பரிகாரம்
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2026
பார்வையிட்டோர்: 50
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வெளியே மக்கள் கூட்டம் கடல் வெள்ளம் போல் இருந்தது. அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர சிறப்பு காவற்படை பிரிவினர் வரவழைக்கப்பட்டார்கள். இவற்றிற்கு காரணம் என்ன? அந்தக் கொடியவனை, கொலைகாரனை. கொள்ளைக்காரனை நேரில் ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பம்தான். அவன் பெயரைக் கேட்டாலே அழுத பிள்ளை வாயை மூடும். அவன் உருவத்தைப் பார்த்தால் ஆண்டவன் கூட பயப்படு- வான். அவனின் அட்டூழியங்களைக் கண்டு அரசே நடுங்கியது. அப்படிப்பட்ட ஒருவனைக் காண மக்கள் கூட்டம் கூடாமல் என்ன செய்யும்?
அதோ மரண தண்டனைக்கு உட்பட்டு அந்தக் காவல் துறை வாகனத்தில் ஏறுகிறானே அவன்தான் அரவன். தன் பல்லில் மட்டும்தான் பாம்புக்கு நஞ்சுண்டு. ஆனால் அரவன் தன் உடல் முழுவதும் நஞ்சுடையவன்.
எல்லாம் வல்ல இறைவனுக்குக்கூட சில சமயங்களில் கால் இடறிவிடும் என்பதற்காக அரவனின் படைப்பே ஓர் உதாரணம். தன்னால் படைக்கப்பட்டவனுக்குத்தானே காலத்தையும் கணித்துவிட்ட – தால், அரவனின் அட்டூழியங்களைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இறைவன் இருந்தான் போலும்.
ஈன்ற பொழுதில் பெரிதுவந்த அரவனின் தாய். இவனைச் சான்றோன் எனக் கேட்க மாட்டோம் என்று எண்ணினாளோ என்னவோ அரவனைப் பெற்ற அரை மணி நேரத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
இவனைப் பெற இவனின் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று கேட்கும் கேள்வி தன் காதில் விழக்கூடாஎன்று நினைத்தாரோ என்னவோ? அவரும் போய்விட்டார்.
அன்புக்கும் ஆசைக்கும் அலைந்து,அது கிடைக்காத போது அவற்றைத் தானே பெற முயற்சித்தான் அரவன். தன் மனதில் தான் இன்பமாக வாழ வேண்டும். எப்பொழுதும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசையை அதிகமாக வளர்த்துக் கொண்டான். தன் ஆசைகளைப் பூர்த்தி செய்யாத இந்த மனிதக் கூட்டம் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்றும் எண்ணினான். இந்த உலகம் நல்லவனையும் மறக்காது, பொல்லாதவனையும் மறக்காது. தான் நல்லவனாக வாழ முடியாது. பொல்லாதவனாக வாழ்வது சுலபம் என்று நினைத்தான். அவ்வாறே வாழ முற்பட்டான்.
வல்லவனால்தான் வரலாறு படைக்க முடியும் அல்லவா? வல்லவனான பொல்லாத அரவன் வரலாறு படைக்கத் தொடங்கி- னான். தன்னுடன் பலரைச் சேர்த்துக் கொண்டான். தானே தலைவனான். தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள சக தோழர்களைப் பயன்படுத்திக் கொண்டான்.
அவன் கண்ணில் பட்டு கருத்தில் கலந்த பெண்கள் தப்பிக்கவே முடியாது. தான் எண்ணியதை செய்திட எப்படிப்பட்ட இடையூறுகள் வந்தாலும் பயப்பட மாட்டான். தன் காம இன்பத்தில் கட்டுண்ட கன்னியர்கள் கையில் பொன்னும் பொருளும் தருவான். மறுப்பவர்கள் மார்பில் கத்திக் குத்துதான் விழும்.
அரவன் கந்தசாமி வீட்டிற்கு கொள்ளையிட சென்றான். அங்கே அவரின் மகளான கண்மணியைக் கண்டான். அது நாள் வரையில் பெண்களிடம் காட்டுமிராண்டியாக நடந்து கொண்டவன் அரவன். கண்மணியைக் கண்டவுடன் ஏனோ தெரியவில்லை. அவன் உள்ளத்தில் அவளைக் கசக்கி எறிந்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. மணமுள்ள மலரை முகர்ந்தபின் தூக்கி எறியும் குணமுடையவன் அரவன். ஆனால் கண்மணி என்ற மலர் தன் மனத்தோட்டத்தில் மணம் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
தான் வந்த நோக்கத்தை மறந்து. தனது எண்ணத்தை கந்தசாமியிடம் கூறினான்.
“என் பொருளை எல்லாம் எடுத்துக் கொள். என் மகளை மட்டும் விட்டுவிடு” என்று கெஞ்சினார் கந்தசாமி.
“நான் தானே கனியாத பழத்தைத் தடிக் கொண்டு அடித்துப் பழக்கப்பட்டவன். மயிலே மயிலே இறகு போடு என்று காத்துக் கொண்டு இருப்பவன் அல்ல. தேவைப்படும் போதுபிடுங்கிக் கொள்ளும் குணமுடையவன். ஆனால் உன் மகளைப் பார்த்தவுடன் அவ்வாறு எல்லாம் செய்ய விருப்பம் ஏற்படவில்லை. நீயே எனக்கு மணம் முடித்துவை” என்றான் அரவன்.
“என் உயிர் இருக்கும் வரையில் அதுநடக்காது” என்றார் கந்தசாமி.
“உன் உயிர் இருக்கும் வரையில் தானே முடியாது. உயிரை எடுத்து விட்டால் என்று சொல்லிக் கொண்டு தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
தன் கண் முன்னே தன் தந்தை துடிதுடித்து செத்தக் காட்சியைக் கண்டு கதறினாள் கண்மணி.
ஆன்றோர் வாழ்த்த அம்மி மிதித்து அக்கினி முன்னே கண்மணியைத் தன்னுடையவளாக்கிக் கொள்ளும் அருகதை அரவ- னுக்கு ஏது? அடைய வேண்டும் என்று எண்ணினான். அடைந்து கொண்டான். தன் தலைவிதியை எண்ணி கண்ணீர் வடித்தாள் கண்மணி.
அந்தக் கயவன் அவளைக் கசக்கி தெருவில் எறிந்துவிடவில்லை. கண்மணி மூலம் தனக்கு ஒரு வாரிசை உருவாக்கிக் கொண்டான்.
தன் நண்பனைப்பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்த காவலன் வீட்டுக்குச் சென்று அவன் மனைவியையும், ஆறு வயசு குழந்தையை யும் அறையிலேயே வைத்து தீயிட்டுக் கொளுத்தினான் அரவன்.
மனிதன் பிறக்கும்போதே எவனும் கெட்டவனாக பிறப்பதில்லை. வளர்க்கப்படும் முறையாலும் பழகும் பழக்கத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலுமே குற்றங்களைச் செய்கிறான். அதனால் அவனை ஆயுதத்தாலோ. அச்சத்தினாலோ திருத்துவதை விட அன்பினாலே திருத்துவதே சிறந்தவழி. அச்சுறுத்தலால் திருந்துபவன் உண்மையா- கவே திருந்தியவன் ஆகமாட்டான். அதனால்தான் உங்களை என் அன்பினாலேயே நல்லவர்களாக்க விரும்புகிறேன். நீங்களும் உங்கள் தவற்றை உணர்ந்து திருந்தினால் இச்சமூகம் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்” என்று அகப்பட்ட அரவனின் நண்பர்களிடம் ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.
கழுதை அறியுமா கற்பூர வாசனையை? அந்தக் காவலரை அணுஅணுவகாக சித்திரவதை செய்யுமாறு தன் நண்பர்களுக்கு ஆணையிட்டான். அரவனின் ஆணையை ஆண்டவன் ஆணையாக எண்ணி, அந்த அதிகாரியைக் கொலை செய்து, கண்களைத்தோண் னார்கள். குடலைப் பிடுங்கினார்கள். கால்களை உடைத்தார்கள். தீயிட்டுப் பொசுக்கினார்கள். அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கண்ணீர் விடாதார் யாருமில்லை. அந்தக் கயவர்கள் அனைவரும் கழுமரம் ஏற்றப்பட்டார்கள்.
அது கண்டு அரவனின் ஆத்திரம் அதிகமாயிற்று. ஆத்திரக்கார- னுக்குப் புத்தி மட்டு அல்லவா? அவசியமற்ற கொலைகளைச் செய்தான். பாவச் சுமையை அதிகமாக்கிக் கொண்டான்.
அரவனின் அரக்கத்தனத்தைக் கண்ட கண்மணி தன் மகன் கண்ணனை, அனாதை குழந்தை இல்லம் ஒன்றில் சேர்த்துவிட்டு. விஷம் குடித்துச் செத்தாள். அன்புள்ளம் கொண்டவனா அரவன்? அதைக் கண்டு அழுவதற்கு? ஆயிரத்தில் இதுவும் ஒன்று என்று எண்ணி இருந்து விட்டான்.
அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும் அல்லவா? அரவனின் அட்டூழியங்களுக்குக் காவல் துறையால் இதுநாள் வரையில் தீர்வு காணவே முடியவில்லை. அரசினால் முடியாததை ஆண்டவன் செய்ய முற்பட்டான். ஆடிய ஆட்டம் போதும், அனுபவித்த இன்பம் போதும் என்று எண்ணிய இறைவன், அரவன் திருடி கொண்டு ஓடும் போது ஏற்பட்ட விபத்தில் தன் கை ஒன்றை இழந்தான். காவல் துறையினர்களின் கைக்குள் சிக்கிக் கொண்டான்.
மரண தண்டனைக்கு உள்ளானான் அரவன். அவன் சாங்கிச் சிறையில் அடைக்கப்பட்டான். விண்ணில் பறந்த பறவையாக இருந்த அரவன் இன்று கூண்டுக்கிளியானான்.
சிறையில் நடைபெற்ற கல்வி வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அரவனுக்குக் கிடைத்தது. உலகை உய்விக்க வந்த உத்தமர். கௌதம புத்தரின் கதையைக் கேட்டான். அதுமுதல் அவரின் மீது நாட்டம் கொண்டான்.
அவா என்பது அறியாமையால் ஏற்படுவது என்று புத்தமதம் கூறும் கருத்தை விரும்பினான். மனத்தில் எழும் ஆசை, வெறுப்பு, தவறான சிந்தனை என்ற தீமைகளையும் நாக்கினால்எழும் பொய் சொல்லுதல், பிறரை இகழ்ந்து பேசுதல், பிறர் பற்றிக் கோள் சொல்லுதல், பயனில்லா பேச்சுக்களைப் பேசுதல் போன்ற தீமைகளை யும் உடலால் உண்டாகும் கொலை செய்தல், திருடுதல், விபச்சாரம் செய்தல் போன்ற தீமைகளையும் அகற்றுவதில் ஒருவன் வெற்றி பெற்று விடுவானால் அதன் பின்னர் நன்மைகள் செய்வதைத் தவிர்த்து அவனால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்ற பௌத்த கோட்பாடுகள் அரவனைக் கவர்ந்தன. எனவே அவன் எப்போதும் புத்தனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
அரவனைத் தூக்கில் தொங்கவிடும் நாளும் வந்தது. மனிதன் எவ்வளவுதான் கொடியவனாக இருந்தாலும், அவனது இறுதி ஆசையைப் பூர்த்தி செய்து வைப்பது அவசியமாகும் அல்லவா?
அவனின் இறுதி ஆசையைக் கேட்டார்கள். அனாதை இல்லத்தில் இருக்கும் தன் மகன் கண்ணனைக் காண வேண்டும் என்று கேட்டான்.
கண்ணன் கொண்டுவரப்பட்டான். அவனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டான்.
ஆசைக்கு அடிமையாகி தான் அவதிப்பட்டப பாடும் செய்த கொடுமைகளையும் எண்ணினான். தன்னைப் போலவே தன் மகனுக்கும் அப்பா அம்மாவின் அன்பும் அரவணைப்பும் இல்லாமற் போய்விட்டது. அதனால் அவனும் பிற்காலத்தில் தன்னைப் போல ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
என் மகன் ஆசைக்கு அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும் அதற்கு ஒரே வழி, சிறந்த வழி, நான் உணர்ந்த வழி. என் மகனை புத்த துறவியாக்கி விட விரும்புகிறேன். என்னுடைய இறுதி ஆசை இதுதான். தயவு செய்து என் ஆசையைப் பூர்த்தி செய்து வையுங்கள். என் மகனை இனிமேல் அனாதை இல்லத்திற்கு அனுப்பாதீர்கள். அவனைப் பௌத்த பிக்குகளின் இல்லத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
அவன் விருப்பப்படியே கண்ணன் பெளத்த மடத்திற்கு அனுப்பப்பட்டான். அரவனின் கழுத்தில் கயிற்றைப் போடும் போது அவனின் வாய் புத்தம், சரணம் கச்சாமி என்று முணுமுணுத்தது.
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அடடா மழைடா… அடைமழைடா?
வளர்கவி
October 24, 2026
வீடு பேசும் நினைவுகள்
கல்பனா ராஜகோபால்
October 24, 2026
அழகு சிரிக்கிறது
இரா.துரைமாணிக்கம்
October 24, 2026
