மும்முனைப்போட்டி…

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 6,055 
 
 

மொழிகளுக்கு இடையேயான அந்த மும்முனைப்போட்டி கீர்த்திவாசனின் மூக்குக்கு மேல் கோபத்தை முட்டிக் கொண்டு வரச்செய்தது.

விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை. என்றாலும், கீர்த்திமானுக்கு கோபம் வந்தது நியாயம்தான்.

கீர்த்திவாசன் எப்படி கீர்த்திமானானான் என்றுதானே யோசிக்கிறீர்கள்? கதை முடியும்போது காரணம் புரியும்!

‘ஹச்!’சுன்னு தும்மியது அந்த இரண்டே வயதான குழந்தை. பெய்தபெருமழையில் குப்பைகூளம் மழைநீரிலும், தூசு தும்பை காற்றிலும் கலந்து நோய்க்கு வழி வகுத்தது .  அதனால் அந்த தும்மல்!

குழந்தை தும்மினதும் அதன் தாத்தா ‘ஆய்ஸ்மான் பவ!’ என அதை ஆசீர்வதிக்க, அதன் பாட்டி தமிழில் ‘நூறாய்சு!’ என்றாள் .

ஆசிரியையாய் இருக்கும் அதன் தாயோ, தான் மட்டும் தனக்கே உரிய அறிவு மேன்மையில்(?!). “பாப்பா… தும்மல் வந்தா, அம்மா என்ன சொல்லணும்னு சொல்லித் தந்திருக்கேன்?!  ‘சாரீன்னு!’ சொல்லு என்று தன் அறிவுத் தனத்தைக்காட்ட, குழந்தைக்கு குழப்பம்… ஆய்ஸ்மான்பவ வை ஆதரிப்பதா? ஆயுசு நூறை அங்கீகரிப்பதா? சாரியைச்  சம்மதிப்பதா?!

குழந்தை உள்ளிட்டோர் குழம்புகையில் அதன் தாய் மாமன் மட்டும்,

‘தும்மல் வரும்போது ஒருவர் ஆசீர்பதற்கு ஆனந்தப்பட்டு  அங்கீகரிக்காமல் எதிர்ப்பதுபோல் அதென்ன ‘சாரி’ எனச்சொல்லி வாழ்த்தை சங்கரிப்பது?!

அது நூறாயஸ்சு! என்பதையுமல்லவா சேர்த்தே எதிர்க்கிறது. போதும் உங்கள் ஆங்கில நாகரீகம்!

எங்கம்மா கூட யாராவது வாசற்படி நடையில் நின்று தும்மினால் நல்லதல்ல எனச்சொல்லி, வாசற்படிக்கு ஒரு தம்ளர் தண்ணீர் வார்ப்பாள்…!

அதனால்தான்  தமிழுக்கும் அமிழ்தென்றுபேர்…! தமிழ் என்றைக்கும் பிறர்வாழ வழிகாட்டும்! சாரி எனும் நாகரீக நளினத்தை சாகா வரம் தரும் தமிழ் ஆயுசு நூறு என்பதே வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வித்திடும் என்றதும் மும்முனைப் போட்டியில் தமிழ் தலை நிமிர்ந்து வென்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *