பிடிக்காத மாப்பிள்ளை!
 கதையாசிரியர்: இரஜகை நிலவன்
 கதையாசிரியர்: இரஜகை நிலவன் கதை வகை: ஒரு பக்கக் கதை
 கதை வகை: ஒரு பக்கக் கதை                                             கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம்
 கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம்  கதைப்பதிவு: March 29, 2025
 கதைப்பதிவு: March 29, 2025 பார்வையிட்டோர்: 8,760
 பார்வையிட்டோர்: 8,760  
                                    (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இந்த மாப்பிள்ளை உங்கள் பெண்ணுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் சார்” என்றார் தரகர்.

“என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டார் ராஜசேகர். பெண்ணின் அப்பா.
“ஒரு தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்கிறார். ஒரு பீடி சிகரெட் கிடை யாது. வெத்தலை பாக்குப் பழக்கம் கிடையாது.
தண்ணி அடிக்கிற பழக்கமும் கிடையாது. பார்ட்டிக்களுக்குப் போனால் கூட வெறும் கூல்டிரிங்க்ஸ் தான் குடிப்பார்.
காதல் கீதல் மற்றும் பெண் சகவாசம் கிடையாது. பார்க்கிறதுக்கும் அழகாக இருப்பார்.” என்றார் தரகர்.
“மல்லிகா உன் விருப்பம் என்னம்மா? என்ன தான் இருந்தாலும் நீ கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறவள்” என்று தன் மகளிடம் கேட்டார் ராஜசேகர்.
“இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா”
“ஏம்மா?”
“சிகரெட் குடி எந்தப் பழக்கமும் கொஞ்சம் கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார். வாழ்க்கையைக் கொஞ்சம் கூட அனுபவிக்க தெரியாத இந்த மனுசனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் எப்படி இவரால் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த முடியும் வேறு மாப்பிள்ளை பாருங்கள் அப்பா” என்றாள் மல்லிகா. ராஜசேகரும், தரகரும் மலைத்துப்போய் நின்றனர்.
– இலக்கியம் பேசுகிறது, ஜூலை – ஆகஸ்ட், 1998.
|  | பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... | 
 
                     
                       
                      