அதையும் நான் சொல்லி விடுகிறேன். மிகவும் கொடிய காரியங்களைச் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டு மென்ற ஏற்பாடு உலக ராஜாங்க சட்டங்களில் இருந்து வருகிறது. அப்படிச் செய்வது தவறு என்பது என் அபிப்பிராயம். ஒருவனு டைய உயிர் போய்விட்டால், அதன் பிறகு, அவனுக்கு எவ் விதமான துன்பமும் உறைக்காமல் போகிறது. அவனுக்கு ஏற்படுத்தும் பயங்கரமான தண்டனையின் பலனை அவன் உணராமல் போய்விடுகிறான். சொற்ப குற்றங்களைச் செய்து, கடுங்காவல் முதலிய தண்டனைகளை அடைகிறவர்களுக்கு எற் படும் தேகத் துன்பம், மனவேதனை ஆகியவைகூட கொலைக் குற்றம் செய்தவனுக்கு இல்லாமல் போகிறது. ஆகவே, மரண தண்டனை ஒரு தண்டனையே அல்ல. குற்றவாளி தன் ஆயுட் காலம் முடிய ஓயாமல் வேதனைப்பட்டு, தான் செய்தது தவறு என்று உணர்ந்து உணர்ந்து தவித்துப் பரிதவிக்க வேண்டும். அப்படிச் செய்வதே சரியான தண் டனையாகும். ஆகையால் நான் உன்னைக் கொல்லப்போகிற தில்லை. நல்ல கூர்மையான அம்பட்டன் கத்தியின் உதவி யால் உன் கண்கள் இரண்டையும் அணு அணுவாய்ச் சீவி, கண் உருண்டைகள் முழுதையும் தோண்டி வெளிப் படுத்திவிட்டு, குழிகளில் மருந்து வைத்துப் புண் களை ஆற்றி, முழுக் குருடனாய் உன்னை ஆக்கி, அதோடு விட்டுவிடப் போகிறேன். அந்த நிலைமையில் நீ உன் ஆயுட்காலம் முழுதையும் கழிப்பதொன்றே உனக்கு தகுதியான தண்டனை.
நான் இவ்வளவு தூரம் எழுதியிருப்பதும் பொய்யான பயமுறுத்தல் என்று நினைத்து விடாதே. நான் எழுதிய முதல் கடிதத்தை அவமதித்ததன் பலனை நீ இப்போது கை மேல் கண்டு அநுபவிக்கிறாய். நாளையதினம் காலைக் குள் என் தீர்மான உறுதியை நீ திருப்திகரமாகத் தெரிந்து கொள்ளப் போகிறாய். அதற்குமேல் நான் அதிகமாய் உனக்கு எழுதவேண்டிய அவசியம் ஏற்படாது.
இப்படிக்கு உன்னைக் கனவிலும் மறவாத உன்
சட்டகன்.
என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த எஸ். ஆர்.ஐயர் பிரமித்து அப்படியே உட்கார்ந்துபோனார்.
அவன் பயமுறுத்தி இருந்த தெல்லாம் குழந்தைகளைப் பெற்றோர் பொய்யாக மிரட்டுவது போலத் தோன்றியதானாலும், ஒரு கால் அவன் உண்மையிலேயே அப்படியும் செய்து விடுவானோ என்ற சம்சயமும் தோன்றி வதைக்க லாயிற்று. மறுநாளைய காலைக்குள் தம் மனையாள் தம்மிடம் வரப்போகிறாள் என்று அவன் எழுதியிருந்தது வெறும் புரளியா யிருக்குமோ, அல்லது, உண்மையிலேயே அவள் தம்மிடம் வருவாளோ என்ற சந்தேகமும் தோன்றி மன தைப் புண்படுத்தத் தொடங்கியது. எனினும், வேறு எந்த முயற்சியினாலும் தாம் தமது மனையாளைக் கண்டு பிடிக்க இயலாதிருந்த நிலைமையில், தமது பகைவனே அவளை அனுப்புவதாக எழுதி இருந்தது அபாரமான மன வெழுச்சியையும் படபடப்பையும் உண்டாக்கியது. அது வன்றி, தம் அருமை மனையாளைப் பெரிய வஞ்சகச் சூழ்ச்சியினால் அபகரித்துப் போய், சில தினங்கள் மறைத்து வைத்திருந்து மறுபடி தம்மிடம் அவளை அவன் அனுப்புவதன் கருத்தென்ன வென்பதைப் பற்றியும் அவர் ஆழ்ந்து சிந்திக்கலானார். அவ்வாறு அவளை அபகரித்துக் கொண்டுபோய் வைத்திருந்து திருப்பி அனுப்புவது தன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டுவதற்காகச் செய்யப் பட்ட சூசனையாயிருக்குமோ, அல்லது, அவளைக் கொண்டு போய் அவளுடைய கற்பை அழித்துக் கொணர்ந்து விடுகி றானோ, அல்லது, அவள் மூலம் தமக்கு ஏதேனும் செய்தி சொல்லி அனுப்புகிறானோ என்பன போன்ற நினைவுகளும் சந்தேகங்களும் ஓயாமல் தேன்றித் தோன்றி அவரது மனத் தை வதைத்து வாட்டத்தொடங்கின.
அந்தக் கடிதத்தைப் பெற்றவுடன், அதைத் தாம் உடனே போலீஸ் கமிஷனருக்கு அனுப்ப வேண்டுமென்ற மனத்துடிப்பு ஏற்பட்டதானாலும், அவர் ஆழ்ந்து யோசிக்க யோசிக்க, அதைக் கமிஷனருக்குக் காட்டுவது அநுசிதமாகப் பட்டது. அதில் தம் முதல் மனைவி, குழந்தை ஆகியோரைப் பற்றிய சில தகவல்கள் காட்டப்பட்டிருந்தன வாதலால் அந்தக் கடிதத்தைத் தாம் எவருக்கும் காட்டாமல் மறைத்து வைப்பதே நலமான தென்று எஸ். ஆர். ஐயர் தீர்மானித் தார். அவர் அவ்விதம் தீர்மானித்ததற்கு அவருடைய அச்சமும் இன்னொரு காரணமாயிருந்தது. அதாவது, தாம் அந்தக் கடிதத்தைப் போலீஸ் கமிஷனருக்குக் காட்டினால், அவர் ஒருகால், அதன்மேல் ஏதேனும் நடவடிக்கை எடுத் துக்கொள்ள, அது தம் பகைவனுக்குக் கெடுதலாய் முடிந் தால், அவன் தம்மீது முன்னிலும் அதிகமான கோபமும் பகைமையும் பாராட்டி, அதைப்பற்றி, ஏதேனும் தாறு மாறாக எழுதுவானென்ற அச்சத்தினாலும் அவர் அந்தக் கடிதத்தை மறைத்து வைக்கத் தீர்மானித்தார்.
மறுநாளைய காலைக்குள் தாம் தமது ஆருயிர் மனையா ளைப் பார்க்கப்போகிறோம் என்ற மன எழுச்சியும் பேரா வலும் ஒவ்வொரு நிமிஷ முடிவிலும் ஒன்றுக்குப் பன் மடங்காய்ப் பெருகிக் கொண்டே போயின வாதலால், நாழிகை ஏற ஏற, அவரது மனோ மெய்களின் நிலமை கட்டி லடங்காததாகியது.
அவள் தனியாக வருவாளோ, வேறு எவரோ டேனும் வருவாளோ, வண்டியில்வருவாளோ, நடந்தே வரு வாளோ, என்ன நிலைமையில் வருவாளோ என்பன போன்ற எண்ணிக்கையற்ற சந்தேகங்களும் நினைவுகளும் எழுந் தெழுந்து அவரது மனத்தில் புதிய புதிய மனோபாவக் காட்சிகளை எழுப்பி, ஒரே குளறுபிடியான பெரிய நாடக மொன்றை நடத்திய படி இருக்கவே, அவர் தமது ஸ்நானம் போஜனம், சயனம் முதலிய எவ்வித தேகாவஸ்தையையும் கவனியாமல் கல் போலச் சமைந்து வெறு வெளியைப் பார்த்தபடி ஒரே நிலையில் உட்கார்ந்திருந்தார்.
அன்றைய பகற் பொழுது கழிவது இரை விழுங்கிய மலைப்பாம்பு நகர முயல்வதுபோல விருந்தது. அவர் வேண்டு மென்றே, வீதிப்பக்கத்தில் இருந்த ஒரு ஜன்னலிற்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடியே, எவரேனும் தம் பங்களா விற்குள் வருகிறார்களோ வென்று உற்றுப் பார்த்த வண்ண மாக இருந்தார். வீதியில் இடைவிடாது மோட்டார்களும், ஜட்கா வண்டிகளும், மாட்டுவண்டிகளும் ஆறு ஓடுவது போலத் தொடர்ச்சியாய் இப்புறம் அப்புறம் போய் வந்தபடி யே இருந்தனவாதலால், ஒவ்வொருவண்டியையும் கவனிப்ப தும், அது தமது பங்களாவின் வாயிலைத் தாண்டி அப்பால் போனால், அதை விட்டு, அடுத்த வண்டிமீது தமது திருஷ்டி. யைச் செலுத்துவதுமாய் இருந்து இருந்து அவர் பட்ட பாட்டை நாம் நரகவேதனைக்கே ஒப்பிட வேண்டும். ஓயா மல் பார்த்துப் பார்த்து அவருடைய கண்களின் ஒளியும் மழுங்கிப் பஞ்சடைந்து போயிற்று. தலையும் கழுத்தின்மேல் நிற்கமாட்டாமல் தளர்வடைந்து, புண்பட்டுத் தவித்தது. அவர் அண்டையிலிருந்த நாற்காலியில் சாய்வதும், நிமிர் வந்து பார்ப்பதுமாகவே மாறி மாறிச் செய்து அன்றைய பகற் பொழுதைக் கழித்தது பகீரதன் கங்கை கொண்டு வந்தது போல முடிந்தது.
அன்றைய இரவில் தம் மனைவி, ஒருகால், வரலாமென்ற எண்ணம் தோன்றியதாகையால், தாம் தூங்காமல் எச்சரிப் பாய் விழித்திருந்து இரவு முழுதும் கவனித்துத் தீர வேண்டு மென்று அவர் தீர்மானித்துக் கொண்டதன்றி, பங்களாவைச் சுற்றி நாலா பக்கங்களிலும் காவல் காத்தி ருந்த ஆள்களுக்கும் அந்தச் செய்தியை ஒரு மாதிரியாக மாற்றிச் சொல்லி அவர்களையும் எச்சரித்து வைத்திருந்தார். அதாவது, தம் மனையாள் அன்றையதினம் இரவில் பங்க ளாவிக்கு வரலாமென்று போலீஸார் எதிர்பார்ப்பதாய்த் தமக்குத் தகவல் கிடைத்திருக்கிறதென்றும், ஆகையால் அவர்கள் ஜாக்கிரதையாய் கவனித்திருந்து, தம் மனையாள் வந்தால், உடனே, உபசாரமாக அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வரவேண்டு மென்றும் எல்லோருக்கும் செய்தி சொல்லி அனுப்பி, அவர்களை எச்சரித்து வைத்திருந்தார்.
ஆகவே, காவல்காரர்களும் ஊக்கங்கொண்டு போக்கு வரத்து வண்டிகளையும், நடந்து சென்ற மனிதர்களையும் ஆவலோடு கவனித்தபடி எச்சரிப்பாக நிற்கலாயினர். இராப்பொழுது கழிந்து கொண்டே போயிற்று. காவற் காரர்கள் காத்துக் காத்துப் பார்த்து அலுத்துப் போயினர். வண்டிகளின் போக்கு வரத்தும், மனிதர்கள் நடமாட்ட மும் பெரும்பாலும் குறைந்து போயின. அதற்கு மேல் அம்மாள் வரப்போகிறார்களா என்று நினைத்து ஆள்கள் அயர்ச்சி யடைந்து, அங்கங்கு கீழே உட்கார்ந்து கொள் வதும், மேல் துணியைக் கீழே விரித்துப் போட்டுப் படுப்பதும், பிறகு சிறிது நேரத்தில் திடுக்கிட்டு எழுந்து நிற்பது மாய்ப் பொழுதைப் போக்கினர். எல்லோருக்கும் களைப் பும் துயிலுணர்ச்சியும் பெருகி மென்மேலும் பளுவாக அழுத்திக்கொண் ண்டே போயினவாகையால், அவர்கள் நிற்கவும் மாட்டாமல் படுத்துத் தூங்கவும் மாட்டாமல் தர்ம சங்கட நிலைமையில் கிடந்து தத்தளித்தவா றிருந்தனர்.
எஸ். ஆர். ஐயருக்கு பங்களாவிற்குள் இருக்கை கொள்ளவே இல்லையாதலால், அவர் ஆவேசங்கொண்டவ ராய் அடிக்கடி எழுந்து ஹாலில் உலாவுவதும் இடையிடை யில் அலுத்து உட்காருவதும் வீதியில் எவரேனும் பேசினால் ஜன்னலின் வழியாகத் தம் கவனத்தை வெளியில் செலுத்தி உற்று நோக்குவதுமாய்ச் செய்து நலிந்து நெடுநேரம் வரை யில் பொழுதைப் போக்கினார்.
விடியற்காலம் நான்கு மணி சமய மாயிற்று. எஸ். ஆர். ஐயர் சாய்மான நாற்காலியில் இருந்தபடியே கடுமையான துயிலில் ஆழ்ந்து போனார். பங்களாவின் முன் பக்கத்து வீதியில் உட்கார்ந்தும், நின்றும் காவல் காத்தவர்கள் தத் தம் உணர்வை இழந்து அப்படியப்படியே தூக்க மயக்கத் தில் மெய்ம்மறந் திருந்தனர். அப்போது அந்த வீதியில் கால்மணிக் கொருதரம் அரைமணிக் கொருதரம் மோட் டார் முதலிய வண்டி ஏதேனும் வருவதும் போவதுமாயிருந் தது. ஜன நடமாட்டம் அறுதியாய் நின்றே போய்விட்டது. அப்போது மிக விசையாகவும், சிறிதும் ஓசையில்லாமலும் வந்த ஒரு மோட்டார் வண்டி, எஸ். ஆர். ஐயருடைய பங்க ளாவின் வாசலுக்கருகில் வந்த காலத்தில், மோட்டார் ஒட்டி அதன் விசையை சடக்கென்று குறைத்து, அங்கு தூங்கி ஆடி வீழ்ந்து நின்ற ஆள்களை நோக்கி, “யாரய்யா அங்கே நிற்கிறவர்கள்? எஸ். ஆர். ஐயருடைய பங்களா எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று அசட்டையாக வினவினான்.
அதைக் கேட்டு அங்கிருந்தவர்களில் சிலர் திடுக்கிட்டு விழித்து ஊக்கங்கொண்டு நின்று அந்த வண்டியை உற்று நோக்க, அவர்களுள் ஒருவன்,”இதுதான் அந்த பங்களா; எதற்காக அதை நீ கேட்கிறாய்?” என்றான்.
மோட்டார் ஓட்டி தனது வண்டியை மெதுவாக ஒட் டிக்கொண்டு சென்றபடியே, “அதோ கொஞ்ச தூரத்திற் கப்பால் யாரோ ஒரு பாப்பாத்தி அம்மாள் இடந்தெரியாமல் நின்று தவிக்கிறார்கள். அந்த அம்மாள் எஸ். ஆர். ஐயர் பங்களாவுக்குப் போகவேண்டுமாம்; அந்த ஐயருக்குச் சொந்தமாம்.யாராவது உடனே போய் அழைத்துக்கொண்டு வாருங்கள், பாவம்; இருட்டில் தனியாக நின்று சங்கடப்படு கிறார்கள்” என்று கூறிக்கொண்டே வண்டியின் விசையை அதிகப்படுத்திக் கொண்டு நெடுகப் போய்விட்டான்.
அந்த மோட்டார் ஒட்டி தெரிவித்த செய்தியைக் கேட்கவே, எஸ்.ஆர்.ஐயருடைய மனையாள்தான் அவ்வாறு வந்து வழியை அறியாமல் தவிக்கிறாளென்று அவர்கள் ஊகித்துக் கொண்டனர். தரையில் படுத்துத் தூங்கியவர்களும் திடுக்கிட்டு விழித்தெழ, எல்லோரும் ஆவேசங் கொண்டவர்களாய்த் துடிதுடித்து நின்றனர்.
அந்த சந்தோஷச் செய்தியை உடனே எஸ். ஆர். ஐய ருக்குத் தெரிவிக்கும் பொருட்டு ஒருவன் விரைவாக உள்ளே ஓடினான். இரண்டொருவர் நீங்கலாக மற்ற ஆள் கள், அந்த அம்மாள் நின்றதாக மோட்டார் ஒட்டி குறித்த திக்கில் விரைந்து ஓடினர்.
அந்த ரஸ்தா சுமார் அறுபதடி அகலமுடையதாய்த் தாரினால் மெழுகப்பட்டிருந்தது. இரண்டு ஓரங்களிலும் பெரிய பெரிய ஆலமரங்கள் தூர தூர நின்றுகொண்டிருந்தன. ஆகாயத்தில் ஏராளமான நக்ஷத்திரங்கள் நிறைந்திருந் தன வானாலும், ஆலமரங்களின் அடர்த்தியான கிளைகளின் நிழல் பாதையில் வீழ்ந்திருந்தமையால், எங்கும் கம்மல் நிறைந்திருந்தது.ஆனாலும், மனிதர் எவரேனும் அப்போது அந்த ரஸ்தாவில் நடந்தால், எதிரில் வருவோர் அவரை உடனே தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே, எஸ். ஆர். ஐயருடைய ஆட்கள் தங்கள் பார்வையை ரஸ்தாவோடு அதிக தூரம் முன்பக்கம் செலுத்தி, எவரேனும் நிற்கின்றனரோ வென்று கவனித்து உற்று நோக்கியபடி விரைந்து சுமார் கால் பர்லாங்கு தூரம் சென்றனர்.
அந்த ரஸ்தாவில் கண்காணும் தூரம் வரையில் அவர் கள் கவனித்துக் கூர்ந்து நோக்கினரானாலும், மனிதர் நின்ற குறிப்பே தெரியவில்லை.
ஒருகால் அந்த அம்மாள் தனியாக வர அஞ்சித் திரும்பி எங்கேனும் போயிருப்பாளோ, அல்லது, எஸ்.ஆர். ஐயருடைய பங்களா எது என்பதை விசாரிக்கும் பொருட்டு, அண்டையிலுள்ள பல பங்களாக்கள் எதற்குள்ளேனும் நுழைந்து தங்கள் திருஷ்டியில் படாமல் மறைந்திருப்பாளோ என்று அவ்வாட்கள் பலவாறு சந்தேகித்துத் தமக்குள் ஒரு வருக் கொருவர் ஆக்ஷேபனை சமாதானங்கள் சொல்லிக் கொண்டு தயங்கித் தயங்கி மேலும் சிறிது தூரம் செல்ல, அப்போது அவர்களுள் ஒருவன், “அதோ ஆலமரத்தடியில் கருப்பாய் என்னவோ தெரிகிறதே! அதென்ன பாருங்கள்” என்று திடீரென்று வியப்பாகக் கூச்சலிட்டான்.
அதைக் கேட்டு மற்றவர்கள் திடுக்கிட்டு அவன் காட் டிய திக்கில் தமது பார்வையைச் செலுத்தி அந்த திக்கில் விரைந்து சென்றனர்.
அவ்வாறு அந்த இடத்தின் கிட்ட நெருங்கியபோதே ஒருவன், “மனிதர் நிற்பதுபோலத் தெரியவில்லையே. யாரோ தரையில் படுத்துக்கொண் டிருப்பதுபோ லல்லவா தெரிகிறது” என்றான்.
இன்னொருவன், “யாராவது பிச்சைக்காரன் படுத்துத் தூங்குகிறானோ என்னவோ” என்றான்.
வேறொருவன், “ஒருவேளை அந்த அம்மாளே பயந்து அல்லது அலுத்து மயங்கிக் கீழே விழுந்திருக்கலாம்” என்றான்.
அவ்வாறு சம்பாஷித்தபடி அவர்கள் பெரிதும் ஆவ லும், ஆவேசமும் கொண்டவர்களாய் முன்னிலும் அதிக விசையாகப் பாய்ந்து, அந்த ஆலமரத்தடியை அடைந்து அதன் அருகில் நீளமாய்க் கிடந்தது என்னவென்று கூர்ந்து நோக்கினர்.
அந்த வடிவத்தின் நீளம், அமைப்பு முதலியவை அது மனித வடிவம் என்று காட்டின. ஆனால் நீண்ட தலையணை, அல்லது, வீணை முதலியவற்றிற்கு, உறை போடப்பட்டிருப் பதுபோல, அந்த வடிவம் முழுதும் ஒருகித்தான் உறைக்குள் சொருகப்பட் டிருந்ததன்றி, உறையின் வாய் இருந்த இடம் தெரியாதபடி தைக்கப்பட்டிருந்தது. ஆகவே, நெல் முத லிய தானியங்களை சாக்குப்பைக்குள் போட்டு சாக்கின் வாயைத் தைத்து உருட்டி விடுவதுபோல, சுமார் ஐந்தடி நீளமிருந்த குறுகலான ஒரு கித்தான் பைக்குள் ஒரு மனித உடம்பைப் புகுத்தி இருந்ததாக அதன் தோற்றம் காட்டி யது. அந்தக் குறிப்பை ஒரே நொடியில் உணர்ந்து கொண்ட ஆள்கள் திடுக்கிட்டு அபாரமான திகிலும், மனக் கலக்கமும், வேதனையும், ஆவலும் அடைந்து, அதற்குள் இருந்தது ஒரு பிணம் என்று யூகித்துக் கொண்டவர்களாய்த் தாம் என்ன செய்வதென்பதை அறியாமல் இரண்டொரு நிமிஷ காலம் தவிக்கலாயினர்.
அப்போது அவர்களுள் ஒருவன்,”என்ன விநோதம் து! யாரோ அம்மாள் இங்கே தனியாக நின்றுகொண்டு, எஸ். ஆர். ஐயருடைய பங்களாவுக்குப் போக வழியறியாமல் தவிக்கிறதாக அந்த மோட்டார் ஒட்டி சொன்னான். நாம் உடனே இங்கே ஓடிவந்திருக்கிறோம். அவன் சொன்னதற் கும், நாம் வந்ததற்கும் இடையில் ஐந்து நிமிஷ காலம் கூடக் கழிந்திருக்காது. இதற்குள் அந்த அம்மாள் நம் கண்ணில் படாமல் அவ்வளவு தூரம் போயிருக்க முடி யுமா? ஒருகாலும் முடியாது. அவன் பொய் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறான்” என்றான்.
வேறொருவன்:- இந்த மாதிரி இங்கே பிணம் கிடப்பதைப் பார்த்துவிட்டு, அவன் அதை வேறு மாதிரியாக மாற்றி நம்மிடம் சொல்லிவிட்டான் போலிருக்கிறது.
இன்னொருவன்:- என்ன நீ இப்படி சுத்த மூடத்தன மாய்ப் பேசுகிறாயே. நம் ஐயருடைய சம்சாரம் இன்றிரவு வரப்போவதாக ஐயர் நம்மிடம் சொன்னது, வழிப்போக்க னான ஒரு மோட்டார் ஒட்டிக்கு எப்படித்தெரிந்தது. அந்த அம்மாள் வந்து, எஸ்.ஆர்.ஐயருடைய பங்களா எங்கே இருக்கிறதென்பதை அறியாமல் தேடுவதாக அவன் சொன் னானே! தற்செயலாய் வழியோடு போகிற மோட்டார் ஓட்டி, இங்கே பிணங் கிடப்பதைக் கண்டு, அதை நம் மிடம் சொல்ல விரும்பினால், இப்படியெல்லாம் பொய்யை எதற்காகச் சொல்லவேண்டும்? நம் ஐயருக்கு சம்பந்த மான தகவல்களை,நாம் எதிர்பார்த் திருந்ததற்குத் தோதாக அவன் சொல்வது எப்படி சாத்தியமாகும்? இது பெரிய ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது !
மற்றொருவன்:- இந்த இரவில் மோட்டார் வண்டி விசையாய் ஓடுகையில் தலையணைமாதிரி நீளமாகப் பைக்குள் கட்டப்பட்டுக் கிடக்கும் இதைக் கண்டு, இதற்குள் பிணம் இருக்கிறதென்று யூகிப்பது அவ்வளவு சுலபமான காரியமா?
இன்னொருவன்:- அப்படியானால், அந்த மோட்டார் ஒட்டி இதைப் பார்த்தே இருக்கமாட்டானென்று சொல்லு கிறாயா? அல்லது, இதைப் பார்த்திருந்தாலும், இதற்குள் பிணம் இருப்பதாக யூகித்திருக்க முடியாதென்கிறாயா?
மற்றொருவன்:- மோட்டார் வண்டியின் முன்பக்கத் தில் இருக்கும் இரண்டு பிசாசு விளக்குகளின் வெளிச்சத் தில், மோட்டார் ஓட்டிக்கு இது சுலபத்தில் தெரியக்கூடி யதே. ஆனால், அவன் அந்த சமயத்தில் இந்தப் பக்கம் திரும்பாமல் இருந்தால், ஒரே நொடியில் வண்டி இதைக் கடந்து அப்பால் போய்விடுமல்லவா.
இன்னொருவன்:- அதெல்லாம் சரிதானப்பா. அந்த மோட்டார் ஒட்டி இதைப் பார்த்தாலும் பார்த்திருக்கலாம்; அல்லது,பார்க்காமலே போயிருந்தாலும் போயிருக்கலாம். யாரோ அம்மாள் இங்கே இருந்ததாக அவன் சொன்னது நிஜமா பொய்யா, பொய்யானால் நம்முடைய ஐயர் குடும்ப ரகஸிய சம்பந்தமான தகவலை அவன் எப்படித் தெரிந்து கொண்டு, சமயோசிதமாக நமக்குச் சொன்னான் என்ப தல்லவா இப்போது நமக்குத் தெரியவேண்டும்.
மற்றொருவன் :-அதையெல்லாம் நாம் அவனிடம் தான் கேட்கவேண்டும். அவன் சொன்னது நிஜமாகவே இருக்கலாம். அந்த அம்மாள் இதோ பக்கத்திலிருக்கும் ஏதாவது ஒரு பங்களாவிற்குள் ஏன் நுழைந்திருக்கக் கூடாது?
இன்னொருவன்:- ஏன், இன்னொருவிதமாகவும் இருக் கலாமல்லவா. அந்த மோட்டார் ஒட்டி நம் ஐயருடைய பகைவனைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம். அவனே இதைக் கொண்டுவந்து இங்கே போட்டுவிட்டு, நமக்கு இதைக் காட் டும்பொருட்டு, நம்மிடம் வந்து, யாரோ அம்மாள் எஸ்.ஆர். ஐயருடைய பங்களாவைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கயிறு திரித்திருக்கலாமல்லவா-என்றான்.
அதைக்கேட்டவுன் மற்றவர்கள் அப்படியும் இருக்கலா மென்று துடியாகக் கூறி ஆமோதித்தனர். உடனே ஒருவன், “அப்படியானால் இந்தப் பைக்குள் இருப்பது நம் ஐய ருடைய சம்சாரத்தின் பிணம் என்றல்லவா நினைக்கவேண் டியதாகிறது” என்றான்.
இ ன்னொருவன், “ஆம். அப்படித்தானிருக்கும். ஆனால் அவர்கள் ஒருவேளை அந்த அம்மாளை அடித்து இதற்குள் திணித்து இங்கே போட்டாலும் போட்டிருக்கலாமாகை யால், நாம் தாமதமின்றி இதைப் பிரித்துப்பார்த்து, ஆக வேண்டிய சிகிச்சைகளைச் செய்தால், உயிர் திரும்பினாலும் திரும்பலாம். நாம் இந்த அவசர சமயத்தில் வீண் பொழுது போக்குவது சரியல்ல. யாராவது ஒருத்தன் உடனே பங் களாவுக்கு ஓடி ஐயருக்கு இதையெல்லாம் சொல்லட் டும். ஐயர் வந்து ஆகவேண்டியதைச் செய்யட்டும். நாம் இதில் கையை வைக்கவேகூடாது. பிறகு ஏதேனும் நமக்கு உபத்திரவம் நேர்ந்தாலும் நேர்ந்துவிடும்.” என்றான்.
மற்றொருவன், “இப்போதே என் மனதில் ஒருவித பயம் உண்டாகிறது. ஒருவேளை நாமே இதில் சம்பந்தப் பட்டிருக்கிறோமென்று போலீஸார் நம்மை மாட்டிவிட்டாலும் விடுவார்கள்” என்றான்.
இவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தபடி, தூர விலகி நிற்க, அவர்களுள் ஒருவன் எஸ்.ஆர்.ஐயரிடம் அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவருடைய பங்களாவை நோக்கி விரைவாக ஓடினான்.
அவனுக்கு முன்னாக முதலில் வேறோர் ஆள் எஸ்.ஆர். ஐயரிடம் போய், மோட்டார் ஒட்டி சொன்ன தகவல்களைத் தெரிவிக்க, அதைக் கேட்ட ஐயர் அளவிட இயலாத மகிழ்ச் சியும், ஆவலும் கொண்டு, மேலும் சில நிமிஷங்களில் தமது மனையாள் தம்மிடம் வந்துவிடுவாளென்று எதிர்பார்த்து ஆவலே வடிவாக நின்று தமது கண்கள் பிதுங்கிப்போகும் படி ஜன்னலின் வழியாக வெளியில் பார்த்தபடி இருக்க, பின்னாக ஓடிய ஆள் தானும், மற்ற ஆள்களும் சிறிது தூரம் சென்று தேடி முடிவில் ஆலமரத்தடியில் உறையால் மூடப் பட்டு மனித வடிவம்போலக் கிடந்த ஒரு வஸ்துவைக் கண்ட வரலாற்றைக் கூறவே, அது எஸ். ஆர். ஐயருக்குப் பெருத்த இடி வீழ்ந்ததுபோன்ற மன அதிர்ச்சியையும், அபாரமான திகிலையும், சகிக்கவொண்ணாத மனவேதனையையும் உண்டாக் கவே, அவர் பிரமிப்பும், மனக்குழப்பமும், மயக்கமும் அடைந்து பேச்சு மூச்சற்று ஓய்ந்து நின்றுவிட்டார்.
தமது பகைவன் தம் மனையாளை அடித்து வதைத்துப் பைக்குள் நுழைத்துத் தைத்துப் போட்டுவிடுவான் என்று அவர் கனவிலும் எதிர்ப்பார்த்தவ ரன்றாதலால், அதைக் கேட்க, தம்முடைய உயிரே போய்விட்டதுபோல அவர் உணர்ந்தாராதலால், அப்படியே பேந்தப்பேந்த விழித்தபடி சுமார் இரண்டு நிமிஷகாலம் தமது பிரக்ஞையை இழந்து ஸ்தம்பித்து ஓய்ந்து நின்றவர், ஒருகால் தமது மனையா ளுக்கு அப்போதும் உயிர் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தினால் ஊக்கப்பட்டவராய் சரேலென்று தெளிவடைந்து அதீதமான ஊக்கங்கொண்டு விரைவாகப் பாய்ந்து டெலிபோன் இயந்திரத்தண்டை சென்று, அதை எடுத்து மாட்டிப் போலீஸ் கமிஷனருடைய ஜாகையில் இருந்த டெலிபோன் இயந்திரத்தோடு அதைச் சேர்க்கச்செய்து, அப்போது தூங்கிக்கொண்டிருந்த கமிஷனர் விழித்துக் கொண்டுவந்து பேசும்படிசெய்து, உளறிக் குளறி விஷ யத்தை அவருக்குத் தெரிவித்தார்.
முதல்நாள் காலையில் தபால் மூலமாகத் தமக்குக் கடி தம் வந்ததாக கமிஷனரிடம் தெரிவிக்க எஸ்.ஆர். ஐயர் அப்போதும் விரும்பவில்லை. அன்றைய இரவிற்குள் தமது மனைவி தம் பங்களாவிற்கு வந்து சேர்ந்துவிடுவா ளென்று யாரோ ஒரு போலீஸ் ஜெவான் அன்றைய பகலில் தம்மிடம் தெரிவித்ததாகவும், தாம் அதை உண்மையென்று நம்பி, தமது ஆள்களை எச்சரித்து வைத்ததாகவும், அதற்கிணங்க அவர்கள் இரவு முழுதும் ஜாக்கிரதையாயிருக்க, விடியற் காலம் நான்கு மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் கமிஷனரிடம் கூறியதன்றி, உடனே புறப்பட்டு அங்கே வரும்படி கேட்டுக்கொள்ள, கமிஷனர், தாம், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் முதலியோ ருடன் சுமார் பத்து நிமிஷத்தில் அந்த ஆலமரத்தடிக்கு வருவதாகவும், அதற்குள் எஸ். ஆர். ஐயரும் அங்கு போயி ருக்க வேண்டுமென்றும் கூறினார்.
தமது மனையாள் என்ன நிலைமையில் வந்திருக்கிறா ளென்பதை அறிய வேண்டுமென்ற பேராவலினால், ஐயரது மனம் தூண்டப்பட்டு கட்டிலடங்கா விசையோடு பறந்தது. அவரது உடம்பும் கைகால்களும் ஆவேசங்கொண்டு பம் பரம்போல் சுழன்றன. ஆனாலும், தம் பகைவன் சிறிதும் இரக்கமின்றி தம் மனையாளை அத்தகையை கொடுமைக்கு ஆளாக்கியிருக்கையில், தம்மை மிக பயங்கரமாக நடத்தப் பின்வாங்க மாட்டானாதலால், தாம் அந்த இரவில் பங்க ளாவை விட்டு ரஸ்தாவில் நடந்துபோனால், தமக்கு ஏதே னும் அபாயம் நேருமோவென்று நினைத்து அபாரமான பீதியும் கலக்கமும் அடைந்தவராய்ச் சிறிது தயங்கி, தமது மோட்டார் வண்டியைத் தயார்ப்படுத்தச்செய்து அதற்குள் காவலாளர்களுடன் உட்கார்ந்து, வண்டியைச் சுற்றிலும் ஆள் களை வரச்செய்து, மெதுவாக ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர, அதே சமயத்தில் வேறு பல மோட்டார் வண்டிகளில் போலீஸ் கமிஷனர், அசிஸ்டென்ட் கமிஷனர், சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர்,சில ஜெவான்கள், ஆகியோர் வந்து சேர்ந்து கதவுகளைத் திறந்துகொண்டு தடதட வென்று கீழே இறங்கி அந்தப் பை கிடந்த இடத்தையடை ந்து அதை உற்று நோக்கினர்.
அங்கு வந்த பல மோட்டார் வண்டிகளின் முன் பக்கத்து விளக்குகள் அந்தப்பை கிடந்த இடத்திற்கு நேரா கத் திருப்பி வைக்கப்பட்டன வாதலால், ஒரே காலத்தில் ஏராளமான பிசாசு விளக்குகளின் வெளிச்சம் ஆலமரத்தடிப் பக்கம் பிரகாசிக்கவே, அந்த இடம் பட்டப்பகலில் இருப் பதைவிட அதிக நன்றாக விளங்கியது.
அவ்வண்டிகள் அங்கு வந்ததற்கு முன்னர்,மனித வடி வமாயிருந்த ஒரு பை கிடந்ததென்பது தெந்ததேயன்றி, அதன் மேடு பள்ளங்கள், அசைவு முதலியவை தெரியாம லிருந்தன. வண்டிகளின் வெளிச்சம்’ பளிச்சென்று அபார மாய் மோதவே, அதற்குள் ஒரு மனித உடம்பு இருந்த தென்பது நிச்சயமாக சுலபத்தில் தெரிந்ததன்றி, சிற்சில இடங்களில் அந்தப் பை அசைவது போலவும் தோன்றி யது. போலீஸ் கமிஷனர் முதலிய எல்லோரும் மேற்படி அசைவுகளை உடனே கவனித்தனர். சிலர், “இன்னம் உயிர் இருக்கிறது. கைகால்கள் அசைகின்றன. சீக்கிரம் பையை அறுத்து விடுங்கள்” என்று ஆவேசத்தோடு கூச்சலிட்டனர்.
அதைக் கேட்ட போலீஸ் கமிஷனரும் துடிதுடித்து “ஆம். பையை உடனே விலக்குங்கள். யாரிடம் கத்தி இருக்கிறது? இது கித்தான் பை. தையலைப் பிரிக்க, அதிக நேரம் பிடிக்கும். கத்தியால் நீளத்தில் கிழித்துவிடுங்கள்’ என்றார்.
அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கத்திக்காக தம் தம் மடியையும் சட்டைப் பைகளையும் தடவி சோதனை செய்யத் தலைப்பட்டனர்.
மற்ற எல்லோரையும்விட ஆயிரமடங்கு அதிக ஆவேச மும் பதைப்பும் அடைந்து, பைக்குள்ளிருந்த தமது மனையாளை விடுவிக்க ஆவல்கொண்டு மெய்ம்மறந்து துள்ளிக் குதித்து முன்னுக்குப் பாய்ந்த எஸ்.ஆர். ஐயர் தமது இடுப் பில் இருந்த சாவிக்கொத்தை சடக்கென்று எடுத்து, அதில் மாட்டப்பட்டிருந்த கூர்மையான ராட்ஜர்ஸ் பேனா கத்தியை நிமிர்த்தி, பையின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பையைக் கத்தியால் அறுக்க முயன்றார்.
அவ்வாறு தாம் கத்தியால் அறுப்பதில், உள்ளே இருந்த உடம்பில் கத்தி படாமல் இருக்கவேண்டுமென்ற நினைவி னால் அவர் கித்தானை சிறிதளவு தூக்கிப் பிடித்துக்கொண்டு, கத்தியால் தலைமுதல் கால்வரையில் அறுத்துக் கொண்டே போய்த் தமது ஆருயிர் மனையாள் என்ன நிலைமையில் இருக் தாளென்பதைப் பார்க்க வேண்டுமென்றும், பையில் இறுக் கப்பட்டுக் கிடந்தவளை உடனே விடுவிக்க வேண்டுமென்றும் பெரிதும் ஆவலும் பதைப்பும் கொண்டு கிழிபட்ட வாயைப் பிடித்து சரேலென்று இரண்டு பக்கங்களிலும் விலக்கிவிடவே, அதற்குள் மூலைக்கொன்றாய்ச் சுருண்டு வளைந்து நெளிந்துகொண்டிருந்த நான்கு பெரியபாம்புகள் ‘புஸ்”புஸ்’ ஸென்று சீறி குபீரென்று கிளம்பி நீண்டு, எஸ். ஆர். ஐயர் மீதும், நான்கு பக்கங்களிலும் நெருங்கி உற்றுப் பார்த்து கொண்டிருந்த கமிஷனர் முதலியோர்மீதும் விழுந்து தாறு மாறாய் ஓடத் தொடங்கவே, பாம்பென்றால் படையும் கலங் கும் என்று சொல்வதற்கிணங்க, அங்கிருந்தோர் அனை வரும் அந்த ஒரு நொடியில் என்ன நிலைமையை அடைந் திருப்பரென்பது நாம் கூறாமலே விளங்கும்.
எஸ்.ஆர்.ஐயர், போலீஸ் கமிஷனர், டாக்டர் முதலிய சகலமானவர்களும், “ஐயோ, பாம்பு, பாம்பு” என்று பிரமாத மாய் வீரிட்டு அலறி எவரையும் இலக்ஷியம் செய்யாமல் ஒருவரை யொருவர் மோதியடித்துத் துள்ளிக் குதித்துக் கொண்டு ஒட்டமாக ஓடி சுமார் இருநூறு கஜ தூரத்திற்கப் பால் போய்த் திரும்பிப் பார்த்தவரும், திரும்பாமலேயே தலைதெறிக்கப் பறந்தவருமாய்த் திக்காலுக் கொருவராய்ப் பிரிந்து போயினர்.
அவ்வாறு சிதரி ஓடியவர்களுள், உடம்பைத் திறந்து கொண்டிருந்த காவல் ஆள்களைவிட, சட்டைமேல் சட்டைகள், நிஜார், பூட்ஸ், கணைக்கால் பட்டிகள் முதலிய அலங் காரங்களோடிருந்தவர்களே அபாரமான கிலியடைந்து அதிக தூரத்திற்கப்பால் போய் நின்றனர்.
காவல்காரர்களில் சிலர் முதல் அச்சத்தினாலும், மற்ற வர்கள் வந்து விழுந்து மோதியதனாலும் மருண்டு சிறிது தூரம் ஓடினார்களானாலும், பையிருந்த பாகத்தில் இடை வெளி ஏற்பட்டதையும், பாம்புகள் மூலைக்கொன்றாய் ஓடி யதையும் கண்டு துணிவுகொண்டு பாய்ந்தோடு பாம்புகளைத் துரத்தித் தம் கைகளிலிருந்த தடிக்கம்புகளால் அடிக்க முயன்றனரானாலும், பாம்புகள் பக்கத்திலிருந்த பங்களா வின் வேலிக்குள் நுழைந்து ஒரே நிமிஷத்தில் மாயமாக மறைந்து விட்டன.
அதற்குமேல் காவல் ஆட்கள் துணிந்து பை கிடந்த இடத்தண்டை செல்லத் தொடங்கினர்.
தூரத்தில் நின்றவர்களில் சிலர், “இன்னம் பைக்குள் எங்கேயாவது பாம்பு மறைந்திருக்கப்போகிறது; ஜாக்கிரதை யாகப் போங்கள்.’ என்று கூறி எச்சரித்தனர். காவற்காரர் கள் துணிவாகவே சென்று பையின் கிழிப்பட்ட பாகங்களை இப்புறமும் அப்புறமும் மாறி மாறித் தூக்கி உதறிப் பார்த்து, வேறு பாம்பு இல்லையென்று உறுதிகூற, அதுவரை யில் தூரத்தில் நின்றவர்கள் எல்லோரும் திரும்பி வந்து சேர்ந்தனர்.
முதலில் எஸ்.ஆர். ஐயர் பையை அறுத்துக் கித்தானை இரண்டாய்ப் பிரித்துவிட்ட காலத்தில், பாம்புகள் புஸ் புஸ்ஸென்று சீறிக் கிளம்பியதைக் கண்டு எல்லோரும் கிலி கொண்டு நிலைகலங்கித் தமது அறிவை இழந்து தம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதொன்றிலேயே தமது கவ னத்தைச் செலுத்தினராதலால், பாம்புகளைத் தவிர பைக் குள் என்ன இருந்தது என்பதை உற்றுக் கவனிக்க சந்தர்ப் பம் இல்லாமல் போய்விட்டது. யாரோ ஒருவருடைய உடம்பு அதில் இருந்ததென்ற மொத்தமான உணர்ச்சி மாத்திரம் பொறித்தட்டும் காலத்தில் எல்லோர் மனத்திலும் ஏற்பட்டதானாலும், அதற்குமேல் எவரும் அந்த விஷயத் தில் கவனம் செலுத்த இயலாமல் போயிற்று.
ஆயினும், பாம்புகள் ஓடிப்போன பின், எல்லோரும் திரும்பிப் பையண்டை நெருங்கி வந்து ஆவலோடு உற்றுப் பார்க்கவே, ஸ்வர்ண பிம்பம் போன்ற சாயலோடு கூடிய அற்புதமான அழகு வாய்ந்த ஒரு ஸ்திரீயின் உடம்பு எவ் வித ஆடையுமின்றி முழு நிர்வாணமாய் இருந்ததை எல்’ லோரும் கண்டு, “ஹா! ஐயோ! என்ன அக்கிரமம் இது ! என்ன காரியம் செய்திருக்கிறார்கள் படுபாவிகள்! ஐயோ!” பார்க்கக் கண்கூசுகிறதே !” என்று பதறிக் கூச்சலிட்டனர்.
அப்போதே எஸ். ஆர். ஐயரும் அங்கு நெருங்கி வந்தா ராதலால் அங்கு கிடந்த அற்புத தேஜஸோடு கூடிய ஸ்திரீ” யைப் பார்த்தவுடன், “ஹா! ஐயோ! என் சம்சாரமல்லவா இப்படிக் கிடக்கிறாள்! ஆ! கொடுமையே! உயிரோடிருக்கும் பெரிய பாம்புகளோடு இவளைப் பையில் போட்டுத் தைத் திருக்கிறார்களே கொடும்பாவிகள்! ஐயோ! என் ராஜாத்தீ! என்று வாய்விட்டுக் கதறி, அபாரமாகத் தம்மனதில்கு ரென்று பொங்கி யெழுந்த திகில்,விசனம், அநுதாபம் முதலிய உணர்ச்சிப் பெருக்கினால் மேற்கொள்ளப்பட்டு மயங்கி மூர்ச்சித்து மரம்போலப் படேரென்று தரையில் சாய்ந்து பிணம்போலாய் விட்டார்.
அந்த சமயத்தில் மற்ற எல்லோருடைய கவனமும், அங்குகிடந்த ஸ்திரீரத்னத்தின்மீதே சென்று லயித்துப் போயிருந்ததன்றி எல்லோருடைய மனமும் சகிக்க வொண்ணாத விசனப்பெருக்கிலும் பிரமிப்பிலும் ஆழ்ந்து போயிருந்ததனால், எஸ்.ஆர்.ஐயர் மூர்ச்சித்து வீழ்ந்ததை எவரும் கவனிக்கவில்லை.
அப்போது போலீஸ் கமிஷனர் டாக்டரை நோக்கி, “உயிர் இருக்கிறதா என்று பாருங்கள்” என்று மிக ஆவு லோடு கூற, உடனே டாக்டர் தமது ரப்பர் குழாயை எடுத்து அந்த ஸ்திரீயின் மார்பின்மீது வைத்து ஹிருதயத்தின் நிலைமையை ஆராயத் தொடங்கினார். அதற்குள் அங்கிருந்த காவலாட்களில் ஒருவன் எஸ். ஆர். ஐயருடைய உடம்பிலிருந்த அங்கவஸ்திரத்தைச் சரேலென்று எடுத் துப் பிரித்து, முழு நிர்வாணமாய்க் கிடந்த அந்த ஸ்திரீ யின் உடம்பில் போர்த்தவே, டாக்டர் அந்த வஸ்திரத்தின் மேல் தமது ரப்பர் குழாயை வைத்து வைத்துப் பார்க்கத் தொடங்கினார்.
அவ்வாறு சுமார் ஐந்து நிமிஷம் வரையில் உடம்பின் பல பாகங்களைப் பரீட்சித்துப் பார்க்கப் பார்க்க டாக்ட ருடைய முகம் விசனகரமாக மாறிப்போயிற்று. அவர் கமிஷனரைப் பார்த்து ஏமாற்றக் குறியாக உதட்டைப் பிதுக்கி, “உயிர் போய்விட்டது.” என்றார்.
அதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் பெருத்த ஏக்கமும், விசனமும், முகவாட்டமும் அடைந்தனர். முக்கியமாகப் போலீஸ் கமிஷனரே நிரம்பவும் அதிகமாய் மனவேதனைப்பட்டுத் தவித்தது அவரது முகக்குறியில் நன்கு தெரிந்தது.
அவர் உடனே டாக்டரைப் பார்த்து,”உயிர் போய் எவ்வளவு காலம் ஆயிருக்கும்? மறுபடி மூச்சை உண் டாக்க, இரண்டு விலாவைப் பிடித்து அழுத்தி அழுத்திப் பாருங்களேன். ஒரு வேளை மறுபடி சுவாசப் பைகள் வேலை செய்ய ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாமே” என்று குழந்தைபோலப் பேசினார்.
அதைக் கேட்ட டாக்டர் அசட்டுப் புன்னகை செய்த வராய் தமது உதடுகளை முன்னிலும் அதிக சப்பையாய்ப் பிதுக்கி முகத்தை இப்புறம் அப்புறம் அசைத்து, ”உயிர் போய் சுமார் எட்டுமணி நேரமாவது கழிந்திருக்க வேண்டும். இனி நாம் உபசாந்திகள் செய்து, பொய் மூச்சை உண்டாக்க முயலுவது பயன் தராது. சுவாசப் பைகள் விரைத்துப்போய்விட்டன. இனி அவை துருத்தி போல சுருங்கி விரியா. நாம் விலாக்களை அழுத்தினால் கூட அவை மரக்கட்டைபோலவே இருக்குமன்றி மழமழப்பா யிரா.” என்றார்.
கமிஷனர், ‘மரணம் எதனால் ஏற்பட்ட தென்பது தெரிகிறதா? பாம்புகள் கடித்ததனால் உயிர் போயிருக் குமோ?” என்றார்.
டாக்டர், “அப்படியும் இருக்கலாம். அல்லது அடித்து உபத்திரவித்துக் கொலை செய்து பைக்குள் போட்டுத் தைத்த போது பாம்புகளையும் உள்ளே போட்டிருக்கலாம்.” என்றார்.
கமிஷனர், “என் அப்படிச் செய்யவேண்டும்?” என்றார்.
டாக்டர், “இந்த அம்மாளின் புருஷர் முதலியோர் மனதில் பெருத்த திகிலை உண்டாக்கும் பொருட்டு அப் யடிச் செய்திருக்கலாம். ஆனால், நான் இப்போது இவ் விடத்தில் எதையும் நிச்சயமாய்ச் சொல்லமுடியாது. இந்தப் பிணத்தை நம் வைத்திய சாலைக்குக் கொண்டு போய்ப் பகலில் நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தே முடிவான அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவேண்டும்” என்றார்.
கமிஷனர், “சரி; பிணத்தை எடுத்து மோட்டாரில் போடச் செய்து, வைத்திய சாலைக்குக் கொண்டு போங்கள். நான் நாளைய பகலில் வந்து உங்களைப் பார்க்கிறேன். மூர்ச் சித்துக் கிடக்கும் எஸ். ஆர். ஐயரை மோட்டார் வண்டியில் வைத்து அவருடைய பங்களாவுக்குக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டு மூர்ச்சையைத் தெளியவையுங்கள். அவருடைய ஆள்கள் வழக்கப்படி அவருக்குப் பாதுகாப்பா யிருக்கட்டும்” என்று கூறினார்.
உடனே சிலர் பிணத்தையும், அது கட்டப்பட்டிருந்த கித்தான் பையையும் எடுத்து டாக்டருடைய மோட்டார் வண்டியில் ஏற்றினர். டாக்டரும், சில ஜெவான்களும் அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்துகொள்ள, அது புறப் பட்டு ஓடியது.
சிலர் எஸ்.ஆர். ஐயரைத் தூக்கி அவருடைய மோட் டார் வண்டியில் படுக்கவைக்க, மோட்டார் ஒட்டி அதை மெதுவாக விட்டுக் கொண்டு சென்றான். அவரைச் சேர்ந்த காவலாட்கள் எல்லோரும் வண்டியைச் சுற்றிப் பாதுகாப்பாகச் சென்றனர்.
பிறகு போலீஸ் கமிஷனர் தம் சிப்பந்திகளோடு மோட்டாரில் ஏறி உட்கார்ந்துகொண்டு தமது பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்.
மறுநாள் மாலையில் வெளியான பத்திரிகைகளில் ஷ பயங்கரமான சம்பவத்தைப்பற்றிய விவரங்கள்யாவும் பிரசு ரிக்கப் பட்டிருந்ததன்றி,டாக்டர் பிணத்தைச் சோதனை செய்து பார்த்துக் கூறிய அவருடைய முடிவான அபிப் பிராயமும் சேர்க்கப்பட்டிருந்தது. பிணத்தின் வெளிப் பக்கத்தையும்,உட் பக்கத்தில் ஜீவாதாரமான பாகங்களை யும் வேறு சில வைத்திய நிபுணர்களை வைத்துக் கொண்டு சோதித்ததில், அடிகள் முதலிய தேகபாதை எதனாலும் மரணம் நேர்ந்ததாகச் சொல்வதற்கே இட மில்லை. உடம்பில் பல இடங்களில் பாம்பின் விஷப்பற்கள் அழுந்திய குறிகள் காணப்படுகின்றன வானாலும், உடம்பிற் குள் பாம்பின் விஷமே ஏறியிருக்கவில்லை யாகையால், பாம்புக் கடியினாலும் மரணம் நேரவில்லை என்பது நிச்சய மாகத் தெரிகிறது. ஹிருதயத்தின் நிலைமையை ஆராய்ந் ததில், திடீரென்று அபாரமான திகிலும், மன அதிர்ச்சியும் ஏற்பட்டதனால், ஒரே க்ஷணத்தில் சடேரென்று ஹிருத் யம் நின்றுபோயிருக்க வேண்டு மென்று நிர்ணயிப்பதற் குப்போதிய குறிகள் இருக்கின்றன. ஆகையால், இந்தக் காரியத்தைச் செய்த மனிதர்கள் அடியில் வருமாறு இதை நடத்தி இருக்கலா மென்று யூகிக்க வேண்டியதாகிறது.
அதாவது, இந்த அம்மாள் மாலை வேளையில் ஆடை களை விலக்கி விட்டு மறைவில் குளித்துக் கொண்டிருந்த. சமயத்தில் திடீரென்று பல முரட்டு மனிதர்கள் பாய்ந் பலவந்தமாகப் பிடித்துத் தூக்கிக் கித்தான் பைக்குள் புகுத்தி யிருந்தாலும் இருக்கலாம்; அல்லது, இரண் டொருவர் கைகால்கள் முதலியவற்றை அழுத்திப்பிடித் துக் கொள்ள, மற்றவர் ஆடைகளை விலக்கி இருக்கலாம். பிறகு இந்த அம்மாள் நிர்வாணமாய்க் கித்தான் பைக்குள் போடப்பட்டிருக்கலாம். அப்படிச் செய்தபின், அவர்கள் நான்கு பாம்புகளைக் கித்தான் பைக்குள் போட்டு அதன் வாயை மூடித் தைத்திருக்கலாம். பாம்புகள் தன் உடம் பில் வந்து விழுந்த வுடன், இந்த அம்மாள் சகிக்க இயலாத திகிலும், மன அதிர்ச்சியும் அடைய, அதனால், உடனே ஹிருதய ஓட்டம் நின்றுபோ யிருக்கலாம். பாம்புகளின் பற்கள் பட்ட குறிகள் பல இடங்களில் காணப்படுகின்றன வானாலும், விஷம் உடம்பில் ஏறாதிருந்ததை கவனித்தால், பாம்புகள் விஷமற்ற தண்ணீர்ப் பாம்பாக யிருக்க வேண் டும், அல்லது, விஷப் பற்கள் தீய்க்க பெற்ற பாம்புகளாயிருக்க வேண்டும் என்ற அநுமானமே ஏற்படுகிறது. பை தைக்கப்பட்ட பிறகு அவர்கள் அதைத் தூக்கிப் பல இடங்களில் வைத்ததில், உள்ளே இருந்த பாம்புகளின் மீது இந்தப்பிணத்தின் பளு உறைத்ததனால், அவைகள் கோபங் கொண்டு தங்களுடைய வெறும்பற்களினால் பல இடங் களில் கடித்திருக்கலாம். இவையன்றி, இன்னோர் அநுமான மும் செய்ய இடமிருக்கிறது. பலவந்தமாய் ஆடைகளை விலக்கும் போதும், அல்லது, இந்த அம்மாளைத் தூக்கிப் பைக்குள் திணிக்கும்போதும், பாம்புகளை உள்ளேபோட்ட போதும், இந்த அம்மாள் ஓங்கிக் கூச்சலிட்டு அலறியிருப் பது சகஜமே. ஆனால் வாயில் துணி அடைக்கப்பட்ட தாகத் தெரியவில்லை. ஆகையால், இந்த அம்மாள் கத்தி னாலும், அது பிறருக்குக் கேட்காத இடத்தில் இந்தக் காரியம் நடத்திருக்க வேண்டுமென்றும் நாம் கருத வேண்டி யிருக்கிறது. எனவே, இந்தப் பை தைக்கப்பட் டது வரையில் ஆன காரியங்கள் சென்னைப்பட்டணத்திற்கு வெளியிலுள்ளதும், ஜனப்பழக்கமில்லாததுமான ஓரிடத் தில் நடத்திருக்கவேண்டும்.
என்பது போன்ற அபிப்பிராயத்தை டாக்டர் தெரி வித்தாராதலால்,மரணவிசாரணை செய்த ஜூரிகள் முதலி யோர் அதைத் தழுவியே தமது தீர்மானத்தைக் கூறி, அந்தப் பிணத்தை எஸ். ஆர். ஐயரிடம் கொடுத்து விடலா மென்று உத்தரவிட்டனர்.
அந்த வரலாறும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட தாகையால், அதற்கு முன் போலீஸ் கமிஷனரால் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு இது பரிகாரமாய் முடிந்தது.
எஸ். ஆர். ஐயரை மோட்டாரில் படுக்கவைத்துக் கொண்டு போய், அவருடைய பங்களாவில் படுக்கையில் விட்ட ஆள்கள் அவருக்குச் செய்த உபசாந்திகளின் பய னாய் அவர் தெளிவடைந்து விழித்துக் கொண்டு தமது மனையாள் முன்னிரவிலேயே இறந்துபோ யிருக்க வேண்டு மென்று டாக்டர் கூறியதையும், அவளது பிணம் வைத்திய சாலைக்குப் போய்விட்டதென்ற செய்தியையும் கேட்டு, “ஐயோ ஐயோ” வென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு விழுந்து புரண்டு குழந்தைபோலக் கோ வெனக் கதறி யழத் தொடங்கிவிட்டார்.
பங்களாவிலிருந்த சிப்பந்திகளும் காவலாட்களும் அவரது பரிதாபகரமான நிலைமையைக் கண்டு நிரம்பவும் இரங்கி இளகி அவருக்குத் தேறுதல் மொழிகள் கூறி அவரை உபசரித்தனரானாலும், அவருடைய அபாரமான விசனம் தணிவதாகவே தோன்றவில்லை. அவர் தமது பாங் கியின் சம்பத்து முழுதையும் இழந்திருந்தால்கூட அதில் நூற்றில் ஒரு பங்குகூட வருந்தியிருக்கமாட்டார்; மகா சித்ராங்கியான தம் இளைய மனையாளை இழந்த விசனத்தில் அவருடைய மனதும் உடம்பும் கட்டிலடங்காமல் வேத னைப்பட்டு உருகித் தவிக்கும்படி செய்துவிட்டதாகையால் அவர் எவருடைய ஆறுதல் மொழியையும் பொருட்படுத் தாது ஓயாமல் தலையில் கைகளால் அறைந்து கொண்டு, ”ஐயோ என் ராஜாத்தி போயிட்டாளே! ஐயோ, நான் இன் னமே எப்பிடி இருக்கப்போறேன்! ஐயோ, என் ராஜாத்தி போயிட்டாளே! ஐயோ, நான் இன்னமே எப்பிடி இருக்கப் போறேன்” என்ற பல்லவியைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஓலமிட்டுப் புலம்பிக் கண்ணீரை ஆறாய் ஓடவிட்ட வராய்த் தமது படுக்கையிலேயே அன்றைய பகல் முழுதும் புரண்டுகொண்டு கிடந்தார்.
அவருடைய மனையாளின் சவத்தைப் பரிசோதனை செய்த முக்கிய டாக்டரின் அபிப்பிராயத்தை அவர் தெரிந்து கொள்ளவே, அவருடைய அபரிமிதமான விச னப் பெருக்கிற்குத் துணையாகப் பெருத்த திகிலுணர்ச்சியும் சேர்ந்து கொண்டு அவரைச் சித்திரவதை செய்யத் தொடங்கியது.
தம் எதிரி தமது மனைவியின் ஆடைகளை விலக்கி சுத்த நிர்வாணமான நிலைமையில் அவளை கித்தான் பையில் சொருகிய காலத்திலும், பாம்புகளை அதற்குள் போட்ட காலத்திலும் அவளுடைய மனதும் உடம்பும் என்னபாடு பட்டிருக்குமென்பதையும், அந்த சமயத்தில் அவளுக்குண் டான பீதியும் குலைநடுக்கமும் எப்படி இருந்திருக்குமென் பதையும் அவர் மனதால் நினைத்துப் பார்க்கப் பார்க்க. தே க்ஷணத்தில் அவருடைய உயிரும் போய்விடுமோ என்று அஞ்சும்படியான நிலைமையை அவர் அடைந்தார்.
தம் எதிரியின் விஷயத்தில் எவ்வித கெடுதலும் செய்யாதவளான தம் இளைய மனையாளை மகா பயங்கரமான அவ்வளவு கொடிய தண்டனைக்கு உட்படுத்திக் கொன்று அதைத் தாமும் முகதாவில் பார்க்கும்படி செய்திருக்கும் ஈவிரக்கமற்ற பரம துஷ்டனான தமது பகைவன், தனது கடிதத்தில் எழுதியபடியே கடைசிவரையில் எல்லோருக் கும் தண்டனைகள் செய்து வைப்பான் என்ற நிச்சயம் அப்போதே அவருடைய மனதில் ஏற்பட்டுப்போய் விட்ட தாகையால், எந்த சமயத்தில் ஸ்வர்ணாம்பாள், சுந்தரி,கிருஷ் ணமூர்த்தி ஆகியோரையும் தாம் அதே நிலைமையில் பார்க்க. நேருமோ என்ற நினைவும், எந்த சமயத்தில் அந்த எதிரி தம் இரண்டு கண்களையும் அம்பட்டன் கத்தியால் சீவி எடுக்கப்போகிறானோ என்ற நினைவும் தோன்றத் தோன்ற, அவைகள் அப்போதே தம் கண்களின்முன் செய்கையில் நடப்பதுபோல அவர் அப்போது முதலே உணர்ந்து மரண வேதனை அனுபவிக்கத் தொடங்கினார்.
மறு நாளைய இரவில் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட தமது மனையாளின் சவத்தைத் தமது பங்களாவில் கொணர்ந்து வைத்துக்கொண்டு, எஸ். ஆர். ஐயர் அதன்மீது விழுந்து புலம்பி முட்டி மோதி யடித்துக்கொண்டு கதறி யழுது அன்றைய இரவையும் மறுநாள்பகலில் பெரும்பாகத் தையும் அதேவிதமான துக்க வெறியில் கழித்து, பிணத்தை எடுத்துப் போய்க் கொளுத்த மனமற்றவராய்க் கிடந்து தவிக்க, மற்றவர்களது வற்புறுத்தலின்மேல் அந்தப்பிணத் திற்கு தகன கருமம் நிறைவேறியது. எஸ். ஆர். ஐயர் நெருப் புச்சட்டியை எடுத்துக்கொண்டு நடந்து செல்லமாட்டாமல் சோர்ந்து துவண்டு முற்றிலும் செயலற்றுப் போய்விட்டாரா தலால், அவர் மயானத்திற்குப் போனதும் திரும்பிவந்ததும் மோட்டார் வண்டியின் உதவியினாலேயே நடைப்பெற்றன.
அவ்வாறு தகன காரியத்தை முடித்துவிட்டு வந்தவர் இனி பிழைக்கமாட்டார் என்று பிறர் சந்தேகிக்கத் தக்க மகாகேவலமான நிலைமையை அடைந்து படுத்த படுக்கை யாய் விழுந்துவிட்டார்.
எஸ்.ஆர்.ஐயருடைய இளைய மனையாளின் சவம் கி கித் தான் பைக்குள் திரும்பி வந்த சம்பவத்தைப் பற்றிய வர லாறுகள் வெளியாயிருந்த பத்திரிகைகளை கிருஷ்ண மூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும் பெற்றுப் படித்து திடுக்கிட்டுக் குலைநடுக்கங் கொண்டு அபாரமான திகிலும், விசனமும், பிரமிப்பும், கலவரமு மடைந்து தாம் உடனே புறப்பட்டு சென்னைக்குப் போவதா அல்லது வேறு என்ன செய்வது என்பதை நிச்சயிக்கமாட்டாமல் சித்தப்பிரமை கொண்ட வர்கள்போ லிருந்து கதிகலங்கித் தவித்திருந்த சமயத்தில் எஸ்.ஆர்.ஐயரிடத்திலிருந்து அவர்களுக்கு அடியில் வரு மாறு ஒரு தந்திச்செய்தி கிடைத்தது:-
மினியம்மாளையும் அப்பாத்துரையையும் நான் வேலையி லிருந்து நீக்கிவிட்டேன். அவர்கள் நம் எதிரியின் தூண்டு தலினால் அங்கே வந்து உங்களை ஏமாற்றி மாமியை அழைத்து வந்துவிட்டார்கள்; அழைத்து வந்தவர்கள் மாமி யின் புடவை, ரவிக்கை முதலியவற்றைப் பிடுங்கிக்கொண்டு அவளை கித்தான் பையில் திணித்து, அதற்குள் நான்கு பெரிய பாம்புகளையும் போட்டுத் தைத்துவிட்டார்கள். அவள் அந்த பீதியினால் உடனே இறந்து போய்விட்டாள். அந்தப் பையை எதிரி நம் பங்களாவிற்குப் பக்கத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டான். அதை நாங்கள் எடுத் துப் பிரிக்க, பாம்புகள் ஓடிவிட்டன. மாமியின் உடம்பை நான் கொளுத்திவிட்டேன்.
நம்முடைய எதிரி மாமியை எப்படிக் கொன்றா ே அதுபோலவே, உங்கள் மூவரையும் கொன்று எனக்கு அனுப்பப் போவதாகவும், முடிவில் என்னுடைய கண்களைப் பிடிங்கிவிடப் போவதாகவும் பயமுறுத்திக் கடிதம் எழுதி இருக்கிறான். அவன் அப்படியே நடத்தக் கூடியவன். என்னைப்பற்றி நான் கொஞ்சமும் பயப்படவில்லை. மாமி போனவிசனமே என்னைக் கூடிய சீக்கிரம் கொன்றுவிடும்போ லிருக்கிறது. ஆகையால், நம் எதிரி என் கண்களைத் தோண் டும் வரையில் நான் உயிரோடிருக்க மாட்டேனென்று நினைக் கிறேன். இப்போது நான் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத மகா கேவலமான துர்ப்பல நிலைமையில் இருக் கிறேன். ஆகையால், உங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நான் எவ்வித முயற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டாத அசக்தனா யிருக்கிறேன். நீங்கள் அங்கே இருப்பது நம் எதி ரிக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. ஆகையால், அவன் எப் படியாவது சூதுசெய்து உங்கள் மூவருக்கும் அபாயம் விளை விக்க முயற்சிப்பான். நீங்கள் இனி ஒரு க்ஷண காலம்கூட அந்த இடத்தில் இருப்பது உசிதமானதல்ல. நீங்கள் உடனே புறப்பட்டு, இந்த ஊருக்கு வருவதாக அங்கிருப் போரிடம் சொல்லிவிட்டு, தலைமறைவாகவே பிரயாணம் செய்து,தூரமான ஊர் எதற்காகிலும் போய் ஒளிந்துகொண் டிருங்கள். அப்படி இருக்கையில் ரகஸியமாய் எனக்குக் கடிதம் எழுதி நீங்கள் இருக்கும் இடத்தைத் தெரிவியுங் கள். அப்போது இருக்கும் நிலைமைக்குத் தக்கபடி பிறகு நாம் நடந்துகொள்ளலாம். அவசரம், ஜரூர், அசட்டை வேண்டாம். உடனே புறப்பட்டுப் போய்விடுங்கள். இல்லா விட்டால், நீங்களும் மாமியின் முடிவை அடைவது முக்கா து லும் நிச்சயம். -எஸ். ஆர். ஐயர்.
என்று எழுதப்பட்டிருந்த தந்திச் செய்தியைத் தெரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும் என்ன நிலைமையில் இருந்திருப்பார்கள் என்பதை வாசகர் களே சுலபத்தில் யூகித்துக் கொள்ளலாம். தாம் உடனே புறப்பட்டுப் பறந்துபோய் அடுத்த நிமி ஷம் புரசைப்பாக்கத்திலிருந்து தமது பங்களாவை அடைய வேண்டுமென்ற ஒரே ஆவல் கிளம்பி அவர்களிருவரையும் ஊக்கியதானாலும், அடுத்த நிமிஷம் அந்த எண்ணம் மாறி யது. ஏனென்றால், எஸ். ஆர். ஐயருடைய மனையாளைக் கடைசியாகவேனும் ஒரு தரம் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால் அந்த ஆவல் தோன்றியதாகையால், அவளுடைய தகனம் நிறைவேறிப் போய்விட்டதென்ற விஷயத்தை கவ னிக்கவே, அதற்குமேல் தாம் அவ்வளவு அவசரமாய் அங்கு போகவேண்டிய தில்லையென் றுணர்ந்தனர். ஆயினும், அவ ளிடம் ஸ்வர்ணாம்பாளும் கிருஷ்ணமூர்த்தி ஐயரும் கரை கடந்த அபாரமான வாஞ்சை வை த்திருந்தவர்களாதலால், அவள் திடீரென்று கொல்லப்பட்டுப்போனாள் என்ற செய்தி அவர்களால் தாங்க இயலாத பிரமாதமான விசனத்தை உண்டாக்கிவிட்டது. அதுவன்றி, எதிரி அவளை எவ்வித ஆடைகளுமின்றி, கித்தான் பைக்குள் திணித்து, பாம்புகளை உள்ளே போட்டுப் பையின் வாயைத் தைத்து, அவள் பெருத்த திகிலும், குலைநடுக்கமும், மன அதிர்ச்சியும் கொண்டு இறந்துபோகும்படி செய்துவிட்டானென்ற விஷ யம் சகிக்கவொண்ணாத வேதனையையும், பிரமிப்பையும், நடுக் கத்தையும் உண்டாக்கி, அவர்களுடைய மன நிலைமையை சின்னாபின்ன மாக்கிச் சிதர அடித்துவிடவே, எஸ்.ஆர். ஐயர் எப்படி சித்தப்பிரமை கொண்டவர்போல் மாறிப் போனாரோ, அதுபோலவே இவர்களிருவரும் தமது மலே வேகத்தையும், மனத் தெளிவையும், ஊக்கத்தையும் இழந்து, கேனம் பிடித்தவர்கள்போ லாயினர்.
அதுவன்றி, எதிரி தங்களையும் விடாமல், அதேவித மான பயங்கர முடிவிற்கு உள்ளாக்க எண்ணியிருக்கிறா னென்றும், ஆதலால், ஜெமீன் கிராமத்தை விட்டு எங்கேனும் ஓடி மறைந்துகொண்டிருக்க வேண்டுமென்றும், எஸ். ஆர் ஐயர் எழுதி இருந்தது அவர்களுக்கு அபாரமான ஊக்கத் தையும் ஆவேசத்தையும் உண்டாக்குவதற்கு மாறாக, அவர் கள் சோர்ந்து தளர்ந்து செயலற்று, தாங்கள் என்ன செய் வது, எங்கு செல்வது என்பதை அறியாமல் மலைத்து நடைப் பிணங்கள்போல் தவித்துத் திண்டாடும்படி செய்துவிட்டது. அந்த நிலைமையில் அவர்கள் அன்றைய பகல் முழுதும் அந்த ஊரில் இருந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு ஓர் எண்ணமுண்டாயிற்று.
அவர் சென்னையில் கலாசாலையில் படித்த காலத்தில், அவரோடுகூடப் படித்த ராமமூர்த்தி என்ற பெயருடைய ஒரு சகா மாணவனுக்கும் அவருக்கும் அந்தரங்கமான நட் யும் பிரியமும் ஏற்பட்டுப்போ யிருந்தன. அவர்கள் பல வருஷ காலம் ஒன்றாயிருந்து உயிரும் உடலும்போலப் பழ கினார்களாதலால், அவர்களுடைய படிப்பு முடிந்த பின்னர் இருவரும் பிரிந்து போகவேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது, ஒருவரை யொருவர் விட்டுப் பிரிய மனமற்றவராய் இருவரும் கோவென்று கதறி யழுதுவிட்டனர். ராமமூர்த்தி என்ற மாணவன் திருவையாற்றிற் கருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெரிய மிராசுதாருடைய ஏக புத்திரன்; அதிக செல்வாக் கும், செல்வமும் வாய்ந்தவன். முடிவாக அவர்கள் பிரிந்த காலத்தில் கிருஷ்ணமூர்த்தி எப்படியாகிலும் கூடிய சீக்கிரம் தனது கிராமத்திற்கு ஒரு நடை வரவேண்டுமென்று ராம மூர்த்தி வாக்குறுதி வாங்கிக்கொண் டிருந்ததன்றி, தன் னுடைய ஊருக்குப் போன பிறகு அதைப்பற்றி நினைப்பூட்டி கிருஷ்ணமூர்த்திக்கு அடிக்கடி கடிதங்களும் எழுதிக் கொண்டே இருந்தான். அந்த நண்பனுடைய நினைவு இந்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு உண்டாயிற்று. எனவே, தாம் தமது அபாய சமயத்தில் ராமமூர்த்தியிடம் போய் அவனுடைய வீட்டில் இருக்கலாம் என்ற யோசனை கிருஷ்ணமூர்த்தியின் மனதில் எழுந்தது. அதை அவர் ஸ்வர் ணாம்பாளிடம் தெரிவிக்க, தாம் போய்த் தங்கியிருக்கத் தக்க டம் வேறு இல்லாமையால், அவளும் அதற்கு இணங்கினாள்.
ஆனால் அங்கு போயிருப்பதில் ஓர் இடையூறு இருந்த தாகவும் கிருஷ்ணமூர்த்தி ஐயர் உணர்ந்தார். அதாவது, ராமமூர்த்தியின் சொந்தத் தாய் இறந்துபோகவே, அவ னுடைய தந்தைக்கு இரண்டாவது மனைவியொருத்தி ஏற்பட்டிருந்தாள். அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. ஆகையால் அவளுக்கு ராமமூர்த்தியிடம் பற்று தலும் அன்பும் குறைந்துபோகவே, அவள் தனது புருஷ னுக்குத் தலையணை மந்திரோபதேசம் செய்து செய்து, அவ ரும் தமது மூத்த புதல்வனை வெறுக்கும்படி செய்து வைத் திருந்தாள். அந்த விஷயத்தை ராமமூர்த்தி கிருஷ்ணமூர்த் திக்கு எழுதிய கடிதங்களில் அடிக்கடி எழுதித் தனது சிற்றன்னையின் கொடுமையை வெளியிட்டிருந்தானாகையால், தாம் அவர்களுடைய வீட்டிற்குப் போய் மாதக் கணக்கில் மறைந்திருப்பதென்றால், ராமமூர்த்தியின் சிற்றன்னை அத ற்கு சம்மதித்திருப்பாளோ மாட்டாளோ, ஒருகால், அவளே தங்களை எதிரியிடம் காட்டிக்கொடுத்துவிடுவாளோ என்ற சந்தேகங்கள் கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய மனத்தில் உண் டாகி வதைத்தன வானாலும், வேறு வகை இல்லாதிருந்தமை யால், அவ்விடத்திற்கே போகலாமென்று தீர்மானித்து,தாம் உடனே புறப்பட்டு அவசரமாய் சென்னைக்குப் போகவேண் டுமென்று அங்கிருந்த மனிதர்களிடம் தெரிவித்துவிட்டு, ஒரு குதிரை வண்டியை அமர்த்தினார். விடிய ஜாமத்திற்கு குதிரை வண்டி வந்து ஆயத்தமாக நிற்க, கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும், சுந்தரியோடு ஏறி உட்கார்ந்து காள்ள, வண்டி திருவையாற்றை நோக்கி ஒரே முசுவாய் ஓடி வரத் தொடங்கியது.
அந்த வண்டி பகல் சுமார் ஒருமணி சமயத்தில் விஷ். ணுபுரம் என்னும் கிராமத்தண்டை வந்த காலத்தில், எதிரில் வந்த சத்திரம் மணியகாரரான கைலாசையர் வண்டிக் காரனோடும், கிருஷ்ணமூர்த்தி ஐயரோடும் சம்பாஷித்து அவர்களைப் பண்ணை எஜமான் ராமாமிர்த ஐயருடைய மாளி கைக்கு அழைத்துக்கொண்டு போனது முதலிய வரலாறுகள் இந்தக் கதையின் ஆரம்பத்தில் முதலாவது அத்தியாயத் தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.
அவ்விடத்தில் அவர்களுக்கு மன்மத பீட மகா யோகீ சுவரருடைய அருள் ஏற்பட்டது, அவர் சுந்தரியை வைத் துப் பூஜை செய்ய உத்தேசித்தது, அவர்களுடைய குடும்ப வரலாற்றைக் கேட்டு பண்ணை ஐயரும், அவரது மனையாளும் தங்கள் மாளிகையிலேயே இருந்துவிடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டது, அர்த்தராத்திரியில் அம்பாள்பிரஸன்ன மானது, ஸ்வர்ணாம்பாள் சித்தப்பிரமைகொண்டு யோகீசு வரரது மந்திரரட்சையில் இருந்து குணமடைந்தது, குழந் தைப் பிராயத்தில் காணாமற்போன பண்ணை ஐயருடைய பெண்குழந்தைபோல சுந்தரியும், பண்ணை ஐயருடைய மனை யாள்போல ஸ்வர்ணாம்பாளும் இருப்பதாக பண்ணையாரும் அவருடைய மனையாளும் கருதி, அதுபற்றி மூவரிடத்திலும் அவர்கள் பரமப்பிரீதியாயிருந்தது, பண்ணையாருடைய ஏக புத்திரனான கோபாலரத்னமும் சுந்தரியும் இணைபிரியா விளையாட்டுத் தோழர் தோழிகளானது, மன்மத பீட மகா யோகீசுவரர் அந்த ஊரில் முகாம் செய்த இரண்டு மாத காலம் இவர்கள் மூவரும் அந்த ஊரிலேயே இருந்தது முத லிய வரலாறுகளை யெல்லாம் முன் னதிகாரங்களில் விரிவாகக் கூறியிருக்கின்றோம்.
இவர்களுடைய குடும்ப சங்கடங்களையெல்லாம் கேள்வி யுற்ற பண்ணையாரும் அவருடைய மனையாளும் இவர்கள் விஷயத்தில் பெரிதும் இரக்கமும் அநுதாபமும் கொண்டு இவர்களை ஷை இரண்டு மாத காலமும் மிக பத்திரமான இடத் தில் வைத்து, கண்களை இமைகள் காப்பதுபோலக் காத்து வந்தனர். யோகீசுவரரும் இவர்களுடைய குடும்பத் துன் பங்கள் எல்லாம் மிக சீக்கிரத்தில் நிவர்த்தியாகி விடுமென்று தீர்க்க தரிசனம் கூறியிருந்தாராதலால், தங்களுக்குக் கூடிய விரைவில் விமோசன காலம் ஏற்படுமென்று நினைத்து அதை எதிர்பார்த்திருந்தனர். அந்தக் காலத்திற்குள் அவர்கள் மூவரும் பண்ணையாருடைய சொந்தக் குழந்தைகள் போல வே கருதப்பட்டு மிக கண்ணியமாகவும் ஆசாபாசங்களோ டும் நடத்தப்பட்டு வந்தமையால், அவர்கள் பண்ணையா குடும்பத்தோடு ஐக்கியப்பட்டு எவ்வித வேறுபாடுமின்றி இருந்து வந்தனர். முக்கியமாய் சுந்தரியே பண்ணையார் குடும் பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் மிகக் கவர்ச்சியுடைய காந்தமாயிருந்து எல்லோருடைய பிரியத்தையும் மனத்தை யும் கொள்ளைகொண்டுவிட்டா ளாதலால்,மாறிமாறி பண்ணை யாரும் பர்வத லக்ஷ்மியம்மாளும் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு எப்போதும் கொஞ்சிக் குலாவி சீராட்டிப் பாராட்டி வந்தனர்.
அவர்களது செல்வப் புதல்வனான கோபாலரத்னம் எப் போதும் சுந்தரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே ஓடி யாடிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தா னாதலால் இருவரும் உடலும் உயிரும்போல் ஒன்றுபட்டு சதாகால மும் இணைபிரியா அன்னியோன்னிய நட்பினர் ஆய்விட்ட னர். சிற்சில சமயங்களில் பண்ணையாரும், அவருடைய மனை யாளும் சுந்தரியை வைத்துக் கொஞ்சி அவளது மழலை மாறாச்சொற்களாகிய தேவாமிருத விருந்தை ஆநந்தமாகச் சுவைத்துக்கொண்டிருக்கையில், கோபாலரத்னம் அவளை விளையாட்டிற்கு அழைக்க அங்கு வந்துவிடுவான்; சுந்தரியும் அவனோடு செல்ல ஆவல்கொண்டு துடிப்பாள். அப்போது பர்வதலக்ஷ்மியம்மாள் சுந்தரியைத்தூக்கி மார்போடணைத்து முத்தமிட்டு, “ஏண்டி கண்ணு, நீ ஆருக்கு வாக்கப்படப் போறே?” என்று மிகக் கொஞ்சலாகக் கேட்பாள்.
சுந்தரி புன்னகையோடு கோபாலரத்னத்தைப் பார்ப் பதும் நாணிக் கோணிக் கண்களை மூடிக்கொண்டு முகத்தை அந்த அம்மாளுடைய மார்பில் புதைத்துக்கொள்வதுமாய் சகிக்கவொண்ணாத இன்ப உணர்ச்சியில் கிடந்து தவிப்பாள்.
உடனே பர்வதலக்ஷ்மியம்மாள் மேன்மேலும் கொஞ்சி முத்தங்கள் கொடுத்து, “சுந்தரீ, வெக்கப்படாமெசொல்லு, நீ யாருக்கு வாக்கப்படப்போறே, நம்ப கோபுக்குத்தானே? ஆமான்னு சொல்லு, பயப்படாதே ” என்று கூறி நயமாக ஊக்குவாள்.
சுந்தரி தனது கண்களை மூடிக்கொண்டிருந்தபடி, ஆமா” என்று மிக வசீகரமாகத் தனது தலையை அசைப்பாள்.
அதைக் கேட்டு பண்ணை ஐயரும், பர்வதலக்ஷ்மியம்மா ளும் ஸ்வர்க்கலோகத்தையே நேரில் பார்த்து விட்டவர்கள் போலக் கரைகடந்த ஆநந்த வெள்ளத்தில் கிடந்து திளைத் துக் கலகலவென்று நகைத்துப் பூரித்துப் பொங்கிப் போவார் கள். அவ்வாறு அவர்கள் சுந்தரியிடத்தில் அபரிமிதமான ஆசாபாசங்களைக் கொண்டதற்கு அடிப்படையான காரணம் அதற்கு சுமார் பதினேழு வருஷ காலத்திற்குமுன் காணா மற்போன ஐந்துவய தடைந்திருந்த அவர்களுடைய மூத்த பெண்ணைப்போலவே சுந்தரி அழகு, சாயல், நிறம், முக அமைப்பு, தேகத்தோற்றம் முதலிய எல்லா அம்சங்களிலும் இருந்ததே. தமது செல்வ புதல்வனான கோபாலரத் னத்திற்கு வாழ்க்கைப்பட சுந்தரி விரும்புகிறாளா வென்று கேட்டது வெறும் பேச்சோடு நிற்பதற்கன்று. சதிபதிகள் இருவரும் உண்மையிலேயே சுந்தரியைத் தம் குமாரனுக்கு வாழ்க்கைப் படுத்திவிட வேண்டுமென்று மனப்பூர்வமான வேட்கை கொண்டு துடித்தன ராதலால், அவர்களுடைய மனத்தி லெழுந்த எண்ணம் அடிக்கடி வார்த்தை மூலமாய் வெளிப்பட்டது. ஏனெனில், சுந்தரியை எப்போதும் பார்ப் பது காணாமல்போன தங்கள் குழந்தையை தத்ரூபம் நேரில் காண்பது போன்ற மகிழ்ச்சியையும் உள்ளப் பூரிப்பையும் உண்டாக்கிய தாகையால், அவர்களுடைய மனதில் அந்தத் தீர்மானமே சதாகாலமும் தலையெடுத்து நின்றது.
அவர்கள் தங்கள் விருப்பத்தை கிருஷ்ணமூர்த்தி ஐயர், ஸ்வர்ணாம்பாள் ஆகியோரிடத்தில் கூடத் தெரிவிக்கவும், அவர்களுடைய சம்மதியைப் பெறவும் உள்ளுக்குள் ஆவல் கொண்டு துடித்தன ரானாலும், ஸ்வர்ணாம்பாளின் தாய் சமீபகாலத்தில் இறந்ததனாலும், எஸ். ஆர். ஐயர் நோயில் படுத்திருக்கிறா ரென்ற செய்தி வந்துகொண் டிருந்தமை யாலும், அவர்களுடைய பகைவன் ஸ்வர்ணாம்பாள். முதலி யோருக்கு ஏதேனும் கெடுதல் செய்வானோ என்ற பீதி அப்போதும் மாறாமல் இருந்தமையால், ஸ்வர்ணாம்பாளும், கிருஷ்ண ணமூர்த்தி ஐயரும் பெருத்த வியாகுலத்தில் ஆழ்ந்து சதாகாலமும் வேதனைப்பட்டு வாடித் துவண்டிருந்தன ராதலாலும், அந்த அசந்தர்ப்ப காலத்தில் தாங்கள் கல்யாணப் பிரஸ்தாபத்தை எடுப்பது யுக்தமானதன்றென நினைத்து பண்ணையாரும், பர்வத லக்ஷ்மியம்மாளும் தங்கள் மனத் துடிப்பை அடக்கிக் கொண்டிருந்தனரானாலும் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் ஜாடை ஜாடையாய்த் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி, கல்யாண விஷயத்தைப்பற்றி அடிக்கடி கோடி காட்டிக்கொண்டே இருந்தனர்.
கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும் அவர்க ளுடைய கருத்தைத் தெரிந்து கொண்டு, தங்கள் பெண் சுந்தரிக்கு அதைவிட மேலான, அல்லது, அதற்கு சமதை யான இடம் இந்த உலகத்தில் கிடைக்காதென்றும், அந்தக் கல்யாணம் கூடிய சீக்கிரம் நிறைவேறவேண்டுமென்று தாங்க ளும் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் தங்கள் குடும்பத்தாருக்கு நேர்ந்துள்ள இடர்கள் யாவும் நீங்கியவுடனே ஷ விவாகத்தை முடித்துவிடலா மென் றும் சொல்லி வந்தனர்.
அந்த நிலைமையிலேதான் {மன்மத பீட மகா யோகீசு வரர் தமது பரிவாரங்களுடன் அந்த ஊரை விட்டுப் புறப் பட்டுச் சென்றார்.
யோகீசுவரர் அந்த ஊரில் தங்கியிருந்த காலத்தில் அதிமானுஷ அற்புதச் செய்கைகள் பலவற்றைச் செய்து காட்டி எல்லோரும் பிரமிப்படையும்படி நடந்து கொண்டா ரென்பது வாசகர்களுக்குத் தெரிந்த விஷயம்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பண்ணையாருடைய மாளி கையின் சகலமான பாகங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வந்தாராதலால், அப்போது அவர் பண்ணையாருடைய காணாமற் போன பெண்ணின் படத்தைப் பார்க்கவே, அச் சமயம் ராமாமிர்தையர் அந்தப் பெண் தமது முதற் குழந்தை யென்றும், அது ஐந்தாவது பிராயத்தில் திடீ ரென்று காணாமல் போய்விட்டதென்றும், தேடிப் பார்த் துப் பார்த்து அதன் பொருட்டு சுமார் லக்ஷம் ரூபாய் வரை யில் செலவிட்டுத் தாங்கள் ஓய்ந்து போய் விட்டதாகவும், அந்தப் பெண்ணை இழந்ததனால் தங்களுடைய ஆயுட்காலம் முழுதும் தாங்கள் சந்தோஷமற்ற வாழ்க்கை நடத்திவருவ தாகவும், பகவான் தங்களுக்கு சகலமான ஐசுவரியத்தையும் ஏராளமாக வாரி விட்டிருந்தாரானாலும் அந்த ஒரு விஷ யத்தில் மாத்திரம் ஆறாத்துயரை நிரந்தரமாய் வைத்துவிட் டார் என்றும், அந்தக் குழந்தை அப்போது உயிரோடிருக் கிறதா, இறந்துபோய்விட்டதா என்ற விஷயத்தை யோகீசு வரர் தமது ஞான திருஷ்டியால் பார்த்துச் சொன்னால், அது தங்களுக்கு ஒருவித ஆறுதலைத் தருமென்றும் மிகப் பணி வாக யோகீசுவரரிடம் விக்ஞானம் செய்து கொண்டார்.
அந்தப் பெண்ணின் அபூர்வமான அழகையும், முக விலாஸத்தையும் கண்ட யோகீசுவரர் அது காணாமற்போ னதைப்பற்றி விசன மடைந்தாரானாலும், இரண்டொரு நிமிஷகாலம் தமது கண்களை மூடி,மூக்கின்மேல் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டு தமது அகக்கண்ணால் உண்மை யை ஆராய்ந்து பார்க்க முயன்ற பின்னர் தமது கண்களைத் திறந்து,”ஐயரவாள்! நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பூஜை செய்யும் பராசக்தி தேவியின் மூலஸ்தானம் சென் னைக்கடுத்த திருவொற்றியூரில் இருக்கிறது. நான் கூடிய விரைவில் அந்த ஊருக்குப் போய்ச்சேர உத்தேசிக்கிறேன். நான் அங்கே போய் ஜெபம் பண்ணினால் பராசக்தி தேவி என் கண்முன் பிரஸன்னமாவாள். இந்த விஷயத்தை அவ ளிடம் விக்ஞாபனம் செய்து, இதன் உண்மை வரலாற்றை அறிந்து உங்களுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அது வரையில் பொறுத்திருங்கள்” என்று மறுமொழி கூறியிருந் தார்.
அது வன்றி, கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பா ளும் கடைசியாக யோகீசுவரரது பாதங்களில் வீழ்ந்து அவருடைய ஆசியைப் பெற்றுக்கொண்ட காலத்தில் யோகீசு வரர், “உங்கள் இருவரையும் பார்க்கும்போது தான் என் மனம் நிரம்பவும் சங்கடப்பட்டுத் தவிக்கிறது. உங்கள் குடும் பத்திற்கு நேர்ந்துள்ள இடர்களைக் கேட்டதுமுதல், உங்க ளுக்கு சீக்கிரம் நல்ல காலம் பிறக்க வேண்டுமென்று நான் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யும்போ தெல்லாம் பிரார்த் தித்துக்கொண்டேதா னிருக்கிறேன். உங்கள் அல்லல்க ளெல்லாம் சூரியனுக்கு முன் பனியென அதிசீக்கிரம் நீங்கி விடுமென்று அம்பாள் நல்ல குறி காட்டி யிருக்கிறாள். நான் உங்களை மறந்து விடுவேனென்று நினைக்கவேண்டாம்.நான் சக்தி தேவியின் மூலஸ்தானத்திற்கு இன்னம் சில தினங் களில் போய்ச் சேருவேன். அங்கே நான் ஜெபம் செய்து பராசக்தி தேவியின் சூலாயுதத்தை ஏவி, உங்கள் எதிரி எங் கிருந்தாலும் அவனுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவனை என்முன் கொண்டுவரச் செய்து, அவனுக்கு நல்ல புத்தி புகட்டி, இனி அவன் உங்களுக்கு எவ்வித அபாய மும் விளைவிக்காதபடி செய்கிறேன். கூடிய சீக்கிரம் என் னிடமிருந்து உங்களுக்கு சந்தோஷச் செய்தி வரப்போகி றது.நீங்கள் உங்களுடைய வியாகுலத்தையும் சோர்வை யும் விட்டு சந்தோஷமாயிருங்கள்” என்று திருவாய் மலர்ந்து, அவர்களிருவரையும் ஆசீர்வதித்து, ஸ்வர்ணாம் பாளின் முகத்தையும் கடைக்கண்களால் குளிரக் கடா க்ஷித்துப் புன்முறுவல் செய்தருளினார்.
அது வன்றி, இன்னொரு முக்கியமான விஷயத்தையும் யோகீசுவரர் தெரிந்து கொண்டிருந்தார். பண்ணையாரும், அவருடைய மனையாளும் சுந்தரியைத் தம் குமாரன் கோபால ரத்னத்திற்கு வாழ்க்கைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நிரம்பவும் ஆவல் கொண்டிருந்ததையும் அதற்கு கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும் சம் மதித்திருந்ததையும், அந்த மகான் அறிந்திருந்தார்.
ஆகவே சகலமான விஷயங்களிலும் இரண்டு குடும்பத் தாருக்கும் அநுகூலம் ஏற்படுவதற்கு அவர்கள் மன்மத பீட மகா யோகீசுவரருடைய தெய்விக சக்தியிலேயே பூர்த்தி யான நம்பிக்கை வைத்து, அவரையே மலைபோல மதித் திருந்ததன்றி, அவருடைய ஸ்ரீமுகம் தங்களுக்கு எப்போது கிடைக்குமென்று ஆவலோடு எதிர்பார்த்து, ஒவ்வொரு நாளைய தபாலின் வருகையையும் கவனித்தபடியே இருந்தனர்.
யோகீசுவரர் அந்த ஊரை விட்டுப் போய் சுமார் ஒரு வாரகாலம் கழிந்தது. அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீமுகம் வந்து சேர்ந்தது. பண்ணை ராமாமிர்த ஐயர் அதை வாங்கி இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மற்றவர்களையும்கூட வைத்துக்கொண்டு படிக்க, அது அடியில் வருமாறு எழுதப் பட்டிருந்தது:-
மகா-ற-ஈ-ஸ்ரீ விஷ்ணுபுரம் பண்ணை ஐயரவாள் சமு திற்கு போலிச்சாமியார் பொன்னுசாமி ஐயர் மிக வணக்க மாய் எழுதிக் கொள்ளும் விக்ஞாபனம். அநேக நமஸ்கார உபய குசலோபரி.
இதில் உபயோகிக்கப்பட்டுள்ள “போலிச்சாமியார்” என்ற சொற்களைப் படிக்கும்போதே நீங்கள் திடுக்கிட்டு பிரமித் துப்போவீர்களென்பது நிச்சயம்! அப்போது உங்கள் மனம் எவ்விதமான சந்தேகங்களையும் எண்ணங்களையும் கொண்டு தவிக்குமென்பதையும், உங்களுக்கு என்மேல் எவ்வளவு அதீதமான கோபாவேசம் உண்டாகுமென்பதையும் நான் நன்றாயறிவேன். இந்த சமயத்தில் நான் உங்களுக்கெதிரில் இருந்தால், என் பாடு என்ன ஆகுமென்பதையும் நான் என் மனதால் சுலபத்தில் பாவித்துணர்கிறேன். ஆனாலும் உங்களுடைய ரௌத்திராகாரமான கோபம் என் வரை யில் எட்டக்கூடாத தூரத்தில் நானிருக்கிறே னாகையால், துணிந்து சில உண்மைகளை உங்களுக்கு விக்ஞாபனம் செய்துகொள்ள எண்ணுகிறேன். நான் என்னைப் போலிச் சாமியார் என்று குறித்துக் கொள்வதிலிருந்து, கேவலம் சுயநலங்கருதிப் பிறரை வஞ்சிக்கும் பொருட்டு வெளிக் கிளம்பும் வெறுங் காஷாய வஸ்திர ருத்ராக்ஷப்பூனை என்று என்னை நீங்கள் எண்ணிவிட வேண்டாம். உண்மையில் நான் அந்த வகுப்புத் துறவி யல்லேன் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எவருக்கு உடலபிமானம், உயிரபிமானம், சுயஜாதி அபிமானம், உறவின ரபிமானம், பொருளபிமானம், பரம் பரையான மடத்து சொத்துக்கள், அதிகாரம் முதலியவற்றி லபிமானம் ஆகிய பற்றுதல்கள் இருக்கின்றனவோ, அவர் உண்மையாக உலகைத் துறந்தவராகார் என்பதை நான் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமே இல்லையென்று நம்புகிறேன்.
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.”
என்று கடவுளைக் குறிப்பதுண்டு. அதுபோல எதிலும் அல்லது எவரிடத்திலும் அதிகப் பற்றுதலும், எதன்மீதும் அல்லது எவரிடத்திலும் பகைமையும் இல்லாமல் இருப்ப வர் எவரோ அவரே உண்மையான துறவி. அந்த சம்பூர்ண லக்ஷணம் என்னிடத்தில் இல்லையாகையால் நான் என்னைப் போலிச் சாமியார் என்று குறித்துக் கொண்டேன். நான் போலிச் சாமியார் என்று என்னைக் குறித்துக் கொண்ட தறகு இன்னொரு முக்கிய காரணமு மிருக்கிறது. நான் முக்கியமான ஒரு பரோபகார தர்மத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு இந்த ராஜதானியிலுள்ள பெரும்பாலான பெரிய மனிதர்களிடம் போய் யாசித்து, கஜகரணம் கோகரணம் குட்டிக்கரணமெல்லாம் போட்டுப் பார்த்ததில், என்னை அவர்கள் சிறிதும் இலட்சியம் செய்யாமல் மிக கேவலமாக நடத்தி கருடப்பார்வை பார்த்து வெறுங்கையோடு துறத்தி விட்டனர்; சிலர் தாறுமாறாக வைது, நான் பொது நலப் போர்வையைப் போர்த்திக்கொண்டு சுய நல எண்ணத்தோடு ஊரைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறேன் என்று சொல்லி என்னைப் பலவாறு இகழ்ந்து அனுப்பினர் சிலர் மகா மூர்க்கமான மிருகம்போலக் கோபாவேசங்கொண்டு துர்ப் பாஷையை உபயோகித்து என்னை ஒட்டி விட்டனர்; மற் றும் பல மகான்கள் என்னை அடித்து பலவந்தமாகத் தம் ட்டிலிருந்து வெளியேற்றினர். வேறு பலர் ஆகட்டும் ஆகட்டுமென்று முடிவில்லாமல் வாய்தாக்கள் வைத்துக் கொண்டேபோய், நானே அலுத்து நின்று விடும்படி தந்தி ரம் செய்தனர். ஆனால் ஏராளமாகப் பணம் படைத்தவர் களைவிட, பரம ஏழைகளாயிருப்பவர்களே என் கருத்தை ஆமோதித்து, நான் படும்பாட்டைக் கண்டு என்னிடம் இரக்கமும் அநுதாபமும் கொண்டு, தம் தம்மா லேன்ற வரையில் காலணா அரையணாவாகிய சிறுசிறு தொகைகளை உதவினர்.
அந்த இனத்தில் என்னிடம் சுமார் ஐந்நூறு ரூபாய் சேர்ந்ததானாலும், நான் இந்த ராஜதானியிலுள்ள பெரும் பாலான பெரிய மனிதர்களிடம் யாசிக்கும் பொருட்டுப் பல தடவைகள் பிரயாணம்செய்து போய் அலைந்து திண்டாடியதில், என் கையில் இருந்த ஷை சொற்பத் தொகை யும் விரயமாகிவிட்டது. அதுவரையில் நான் பட்டபாடுக ளெல்லாம் விழலுக்கிறைத்த தண்ணீராய் முடிந்து போயின.
இவ்வாறு என் முயற்சிகள் ஏமாற்றத்திலும் அப ஜெயத்திலும் முடியவே, என் மனத்தில் உண்டான கோபத்திற்கும் வீராவேசத்திற்கும், நான் அளவு சொல்ல முடி யாது. சிவன் ஒரு நிமிஷகாலம் அவருடைய நெற்றிக் கண்ணை எனக்கு அந்த சமயத்தில் இரவல் கொடுத்திருந் தால், இந்த ராஜதானியிலுள்ள அத்தனை சீமான்களும், அவர்களுடைய பாபகரமான சொத்துகளும் சாம்பலாய்ப் போயிருப்பது திண்ணம். ஆனால் சிவன் அப்படிச்செய்ய முன்வரவில்லை. ஆகையால், என்னுடைய கோபாவேசமும், குரோத உணர்ச்சியும் கொஞ்ச காலத்தில் தணிந்து போயின. நான் எடுத்துக்கொண்ட பரோபகார தர்ம கைங்கரியத்தைக் கைவிட்டுவிட எனக்கு மனமில்லை.இந் தக் கட்டை அழிந்து மண்ணாகுமுன், எப்பாடுபட்டாவது சுமார் லக்ஷம் ரூபாயாவது சேர்த்து அந்த தர்ம கைங்கரி யத்தைச் செய்து விட்டால், என்னால் எத்தனையோ ஆயிரம் ஏழை ஜனங்கள் சாசுவதமான நன்மையை அடைந்து கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் என் மனதில் மூர்க்கமான ஆவேசத்தை உண்டாக்கிக்கொண்டே இருந்த தாகையால், அதற்கு முன் பணம் கொடுக்க மறுத்த லோபிகளிடத்திலிருந்தே எனக்குத் தேவையான பெருந் தொகையை வசூலித்துத் தீர வேண்டுமென்று நான் தீர் மானித்துக் கங்கணம் கட்டிக்கொண்டேன். வேறு எந்த வகையில் முயற்சித்தால், அல்லது, எந்தத் தந்திரத்தைப் பின்பற்றினால் பணம் சுலபத்தில் கழலும் என்று யோசித்து யோசித்துப் பார்த்து முடிவில் சாமியார் வேஷம் போடுவதே சரியான வழி என்று கருதினேன். வெறும் சாமியாரானால், அதனால் ஒரு பயனும் உண்டாகாதென்பதை உணர்ந்து ஒரு மடாதிபதி போலவே வேஷம் போட்டு, அதற்குரிய எடுபிடிகள், பல்லக்கு, பீடம், ஆள் மாகாணங் கள் முதலிய உபகரணங்களோடு திக்விஜயம் செய்யத் தொடங்கினால்,எப்பேர்ப்பட்ட வணங்காமுடி மன்னர்கள் கூட என் காலில் விழுந்து, என்னை ஸ்வாமி, ஸ்வாமி என்று கொண்டாடி, நான் கேட்காமலிருக்கும்போதே பெரும் பெரும் தொகைகளை என் காலடியில் கொட்டி எனக்குப் பாதபூஜையும் செய்வார்கள் என்று நினைத்து, அப்படியே செய்யத் தீர்மானித்து, இரண்டொரு வருஷகாலம் பாடு பட்டு ஒரு மடாதிபதிக்கு வேண்டிய சாமான்களையும், ஆள் மாகாணங்களையும் காலக்கிரமத்தில் சேகரித்து அதிகப்படுத் திக்கொண்டு சுமார் ஒரு வருஷகாலத்திற்கு முன்னிருந்து நான் பூண் நூலை அறுத்துப் போட்டுவிட்டு, காஷாய வஸ் திரமணிந்து, ஏகதண்டத்தைத் தாங்கி, மடாதிபதியின் பட் டத்தை எனக்கு நானே உண்டாக்கிக் கொண்டு திக்விஜயம் செய்யப் புறப்பட்டேன்.
இந்த உலகில் என் தாயாரைத் தவிர நான் வேறு உறவி னரைப் பார்த்தறியேன். நான் நிர்ணயந் தவறாத பிரம்ம சாரி. என் தாய் சம்பூர்ணமான துர்ப்பாக்கியவதி. அவள் ஒரு பணக்கார சாஸ்திரியாருடைய புத்திரி யென்று என் னிடம் பல தடவைகளில் சொல்லி யிருக்கிறாள். என் தகப் பனார் பெரிய லக்ஷப்பிரபு. என் தாயார் மகா பரிசுத்தமான குணவொழுக்கமுடைய உத்தமியானாலும், பார்வைக்குக் கறுப்பாயும், முகத்தில் அம்மைத் தழும்புகள் நிறைந்த வளாயுமிருப்பாள். வெளித்தோற்றத்தில் அவள் பிரம்மா வால் அப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்ததே அவள் தன் புருஷனுக்குச் செய்த மன்னிக்க முடியாத துரோகம். என் தகப்பனார் பெரிய லக்ஷாதிபதியாகையால், என் தாயார் மேல் பொய்யான பழிகளைச் சுமத்தி அவளை விலக்கிவிட் டார். அப்போது நான் என் தாயாருடைய கர்ப்பத்தில் இருந்தேன். என் தாயாரை விலக்கிய என் தகப்பனார் அழ கில்லையென்று விலக்கி யிருந்தால், அவள் தன் தாய் வீட்டிற் குப்போ யிருப்பாள். அவள்மீது இழிவான பழியைச் மத்தி அவளை அவர் விலக்கி விட்டாராகையால், அவள் தன் தாய் வீட்டிற்குப் போகக் கிலேசமடைந்து வீடு வீடாய் நுழைந்து நாராயண முஷ்டி எடுத்தும், சில வீடுகளில் சம யல் முதலிய சாக்கிரி வேலைகள் செய்தும் தன் ஜீவனத்தை மானமாய் நடத்தி, என்னைப் பெற்று அரும்பாடுபட்டு வளர்த்து எனக்கு வாரச்சாப்பாட்டுக்கு இடங்கள் தேடிக் கொடுத்து, தர்மப் பள்ளிக்கூடங்களில் என்னைப் படிக்க வைத்து ஆளாக்கி விட்டாள். அந்தப் புண்ணியவதி இன்னமும் ஒரு வக்கீலின் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
நான் ஏதேனும் உத்தியோகத்தில் அமர்ந்தாவது, ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த வேண்டுமென்று அவள் எனக்குச் சொன்னாளானாலும், எனக்கு இந்த உலகத்தில் வெறுப்பும் விரக்தியும் உண்டாகி விட்டன. என் தாயார் எனக்கு அவ்விதம் புத்தி போதித் தாளானாலும், அவளும் என்னைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாய் இந்த உலக வாழ்க்கையில் வெறுப்பும் விரக்தி யும் கொண்டு உண்மைத் துறவிபோல் இருந்து வருகிறாள்.
அவளுடைய உதாரணத்தைப் பின்பற்றி நானும் அதே மனப்போக்கைப் பெற்று உண்மையில் இந்த உலகத்தில் வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் இருந்துவரப் பழகிக் கொண்டேன். ஆனாலும், நான் இளம்பிராயத்துப் பையனா யிருப்பதாலும், நான் எனக்கு பிரம்மாவால் ஏற்படுத்தப் பட்ட என் ஆயுட்காலத்தைப் போக்கவேண்டியவனா யிருங் தமையாலும், குடும்ப வாழ்க்கை உத்தியோகம் முதலிய வற்றை வகித்து எனக்கென வாழாமல், ஏழை ஜனங்களுக் குப் பரோபகாரமான சில தர்ம கைங்கரியங்களைச்செய்து பிறர்க்காக வாழ்வதிலேயே என் பொழுதையும், என் பாட் டையும், என் கவனத்தையும், என் உடலையும், என் உயிரை யும் அர்ப்பணம் செய்து அதில் ஈடுபட்டிருந்தே இந்தக் கட்டையைப் போடவேண்டுமென்பது என் கருத்தாதலால், அதற்காகவே, நான் ஆதியில் பொருள்தேட முயன்று, ஏமாற்றமடைந்து, பிறகு யுக்தி செய்து மடாதிபதியின் ஸ்தானத்தை வகித்துக்கொண்டேன். ஆகவே, மடாதிபதி யின் ஸ்தானத்தை வகிப்பதிலும், கேவலம் பணத்தைச் சேகரிப்பதோடு வீண் பொழுது போக்கக்கூடா தென்று நினைத்து, ஒழிந்த காலங்களில் பாமர ஜனங்களுக்கு நம் மத தத்துவங்களிலுள்ள மேம்பாடுகளையும், தவறான கொள் கைகளையும் என்னாலேன்ற வரையில் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.
அதுவன்றி, நான் அதிக காலம் இந்தப் பொய்யான வேஷத்தில் இருந்து பிறரது பொருளைக் கொள்ளைகொள்ள விரும்பவில்லை. ஆகையால் கூடிய சீக்கிரத்தில் எனக்குத் தேவையான தொகையைச் சேகரம் செய்து உடனே இந்தப் போலி வேஷத்தைக் கலைத்து நான் கருதிய தர்ம கைங்கரி யத்தில் ஈடுபடக் கருதினேனாகையால், ஜனங்களிடத்தி லிருந்து பணத் தொகைகள் துரிதத்தில் பெயரும்படி தந்திரத்தினால் சில ஜாலவேடிக்கைகள் செய்யும் முறைகளையும் நான் கற்றுக்கொண்டேன்.
ஆனால் வெறும் ஜால வேடிக்கைகளை மாத்திரம் காட் டும் பீ தாம்பரைய்யர், தொம்பக் கூத்தாடிகள் முதலியோ ருக்கு அதிக மதிப்போ, பெருந் தொகைகளோ கிடைப்ப தில்லையாகையால், நான் தந்திர ஜாலங்களை யெல்லாம் என் னுடைய மந்திர சக்தியினாலும், தபோ பலத்தினாலும் நடப் பதுபோலக் காட்டி நடித்தேன். பெரிய மடாதிபதியின் தானத்தை வகிப்பவர் ஜால வித்தைகளைக் கையாடினாலும் ஜனங்கள் அவைகளை ஜாலவித்தைகள் என்று மதிக்க மாட்டார்களல்லவா.
உதாரணமாக, நான் உங்கள் ஊரில் தங்கியிருந்த காலத்தில் செய்த சில அதிமானுஷச் செய்கைகள் எல்லாம் வெறும் ஜாலவித்தைகளே! மறுநாள் குழந்தையை வைத் துப் பூஜை செய்வதென்றால், முதல்நா ளிரவில் குழந்தை யும் தாயும் என் பூஜை மண்டபத்திற்குப் பக்கத்தில் பரி சுத்தமாகப் படுத்துக்கொள்ள வேண்டுமென்று கட்டளை இடுவேன்; தாய்க்கு அம்பாள் பிரஸன்னமாவாள் என்றும் நான் சொல்லி வைப்பேன். இரவில் நான் பெண் வேஷம் போட்டுக்கொண்டு, சரஸ்வதி போல மயில் முதலியவற்றை வைத்துக் கட்டிக்கொண்டு சுவரண்டை போய் இருளில் நிற்பேன். என் காரியஸ்தர் ஒருவர் பல நிறங்களைக் காட் டும் ஒரு வெளிச்ச யந்திரத்தை என் பக்கம் காட்டி பல நிறங்கள் காட்டும்படி திருப்புவார். தூக்கக் கலக்கத்தில் என் னைப் பார்ப்பது பெருத்த பிரமிப்பையும் பயபக்தியையும் உண்டாக்கிவிடும்.
அந்த சமயத்தில் நான் அந்த ஸ்திரீயோடு தந்திர மாகப் பேசி, அவளுடைய குடும்ப ரகஸியங்களை கிரகித்து, பின்னால் அவைகளை சமயோசிதமாய் உபயோகித்து. நான் என் ஞானதிருஷ்டியால் அவைகளைத் தெரிந்து கொண்டதுபோல நடிப்பேன்.
அதுவுமன்றி, என் கையில் ஒரு பெரிய பூச்செண்டை வைத்திருப்பேன். அதற்கு நடுவில் ஒரு சிறிய சீசாவில் மயக்கத்தை உண்டாக்கும் குளோரபாரம் என்னும் மருந் தை மறைத்து வைத்திருப்பேன்; அதை அந்த ஸ்திரீ முக ரும்படி தந்திரம் செய்வேன். அவள் முகர்ந்து உடனே ® மயக்கத்தில் வீழ்ந்து விடுவாள். நான் அப்போது ஒரு காரி யம் செய்வேன். அவளுடைய தலையின் பின்புறத்தில் சில ஆயுதங்களைக்கொண்டு ஓர் ஆபரேஷன் செய்து, ஊசியைக் கொண்டு ஓர் இங்கிலீஷ் மருந்தை மூளைக்குள் ஏற்றிவிடு வேன். அதை நான் ஒரு பிரபல ஜெர்மன் டாக்டரிடத் தில் கற்றுக்கொண்டேன். மூளையில் அந்த மருந்தை ஏற்றிவிட்டால், அப்போது அவளுடைய கண்களுக்கு முன் என்ன காட்சி தென்படுகிறதே அதே காட்சி சுமார் பதி னைந்து தினங்கள் வரையில் மாறாமல் நிற்கும். அவள் அது சம்பந்தமான நினைவுகளைக் கொள்வாளேயன்றி வேறு பழைய நினைவுகளை யெல்லாம் மறந்தே போய்விடுவாள்.
இந்த ஆபரேஷனை நான் ஸ்வர்ணாம்பாள் முதலிய பல ஸ்திரீகளுக்குச் செய்து, அவர்கள் பதினைந்து தினங் கள் வரையில் உலகை மறந்து அம்பாளையே நேரில் கண்டு அவளைப்பற்றிய ஸ்தோத்திரங்களையே பாடும்படி செய்தேன்.
இன்னம், நான் திருப்பதியிலிருந்து பிரஸாதம் வர வழைத்ததும் வெறும் ஜாலமே. அது, பின்புறத்தில் ரஸம் பூசப்பெற்ற இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைத் தந்திரமாகப் பொருத்தி, எனக்குப் பின்னாக வைத்துக்கொண்டு, அவற்றிற்குப் பின்னால் ஆள்களை மறைத்துவைத்து, சாமான்களை அவர்களிடம் கொடுத்து வாங்குவதே அந்த ஜாலம். அந்தக் கண்ணாடிகளின் முன்பக்கத்திலுள்ள ஓரங்கள் இரண்டும் இடைவெளியின்றி ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை முன்பக்கம் கூராகவும் பின் பக்கத்தில் விரிந்துமிருக்கும். கண்ணாடிகள் வைக்கப் பட்டிருப்பதோ, அவற்றிற்குப் பின்னால் ஆள் இருப்பதோ முன்னால் இருப்பவருக்குத் தெரியாது. கண்ணாடிகள் ஓர் ஆள் உயரம்வரையில் இருக்குமாதலால், நான் என் தலைக்குமேல் கைகளை உயர்த்தும்போது எனக்குப் பின் னுள்ள கண்ணாடிகளுக்கு அப்பால் மறைந்துள்ள மனிதர் சாமான்களை மேலே உயர்த்தி நீட்டினால், சாமான்கள் மாத்திரம் ஆகாயத்தில் தெரியும். அவை அந்தரத்தில் வருவதுபோலிருக்கும்.
திருவிழாக்காலங்களில் எட்டுக்கால், எட்டுக்கை, பாடுந் தலை முதலிய காட்டப்படும் ஜாலம் இதேமாதிரியான கண் ணாடி ஜாலமே. இதன் உதவியாலேயே நான் திருப்பதிப் பிர ஸாதம் வரவழைத்தேன். அங்கிருந்து வந்ததாகக் காட் டிய பாத்திரங்களில் நாமம் முதலியவை இருந்தால், ஜனங்க ளுக்கு அது பூர்த்தியான நம்பிக்கையை உண்டாக்குமென்று கருதி வேண்டுமென்றே நான் சில பாத்திரங்களில் நாமம் முதலிய திருப்பதிக்கோவில் சின்னங்களைப் போட்டு வைத் துக் கொண்டிருக்கிறேன். கடைசியில் நான் வாயு ஸ்தம் பனம் செய்து பீடத்தோடு உயர்ந்தது காந்தத்தினால் செய் யப்படும் ஜாலம். என்னிடத்தில் இருக்கும் பீடம் இலே சான இரும்புத் தகட்டினால் செய்யப்பட்டது. அதற்குமேல் தங்க முலாம் பூசி இருக்கிறேன். நான் வாயு ஸ்தம்பனம் செய்ய எண்ணும் தினத்தில் நான் என்னுடைய பீடத்திற்கு மேல் உச்சியில் புஷ்பப்பந்தலின் மறைவில் ஒரு பிரம்மாண் டமான காந்தப்பாளத்தை வைத்து, அது மூடப்பட்டிருக் கும் உறையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து விடும்படி ஓர் ஆளையும் மறைத்து வைத்தால், காந்தப் பாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் திறக்கத் திறக்க, அது இரும்புப் பீடத்தை மெதுவாய் மேலே இழுக்கும். பீடம் அந்தரத்தில் நிற்கும். அதன்மேல் நானும் உட்கார்ந்திருப்பேன்.
இவ்விதமான பல ஜாலங்களை நான் சமயோசிதமாக மற்ற ஊர்களிலும் உங்கள் ஊரிலும் காட்டி உங்கள் எல் லோரையும் ஏமாற்றினேன். இத்தந்திர ஜாலங்கள் எல் லோருடைய பணங்களையும் ஏராளமாகப் பிடுங்கி என்னி டம் கொடுத்துவிட்டன. நான் எதிர்பார்த்ததைவிட மிக சொற்பகாலத்தில் எனக்குத் தேவையான பொருளைவிடப் பன்மடங்கு அதிகமான பொருள் குவிந்துபோய் விட்டது. நான் மடாதிபதி வேஷம் போட்ட ஒரே வருஷத்தில் எனக்கு ஐந்து லக்ஷம் ரூபாய் வந்து குவிந்துபோய் விட் டது. இனி எனக்குப் பணமும் தேவையில்லை. நான் மடாதிபதி வேஷம் போடவேண்டிய அவசியமும் தீர்ந்து போய் விட்டது. உங்களைப்போன்ற பக்த கோடிகளின் அபிமான விசேஷத்தால், இனி நான் ஆதிமுதல் கோரிய பரோபகார தர்ம கைங்கரியத்தைத் தொடங்கப் போகிறேன்.
இனி நான் வெறுங் காஷாயவஸ்திர ருத்ராக்ஷப் பூனை யான போலிச்சாமியாரா யிராமல், வேண்டுதல் வேண்டா மையை விட்ட உண்மைத் துறவியாகவே இருந்து, இந்தக் கடடையை வீழ்த்த வேண்டுமென்ற தீர்மானத்தைக் கடைப்பிடித்து நிற்கிறேன்.
இந்தக் கடிதத்தில் நான் எழுதியுள்ள விஷயங்களை நீங்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்களாதலால், இவை களைப் படிக்கும்போது நீங்கள் திடுக்கிட்டு அப்படியே பிர மித்து ஸ்தம்பித்துப் போவீர்களென்பது நிச்சயம். அது வன்றி, இந்த இரண்டு மாதகாலமாய்ப்பட்ட பாடுகளும், செலவிட்ட பணங்களும், அடைந்த அசௌகரியங்களும், கொஞ்சமும் அருகமற்ற ஒரு போலிச்சாமியார் பொருட் டல்லவா என்ற நினைவும், அபாரமான வேதனையும்,மனக் கொதிப்பும், ஏமாற்றமும், ஏக்கமும் உங்களுக்கு உண்டா வதும் சகஜமே. அதுவன்றி, இரண்டு மாதகாலமாய் யாரோ ஒரு சிறு பையன் பல்லாயிரக்கணக்கான வயோதிகர் கள் தன் காலில் வீழ்ந்து வணங்கும்படி செய்து பிரமாதமான கபட நாடகத்தை நடத்தி, எல்லோரையும் வஞ்சித்து ஏமாற்றி விட்டானே என்ற எண்ணமும், சகிக்கவொண் ணாத கோபாவேசமும் உங்கள் எல்லோர் மனத்திலும் பொங்கி யெழுந்து உங்களை அபாரமாய் உலப்புவதும் சகஜமே.
நான் செய்யப்போகும் பெரிய ஏழை ஜன தர்மகைங் கரியத்திற்காக வென்றே நான் உங்களெல்லோரையும் இவ் வளவு அதிகமான கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாக்கிவிட்டே னாகையால், நான் செய்யப்போகும் அந்த தர்ம காரியத்தினால் ஏற்படும் புண்ணியம் பெரும்பாலும் உங்களையே சேர்ந்த தாகும்.
அது மாத்திரமல்ல. “பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்திற்கு ஆயிற்று” என்று பாமர ஜனங்கள் ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதைப்போல, நான், சென்ற ரண்டு மாதகாலம் உங்கள் ஊரில் தங்கியிருந்ததில், சில பயங்கரமான அபாயங்களைத் தடுப்பதற்கும், வேறு எவராலும் செய்ய சாத்தியமற்ற ஒரு பேருபகாரத்தை உங்க ளுக்குச் செய்யவும் தெய்வச்செயலாக எனக்கு சந்தர்ப்பம் வாய்த்தது. அவைகளை நான் சொல்லி விளக்கினால், உங் கள் மனதில் இப்போது தோன்றும் ஏமாற்றம், கோபா வேசம் முதலிய உணர்ச்சிகள் யாவும் உடனே அபாரமான சந்தோஷமாய் மாறுவது திண்ணம். ஆனால் அவைகளை நான் இப்போது நிச்சயமாய்ச் சொல்லக்கூடாத நிலைமை யில் இருக்கிறேன். என்னுடைய அடுத்த கடிதத்தில் நீங் கள் இப்போதைக் காட்டிலும் நூறுமடங்கு அதிகமாய் பிர மிக்கும்படியான புதுமைகள் இருக்குமென்று நான் நம்புகிறேன்.
காணாமல் போ உங்கள் பெண் குழந்தையின் படத்தை நான் பார்த்தகாலத்தில், நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி செய்து கொடுத்தேன். அதாவது, நான் தி ரு வொற்றியூரை யடைந்தவுடன், மூலஸ்தானத்திலுள்ள பரா சக்திக்கு ஜெபம் செய்து, காணாமல் போன குழந்தை இப் போது உயிரோடிருக்கிறதா இறந்து போய் விட்டதா என்பது போன்ற தகவல்களைக் கேட்டுத் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தேன்.
அதுவுமன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஸ்வர்ணாம்பாள் ஆகியோருக்கும் நான் இது போலவே ஒரு வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு வந்தேன்; அதாவது, பராசக்தி யின் சூலத்தை ஏவி, அவர்களுடைய விரோதியைக் கொண்டுவரச் செய்து, அவன் இனி அவர்களுக்கு எவ்வித அபாயமும் விளைவிக்காதபடி திட்டப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அவைகளையும் நான் மறக்கவில்லை.
ஆனால், நான் தந்திரங்களினால் ஜாலவித்தைகள் செய்து காட்டும் போலிச்சாமியார் என்பதை நானே ஒப் புக்கொண்டு விட்டேனாகையால், பராசக்தியை நான் என் ஜெபத்தின் வல்லமையினால் வரவழைத்து, அவளுடன் பேசு வது, அவளுடைய சூலத்தை ஏவுவது ஆகிய விஷயங்க ளெல்லாம் வெறும் காற்று மூட்டை என்பதை நானே உங் களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பராசக்தி யென்பது போலிச்சாமியாரான என் ஜெபத்திற்குக் கட்டுப் படக் கூடியதல்ல; நான் உண்மைச் சாமியாரா யிருந்தாலும் கூட, அப்போதும் அது என்னை இலட்சியம் செய்யக்கூடிய தல்ல. இந்த உலகத்திலுள்ள வேறு எப்பேர்ப்பட்ட யோகியாலோ, மந்திரவாதியாலோ, வெறும் ஜெபத்தினாலும் இச்சாமாத்திரத்தினாலும் பராசக்தியை வசப்படுத்த இய லாது. பராசக்தி யென்பது இந்தப் பிரபஞ்சத்திலடங்கி யுள்ள சகலமான இயற்கைச் சக்திகளையும் குறிக்கிறது. கடவுளின் இச்சாமாத்திரத்தால் ஏற்பட்டு, நிரந்தரமா யிருந்து வரும் சட்டதிட்டங்களுக்கு பராசக்தி உட்பட்டு நடந்து கொள்ளும். மனிதர்களாகிய நாம் ஜெபம் செய்வ தாலோ, இச்சைப்படுவதாலோ எந்த சக்தியும் நம் பிரியப் படி நடந்து கொள்ளாது. நாம் தந்திரத்தினாலும், தக்க கருவிகளினாலும் இயற்கைச் சக்திகளை அடக்கி, அவை நம்மிச்சைப்படி நடந்து கொள்ளும்படி செய்யலாமேயன்றி, நாம் மனதால் மாத்திரம் நினைத்து ஏவினாலோ அல்லது கைகளைக் கட்டி மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்த படி விரும்பினாலோ, எந்த சக்தியும் நம்மைப் பொருட்படுத் தாது. சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவருக்குத்தான் வெறும் இச்சாமாத்திரம் எதையும் ஆக்கி அழித்து மாற் றும் மகிமை உண்டு. மனிதருக்கு அந்த மகிமை இல்லை.
ஆகையால், பராசக்தியின் மூலமாகவோ, அநுமான் உபாசனையினாலோ, யக்ஷணி, குறளி, முருகன் முதலிய இன்னதென்று தெரிந்துகொள்ள முடியாத குட்டித் தெய் வங்களின் உபாசனையினாலோ, எவரேனும் அதிமா நுஷச் செய்கைகளை நடத்தப் போவதாகவோ, நடத்துவதாகவோ சொன்னால், அதை நீங்கள் சுத்த அண்டப்புளுகென்று மதித்து அசட்டை செய்வீர்களென்று நம்புகிறேன். மனித ருடைய செய்கை முயற்சியினாலும், யந்திர தந்திரச் சூழ்ச்சி களினாலும் மனிதன் அரிய பெரிய காரியங்களைச் சாதிக் கலாமென்பது மாத்திரம் நிஜமேயன்றி, மந்திரத்தில் மாங் காய் விழுமென்பது வடிக்கட்டின மோசம்.
ஆகவே, நான் திருவொற்றியூரிலுள்ள பராசக்தியின் மூலஸ்தானம் என்று குறித்தது, நான் எப்போதும் இருந்து முயற்சிகள் செய்து காரியங்களை நிறைவேற்றும் என் சொந்த ஜாகையையே. அங்கே நான் வந்து சேர்ந்து முக்கியமாய் நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்த விஷயங்களிலேயே என் கவனத்தைச் செலுத்திக்கொண் டிருக்கிறேன். கூடிய விரைவில் எல்லாத் தகவல்களையும் நிச்சயமாகத் தெரிந்து கொண்டு அவைகளை அடுத்த கடிதத்தில் உங்களுக்கு எழு தலாமென்று நம்புகிறேன்.
ஆனால் இப்போது ஒரே ஒரு விஷயம் எனக்கு நிச்சய மாகத் தெரிந்துபோய் விட்டது. அதை மாத்திரம் உங் களுக்கு இப்போது தெரிவித்து விடுகிறேன். திருவல்லிக் கேணி பிரபல பாங்கரும், இப்போது மரணப்படுக்கையாய்ப் படுத்திருப்பவரும், சுமார் 25 லக்ஷம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்களை தற்காலம் இம்பீரியல் பாங்கியில் போட்டி ருப்பவருமான எஸ். ஆர். ஐயருக்கும் ஸ்வர்ணாம்பாளுக் கும் எவ்வித பாந்தவ்வியமும் இல்லை; ஸ்வர்ணாம்பாள் சமீப காலத்தில் கொல்லப்பட்டுப் போன அவருடைய இளைய மனைவிக்கு ஜனித்தவளன்று. ஆகையால், தன் சொந்தத் தாய் பயங்கரமான நிலைமையில் இறந்துபோய் விட்டதாக எண்ணி அவள் விசனத்திலாழ்ந்து ஏக்கங்கொண்டு சோர்ந் துக் கிடப்பதற்கு, இது ஒருவிதப் பரிகாரமா யிருக்கு மென்று நம்பி இந்தத் தகவலை நான் முன்னாகத் தெரிவிக்கிறேன்.
ஆனால் இந்த உலகத்தில் துன்பம் கலவாத இன்ப மில்லை என்று சொல்வதற்கிணங்க, இந்த சந்தோஷத்தில் அவளுக்கு ஒரு பெரிய தீமையும் அடங்கி யிருக்கிறது. ஸ்வர்ணாம்பாளுக்கும், எஸ். ஆர். ஐயருக்கும் எவ்வித பாங் தவ்வியமுமில்லை யென்ற நிச்சயம் ஏற்பட்டதில், அவ ருடைய அபார சம்பத்திற்கு அவளே எகபோக வார்சுதாரி என்னும் உரிமை இருந்து வந்ததும் இப்போது இல்லாமல் போய்விட்டது.
இவ்வளவே நான் உங்களுக்குத் தெரிவிக்கக்கூடிய நிச் சயமான செய்தி. மற்றவைகளை மேலும் தீர விசாரித்துப் பின்னால் எழுதுகிறேன்.
இங்ஙனம் உங்களை
என்றும் மறவாத
போலிச்சாமியார் பொன்னுசாமி ஐயர்.
என்று மிக நீளமாய் எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த பண்ணை ஐயரும், அதைக்கேட்ட மற்றவர்களும் என்ன நிலைமையில் இருந்திருப்பர் என்பதை வாசகர்கள் சுலபத்தில் யூகித்துக் கொள்வார்களாதலால், நாம் அதை விஸ்தரித்துக் கூறுவது மிகையானதே.
– தொடரும்…
– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.
![]() |
வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க... |
