வந்தடையும் மரணம்
கதையாசிரியர்: நுஸ்பா இம்தியாஸ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 95

நம் வாழ்வின் முடிவு
நம்மை நெருங்கி வரும் வரை…
நம் மனதில் என்றும் அழியாத நினைவுகளாய்….
ஓர் தனியிடத்தைப் பிடிக்கும் உன்னதமான பாச ஜீவன்கள் நம் ஆசான்கள்…
நமது அறிவுக் கண்களை திறந்துவிட போராடும் அவர்களின் நேசக் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரின் காரணத்தை யார்தான் அறிவார்கள்…?
இதோ ஒரு ஆசானின்
போராட்ட வாழ்க்கை….
பள்ளி செல்லும் ஒரு பிள்ளை…. தாயின்அரவணைப்புக்காய் ஏங்கும் பாலகன்…
நோயால் இழுத்துப் போட்ட அவளை பெற்றெடுத்தவள்…
ஆயிரம் கனவுகளோடு கரம்பிடித்த கணவனின் பாரதூரமான நோய்…
இவைகளோடு வீட்டுவேலைகளின் போராட்டம்…
வாழ்வாதாரத்திற்கான
போராட்டம்…
இவைகளுக்கு மத்தியில்… தான்பெற்றெடுக்காத மாணவச்செல்வங்களின் எதிர்கால வாழ்வை உயர்த்தி விடுவதற்கான முயற்சிகள்…
இதைப் புரிந்து கொள்ளாது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கிப் பேசி மனதைப் புண்படுத்தும் ஒருசில மாணவர்களின் குத்தல் வார்த்தைகள்…
பெற்றோர்கள் சுட்டிக் காட்டும் குறைகள்…
எல்லா வலிகளையும் தனக்கான உடல் வலியையும் தலைக்கு மேல் சுமக்க முடியாது போராடும் ஓர் போராட்டம்…
தன் வேதனைகளை சக ஆசிரியர்களிடம் கூறமுடியாது தவித்த தவிப்பு…
எல்லாம் ஒருங்கிணைந்து அவளைத் தாக்க மாரடைப்பால் தலைசாய்ந்தாள்…
அதுவும் அவள் கற்ற
பல ஆண்டுகளாய் கற்றுக் கொடுத்த அதே பாடசாலையின் மேசையில்…!
தட்டிப் பார்க்கிறாள் மற்றொரு ஆசிரியை
உயிர் பிரிந்திருப்பது தெரிந்தது…
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்…
கூறிய ஆசிரியை கலங்குகிறாள்…
எல்லா உயிர்களும் போராட்டத்தோடே மரணிக்கின்றது….
தண்ணீரில் மீன்
அழுதால் கண்ணீரை யார் அறிவார்?
உயிரோடு இருக்கும் வரை அவ்வாசிரியரின் கண்ணீர் மீன் அழுத கண்ணீராகிவிட்டது.