மடிமீது தலைவைத்து விடியும் வரை….!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 11,633 
 
 

அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள் அவர்கள். பிள்ளைகள் சம்பாத்தியத்தில் காதிலும் கழுத்திலும் கனத்த நகைகள் தங்கள் வசதியையும் மேன்மையையும் பறைசாற்றிப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தனஅடுத்தவர் கண்களுக்கு!.

அவற்றை எப்படியும் கொள்ளை அடித்துவிடுவது என்ற எண்ணத்தில் குறி வைத்து திட்டம் வகுத்துக் காத்திருந்தது தோட்டங்களை மட்டுமே குறிவைத்து நகை பறிக்கும் தொழிலில் ஈடுபடும் கும்பல்!.

அன்று அமாவாசை..! கும்மிருட்டில் அந்த முதிய ஜோடிகள் கரும்புத் தோட்டத்துக்குத் தண்ணீர் விட்டுவிட்டுத் திரும்பி வந்த களைப்பில் படுத்து உறங்கிப் போகையில், நியாபகம் வரவில்லை அவர்களுக்கு ‘சீசர்’ நாய்க்குச் சாப்பிட எதுவும் வைக்கவில்லை என்கிற நினைப்பு. அவர்கள் உண்ட களைப்பில் உறங்க்கிப் போக…..!

அந்தத் திருடர்கள் விஷம் கலந்த பிரியாணிச் சிக்கனை இலையோடு விரித்து நாய்க்கு கூண்டருகே வைத்து விட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

திருட வந்தவர்களின் நடமாட்டத்தையும் நடவடிக்கைகளையும் சீசரோடு சமீக காலமாய் சினேகப்பட்டுவந்த ‘சம்பக்’ ஜெர்மனியில் உருவாக்கப்பட்டு, காவலுக்காக வீட்டில் ஒய்பைவில் இணைக்கப்பட்டிருந்த ரோபோநாய்.. சீசரின் மடிமீது தலைவைத்துப் படுத்தபடி தகவல்களை ரிமோட் மூலம் போலீசுக்குப் பகிர்ந்து கொண்டிருந்தது மட்டுமல்லாமல் விஷம் கலந்த பிரியாணியைத் சீசரைத் தின்னவிடாமலும் தடுத்தது.

கதவை உடைத்துக் கத்தியோடு திருடர்கள் நுழைகையில் காவல் துறை ஜீப்பும் சப்தமில்லாமல் நுழைந்தது!

கள்வர்கள் வழுக்கிவிழுகையில் உடைந்து போன வலதுகை வலது கைகால்களை பிணைத்து இழுத்தபடி விந்தி விந்தி நடக்க, இழுத்துக் கொண்டு போனது போலீஸ்!.

கிரிக்கெட்டில் டாஸ்போடவும், கை ஆட்டி சைகை செய்யவும் மட்டுமல்ல சாமர்த்தியமாய் கள்வர்களைக் கைது செய்யவும் சம்பக்கால் முடியும் என்பதை சம்பவம் அறிவிக்க..

மடிமீது தலைவைத்து நடந்த எதையும் அறியாத அந்த முதுமைகள் இரண்டும் விடியும்வரை நிம்மதியான நித்திரையில் இருந்தன!.

‘எது எனக்கு இன்பம் நல்கும்? இருக்கின்றாள் என்பதொன்றே..!’ என்ற திளைப்பில் உயிரோடு திளைத்துக் கொண்டிருந்தன முதியோர் காதலை அந்த முதுமைகள்!.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *