பார்க்குமிடத்திலெல்லாம்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 785 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகிலேயே மிகவும் கொடுமையானது வறுமை. அதைவிடக் கொடுமையானது இளமையில் வறுமை என்று ஔவையார் சொல்லியிருக்கிறீராம். நான் சொல்கிறேன், அழகாய்ப் பிறப்பது கொடுமையானது,அதை விடக் கொடுமை ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களில் ஒருத்தி அழகுக்கு அதா ரீட்டியாகவும், இன்னொருத்தி அதற்கு திருஷ் டிப் பரிகாரமாகவும் இருப்பது.

யாமினி என் சொந்த அக்காதான். ஆனாய் நானும் ஒரு பெண் என்பதை அடிக்கடி வெளிக்காட்டிக் கொள்வதில் எனக்கு அவ னிடமிருக்கும் பாசத்தையும் நேசத்தையும் இப்படிக் குறைத்துக் கொள்கிருளே?

அழகாய்ப் பிறந்தது என் குற்றமா? இல்லை அழகே இல்லாத அவளுக்குத் தங்கையாய்ப் பிறந்தது குற்றமா?’

அப்படியே என்றாலும் திருத்த முடியாத குற்றம், இதற்காக என்மேல் கோபப்படுவது மணியார்டர் வரவில்லை என்பதற்காக தபால் காரர்மேல் எரிச்சல் படுவது போல் இல்லையா? மென்றே வஞ்சித்து விட்டது போல் சதா இயற்கை தன்னை மட்டும் வேண்டு ஒரு கடுகடுப்பு முகத்தில், அந்த வெறுப்பு அவள் முகத்தை இன்னும் கோபப்படுத்துகிறது என்று நான் எப்படிச் சொல்வேன்? அப்பாவும் அம்மாவும் என்னை ஆசையோடு பெற்றுக் கொண்ட மாதிரியும் தன்னை வெறுப்போடு பெற்றுக் கொண்ட மாதிரியும் அவள் பேசும் போது எனக்கு வெறுப்பாய் வரும். வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் ஒரு புழுவுக்கு அளிக்கும் மரியாதையை அவளுக்குக் கொடுப்பதாயும், பட்டாபிஷேக இளவரசியாய் என்ன் மதிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு அவள் சொல்லம்புகளை மௌனமாய் ஏற்றுக் கொள்வேன்.

பாவம்… அவளும் ஓர் இளம் பெண் தானே?

என் மௌனம் அவள் சொற்களை நியாயம் என்று சொல்லிவிட்டது போல் ஓவராகவே பேசத் தொடங்கி யிருக்கிறாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்.

என் பொறுமையின் இறுதிக் கோட்டை சந்தித்தே தீருவதென்று சத்தியப் பிரமாணம் எடுத்தவள் போல அவள் பேச ஆரம்பித்தாள்.

யாமினி என் வயதொத்தவள் என்றாலும் ஒரு உண்மையான தோழியாய், வாழ்க்கையின் மிக அந்தரங்கமான பகுதியைக் கூடப் பகிர்ந்து கொள்ளக் கூடிய இனிமையான சிநேகிதியாய் என்றைக்குமே இருந்தது கிடையாது.

அன்றைக்கு நானும் என் தோழி ஸ்வப்னாவும் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அன்றைக்கென்று பார்த்து எங்கள் உரையாடலில் வந்து மாட்டிக் கொண்டவர் கீட்ஸ். திங்க்ஸ் ஆஃப் ப்யூட்டி பற்றி மெய்மறந்து விவாதித்தோம். அவளுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே டேஸ்ட். நேரம் போவது தெரியவில்லை.

ஸ்வப்னா திடீரென்று பாரதியாரின் கண்ணம்மா பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவள் அழகை அவர் வர்ணிக்கும் விதத்தைக் காளிதாசளின் மேகசந்தேசத்தோடு ஒப்பிட்டு நான் ஆர்வத்தோடு ஆரம்பித்தேன். கண்ணம்மா – என் காதலி என்ற காட்சியில் அவருடைய சொல்லாட்சியை உணர்ச்சியுடன் மெலிதாய்ப் பாடினேன்.

சுட்டும் விழிச் சுடர்தான் – கண்ணம்மா
சூரியச் சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்பிர
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி,
சோயை மலரொளியோ – உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கடலேைய – உன் நெஞ்சிலலைகளடி!.
கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ!

என்னை மறந்து. இருக்கும் இடத்தை மறந்து, எதிரிலிருப்பவளை மறந்து கண்களை மூடி எங்கோ நான் பறந்து கொண்டிருக்கும் போது-

யானைப் பிளிறலாய் அந்தக்குரல் ஒலித்தது-

“சரிதான் நிறுத்துடி! பெரிய பாட்டு…பாரதியாம் பாரதி.. வெளியில் தெரியற அழகை வார்த்தை ஜாலங்களோட என்னிக்கோ எழுதினாராம்… இவ உருகிப்போய்ப் பாடுகிறளாம்.. ஏன் இப்படி அழகு அழகுன்னு அலையறீங்க?” – யாமினிதான்.

வெடித்துப் போனேன் நான். உயிருக்குயிராய் மதிக்கும் ஒரு கவிஞனை இப்படிச் சொற்களாலேயே காலில் போட்டு மிதிக்கும் யாமினி ஒரு தாடகை போல் தெரிந்தாள்.

“அழகாயிருக்கோம்னு கர்வம் உங்களுக்கு. அதான் விடிஞ்செழுந்தா கீட்ஸ் பத்தியும் ப்யூட்டி பத்தியும் பாரதி பத்தியும் பேசி உங்களை நீங்களே புகழ்ந்துக்கிறீங்க… உங்க மேல மட்டும் தப்பில்லை, அந்தக் கவிஞர்கள் மேலேயுந்தான். அவங்க கண்ணுக்கு ஏன் அழகான பொருள்கள் மட்டும் கிடைக்கணும்? அழகான காட்சிகளுக்கு மட்டும்தான் கவிதையாகிற உரிமை இருக்கா? சாசுவதமில்லாத வெளி அழகை வைட்டல் பாய்ண்ட் வெச்சு காவியங்கள் உருவாக்கி எத்தனை நெஞ்சங்களை இவங்க வேதனைப் படுத்தியிருக்காங்க?” குலுங்கினாள்.

என் ஆத்திரம் குப்பென்று அடங்கிப் போனது. அவள் பேச்சின் ஓரத்தில் வளைய வந்த நியாயம் என்னை இழுத்தது.

ஸ்வப்ன தலை குனிந்து எழுந்து போனாள்..

யாமினியை மெல்ல அணைத்தபடி “ஸாரி யாமினி! இனிமே அழகு பத்தி விவரிக்கிற எந்தக் கவிதையையும் இனிமே பேச மாட்டேன்…. வெரி ஸாரி” என்றேன்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் என்னுடன் அதிகம் பேசுவதில்லை. ரொம்ப அத்தியாவசியமான நேரங்களில் பேசும் பேச்சுக்கூட போன வாரம் நடந்த அந்த நிகழ்ச்சியில் வழித்து விட்டது போல் நின்று போயிற்று.

யாமினியைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞன் நாசுக்காய் என் அப்பாவிடம் சொல்லி விட்டானாம். இளைய பெண்ணான என்னை மணந்து கொள்ளத் தான் தயாராய் இருப்பதாய் அவன் சொன்னதை அப்பா பாதி மகிழ்ச்சியும் பாதி வேதனையுமாய்ச் சொன்னபோது பொங்கிப் போய்விட்டாள். அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட விம்மலுக்கு உயிர் கொடுத்துவிட்டு முகத்தை மூடியபடி உள்ளே ஓடிவிட்டாள்.

திகைத்துப் போய் நின்றேன்.

“ராகினி… இந்த இடம் ரொம்ப நல்ல இடம்… உள் அழகு, அறிவு ரெண்டுக்கும் ரொம்பப் பொருத்தமானவன் சுரேஷ்… இதை விட்டுடறது மடத்தனம்… உனக்குச் சம்மதமா சொல்லு… யாமினியை நாங்க சமாதானப்படுத்திக்கிறோம்..உன் இஷ்டம் தான் முக்கியம்” – அப்பாவும் அம்மாவும் விதவிதமாய்ப் போதிக்க ஒன்றும் தோன்றாமல் நின்றேன்.


“யார் அது?” என்றாள் யாமினி.

“நான் தான் அக்கா…”

“உள்ளே வான்னு சொல்லக் கூடாதா? நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்னு இவ்வளவு வெறுப்பைக் கொட்றே அக்கா?” – தழுதழுத்தேன்.

சட்டென்று எழுந்தாள். ரத்தக் களறியாய், கண்கள் சிவக்க இதழ்கள் துடிக்கக் கோபப் பெண்ணாய் முறைத்தாள்.

“உன் மேல் தப்பில்லடி… உங்க எல்லார்க்கும் கண்ணைக் கொடுத்திருக்கானே அந்த உருவமில்லாதவனைச் சொல்லணும்… அந்தக் கண்ணால அழகானவைகளை மட்டும் தான் பார்க்கணும்னு அர்த்தமில்லாத ஒரு அறிவைக் கொடுத்திருக்கானே அவன் மேலதான் தப்பு” – குமுறி வெடித்தாள்.

அவள் பார்வையைச் சந்திக்கப் பயந்தேன்.

பொறாமை, வயிற்றெரிச்சல், ஆத்திரம் எல்லாப் பண்புகளும் பல்ப் போட்டது போல் பளிச்சிட, உலகத்து வெறுப்பை யெல்லாம் மொத்தமாய் வழித்துக் கலந்து பார்வையாய் மாற்றி என் மீது வீசினாள். ‘எனக்கு வரவேண்டிய வாழ்க்கையைப் பறித்து விட்டாயே பாவி’ என்று சொல்லாமல் சொன்ன அந்தக் கண்கள், அதன் கோபம்… ஓ!

மெள்ள ”அக்கா” என்றேன்.

“அப்படிச் சொன்னா உனக்குத்தான் கேவலம், ஏன் பொய் சொல்றேன்னு உன் ஃப்ரண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க!” என்றாள் திமிரோடு.

”என் வேதனையைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்… ப்ளீஸ்” என்றேன் தவிப்போடு.

முதன் முதலாய் அவள் பார்வையில் மெலிதான ஓர் ஆச்சரியம் தெரிந்தது. புருவங்களை உயர்த்தி, “என்ன?” என்றாள்.

முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

”என்னடி ராகினி?… நீ எதுக்கு அழறே இப்போ?” வழக்கமான வெறுப்பு குரலில் குடிகொண்டது.

“இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டமே இல்லேக்கா… எப்படியாவது இதை நிறுத்தியாகணும்.”

யாமினி நிமிர்ந்து உட்கார்ந்தாள். முகத்தில் ஆர்வம் தெரிந்து விழிகளில் வெளிப்பட்டது.

“ஏன்? அந்த சுரேஷுக்கு என்ன?”

“எனக்குப் பிடிக்கலை.”

“ஏன் பிடிக்கலை?”

“எல்லார்க்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு ரூல் ஒண்ணும் இல்லையே அக்கா?”

“பிடிக்கறதுக்குக் காரணம் இல்லைன்னாலும் பிடிக்கலைன்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கும் சொல்லு.”

மெளனம்.

“சொல்லேண்டி… பழமா வெச்சிருக்கே வாயிலே?”

நிதானமாய் நிமிர்ந்து, “நான் ஒருத்தரை காதலிக்கிறேன். அவரைத் தவிர இன்னொருத்தரை என்னால ஏத்துக்க முடியாது” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆராய்ந்தேன்.

சுவாரஸ்யமான கதை கேட்பவள் போல் அவள் கண்கள் மின்னின.

“அப்படியா?”

“ஆமாக்கா… நீயே சொல்லு. உயிருக்குயிராக் காதலிக்கிறவரை மறந்துட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?…” குலுங்கினேன். “நீதான் அப்பா கிட்டே பேசி இதை நிறுத்தணும்… ப்ளீஸ்.”

தோளை அசைத்து அலட்சியமாய் எழுந்தாள்.

“அக்கா.. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… நானும் சிவாவும் எவ்வளவோ கனவுகளை வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆசைகள் கற்பனைகள் நெறைஞ்ச ஒரு எதிர்காலத்தை அனுபவபூர்வமாக உணர்ற நாளுக்காகக் காத்துக்கிட்டிருக்கோம். ஒருத்தர் மேல் ஒருத்தர் உயிரையே வைச்சிருக்கோம்… எங்களைப் பிரிச்சுடாதே.. நீதான் அப்பா கிட்டே சொல்லி…” அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினேன்.

யாருக்கு வந்த விருந்தோ என்ற பாவனையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்றாள் யாமினி! ‘நல்லா அனுபவி… செய்யாத தப்புக்காக நான் தண்டளை அனுபவிச்சேன், இயற்கையின் கேள்விக்குப் பதில் சொல்லாம நான் தவிச்ச போது நீங்க சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தீங்களே? இப்போ நீ அழு.. வேடிக்கை பார்க்கறது என்னொட ‘டர்ன் இப்போ’ என்று தீர்மானமாய்ப் பேசியது அவள் முகம், திருப்தியான பார்வை பிறந்தது.


சுரேஷின் கையிலிருந்து தாலி பொன் மாலையாய் என் கழுத்தை அலங்கரித்த அந்த வினாடியில் பூவும் அரிசியும் மஞ்சளும் கொத்துக் கொத்தாய்ப் பவித்திரத் தன்மைகளுடன் எங்கள் மேல் விழுந்து மௌனமாய் ஆசீர்வதிக்க வெட்கத்துடன் அவர் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனித்து…

மெல்ல நிமிர்ந்து பெண்கள் பக்கம் பார்த்தேன்.

யாமினி குரூரமான திருப்தியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முழு மனத்துடன் சிரித்தாள். ‘பெண்ணே…வெளியில் சந்தோஷமாய் இருப்பதாய் நீ நடிக்கும் நடிப்பை எல்லோரும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறர்கள், எனக்குத்தானே உண்மை தெரியும்? பாவம் நீயும் அந்த சிவாவும்! போலித்தனமான அவள் இரக்கம் நெல்லிக் கனியாய்த் தெரிந்தது. ‘நல்லா கஷ்டப்படு… வாழ்க்கை முழுசும் காதல் தோல்வியை நெனச்சு நெனச்சு வேதனைப்படு. அந்த சுரேஷையும் வேதனைப்படுத்து… என்னை வேண்டாம்னு ஒதுக்கினவன் இல்லையா அவன்?… அவஸ்தைப்படட்டும்’. என்ற அவள் எண்ணம் துல்லியமாய்த் தெரிந்தது.

எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

யாமினி… நன்றாய் ஏமாந்து விட்டாய்…

“உனக்கு வரவேண்டியவரை நான் மணந்து பூவும் பூரிப்புமாய் வாழ்க்கை நடத்தினால் வயிற்றெரிச்சலில் வெந்து விடுவாய் நீ… என் சந்தோஷமான இல்லறத்தைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் வேதனையில் துடிப்பாய்… நான் இருக்க வேண்டிய இடம். நான் இருக்க வேண்டிய இடம் என்று நினைத்து நினைத்துப் பொறாமையில் மறுகுவாய், கன்னா பின்னாவென்று சாபமிடுவாய். அது பலித்துவிடுமோ என்ற ஆதாரமில்லாத பயம் எனக்கு. நானும் பெண் தானே? இப்போது அந்தப் பயம் எனக்கில்லை. கற்பனை செய்து நான் சொன்ன கதையை ஒரு பர்ஸண்ட் குறையாமல் நம்பிவிட்டாய், நான் வேதனையில் நீந்துவதாய்ச் சந்தோஷப்படுகிறாய், என் நாடகத்துக்குப் பெரிய வெற்றி யாமினி. என்னைப் பார்க்குமிடத்தி லெல்லாம் என் காதல் தோல்விதானே உன் முன் நிற்கும்!’

அவளுடைய சிரிப்பு என்னுடைய வெற்றியின் பிரதிபலிப்பு என்று அவளுக்குத் தெரியாது!

– மங்கையர் மலர், 1981-03-01.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *