மலை போன்ற மனம்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,572
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
“வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை .
“ஏதேனும் செய்தி உண்டா ?” என்றார் புலவர்.
“நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”
“பலா மரங்கள் நிறைய நிற்குமே. பலாப் பழங்கள் கிடைத்திருக்கும்”
“நாஞ்சில் வள்ளுவனைப் பார்த்தோம்”
“நல்லவன் ”
“நல்லவனா? முழு மடையன்”
“என்ன ?”
“கேளும் ஐயா கேளும். கீரைக்கறிக்கு மேலே தூவக் கொஞ்சம் அரிசி கேட்டோம்”
“கொடுக்காமலா போனான்”
“மலை போன்ற யானையைக் கொடுத்தான். பிடி அரிசி கேட்டவர்க்கு பெரிய யானை. அறியாமையல்லவா இது”
”மலை போன்ற மனம் உடையவன் என்பதைக் காட்டுகிறது”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026
வாக்கும் போக்கும்..!
வளர்கவி
May 13, 2026