வறுமை
கதையாசிரியர்: கே.ஆனந்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 14,921
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
பிரமாண்டமாகப் படம் எடுப்பதில் பேர் வாங்கியிருந்த அந்த இளம் டைரக்டர், முன்னணி படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக்கொண்டு இருந்தார்… “நாம இப்போ எடுக்கப்போற படம், வறுமையைப் பத்தின படம் சார்!”
“சொல்லுங்க…”
“மக்களின் வறுமைக்கு என்ன காரணம், இதைப் போக்க என்ன செய்யணும்னு ஆக்கபூர்வமா
அலசப்போற படம்…”
“ம்…”
“ஹீரோ பரம ஏழை. சோத்துக்கே திண்டாடறான். நோயாளியான அம்மா, குடிகார அப்பா, கூடப் பொறந்த தங்கச்சிங்கன்னு எல்லாரையும் காப்பாத்தப் போராடறான். அவன் கடைசியில என்ன ஆகிறான்கிறதுதான் கதை!”
“சரி சரி… பட்ஜெட் எவ்ளோனு சொல்லவே இல்லியே?”
“அதிகம் இல்லே, ஐம்பது கோடி சார்!” என்றார் டைரக்டர்.
– 15th ஆகஸ்ட் 2007
தொடர்புள்ள சிறுகதைகள்
கழுகின் ஒரு நாள்
சு.அப்துல் கரீம்
August 10, 2026
அம்மா வீடு
என்.ஸ்ரீதரன்
August 10, 2026
உண்மையான வள்ளல்
ரா.நீலமேகம்
August 10, 2026