கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 10,337 
 
 

மதுரை – காமராஜர் சாலையில் உள்ள கோவிலில்,

அன்றைய தினம் சிறப்பு தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமி தரிசனத்திற்கு , நீண்ட வரிசை. மக்கள் சாமிக்கு பால் , தயிர் , நெய் , என்று அபிசேகம் செய்வதற்கு தங்களால் முடிந்த பொருளை வாங்கி வந்திருந்தனர்.

அப்போது பெரியவர் சுந்தரம் , அந்த வரிசையில் வந்து நின்றார். தள்ளாத வயதிலும் , சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

வரிசையில் சென்று சாமியை தரிசனம் செய்ய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகும் , இருப்பினும் வரிசையில் சென்று நின்றார் சுந்தரம்.

அந்த வரிசைக்கு வந்து ஒரு பெண்மணி வந்து நின்றாள். நாற்பது வயதிற்குள் தான் இருக்கும்.

வரிசையில் நின்றவள் , சாமியை தரிசனம் செய்ய நேரம் ஆகும் என்பதால் உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று திட்டம் போட்டாள்.

“என்ன இன்னைக்கு இவ்வளோ கூட்டம்? சாமி பார்க்க நேரம் ஆகும் போல ? எனக்கு வேற வேலை இருக்கு?” என்று புலம்பிய படி வந்து, பெரியவர் சுந்தரத்திற்கு பின் சென்று நின்றாள்.

கையில் அபிசேகம் செய்ய பால் வாங்கி வந்திருந்தாள்.

வரிசையில் வந்து ஒரு நிமிடம் கூட நிம்மதியாக நிற்கவில்லை. புலம்பிய படியே நின்றாள்.

ஒன்னும் செய்ய முடியாது என்று நினைத்து, “சரி தள்ளுங்க , நான் உள்ளே இருக்கிற மத்த சாமிய கும்பிட்டு வாறேன்னு”, பெரியவரை இடித்து உள்ளே நுழைந்தாள்.

அதற்க்கு பெரியவர் , “அட இரும்மா. எல்லாரும் சாமி கும்பிட தான வந்திருக்கோம் , கொஞ்ச நேரம் காத்திருந்து தான் சாமிய தரிசனம் பண்ணனும், இதுலயுமா அவசர பட்றது“ என்று சுந்தரம் கூறினார்.

அதற்க்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளித்து விட்டு, வரிசையில் நின்ற அனைவரையும் இடித்து விட்டு, அவர்களின் வாயில் விழுந்து உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவள், மற்ற சாமியை பார்ப்பது போல் சென்று விட்டு, சட்டென்று அந்த சாமியின் முன் வந்து நின்றாள்.

அவள் வந்து நின்றதால், கோவிலில் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சலசலப்பு.

இருப்பினும் எதனையும் காதில் வாங்காமல், சாமிக்கு அபிசேகம் செய்ய பாலை கொடுக்க, அதனை கோவில் பூசாரி வாங்கும் போது, கை நழுவி கீழே விழுந்து பால் அனைத்தும் வீணாகி போனது.

உடனே அவளுக்கு, வரிசையில் நின்று இருந்தவர்களில் தன்னை திட்டியவர்களை நினைத்து, கடும் கோவம் வந்தது.

“எப்படி, எனக்கு நல்லது நடக்கும். ஒரு ஆள் முன்னேறி வந்திர கூடாது. அத்தனை பேருக்கும் வயித்தெரிச்சல். விளங்கதவர்கள் வாயில விழுந்து, சாமிக்கு அபிசேகம் பண்ண வேண்டிய பால் கீழே சிந்தி வீணா போச்சு. சாமிக்கு தெரியும் , எல்லாத்தையும் பார்த்துட்டு தான இருக்கிறார்” என்று அவளின் பேச்சு, சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு எரிச்சல் உண்டாக்கியது.

உடனே பெரியவர் சுந்தரம் “ஏம்மா, வரிசையில நின்னு முன்னேறி போன மாதிரி பேசுற. பண்ற தப்பு எல்லாம் நீ பண்ணிட்டு , வரிசையில் ஒழுங்கா நிக்கிற எங்களை திட்டுற. கோவிலுக்கு வர்ற எல்லாரும் மன நிம்மதி தேடி வாராங்க. அங்கேயும் இப்படி வந்து பண்ணா, எப்படி? எங்க தான் போறது? உன் ஒருத்தியால எல்லார்க்கும் சாமிய பார்க்கிற நேரத்தில் தேவை இல்லா தலைவலி. மன நிம்மதிய கெடுத்து விட்டுட்ட”, என்று கூறினார்.

இருப்பினும் அந்த பெண்மணி அவரின் பேச்சை காதில் வாங்காமல், சாமி தரிசனம் செய்வதில் மும்முரம் காட்ட துவங்கினாள்.

உடன் வரிசையில் நின்றவர்களும் தலையில் அடித்த படி, கடவுளே எங்களை காப்பது என்று சலிப்பாய் சாமி தரிசனம் செய்யும் அளவிற்கு அந்த பெண்மணியின் செய்கை இருந்தது.

உண்மையாகவே இது போன்ற சம்பவங்கள் நமது வாழ்விலும் நடந்திருக்கும்.

பொது இடங்களில் இது போன்று மற்றவர்களுக்கு தொந்தரவு / இடைஞ்சல் தருமாறு நடந்து கொள்ள வேண்டாம்.

கோவிலுக்கு பெரும்பாலனோர் மன நிம்மதி தேடி தான் வருவார்கள், அங்கே அதனை கெடுத்து விடும் படி நடந்து கொள்ள வேண்டாம்.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *