கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 14,168 
 

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 20 – 22 | அத்தியாயம் 23 – 25 | அத்தியாயம் 26 – 28

அத்தியாயம் 23 

நிர்மலேஷ்வரன் தனது தாயின் அஸ்தியை கடலில் கலக்க தனது மெய்க்காப்பாளர்களுடன் செல்வதற்கு சித்தமாக தன் மனைவியின் பாதுகாப்புக்காக தன் இரகசிய அறையில் இருக்கச் சொன்ன நிர்மல் அந்த அறையில் சித்தர் அளித்த தகட்டை கீழே தரை விரிப்புக்குக் கீழே சதுர வடிவில் இருந்த கல்லை எடுத்து அதற்குள் ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைத்தான். 

பின்பு அதை மறுபடியும் சரிபடுத்தி விட்டு தரைவிரிப்பை மேலே போட்டான் . 

தான் இருக்கும் போதே அவளையும் குழந்தையையும் அறையில் கொண்டு வந்து விட்டுவிட்டு சேடிகளிடமும் தாதிகளிடமும் அவளுக்கு தேவையான அனைத்தையும் அறையிலேயே சென்று சேவகம் செய்யவேண்டும் எனக் கட்டளையிட்டான். 

பின்பு திவானிடமும் சேனாதிபதியுடனும் மாளிகையில் காவலை பலப்படுத்தச் சொல்லிவிட்டு தன் மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு கிழக்கு நோக்கிப் பயணப்பட்டான். 

மாயவன் இதுதான் தகுந்த சமயம் என மாளிகை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். கோட்டைவாசல் பயங்கர பாதுகாப்பாக இருந்தது. கோட்டையின் பெரியக் கதவு திறக்கப்படாமல் திட்டிவாசல் மட்டுமே திறந்திருந்தது . 

வாசலின் வழியின் இருபக்கமும் வரிசையாக வீரர்கள் ஆயுதம் ஏந்தி நிற்க, 

சுங்கவரி விரர்கள் உள்ளே நுழைவதற்கான வில்லையை அவரவர் ஊரின் தலைச்செங்கோட்டு அதிகாரி கொடுத்திருந்த அத்தாட்சி வில்லையை வைத்து சரிபார்த்து அனுப்பிக் கொண்டிருந்தனர் 

வெளியூர்க்காரர்கள் என்றால் அவர்களை தனியேப் பிரித்து நிற்க வைத்தனர். 

அவர்கள் எதற்காக வந்துள்ளனர் என்பதை விசாரித்து அவர்களுக்காக கோட்டைக்குள் இருக்கும் உறவினர்கள் வந்து அத்தாட்சி கொடுத்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். 

அத்தாட்சி அளிக்கமுடியாதவர்களை பத்துதினங்கள் கழித்து வரச்சொன்னார்கள் . 

இதனால் அவசிய வேலையாக வந்தவர்கள் திரும்பிச் செல்ல மனமில்லாமல் சென்றனர்.

ஏன் இத்தனை நாள் இல்லாத வழக்கமாக இத்தனைக் கெடுபிடி . 

போர் ஏதும் வரப்போகிறதோ என்று பேசியபடி சென்றனர். 

மாயவன் வந்தபோது இருக்கின்ற நிலமையைக் கவனித்து என்ன செய்து உள்ளேச் செல்வது என யோசிக்கவேயில்லை . அவன் முறை வந்த போது அவனை நிமிர்ந்து பார்த்த வீரர்கள் அவனை பார்த்தபடியே இருக்க, 

அங்கிருந்த வில்லை ஒன்றை எடுத்து அவர்களின் கையில் வைத்துவிட்டு திட்டிவாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தான். 

சிறிது நேரத்திலேயே வீரர்கள் தாங்கள் உணர்வற்று இருந்தது தெரியாமலேயே மீண்டும் தங்கள் பணிகளை செய்துக் கொண்டிருந்தனர். 

தன் கண்களின் வசியசக்தியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்துவிட்டதை நினைத்து கர்வமுடன் மாளிகையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான் . 

மாளிகையின் அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்த மரத்தின் மீதேறி மாளிகையை நோக்கினான் . 

மாளிகையைச் சுற்றி வீரர்களின் பாதுகாப்பு அரண். 

தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து சாமியார் ஆடைகளை எடுத்து அணிந்துக் கொண்டான் . பின்பு மரத்திலிருந்து இறங்கியவன் நேராக மாளிகை வாசலை நோக்கி சென்றான் . 

அவனைப் பார்த்துவிட்டு நெருங்கிய வீரர்கள் தவஞானி போல் இருந்ததால் பயபக்தியுடன் “சுவாமி.. தாங்கள் யார் … இங்கு யாரைப் பார்க்க வந்துள்ளீர்கள் …?” என்று கேட்க, 

அவன் பார்வையில் மௌனமாகி மாளிகையின் வாசலைத் திறந்தனர். 

உள்ளே அவன் காலடி வைக்க அவன் உடம்பில் ஒரு அதிர்வலை ஏற்பட்டது . 

உடன் தன் கையில் வைத்திருந்த குடுவையை எடுத்து அதிலிருந்த இரத்தத்தை மயிலிறகால் எடுத்து ஒரு சொட்டு மண்ணில் விட மண் கருப்புநிறமாக மாறியது. 

‘நீ இங்கேயே காவலிரு . வருகிறேன்’, எனக் கூறிவிட்டு மாளிகையின் உள்வாசலை நெருங்கினான் . 

அப்போது ‘நில்’ எனக் குரல் கேட்க சட்டென்று மனதில் ஒரு நடுக்கம் ஏற்பட நின்றுவிட்டான் . 

குரலுக்குரியவர் யார் என்று பார்த்தவன் ஆஜானுபாகுவாய் துணை சேனாதிபதி நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். 

பழுத்தபழம் போல சித்தர் வடிவில் அவனைப் பார்த்தவர் அவன் அருகில் நெருங்கி 

“சுவாமி யார் என்று அறியலாமா…?” என பணிவுடன் கேட்க, 

‘எனை அறியவில்லை மூடன். நன்று’ என நினைத்துக் கொண்டவன் 

“பாலவராயன் நீதானே?” எனக் கேட்க, 

“ஆம் சுவாமி ..! தாங்கள் எனை அறிவீர்களா?” 

“உனது மனைவி சித்ரவல்லி நலந்தானே? அவள் கருவுறாமல் பலகாலம் வருத்தத்தில் இருக்கிறாள் அல்லவா?” 

“சுவாமி…இது எப்படி உங்களுக்கு…..?” என்று இழுத்தவனை, 

“என்னப்பா…நான் அறியாததா? இப்பொழுது இந்த மண்ணின் தலைமையாளன் தன் இல்லாளும், குழவியும் நலமுடன் வாழணும் என்பதற்காகத்தானே உங்களை பாதுகாப்பில் விட்டுச் சென்றிருக்கிறான் .” 

சிறிது நேரம் யோசித்தவன் “ஆமாம் நீங்கள் எப்படி எல்லா வழியையும் தாண்டி வந்துள்ளீர்கள். யாரும் உங்களை தடுக்கவில்லையா…?”

“ஆஹ்ஹஹா…” என்று சிரித்தவன் பின்பு 

“இந்த பர்வதமலை சித்தனை யார் தடுக்கமுடியும் ? எனை அடைக்கலமாய் தேடியவன் வாழ்வில் சிக்கல் எனும்போது என்னால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” தன்னை பர்வதமலை சித்தனாக கூறியவன், 

சித்தரை அறிந்தவன் நிர்மலேஷ்வரன் மட்டுமே. அவனும் இப்பொழுது இல்லாதது அவனுக்கு வசதியான பொய்யாகிவிட்டது . 

பர்வதமலை சித்தர் எனக் கூறியவுடனே ‘இவர் நம் ஜமீனின் பிரபு வணங்கும் தெய்வமல்லவா. நம் பிரபுவின் சிக்கலான ஆபத்தை தீர்க்க வந்திருக்கிறார் போலும்’, என நினைத்துக் கொண்டவன் 

‘ மன்னிக்க வேண்டும் சுவாமி …! பிரபு இப்பொழுது இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார் . அவர் இல்லாதது வருத்தமே. தாங்கள் உள்ளே வாருங்கள் . சிறிய ராணி இருக்கிறார் . அவர் தங்களை தரிசனம் செய்யட்டும் ” எனக்கூற, 

“இல்லை அப்பனே ! நான் உள்ளே இப்பொழுது வருவதற்கில்லை. இந்த இல்லத்தில் இரண்டு ஆத்மாக்கள் வெளியேறி இருக்கின்றன . அவற்றின் நிறைவேறா எண்ணங்கள் துர்தோகையாக வலம் வருகிறது . அவற்றை இங்கிருந்து நீக்காமல் என்னால் உள்ளே வர இயலாது .” 

சுவாமி… எங்கள் பெரிய மகாராணியார் மட்டுமே இங்கிருந்து உயிர்நீத்தார். 

இளைய ஜமீன் இந்த ஊர் எல்லையில் தானே இறந்தார் அப்புறம் எப்படி இரண்டு ஆத்மாக்கள் வலம் வர முடியும் ? 

இது என்ன அர்த்தமற்ற பேச்சு. வெளியூருக்கு பணியாகச் சென்றால் இல்லம் திரும்ப வருவதில்லையா …? 

அவனின் ஆசைகள் இந்த மாளிகையில் தானே வளர்ந்தது .’ 

“சுவாமி…! அதுக்கென்ன செய்யவேண்டும் ?” 

“இந்த மாளிகையைச் சுற்றி என்னுடைய மந்திரத்தை தெளிக்க வேண்டும் . அவற்றால் துர்தேவதைகள் விலகிச் சென்று விடும். அதன் பிறகே நான் உள் நுழைவேன் .” 

“நான் போய் திவானை அழைத்து வருகிறேன். நீங்கள் இந்த மாளிகையை சுற்றி வருவதற்கு வீரர்களை துணைக்கு அனுப்புகிறேன் . சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து அச்சமாக இருக்கும் தனியாகச் சென்றால் ” 

“தேவையில்லை . நான் வனங்களில் திரிபவன் . எனக்கு எந்த அச்சமும் கிடையாது . நீ உன் பணிகளை செய். 

என்னோடு யார் வந்தாலும் என் மந்திரத்தால் வயப்படும் ஆத்மா அவரைத் தாக்கும். அதனால் வீண் சிரமம் ஏற்படும் .” 

“சரிங்க சுவாமி . அதற்குள் நான் திவானை அழைத்து வருகிறேன் .” துணை சேனாதிபதி புறப்பட்டுச் செல்ல, 

“முட்டாள் . உனைப் போல ஒருவனை பாதுகாப்பில் விட்டுச் சென்றானே….அவனைச் சொல்லணும் “. மனதிற்குள் சிரித்தபடி மாளிகையை வலம் வரத் தொடங்கினான். 

மடியிலிருந்த குப்பியை எடுத்து அதைத் திறந்தவன் அதிலிருந்த விஸ்வேஸ்வரன் குருதியில் தன்னிடமிருந்த கருப்பான மையை ஊற்றிக் கலக்கியவன், கண்மூடி தன் தேவதை நாமாவளியைச் சொல்லியபடி தன் மயிலிறகால் ஒவ்வொரு சொட்டாக சொட்டவிட்டபடி நடந்தான் . 

இதற்குள் சேனாதிபதி மூலம் பர்வதமலை சித்தர் வந்திருப்பதை அறிந்து வேகவேகமாக மாளிகை நோக்கி தன் குதிரையில் வந்திரங்கினார் திவான். 

சித்தரை வரவேற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மளமளவென்று நிறைவேற்றினார் . 

அதற்குள் மாயவன் தன் பணியை முடித்து விட்டு மனத்திருப்தியுடன் வந்து நிற்க, 

திவான் மாளிகை துக்கத்தில் இருப்பதால் மேளச்சத்தமின்றி வீரர்களை வைத்து முழக்கமிட்டு வரவேற்றார். 

திவானுக்கும் தன்மீது துளியும் சந்தேகம் ஏற்படவில்லையென்று சந்தோழத்துடன் உள்ளே காலடி வைத்தான் . 

ப்போது அவனிடம் எந்த அதிர்வும் ஏற்படவில்லை. மனத்திருப்தியுடன் ‘ இனி தன் வேலை அந்த தகட்டை அபகரிப்பதே… அதை இப்போது எங்கு வைத்திருப்பான் நிர்மல். திவான் அல்லது அவன் மனைவி இருவரிடம் மட்டுந்தான் இந்த ரகசியம் சொல்லியிருப்பான். 

திவானிடம் நைச்சியமாக கேட்டுப் பார்ப்போம் ‘ என நினைத்தவன் 

“திவான் விகற்பா …! இந்த மங்களாபுரி ஜமீன் பத்தினிப் பெண்ணோருத்தி சாபத்தால் நிலைகுலைந்து கிடக்கிறது . 

ஏற்கனவே இரண்டு உயிர்கள் ஜமீனில் பறிபோய்விட்டன . 

இந்நிலையில் நிர்மலேஷ்வரன் எப்படி தனியாக வெளிச் சென்றான் . 

அவன் உறவுகளையும் வாரிசையும் ஏன் இப்பொழுது விட்டுச் சென்றான் .? எதிரிகளும், துர்ப்பீணிகளும் அவன் குடும்பத்தை அழிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் அவன் சர்வ எச்சரிக்கையாக இருக்கவேண்டாமா …?” என்று கேட்க, 

“சுவாமி… ! எதிரிகளால் எப்பொழுதும் இந்த ஜமீனுக்கு ஆபத்து வராது. நாங்கள் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
அடுத்து நீங்கள் கூறும் துர்ஆத்மா பற்றி எல்லாம் நாங்கள் நம்புவதில்லை 

பிரபு தன் வீரத்தை நம்பி மட்டுமே சென்றிருக்கிறார். ஆனால் இங்கே சின்னராணிக்கும் இளைய தேவிக்கும் எந்த ஆபத்தும் நேரிடாது. 

எங்களை மீறி ஒரு புழு பூச்சிக்கூட உள்ளே செல்லமுடியாது . அதனால் நீங்கள் பயப்படாதீர்கள் .” 

புன்சிரிப்புடன் “அப்பனே … நான் முக்காலமும் உணர்ந்தவன் . ஆபத்து நெருங்குகிறதா இல்லையா என்பதை உணர்ந்தவன். 

நான் நிர்மலின் வளர்ச்சிக்காகவும் அவனின் உயிர் பாதுகாப்புக்காகவும் ஒரு தகடு கொடுத்திருக்கேன். அதை அவன் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தால் அவனை எந்தப் பகைவனும் நெருங்க முடியாது. ஆனால் இங்கே உங்கள் பாதுகாப்பு இன்றி வேறதுவும் பாதுகாப்புக்காக செய்திருக்கானா நிர்மலேஷ்வரன் …?’ “சுவாமி… தகடுப் பற்றியெல்லாம் எனக்கு ஓன்றும் தெரியாது . ஆனால் இளையராணியை அவரின் ரகசிய அறையைவிட்டு வரக்கூடாது என்று மட்டும் கூறியிருக்கிறார் . ” 

‘ஓ … அப்படியா சங்கதி .! அப்போ அந்த அறையில் தான் தகடு இருக்கவேண்டும். அதனாலத்தான் தான் அவர்களை பாதுகாப்பாக விட்டுச் சென்றிருக்கிறோம் என கிளம்பிவிட்டானா…? 

‘அதைக் கைப்பற்ற வேண்டுமென்றால் இந்த மாளிகை என் கைக்கு வந்தால் தான் முடியும். நிர்மல் வருவதற்குள் காரியம் கைகூட வேண்டும் என்ன செய்தால் இதை அடையமுடியும்’, 

“விகற்ப …நிர்மல் வருவதற்கு எத்தனை தினங்கள் ஆகும் ? அவனைப் பார்ப்பதற்காகவே அவனிடம் ஒரு பொருளை ஒப்படைப்பதற்காகவே வந்தேன். என் குருநாதர் என்னை சங்கரன்” மலைக்கு ( இமயமலை ) வரச் சொல்கிறார் . 

“அங்குப் போவதற்கு முன் நிர்மலேஸ்வரனிடம் ஒப்படைக்கும் ஒன்று வேறு உள்ளது.” 

“சுவாமி … அவர் சென்று இருதினங்களாகிவிட்டது . மூன்று தினங்களுக்குள் வந்துவிடுவதாக கூறிச் சென்றிருக்கிறார். கிழக்கு சமுத்திரம் அருகில்தானே இருக்கிறது .” 

“அப்படியானால் நாளைய தினம் வந்து விடுவானோ..அதற்குள் தகட்டை எடுத்தாக வேண்டும். அது மட்டும் என் கையில் கிடைத்துவிட்டால் சர்வசக்தி உடையவனாகி விடுவேன் ‘ என நினைத்தவன் 

“நல்லது . நான் மாளிகைக்குள் செல்கிறேன் வாருங்கள் ” என்று கூறியபடி உள்ளேச் செல்ல, பின்தொடர்ந்தார் திவான். 

‘நிர்மல் வருவதற்குள் இந்த மாளிகை நம் வசம் வரவேண்டும் . என்ன செய்வது ‘ என்று யோசித்தவாறே சென்றான். 

உள்ளே வேலை செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. 

“சுவாமி … பிரபுவின் கட்டளையை நாங்கள் மீறமுடியாது. அதனால்இளைய தேவியை நாங்கள் அழைக்க முடியாது . 

தாங்கள் இவ்வரண்மனை பாதுகாப்பிற்கு தேவையான மந்திராட்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்” 

நல்லது . நான் மந்திரம் சொல்லி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திவிடுகிறேன். நீ வருத்தம் கொள்ளாதே . என்னுடன் யாரும் வரவேண்டாம் .” 

“சரிங்க சுவாமி … உங்கள் பணியை எந்த இடையூறும் இன்றி செய்யப் பணிகிறேன் .” 

மாயவன் இதுதான் சமயமென்று தன் குடுவையைத் திறந்து சொட்டு சொட்டாக 

குருதியை ஓரமாக தெளித்துக் கொண்டே செல்ல மாளிகையில் இருள் பரவிக் கொண்டு இருந்தது. 

சிறிது நேரங்கழித்து திவான் வந்து ” சுவாமி தங்களுக்கான குடிலை மாளிகையின் நந்தவனத்தில் அமைத்திருக்கிறேன் . தாங்கள் இளைப்பாறி ஓய்வெடுங்கள் .” 

நள்ளிரவு நேரம் . ஆழ்ந்த உறக்கத்தில் அனைவரும் இருக்க மாயவன் தனக்களிக்கப்பட்ட குடிலில் அமைதியின்றி நடந்துக் கொண்டிருந்தான் . 

எதையோ எதிர்பார்த்து வெளியே வந்து அரண்மனையை வெறித்துப் பார்ப்பதும் பின் உள் செல்வதாகவும் இருக்க, 

அரண்மனையில் மாதங்கியின் குழந்தை திடீரென்று வீரிட்டு அழ ஆரம்பித்தது . 

சேடிகள் விரைய குழந்தையை யாராலும் சமாதானப்படுத்த இயலவில்லை 

வைத்தியவர் வந்து குழந்தையைப் பரிசோதிக்க ஏதும் குறையிருப்பதாக தெரியவில்லை. 

ஆனாலும் சூரணம் தந்து விட்டு செல்ல விடிய விடிய குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. 

மூன்றாம் சாமத்தில் எங்கிருந்தோ நரி ஒன்று ஊளையிட,  அரண்மனை பின்புற தோட்டத்தில் இருந்து அழுகைக்குரல் கேட்கத் தொடங்கியது. 

அரண்மனை ஊழியர்கள் அனைவரும் திடுக்கிட, 

வெளியில் காவலுக்கிருந்த ஊழியர்கள் மாளிகையை நோக்கி அவசரமாக வந்தனர் . 

அதே நேரத்தில் கோட்டைமணி ஒலிக்கத் தொடங்க சேனாதிபதியை நோக்கி வீரன் ஒருவன் குதிரையிலிருந்து வேகமாக வந்தான் . 

பிரபு பின்பக்க பெரிய வராண்டாவை நெருங்க அங்கே இருளடைந்து காணப்பட்ட அறை ஒன்று இருப்பதை அறிந்தான். 

மெல்ல அதன் அருகில் சென்றவன் இரும்பிலான துருப்பிடித்து இறுகிப் போயிருந்த கதவைக் கண்டு அங்கேயே சிறிது நேரம் நின்றான். 

‘நிர்மலா… உள்ளே செல். உனது உடமை அங்கே உனக்காக காத்திருக்கிறது. விரைவு தேவை. மாயவன் ரௌத்திரம் அடைந்துவிட்டான்.’ 

மானாகி மருண்டு மருந்துண்டு சருகான சதி சஞ்சாரம் செய்திடுவாய்.’ 

பார்வையில் நேர்கோடாய் திடமுள்ள மனிதனாய் கதவைத் திறக்க கீறீச் என சத்தத்தோடு கீழே சாய்ந்தது . 

தனது காலை உள்ளே வைக்க அவன் உடம்பு திடுக்கென்று தூக்கிப் போட்டது. 

அவன் காட்சியோடு மிரள மிரள பார்க்க தான் இந்த அறையோடு ஒன்றி வாழ்ந்த நினைவுகள் அலைபாயத் தொடங்கின. 

மெல்ல அடிமேல் அடியெடுத்து நடந்தான் . அறையின் நடு இடத்தில் அமர்ந்தவன் கண்களில் தாரை தாரையாக நீர் வழியத் தொடங்கின . 

கீழே கைகளை அலையவிட்டு மாதங்கி … மாதங்கி என புலம்ப வெளியே விம்மல் குரல் கேட்டது. 

என் கண்ணம்மா … என் உயிர் செல்லம்மா … உனை ஈன்ற தந்தை வந்திருக்கிறேன் . நீ ஏனம்மா என்னிடம் வந்தவுடனே மறைந்துவிட்டாய் . 

உங்கள் இருவரையும் நான் தனியே விட்டுச் சென்றதுதான் காரணம் . 

வருந்தாதீர் … இதோ நிர்மல் இனி வாளாயிருப்பான் என்று எண்ணாதீர். 

மாயவா… நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனை அழிப்பதற்காகவே வாழுவேன். 

பிரபு விருட்டென்று எழுந்தான் . சுவற்றில் ஓரிடத்தை குறிவைத்து பார்த்தான். 

பின் தன் கையினால் அங்கே தட்டிப் பார்க்க க்ணங் என ஒலி கேட்க திருப்தியடைந்தவன் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அங்கே உடைக்க கல் சரசரவென்று கொட்டியது 

துளை போல வந்த இடத்தில் கையை விட்டு துழாவியவன் தன் கையில் கிடைத்த பொருளை உணர்ந்து திருப்தியடைந்தான். 

அதைக் கையில் எடுக்க ஒரு திறவுகோல் இருந்தது. அதன் மேல் தனது குலத்தின் சின்னமான ஸ்வஸ்திக் இருக்க அதை தன் வாய் அருகே கொண்டு சென்று முத்தமிட்டான். 

பின் தரையின் மத்தியில் அமர்ந்து தரையைத் துழாவினான். 

ஒரு இடம் வந்ததும் முகம் பளிச்சிட்டது . 

அந்த இடத்தில் படிந்திருந்த மணல்களை கைகளால் அப்புறப்படுத்தினான். 

தரை நன்றாகத் தெரிந்தது . அந்த இடத்தில் துவாரம் ஒன்று தெரிய அந்த துவாரத்தில் தான் வைத்திருந்த சாவியை நுழைத்தான். 

இறுகிக் கிடந்ததாலும் சாவி துருப்பிடித்து இருந்ததாலும் திறக்க முடியவில்லை . தன் பலம் கொண்ட மட்டும் அதை ஆட்ட தரை பெயர ஆரம்பித்தது . 

ஒருவழியாக அந்த இடத்தை உடைத்தவன் உள்ளே சதுரமான இடத்தில் பேழை போன்ற பொருள் இருக்க அதை எடுத்தவன் மெல்லத் திறந்தான் அதற்குள் துணி ஒன்று நைந்து போய் கிடக்க அதற்குள் தகடு ஒன்று தன் வனப்பை இழந்தாலும் பளபளப்பு சிறிது காணப்பட்டது . 

அதை எடுத்தவன் தன் கர்சீப்பினால் துடைக்க அதில் இருந்த எழுத்துக்கள் நன்றாகத் தெரிந்தது. 

வாசலுக்கு ஓன்பது வாயில் ஒன்று பழுதானாலும் வாசல் அடைபடும். 

‘வரும்முன் காப்பதுவல்லவன் கடமை’ 

அதைப் படித்தவன் தான் முன்பு வைத்திருந்த தகட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து இரண்டையும் ஒன்றாக வைக்க, வெளியே பறவைகள் படபடவென்று அடிக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து நெடிய அழுகுரலும் கேட்கத் தொடங்கியது. 

இது எதுவும் பிரபுவை பாதித்ததாகத் தெரியவில்லை . மீண்டும் வெளிவந்தவன் தான் முதலில் தகட்டை கண்டுபிடித்த பகுதிக்கு விரைந்தான். 

உள்ளே எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இருக்க வெளியே புழுதிக்காற்றும் மரங்கள் அலைக்கழித்தபடி இருக்க, வௌவால்கள் படபடத்தபடி பறக்க, நரிகளின் ஊளையிடுதலும், 

அசாதாரணமான சூழ்நிலை இருந்தது . 

பிரபு காலங்காலமாய் அங்கு பழகியவன் போல் அந்த அறையில் சுவற்றின் பழுதான ஓவியத்தில் அருகில் சென்று அங்கிருந்த கல்போன்ற பகுதியை அழுத்தினான். 

சுவர் சிறிதளவு இடைவெளிக் கொடுக்க அதன் வழியே உள்நுழைந்தவன் குனிந்து செல்லக்கூடிய வழியில் இருந்த இடம் இருட்டாக இருக்க அங்கிருந்த சுவற்றை கால்களால் உதைக்க சிறிதளவு சுவர் இடிந்து வெளியிலிருந்து சூரியனின் ஒளி 

கீற்றாகப் பரவி அங்கிருந்த நிலையைக் நன்றாக எடுத்துக் காட்டியது . 

இப்போது நன்றாக உற்றுப் பார்த்தவன் அங்கிருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தான். 

அத்தியாயம் 24 

உதவி சேனாதிபதியிடம் அவசர செய்தியொன்றை சொல்வதற்கு வீரன் வேகமாக வந்தவன் சேனாதிபதி அங்கு இல்லாததைக் கண்டு தலைமை வீரனிடம் விசாரிக்க சேனாதிபதி ‘மாளிகையின் பின்புறம் அழுகுரல் கேட்டு வீரர்களுடன் சென்றிருப்பதாக கூறி 

‘ நீ என்ன சேதியாய் சேனாதிபதியை தேடுகிறாய்’ என்று கேட்க, 

“ஆற்றங்கரையின் அக்கரையில் சீர்மாறன் படைகளுடன் வந்து தங்கியிருக்கிறான். சேனாதிபதி பாலவராயரிடம் இந்த ஓலையைக் கொடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார். விரைவில் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமே ” என கூற ‘ சரி என்னுடன் வா . மாளிகையின் பின்புறம் இருக்கும் சோலைபக்கமாகத்தான் சென்றிருக்கிறார் . போகலாம் ” என்று கூறிவிட்டு அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். இரவு நேரமானதால் தீப்பந்த ஒளியுடன் கிளம்பியவர்கள் வெகு தூரம் வரை யாரையும் காணாது திரும்ப நினைக்கையில் ஏதோ புகை மண்டலம் எழுந்ததில் என்னவாயிருக்கும் என்று நினைக்கையிலேயே தலைசுற்றி மயங்கி கீழே விழுந்தனர். 

அவர்கள் தேடி வந்த துணைசேனாதிபதியும் மற்ற வீரர்களும் மரத்தின் அடியில் மயங்கிக்கிடந்தனர்.

இதையெல்லாம் அறியாத திவான் அவர்கள் சேனாதிபதியுடன் போர் சூழலை எதிர்கொள்ள அவரின் மாளிகையில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். 

மாளிகையின் உள்ளே சேடிகள் இளையராணியின் அறை பக்கமாக வரிசையாக படுத்திருந்தவர்கள் மற்றும் வீட்டின் பணியாளர்கள் அனைவரும் பெரிய வரவேற்பறையிலேயே ராணியின் காவலுக்காக வரிசையாக படுத்திருந்தனர். 

இந்த இரண்டு அடுக்குகளை தாண்டி மூன்றாவது அடுக்காக வீரர்கள் வரவேற்பரைக்கு முன்னால் இருக்கும் நீண்ட வராண்டாவில் வரிசையாக அமர்ந்தபடி காவலுக்கு இருந்தனர். 

வெளியே மண்டபத்தில்ஆயுதம் பல தாங்கிய வீரர்கள் அங்குமிங்கும் நடந்தபடி காவல் காத்துக் கொண்டிருந்தனர். 

இதைத் தவிர வெளியே மாளிகையைச் சுற்றி வீரர்களும் மாளிகையின் மேற்புர மாடத்தில் வீரர்கள் என்று மாளிகையில் எங்குப் பார்த்தாலும் வீரர்கள் தலைகளாகவே இருந்தனர். 

ராணி மாதங்கியும் குழந்தையும் இருக்கின்ற அறையில் குறிப்பிட்ட தாதிகளைத்தவிர வேறு யாரும் செல்வதற்கு அனுமதியில்லை. 

ஆனால் இன்றைய இரவு சோதனை இரவாக அனைவருக்கும் இருந்தது . 

மாயவன் மாளிகையில் இரத்தத் துளிகளை விடும்போது கூடவே மூலிகை கலந்த ஏதோ ஒரு செடியை அங்கங்கே போட்டுவிட்டான் . 

இரவு நேரத்தில் தனது குடிலை விட்டு மெல்ல வெளியே வந்தவன் சிறு தீப்பொறியை கற்களை உரசி தான் போட்டுவிட்டு வந்த மூலிகைச் செடி ஒன்றில் பற்றவைத்துவிட அது மெல்ல பரவி மற்ற செடிகளுக்கும் பரவி மாளிகையை சுற்றி புகையை பரவ செய்தது . மேலும் மாயவன் தன் சித்து வேலையை ஆரம்பிக்க உயிரிழந்த விஸ்வேஸ்வரனின் ஆத்மா வெளிவந்து தனது நிறைவேறா ஆசையினை அழுகுரலாக வெளிப்படுத்த ஆரம்பித்தது. 

இந்த அழுகுரல் மாளிகையைச் சுற்றி உள்ளவர்களுக்கும் கேட்கவே நடுங்கினர். ‘ஏன் இந்த அழுகுரல் . இந்த ஜமீனுக்கு ஏன்இந்த பொல்லாத காலம்.  

அந்த பெண்ணின் சாபம் பலிக்கத் தொடங்கிடுச்சோ ஐயோ ! பிரபு ஜமீன் வேற ஊரிலில்லாத நேரம் . இப்படி நடக்கிறதே…’ என்று நினைத்தார்களே தவிர யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளிவரவில்லை பயத்தினால் 

வெளியிலிருந்த வீரர்கள் வெகு நேரமாகியும் துணை சேனாதிபதி திரும்பாததைக் கண்டு இருவர் இருவராகச் செல்வதும் பின்பு அவர்களும் திரும்பாததும் நடந்துக் கொண்டே இருந்தது . 

வீரன் ஒருவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட திவானைத்தேடி வேகமாகச் சென்றான் . 

அதற்குள் மாளிகையின் உள்ளே படுத்திருந்த அனைவரும் புகைமண்டலம் சூழ்ந்து வருவதை அறியாமல் உறங்கிக் கொண்டிருக்க தூக்கத்திலேயே மயக்கமாயினர். 

நான்காம் சாமம் முடியும் நேரத்தில் திவான் வேகமாக வர மாளிகையின் வெளிப்பறம் காவல் வீரர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்க பதறி அடித்து உள்ளே வந்தவர் அங்கிருந்த வீரர்களும் மாளிகையில் உள்ளே இருந்தவர்கள் எல்லாம் பிணம் போல் கிடப்பதையும் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். 

என்ன நடந்தது இங்கே ? எப்படி ஒரே நேரத்தில் அனைவரூம் இறந்துகிடக்கின்றனர் . வெளியிலோ வீரர்களை காணவேயில்லை . ராணிக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமோ என பயந்தவராய் பதறி அவர் அறையை தேடி ஓடினார். 

புகை போல் மாளிகையில் இருப்பதைப் பார்த்து தன் தோளில் கிடந்த துண்டினால் முகத்தை மூடியவர் ராணியின் கதவை படபடவென்று தட்டினார் 

“யாரது ?” என உள்ளிருந்து குரல் வர “ராணிம்மா திவான் வந்திருக்கிறேன். கதவை அகலத்திறக்காமல் லேசாக திறவுங்கள். அவசரம் .” எனக் கூற கதவை லேசாகத் திறந்த மாதங்கி வெளிப்புறம் கலவரமுடன் திவான் நின்றிருப்பதைப் பார்த்து 

“என்ன திவான் … ஏன் இந்த பதற்றம் என்ன நடந்தது. ஏன் என்னை கதவை முழுவதும் திறக்க வேண்டாம் என்று கூறினீர் ?” 

என மாதங்கி கேட்க, 

“மகாராணி …! நம் அரண்மனையில் ஏதோ விபரீதம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது வீரர்கள் முதல் சேடிகள் வரை அனைவரும் மயங்கி கிடக்கின்றனர். 

என்ன காரணம் என்று தெரியவில்லை. 

நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் கதவைத் திறக்காதீர்கள். 

என்ன நிகழ்ந்தாலும் யார் வந்து கூப்பிட்டாலும் பிரபு வரும்வரை திறக்காதீர்கள் .” என்று கூற 

“ஏன் எல்லோரும் மயங்கினர் . யார் வந்தது . பிரபு எப்பொழுது வந்து சேருவார் ?” 

“ராணியம்மா … ஏதோ புகைமண்டலம் சூழ்ந்திருக்கிறது . யார் இதை செய்திருக்கிறார்கள் என்பது யூகத்தின் அடிப்படையில் உணர்கிறேன். சீர்மாறன் அக்கரையில் போர் தொடுக்க வந்து விட்டான். 

அவனின் சதியாகத்தான் இருக்கும் . நீங்கள் அடுத்து நான் அழைக்கும் வரை அறையை திறக்க வேண்டாம் .” எனக் கூறிவிட்டு விடுவிடுவென்று திரும்பி வெளியே சென்றார் . 

மூக்கை மூடியபடியே வெளியேறியவர் நேராக குடிலை நோக்கிச் செல்ல குடிலில் மாயவனைக் காணவில்லை. 

வெளியில் வந்து சுற்றிலும் நோட்டமிட்டவர் எங்கும் காணாததால் சற்று சந்தேகம் ஏற்பட்டது திவானுக்கு இவர் உண்மையிலையே நமது பிரபுவின் பர்வதமலை சித்தர்தானா …? நம் கணிப்பில் ஏதும் தவறு ஏற்பட்டதோ. 

எங்கோ மறைந்து விட்டான் பாதகன். 

திடீரென்று அவருக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டது . ஏன் இவன் மாயவனாக இருக்குமோ …? அவனுக்குத்தான் எல்லா சித்திகளும் வசமாகுமே. 

தவறு செய்துவிட்டோம் . ஆராயாமல் அநீதி இழைத்து விட்டோம். 

வேகமாக சேனாதிபதியைத் தேடி குதிரையை விரட்டினார். 

சேதி கேட்ட சேனாதிபதி உக்கிரமடைந்தான் . ” என்ன ஒரு மோசம். நாம் இத்தனை பாதுகாப்பு கொடுத்தும் வீணாகிப் போய் விட்டதே… துணை சேனாதிபதியை போய் பார்க்கலாம் . அவரை பார்த்தால் விவரம் தெரியும். 

பிரபு வந்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அரை நாளில் வந்துவிடுவார். அது வரை சீர்மாறன் நம் எல்லையைத் தொடாமல் பார்த்துக் கொண்டால் போதும். வாருங்கள் மாளிகைக்குச் செல்வோம். முதலில் மகாராணியைக் காப்பாற்ற வேண்டும் .” திவானும் சேனாதிபதியும் அரண்மனையை நெருங்கும் வேளை எங்கிருந்தோ பறந்து வந்த எரிஅம்பு அவர்களின் குதிரையின் முன்னால் வந்து விழுந்தது. 

திடீரென்று நெருப்பு தன் முன்னால் விழவே குதிரைகள் மிரண்டு தடுக்கி விழுந்தன . 

இருவரும் மணலில் கீழே விழ கோபத்துடன் இருவரும் வேகமாக எழுந்தனர். 

கீழே விழுந்த எரிம்பிலிருந்து வேகமாக புகை எழும்பி அவர்களைச் சூழ்ந்துக் கொள்ள மூச்சுத் திணறலுடன் முகத்தை மறைக்க அவர்கள் செய்த முயற்சி தோல்வியடைந்தது. 

சிறிது சிறிதாக இருவரும் மயங்கிட அவர்களை நோக்கி சிரிப்பலை எழுந்தது. 

‘என்னிடமா … உங்கள் வீரம் . இனி இந்த உலகமே என் கைக்குள் அடங்கப் போகிறது. அவள் மட்டுந்தான் பாக்கி . அவளையும் அனுப்பிவிட்டால் அங்கிருக்கும் தகடு என்னுடையது. ஏ… சித்தனே …. ! என்னை அவமானப்படுத்தி இந்தக் கயவனுக்குத்தானே கொடுத்தாய். பார்த்தாயா அவன் சாம்ராஜ்யத்தை. 

ஒரு நொடியில் அனைத்தையும் இல்லாமல் செய்து விட்டேன். 

வருகிறேன் மாதங்கி உன் வசம் இருக்கும் பொருள் என் வசமாக போகிறது .’ 

மாயனின் கர்ஜனையை கேட்பதற்கு மாளிகையைச் சுற்றி ஒருவருமில்லை அனைவரும் மயக்கத்தில் . 

மாளிகையில் விடிந்து ஒரு நாழிகை ஆனது. தனக்கும் தன் குழந்தைக்கும் தேவையான உணவை அளிக்க யாருமில்லாததால் கலக்க நிலையில் மாதங்கி இருக்க, 

குழந்தை பசியினால் வீரிட்டு அழத் தொடங்கியது. 

என்னசெய்வதென்று புரியவில்லை. தன்னை வெளியில் வரவேண்டாம் என்று திவான் கூறியிருக்கிறார். சரி முடிந்தவரை சிறிது நேரம் குழந்தையை தன் பாலினால் பசியாற்றி சமாதானப்படுத்துவோம் . பிரபு எப்படியும் இன்னும் சில நாழிகைக்குள் வந்துவிடுவார் .’ என எண்ணியவள் குழந்தையை அரவணைத்து பசியாற்றினாள்

திடீரென்று நிர்மலேழ்வரன் குரல்’ மாதங்கீ’, என அலறல் போலக் கேட்கவே திடுக்கிட்டாள். 

நிசமாகவே அவரின் குரல்தானா … இல்லை பிரமையா … காதை வெளியில் வைத்து உற்றுக் கேட்டாள். 

மீண்டும் ‘ ஐயோ மாதங்கி … ! உனை பிரிந்து செல்கிறேனே…. பாவி எனையும் அம்பினால் தைத்து விட்டானே … மாதங்கி … விரைந்து கதவைத்திற. உன்னையும் என் மழலையையும் கடைசியாக பார்க்கிறேன் . மாதங்கி … மாதங்கி ‘ என ஈனசுரத்தில் நிர்மல் குரல் அடங்கிப் போவது போல் கேட்க, 

தன் கணவனின் குரல்தான் என கண்டுபிடித்தவள் வெளியே வருவதற்கு வேகமாக கதவைத் திறக்க நினைக்கையில் திடீரென்று ‘ ஏன் இது சதி வேலையாக இருக்கக் கூடாது . என்னவர் வீரமில்லாதவர் அல்லர் . எத்தனைப் பேர் மறைந்திருந்து தாக்கினாலும் அத்தனைப் பேரையும் வதம் செய்யக்கூடியவர் . அதனால் அவசரப்பட்டு போகக்கூடாது ‘ என நினைத்தவள் கதவினருகே நின்றுவிட்டாள். 

‘ஒருவேளை என் நாதனாய் இருந்தால் ஐயோ அவரைக் காப்பாற்றாமல் போய்விடுமே . சரி எதுவந்தாலும் இனி ஒரு கைப் பார்த்துவிடவேண்டும்’, என நினைத்தவள் தனது வாளை எடுத்துக் கொண்டு தன் முதுகில் ஒரு துணியைச் சுற்றிக் கட்டிக் கொண்டு குழந்தையை முதுகுத்துணியில் தொங்க விட்டு வாளை தன் வலது கையில் பிடித்தவாறு கதவை மெல்லத் திறந்தாள். 

நிர்மலேஷ்வரன் தனது காரியங்களை முடித்துக் கொண்டு விரைவாக தனது பயணத்தை தொடங்கினான் . 

மனதில் ஏதோ இனம்புரியாத கவலை வாட்ட கலக்கமடைந்தான். 

மாளிகையில் ஏதும் வீபரீதம் நடந்திருக்குமோ என அவன் உள்ளுணர்வு உணர்த்த வீரர்களை துரிதப்படுத்தி வேகமாக வந்தான். 

திடீரென்று தன் காதில் சித்தரின் குரல் போல் கேட்க சட்டென்று நின்றான். 

‘ நிர்மல் … நீ விரைந்து மாளிகையைச் சேர் உன் குலவிளக்குகள் அணையப் போகும் நிலையில் உள்ளன. 

மாயவன் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறான். தனது துஸ்ட துணைகளாக அரண்மனையைச் சுற்றிலும் நிறைவேறா ஆசையுடன் சென்றடைந்த விஸ்வேஸ்வரனையும் அவனின் தாயையும் விட்டு இனி வேறு யாரும் அந்தப் பகுதிக்குள் வரமுடியாதபடி வலையை பின்னிவிட்டான். 

நிர்மலா … உன்னிடத்தில் எனது தகடு இருக்கின்ற காரணத்தால் உன்னை அவனால் ஒன்றும் செய்ய முடியாது. 

விரைந்து செல் . உன் வினைகளை மாற்ற முயற்சி செய் ‘ எனக் கூற பிரமை பிடித்தவன் போல் நின்றுவிட, கூட வந்த வீரர்கள் அவன் திடீரென்று நின்று விட்டதைப் பார்த்து ” பிரபு … ஏன் நின்று விட்டீர்கள். ” என்று கேட்டதால் நினைவு வந்தவன் போல் வேகமாக குதிரையைத் தட்டினான். 

கிழக்கு வாசல் வழியாக அவன் வந்ததால் மேற்குப் புறத்தில் முகாமிட்டிருக்கும் சீர்மாறனைப் பற்றி அறியவில்லை அவன் வருவதைப் பார்த்ததும் கோட்டையின் மீது காவல் காக்கும் வீரர்கள் முழக்கத்தை எடுத்து ஊத கோட்டைத்தலைவன் ஓடிவந்து “பிரபு வாழ்க… மங்களாபுரி தலைமை வாழ்க ! எனக் கூற 

” ஏன் போர் கொடியை பறக்க வைத்திருக்கிறீர் . யார் படையெடுத்து வருகிறார்கள் ? என்று கேட்க, 

‘பிரபு … தங்களுக்குத் தெரிவிக்க வீரனை செய்தி ஓலையுடன் சேனாதிபதி அனுப்பி வைத்தாரே … கிடைக்கவில்லையா ஓலை ?” என்று கேட்க, 

புருவத்தை நெறித்தவன் ‘ இல்லையே … எனக்கு விவரம் வந்து சேரவில்லையே . 

ஏதோ அசம்பாவிதம் எதிரிகளால் அவ்வீரனுக்கு ஏற்பட்டிருக்கலாம் . சரி திவானும் சேனாதிபதியும் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

உங்களுக்கு என்ன கட்டளை இட்டார்கள் ?” 

“பிரபு … தாங்கள் வரும் வரையில் போர் தடுக்க ஆணையிட்டிருக்கிறார்கள். 

சீர்மாறன் ஆற்றங்கரையின் அக்கரையில் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறான். ஒற்றர்கள் அளித்த விவரப்படி கோதுமலை ஜமீன் சிங்கவராயர் அவனுக்கு படைத் தருகிறார். 

அப்படை இன்னும் வந்து சேராததாலே காத்துக் கொண்டிருக்கிறான் . 

பிரபு மற்றொரு விசயம் நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தப் போகிறது மேற்கு மலைகளில் திடீரென பருவம் மாறி மழைப் பொழிவு அதிகமாக இருக்கிறதாம். அதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதால் சீர்மாறன் திடிரென்று ஏற்பட்டுவிட்ட இயற்கை சூழலை நினைத்து ஆற்றைக் கடக்கத் தயங்குகிறான். 

அதனால்தான் தாங்கள் வரும் வரை போர் வேண்டாம் என்று சேனாதிபதி கட்டளையிட்டுள்ளார். பிரபு மற்றொரு சேதி. திவானும் சேனாதிபதியும் வெகு நேரமாக வரவில்லை . தெரிந்துக் கொள்ள அனுப்புகின்ற வீரர்களும் திரும்பவில்லை. நானே சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தாலும் தலைமை என்று 

ஓருவருமே இங்கு இல்லாத நிலை ஏற்படும் என்று நினைத்துச் செல்லவில்லை. 

இதுவரை இருபதுக்கு மேற்பட்ட வீரர்கள் சென்றும் திரும்பவில்லை . 

ஏதேனும் விபரீதம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறதோ என்று பயம் வருகிறது ” கோட்டைக் காவலனின் இந்த அறிவிப்பால் மனம் குழம்பிப் போனவன் 

அவனுக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு மாளிகை நோக்கி விரைந்தான். 

மாளிகை அருகில் நெருங்க நெருங்க எங்குப் பார்த்தாலும் வீரர்கள் கீழே விழுந்தநிலையில் கிடப்பதைப் பார்த்தான். 

சிறிது தூரத்தில் திவானும் சேனாதிபதியும் குதிரையோடு கீழே மயங்கி கிடப்பதைப் பார்த்ததும் குதிரையை விட்டிறங்கி கீழே குதித்து அருகில் ஓடி தூக்கினான் அவர்களின் சுவாசத்தை தொட்டுப் பார்த்தவன் வீரர்களிடம் சில மூலிகைச் செடியின் பெயர்களைக் கூறி விரைவில் பறித்து வரச் சொல்ல விரைந்தனர் ஆளுக்கொரு திசையாக. 

சிறிது நேரத்தில் அவர்கள் கொண்டுவந்த மூலிகையிலிருந்து சாற்றைப் பிழிந்து அவர்கள் இருவரின் மூக்கிலே சொட்டு சொட்டாக விழ வைக்க சிறிது நேரத்தில் இருவரும் கண்களைத் திறந்து மெல்லப் பார்த்தனர். 

எதிரே தங்கள் ஜமீன் நிற்பதைப்பார்த்ததும் மெல்ல எழுந்தனர். 

” பிரபு … நமது மாளிகையில் தேவிக்கு கெடுதல் நிகழப் போகிறது. விரைந்து செல்லுங்கள்” எனக்கூறியவாறு தலையைப் பிடித்துக் கொண்டனர் . 

வீரர்களிடம் உடனே வைத்தியர்கள் அனைவரையும் மயக்கம் தெளிவிக்கும் ஔஷகத்துடன் வருமாறு கூறிவிட்டு விரைந்தான் குதிரையில் மாளிகைக்கு. 

பிரபு இருட்டறையை நோக்கி உள்ளே செல்வதற்கு முன் தனக்கு சித்தர் கொடுத்த தகட்டையும், தனது தந்தையால் தனக்களிக்கப்பட்ட தகட்டை மாதங்கிக்கு பாதுகாப்பாய் இருக்க முடியும் தனது இரகசிய அறையில் தரையில் புதைத்து விட்டுச் சென்ற தகட்டையும் எடுத்து ஒன்று சேர்க்க அழுகையுடன் கூடிய அலறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது . மாளிகையில் மாயவனால் தெளிக்கப்பட்ட விஸ்வேஸ்வரனின் இரத்தத்துளி மாயவனின் சித்தினால் அங்கே அடைக்கலமாகி ஆத்மா சாந்தியடையாமல் அங்கேயே சுற்றியலைந்துக் கொண்டிருந்ததவைகள் தகட்டின் ஒளி மாளிகையில் பிரதிபலிக்க அந்த ஒளியின் வெளிச்சம் அந்த சித்திகளை இருக்கவிடாமல் கதறச் செய்தது. 

மாளிகை வாசலை தாண்டமுடியாமலிருக்கும் மாதங்கி நிர்மலா … ! உன்னிடமிருக்கும் அந்த தகடுகளை 

இந்த வாசலின் மேல் வைத்து விடு . அவைகள் ஒளியின் தீட்சண்ணியத்தில் எரிந்து இந்த உலகத்தை விட்டு நீங்கிவிடும், என்று கூற 

அதன்படியே பிரபு அவைகளிரண்டையும் இணைத்து வாசலில் வைக்க அதன் ஒளி மாளிகை முழுதும் பிரதிபலிக்க, 

பல அழுகுரல்கள் ஒன்றாக இணைந்து அலறியபடி இருந்தவை திடீரென்று அமைதியாயின . 

சிறிது நேரத்தில் இருளடைந்து கிடந்த மாளிகை ஏதோ விளக்கு போட்டது போல் வெளிச்சம் பரவியது. 

மீண்டும் அந்த இரு தகடுகளையும் எடுத்துக் கொண்டவன் ‘ மாதங்கி இனி நீ உள்ளே வரலாம் ‘ எனக் கூற 

‘இல்லை நிர்மலா … அது என்னால் முடியாது. மாயவன் மாளிகையின் பின்புறத்தில் வாசம் செய்துக் கொண்டிருக்கிறான். 

அவன் என்னை கட்டிவிட்டு விட்டான். 

அவனின் அழிவே என்னை இந்த வலையிலிருந்து விடுபடவைக்கும். 

அவன் அழிய வேண்டுமானால் நமது குலதெய்வம் கோட்டையூர் மதாங்கினித்தாயின் சூலாயுதம் நமது நிலவறையில் இருக்கிறது . 

அத்துடன் நீ எடுத்த கட்டாரி இரண்டையும் கொண்டுவந்து பின்புறம் இருக்கும் அந்த மரத்தில் ஆழச் சொருகு. 

இங்கிருந்த குட்டிச்சாத்தான்கள் விலகிவிட்டபடியாலும் உன்னிடமிருக்கும் தகடுகளாலும் அவனால் உள் வந்து தடுக்க எந்த தொந்தரவும் செய்ய முடியாது. 

விரைந்து நிலவறைக்குச் செல். நிலவறை வழி உனக்குத்தான் தெரியும் . 

இந்த தகட்டை கையில் எடுத்துச் செல். 

சூலாயுதமின்றி நீ மாளிகையைவிட்டு வெளிச் செல்ல முடியாது . 

மாயவன் உனை அழித்து அந்தத் தகட்டை பறித்து விடுவான் . 

இவ்வளவு காலமாக அந்த தகட்டை அவனால் எடுக்கமுடியாதபடி நம் குலதெய்வமே இங்கு காத்துக் கொண்டிருந்தது. 

அந்த தெய்வமும் வெளி வரமுடியாதபடி அவன் கட்டு கட்டி வைத்ததனால் தான் அவன் இந்த மாளிகையை வசப்படுத்த முடிந்தது . விரைந்துச் சென்று சூலாயுதத்துடன் வா ‘ என்றதும் 

தனது தந்தை ஓவியம் இருக்கும் இரகசிய அறைக்குச் சென்றவன் அந்த சுவற்றில் கைவைத்து தேட அங்கு குமிழ் போல் திருகு ஓவியத்தில் மறைந்திருக்க அதை திருக முயன்றவன் முடியாததால் கீழே இருந்த கல்லைக் கொண்டு தட்டி தட்டி சிறிது சிறிதாக அதை சுழலச் செய்தான். 

கிரீச் என சத்தத்துடன் அந்த குமிழ் திறக்க மெல்ல அந்த சுவர் இரண்டாகப் பிரிந்தது. 

உள்ளே இருட்டாக தெரிய தன் செல்போனை எடுத்து வெளிச்சத்தைக் கொடுக்க வழி நன்றாக தெரிந்தது. கொஞ்சம் தூரம் சென்றதும் மீண்டும் ஒரு சிறிய கதவு தெரிய அதை இழுக்க அது சிதிலமடைந்து இருந்ததால் கையோடு வந்துவிட்டது . 

குனிந்து உள்ளே நுழைய படிக்கட்டுகள் காணப்பட மெல்ல அடிமேல் அடி எடுத்து இறங்கினான் . 

கடைசி படியில் கால் வைக்கும் முன் திடுக்கிட்டு கால்களைத் தூக்கினான். 

அங்கே நிறைய பாம்புகள் மலைபோல் குவிந்திருந்த பொக்கிசங்களின் மேல் ஊர்ந்துக் கொண்டிருந்தன . 

அவைகள் நிறம் மங்கி ஒளியிழந்துக் காணப்பட்டாலும் அவற்றின் தன்மையினால் பளபளப்பு தெரிந்தது. 

‘இந்த பாம்புப் படையில் எங்கிருந்து சூலாயுதத்தைத் தேடுவது என்று நினைத்தவன் ஏதோ ஓரு யோசனையில் அந்தத் தகடுகளை கடைசிப் படிக்கட்டில் வைத்தான். 

சிறிது நேரந்தான் . அந்தப் பாம்புகள் பக்கவாட்டுச் சுவர்களில் இருந்த ஓட்டைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தன. 

அத்தியாயம் 25 

நிர்மலேஷ்வரன் சேனாதிபதியையும் திவானையும் மூலிகை மருந்தினால் மயக்கம் தெளியவைக்க, சிறிது நேரத்தில் இருவரும் மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள் அவர்களின் எதிரே ஜமீன் நின்றிருப்பதைப் பார்த்து மெல்ல எழுந்தனர். மெல்லிய குரலில் ” வந்தனம் பிரபு !” எனக் கூறியவர்கள் ” தாங்கள் எப்பொழுது வந்தீர்கள் . நேராக இங்குதான் வருகிறீர்களா … அரண்மனைக்குப் போய்விட்டு வந்தீர்களா …?” என்று கேட்க, 

நேராக இப்போதுதான் வந்துக் கொண்டிருக்கிறேன். ஏன் எல்லோரும் மயக்கமாகிக் கிடக்கிறீர்கள். வீரர்கள் அங்கங்கே மயங்கிக் கிடக்கிறார்கள் என்ன நடந்தது…? யார் இதையெல்லாம் செய்தார்கள் …? ” ” பிரபு .. இதை யார் செய்கிறார்கள் … ஏன் செய்கிறார்கள் என்பது எங்களுக்கும் புரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது . இது மனிதன் செய்யக்கூடிய வேலையாகத் தெரியவில்லை. 

ஏதோ மந்திரம் சம்மந்தப்பட்டதாகத் தெரிகிறது . அரண்மனையிலும் சேடிகளும் தாதிகளும் காவலுக்கிருந்த வீரர்கள் என அனைவருமே மயக்கத்தில் இருக்கிறார்களா மரணமடைந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. துணை சேனாதிபதி பாலவராயன் கூட காணவில்லை. என்ன நடந்திருக்கு என்றே எங்களுக்குப் புரியவில்லை 

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்மல் கோபமாக ” என்ன திவான் … உங்களை எல்லோரும் நம்பித்தானே நான் இங்கிருந்துச் சென்றேன்.” 

“பிரபு … சீர்மாறன் படையெடுப்பை எப்படி முறியடிக்கிறது என்று சேனாதிபதியிடம் கலந்துரையாட சென்றேன். 

அதற்கு முன் ஐந்தடுக்குப் பாதுகாப்பை அரண்மனைக்கே பலப்படுத்திவிட்டு தான் சென்றேன். 

மீண்டும் சென்று பார்க்கையில் எல்லாமே மாறியிருந்தது. 

நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் கூறியவர் ‘பிரபு… தாங்கள் உடனே மாளிகை விரைந்திடுங்கள். ராணி, இளையதேவி இருவருக்கும் ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது . ” என்று கூற 

‘சீர்மாறன் வேறு முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவனை தடுத்து நிறுத்த வேண்டும். 

தலைமை அனைவரும் இப்படி இருக்கிறீர்கள். நான் எதை முதலில் செய்வது என்றேப் புரியவில்லை” “தாங்கள் முதலில் மாளிகைக்குச் செல்லுங்கள். முதலில் காப்பாற்றப்படவேண்டியவர் மகாராணியும் இளையதேவியும் தான் . விரைவாக செல்லுங்கள். எங்களுக்கு சரியாகிவிடும். 

நாங்கள் இப்பொழுதே கோட்டைக்குச் செல்கிறோம் .” ” இல்லை … இல்லை . தங்களுக்கு வைத்தியர் வைத்தியம் செய்தபிறகுதான் நீங்கள் செல்ல வேண்டும். சிறிது நாழிகை பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு செல்லலாம் ” என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறினான் . 

தன் குதிரையில் பாய்ந்து ஏறியவன் ஒரே தாவில் பறக்கத் தொடங்கினான். 

மாளிகையில் தன் அறையிலிருந்த மாதங்கி நிர்மல் குரலில் அலறுவது போல ‘மாதங்கி… கீ…! என அலறல் சத்தம் கேட்க, 

நடுங்கிப் போனவள் எல்லோரையும் போல தன் பதியும் ஆபத்தில் சிக்கிக் கொண்டாரோ …. என்று பயந்தவள் சட்டென்று தன் அறைக்கதவைத் திறக்கப் போனவள் ஏதோ நினைத்தவள் ‘ இல்லை … இது ஏதோ மாயவேலை போல் தெரிகிறது . திவான் தான் கூறியிருக்கிறாரே … எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்காதீர்கள் என்று வேண்டாம் … சிறிது நாழிகைப் பார்த்துவிட்டு திறக்கலாம் என்று கதவுப் பக்கம் வந்தவள் மீண்டும் திரும்ப, மறுபடியும் அபயக்குரல் மீண்டும் ஒலிக்க ஏதோ தீர்மானம் வந்தவளாய் தனது குழந்தையை முதுகில் வைத்துக் கட்டியவள் சுவற்றில் வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றை எடுத்து தன் இடுப்புத் துணியில் சொருகிக் கொண்டாள். 

நன்றாக மூச்சை இழுத்து விட்டவள் மீண்டும் சமநிலைக்கு வந்தவள் தன் குழந்தையை தன் இடது கையைத் திருப்பி அணைத்துக் கொண்டாள். பிறகு வேகமாக வந்து கதவைத் திறந்தவள் மாளிகையின் நடு மையத்தில் வந்து நின்றாள். 

அங்கே மயங்கிக் கிடந்தவர்களைத் தவிர தன் பதி காணாததால் சுற்றி பார்த்தவள் 

‘நிர்மலா .. எங்கே இருக்கிறாய் ? வந்து விடு . நிர்மல் …. நிர்மல்’ என்று கத்த 

பயங்கய சிரிப்பொலி ஒன்று எழுந்ததுஅங்கு. அந்த சிரிப்பைக் கேட்வள் ” யார் … யார் நீ…? உள்ளத்தில் உரமிருந்தால் நேரடியாக வந்துப் பார். இப்படி பேடியைப் போல் ஒளிந்து நின்று உன் வீரத்தைக் காட்டாதே…? 

வா … இதோ மங்களாபுரியின் ராணி மாதங்கி நிமிர்ந்த நடையோடு உனை எதிர்க் கொள்ள வந்திருக்கிறேன். வா … வா …!” என்று ஆவேசமாக குரலிட்டாள். 

அப்போது உள்ளிருந்து குள்ளமான உருவம் உடைய தலைமுடி செம்பட்டை நிறத்துடன், நீண்ட தாடியுடனும் பூனைக் கண்களுடன், நீண்ட அங்கி அணிந்தவன் மெல்ல நடந்துவர 

அவனைப் பார்த்தவள் ‘ இவனா இத்தனைக்கும் காரணமானவன் . இந்த சிறு பூனையைக் கண்டா இத்தனை நடுக்கம் கொண்டேன் . சிறு எறும்புக்கு யானை தேவையா …? இவனை ஒரு நொடியில் அழித்துவிட மாட்டேனா …?’ தப்பான கணக்குப் போட்டவள் தைரியமாக அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். 

“என்ன அம்மணி … ஒரு வழியாக வெளி வந்து விட்டாயோ … உடையவன் குரல் கேட்டதால் ஓடோடி வந்து விட்டீர்களோ…?” 

“ஓ …. அப்போ நீதான் அந்தக் குரலுக்குரியவனோ நான் இதை நம்பி வெளிவந்ததாக உனக்கு நினைப்போ…? 

மடையா….என் பதியின் குரல் நான் அறியாததா…? அதுவல்ல காரணம் . யார் இந்தக் கயவன் என்று பார்க்கவே வெளி வந்தேன்” 

“கண்டுவிட்டாயா… என் நண்பன் விஸ்வேஸ்வரனின் கொடூரக் கொலைக்காகவே பழி தீர்க்க வந்த மாயவன்…!” என்று கூற, 

‘ஓ… அவன் நீதானா …? ஒரு வம்சமே அழிந்துப் போக காரணமானவனின் தண்டனைக்காக பழி தீர்க்க வந்தவனோ …? 

மாய சித்து வேலை புரிந்துதான் பழி தீர்க்க வந்தாயோ அதுவும் என் பதி இல்லாத நேரம் பார்த்து . பலே …. நீ சரியான வீரன்தான் . பாராட்டுகிறேன் உன் வீரத்தை …!” கிண்டலுடன் மாதங்கி கூறிய வார்த்தைகளில் சினம் கொண்ட மாயவன், 

“நிறுத்து உன் அதிவேக வார்த்தையை . இதோ மண்ணில் புரளும் இந்த ஜீவன்களைப் பார்த்தாயா…? உனக்கும் அந்த நிலமை கூடிய விரைவில் வரப் போகிறது. 

அதற்கு முன் உன்னிடம் ஒன்று கேட்கணும். 

உன் பதி உன்னிடம் கொடுத்துவிட்டுப் போன அந்த தகடு எங்கே உள்ளது . அதை என்னிடம் கொடுத்துவிட்டால் உன்னை ஓன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறேன் .”, 

” தகடா … என்ன தகடு ? என் பதி என்னிடம் எதுவும் தரவில்லை..” 

விளையாடாதே … நான் மிகுந்த ஆத்திரக்காரன். எனக்கு கிடைக்காததை யாருக்கும் கிடைக்க விடமாட்டான் இந்த மாயவன் .” 

“சும்மா நேரத்தைக் கடத்த உளறிக் கொண்டிருக்காதே … எனக்கு தகடு என்பது என்ன என்பது கூட தெரியாது மரியாதையாக வெளியே சென்றுவிடு . வீணாக என் வாளுக்கு இரையாகிவிடாதே ..?” 

என்ன … உன் வாளுக்கு நான் இரையாகப் போகிறேனா …? ஹஹ்ஹா ….! பாவம் சிறு குழந்தைக்காரியாயிற்றே … விட்டுவிடலாம் என்று நினைத்தேன் . ஆனால் உன் கர்மா உனை வாவென்று அழைக்கிறது . என்ன செய்வது …?” என்று கூறியவாறு தன் கண்களால் அவளை வசியப்படுத்த முயன்றான். 

ஏதோ ஒரு உள்ளுணர்வால் சட்டென அவன் பார்வையைத் தவிர்த்தவள் 

“அடேய் மாயவா … வீணாக வார்த்தை ஜாலம் வேண்டாம் . என் வாள் உன்னை முத்தமிடத் துடிக்கிறது வா … வெளியே வா …” என்று கூறியவாறு குதித்து தாவி ஓடினாள்

‘என்ன … உள்ளே பயமா . வெளியே ஓடுகிறாய் …? உன் காதலன் வந்துவிடுவான் என்று நம்பிக்கையா … ஓடு . எங்கு சென்றாலும் உனை விடமாட்டேன் .” என்று கூறியவாறே பின் தொடர்ந்தான். 

வெளியே வீரமாகாளியைப் போல் ஆவேசமாக வாளை சுழற்றியபடி நின்றவளைக் கண்டவன் வீணாக ஆவேசத்தைக் காட்டாதே. உன் வாள் மட்டுமல்ல … எவராலுமே எனைக் கொல்லமுடியாது . நான் சகல வித்தைக்காரன் . என் மாயை உனை அடக்கிவிடும் ” 

“நான்தான் முன்பே கூறினேனே வீணாக வார்த்தை ஜாலம் வேண்டாமென்று . ம்… வா வந்து என் வாளுக்கு பதில் சொல்” என மீண்டும் வாளை சுழற்றியபடி அவள் நிற்க, 

சட்டென்று அவள் வாளை தன் குறுவாளால் தட்டிவிட முயன்றான். 

அந்தக் குறுவாள் ஆகாயத்தில் பறந்து கீழே விழ அதை ஓடி எடுத்தவனை இகழ்ச்சியாகப் பார்த்துச் சிரித்தாள் மாதங்கி. 

“ஓ … வாள் சுழற்றுவதில் நீ கெட்டிக்காரிதான் . ஆனால் அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத்தான் எரியும் உன் வீரத்தை நான் மதிக்கிறேன் . நீ மட்டும் சம்மதித்தால் எனது பத்தினியாக இருப்பதற்கு நான் உத்தரவிடுகிறேன் . அந்த வாளை கீழே போட்டுவிட்டு என்னோடு கலந்து விடு . அந்தத் தகட்டுடன் நாம் இந்த உலகத்தில் ஏகச் சக்கரவர்த்தியாக திழலாம் .” 

அவனின் கூற்றைக் கேட்டவள் அருவருப்பு அடைந்து ” சீ மூடா …! எனை யாரென்று நினைத்தாய். என் பதி இந்த உலகாளும் உத்தமன். 

உன் கீழ்த்தரமான வார்த்தைக்கே உன் நாவை வெட்டவேண்டும். 

இந்த உலகில் வாழவே தகுதி இல்லாதவன் நீ . போ… செத்துப்போ . இந்த உலகம் உனக்குத் தேவையில்லை. “, எனக் கூறியவள் வாளை அவன் நெஞ்சுக்கு நேராகப் பிடிக்க, 

சட்டென்று அவன் அவளை வளைத்துப் பிடித்தவன் அவள் முதுகில் இருந்த குழந்தையை கையிலெடுத்து தன் தலை மேல் வைத்துக் கொண்டான் . 

ஒரு கணத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் அதிர்ச்சியடைந்தவள் தன் குழந்தை அவன் கையிலிருப்பதை அறிந்து ‘ ஆ’ வென அலறினாள் . ‘பாதகா … என் மகவை என்னிடம் கொடுத்துவிடு . இல்லையேல் நீ கழுகுக்கு இரையாக நேரிடும் .” என்று ஆவேசமாக கதறியவாறு வாளை கையில் சுழற்றி அவன் கைகளைத் தட்டிவிட அவன் தோள்பட்டையில் ஆழமாக பதிந்த வாளை லாவகமாக எடுத்து வீசியெறிந்தவன் தலைமேல் வைத்திருந்த குழந்தையை வீசி எறிய, 

குழந்தை வீல் என அலறியபடி தரையில் தலை சிதறிப் போனது. 

இதை அதிர்ச்சியுடன் பார்த்த மாதங்கி அலறியபடி குழந்தை விழுந்த இடத்திற்கு ஓட, 

அவளை வளைத்துப் பிடித்தவன் தன் குறுவாளால் அவள் வயிற்றில் சதக் எனக் குத்த 

“மாபாதகா … நீ என் பதியிடமிருந்து தப்பமுடியாது. உனக்கு அந்தத் தகடு கிடைத்தாலும் அது உனக்கு பயன்படாமல் போகட்டும்.” 

என்று கூறியவாறே தரையில் சரிய 

மீண்டும் ஒருமுறை அவள் வயிற்றில் குத்துவாளால் குத்த, 

“நிர்மலா … நீ … நீ .. இவனை … பழி .. பழி ” எனக் கூறியவாறே கீழே சுருண்டு விழ, 

அதே நேரம் மாளிகையின் வெளிவாசல் பெருங்கதவை குதிரையிலிருந்தபடியேவேகமாகத் திறந்து வந்த நிர்மலேஷ்வரன் தன் முன்னால் தலை சிதறி விழுந்து கிடந்த தன் சிசுவையும், 

இரத்தவெள்ளத்தில் விழுந்துகிடந்த தன் காதல்மனைவியையும் கண்டு உடல் துடித்து மனம் பதறியவன் ஒரே வேகத்தில் குதிரையிலிருந்து குதித்து ” மாதங்கீ….!” எனப் பெருங்குரலெடுத்து ஓடிவந்தான் . 

கீழே தலை சாய்ந்துக் கிடந்தவளை தன் மடிமீது போட்டுக் கொண்டவன் ” ஐயோ … மாதங்கி… என் செல்வங்களே … என் உயிரே … என் பிறவிப்பயன்களே .. 

நீங்கள் இருவரும் எனை விட்டே நீங்கி விட்டீர்களா …? ஏன் … ஏன் இந்த நிலை உங்களுக்கு . நான் செய்த வினைப்பயனோ உங்களை என்னிடமிருந்து பிரித்தது . என் தெய்வமே …! 

ஏன் என் உயிர்களை என்னிடமிருந்து பிரித்துவிட்டாய்” என்று கதறியவன் ஒரு நொடி தலைத் தூக்கிப் பார்த்தவன் கண்ணெதிரே தலைவிரி கோலமாக குள்ளமான ஒருவன் இரத்தக்கறையுடன் சிரித்தபடி நின்றிருப்பதைப் பார்த்து கண்கள் சிவந்தவனாய் சட்டென்று எழுந்தவன் ஒரே எட்டில் கொத்தாக அவன் தலைமயிரைப் பிடித்தவன் 

“ஏ … கருநாகப்பாம்பே … என் குலக்கோடிகளை வேறோடு வெட்டிச் சாய்த்தவனே … ஏனடா … ஏன் இந்தப் பாதகச் செயலைச் செய்தாய் .? யார் உனை அனுப்பியது . உன்னோடு அவனையும் ஓன்றாக பாதாளலோகம் அனுப்பி விடுகிறேன்.” 

அவன் கழுத்தை வளைத்து கத்தியை அங்கு வைத்து அழுத்தியவன் ” சொல் … யார் நீ . எதற்காக இந்த கொடுஞ் செயலைச் செய்தாய் .? சொல்” 

எனக் கர்ண கடூரமாக ஆவேசம் வந்தவனைப் போல் கத்த அவனிடமிருந்து தப்பிக்கத் திமிறிய மாயவனின் கழுத்தில் பளீரென்று ஒரு கையால் தட்ட வர்மக்கலை வேலை செய்தது. 

‘ஆ’ வென்று அலறியவன் தலையைத் தூக்க முடியாமல் கதறினான். 

“எனை விடு … எனை விடு என்று அவன் கத்த, ‘இப்போது சொல்லப் போகிறாயா இல்லையா …? ரௌத்திரமானான் நிர்மலேஷ்வரன் . 

‘இப்போது தகட்டைப் பற்றிக் கேட்டாலும் அது கிடைக்காது . இவன் இல்லாத நேரத்தில் அரண்மனைக்குள் நுழைந்து தேடிப் பார்த்து விடவேண்டவேண்டியதுதான் . இப்போது எதையாவது சொல்லி இவனிடமிருந்து 

தப்பித்தால் போதும் . இவனிடம் என் மந்திரசக்தி பயன்படாது . இவன் சித்தரின் சீடனாக வரம் பெற்றவன்’ என நினைத்தவன் உடனடியாக 

“நிர்மலேஷ்வரா ..! என்னை யாரும் தூண்டி விடவில்லை. என் நண்பன் விஸ்வேஸ்வரனின் மரணத்திற்கு பழி வாங்கவே இத்தனை காரியம் நிகழ்த்தி விட்டேன் . என்னை மன்னித்துவிடு !” அவன் கூறிய விசயங்களை உள்வாங்கிய நிர்மல்,

“ஓ ஓ … நீ மாயவனா … உன்னைத்தானே நான் தேடிக் கொண்டிருந்தேன் . பாதகா … எந்த களங்கமும் இல்லாதிருந்த என் தம்பியின் மனதில் விழ விதையைத் தூவி அவனை இந்த உலகத்தைவிட்டே போகவைத்ததுமில்லாமல், அவன் உன்னை சந்திக்க வந்ததினால்தானே கர்ப்பிணிப் பெண்ணின் சாபத்தைப் பெற்று இந்த ஜமீனுக்கு வாரிசுகளே இல்லாமல் செய்து விட்டாய். 

உனை இனி விட்டு வைத்தால் இந்த மங்களாபுரி புல் பூண்டுகூட முளைக்காம போய்விடும் . நீ இப்பொழுதே மரணித்துவிடு !” எனக் கூறியவாறு வாளை எடுக்க தன் இடையில் தேடியவன் அது அங்கு இல்லாததைக் கண்டு சுற்றுமுற்றும் பார்க்க, 

அது தன் மனைவி கிடந்த இடத்தில் விழுந்திருப்பதைப் பார்த்தான். 

இதுதான் தக்க சமயமென்று அவனிடமிருந்து திமிறி தப்பி ஓடினான் மாயவன் . 

ஒரே எட்டில் தன் வாளை எடுத்தவன் தன் வாளைச் சுழற்றி ஓடுபவன் மேல் எறிய அது சரியாக அவன் காலை வெட்டி விட சரியாக வெளிக் கதவு இருக்கும் இடத்தில் துடித்து கீழே விழுந்தான் மாயவன். 

அவன் அருகில் வந்த நிர்மல் கொத்தாக அவன் முடியைப் பிடித்து தூக்கி, 

“எங்கே சென்று விடுவாய் …? இனி இந்த உலகத்தில் நீ இருந்தால் எத்தனை உயிர்களின் இரத்தத்தை குடிப்பாயோ? 

வேண்டாம் உனக்கு இந்த உலகம் . உன் நண்பனைத் தேடிச் சென்று விடு .” என்று கூறியவாறே தன் வாளால் அவன் தலையை வெட்டி தூக்கி எறிந்தான். 

உடல் துடிக்க சிறிது தூரத்தில் இருந்த தலை வாயசைத்து ” நிர்மலா …! எனை இவ்வுலகத்திலிருந்து விலக்கி விட்டதாக மமதைக் கொள்ளாதே ! என் உடல் மண்ணில் அழுகினாலும் என் ஆத்மா அடங்காது. இந்த மாளிகையில் இனி யாரையும் வசிக்கவிடுகிறேனா பார். 

அடே… நயவஞ்சகா … ! இனி எத்தனை ஜென்மம் நீ எடுத்தாலும் உன் உயிர் என் வசமே. இச்ஜென்மம் அந்த சித்தனால் காப்பாற்றப்பட்டது உனக்கு. 

இங்கே இனி கோட்டான்களும் பாம்புகள் வசிக்கும் கூடாரமாகத் திகழட்டும்.” 

அவன் பேசுவதைக் கேட்ட நிர்மலேஷ்வரன் தனது காலால் பந்தை உதைப்பதுப் போல் அவன் தலையை உதைக்க அது நெடுந்தொலைவுச் சென்று விழுந்தது . மீண்டும் தன் உறவுகள் கிடக்கும் இடத்திற்கு வந்தவன் கதறிகதறி அழத் தொடங்கினான். 

தன் உறவுகளையெல்லாம் இழந்தவன் அந்த வேகத்திலேயே கோபமாகச் சென்று, போரிட வந்த சீர்மாறனை வென்று அந்த ஆற்றிலேயே அவனைக் கொன்று மணலில் புதைத்தான். 

அதன் பிறகு அந்த மாளிகை வாசத்தை விட்டு வெளியே வந்து வேறோரு சிறிய மாளிகையில் இருந்து ஆட்சி செய்தவன் இரண்டு வருடங்களுக்குமேல் அவனால் நிம்மதியாக இருக்க முடியாது போகவே ஜமீனை தனது கப்பம் கட்டும் அரசர் வசம் ஒப்படைத்து விட்டு பர்வதமலை சித்தரை தேடிச் சென்று அவரின் சீடனாக சில வருடங்களை கழித்தவன் அங்கேயே சமாதியடைந்தான் . பிரபு தன் கையிலிருந்த இரு தகடுகளையும் கடைசிப் படிக்கட்டில் ஏதோ யோசித்தவாறே வைத்துவிட பொக்கிசங்களின் மேல் ஊர்ந்துக் கொண்டிருந்த பாம்புகள் சுவற்றில் இருந்த துவாரங்கள் வழியே வெளியேறிக் கொண்டிருப்பதை எதேச்சையாகப் பார்த்தவன் அதிர்ச்சியில் சந்தோசமடைந்தான். 

சிறிது நேரத்தில் எல்லாப் பாம்புகளும் விலகிவிட இப்போது பொக்கிசங்கள் நன்றாகவே தெரிந்தது. மெல்ல அதன் அருகில் சென்றவன் அந்த பொக்கிசத்தினை கையால் அலைந்தான் . 

அதன் நடுவில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய தங்கத்தினால் செய்யப்பட்ட சூலாயுதம் இருப்பதைப் பார்த்தவன் அதை மெல்ல எடுத்தான். 

மீண்டும் அதை எடுத்துக் கொண்டு மேலேறி வந்தான் . மாளிகையின் வாசலில் வந்தவனை முகத்தை வருடுவது போல காற்று வருட கண்மூடி அந்த இன்பத்தை ரசித்தான் . 

‘நிர்மலா … நல்லது செய்தாய் . விரைந்து அதோ முதலில் இருக்கும் மரத்தில் இந்த சூலாயுதத்தை சொருகிவிட்டு அதன் மேல் இரண்டு தகடுகளையும் வைத்துப் பிடித்துக் கொள் . மாயவன் அதிக உக்கிரத்துடன் காணப்படுகிறான். 

உன் கையில் சூலாயுதம் இருக்கின்ற நிலையில் உன்னை அவனால் ஒன்றும் செய்யமுடியாது. நேரமில்லை . சூரிய உதயம் முடிவதற்குள் நீ இதைச் செய்யவில்லையெனில் அவன் நிலாக்காலத்தில் வீரிய சக்திப் பெற்று விடுவான். 

செல்… துணிந்து மரத்தில் பாய்ச்சு வேலை !’ 

பிரபு வேகமாக மரத்தின் அருகில் செல்லும் வேளை காற்று சுழன்றடித்து அங்கிருந்த சருகுகளெள்ளாம் மேலே சுழன்று சுழன்று சுற்றியது. 

மரங்களெல்லாம் ஊழ்வினைக்காற்று வந்ததுபோல் காற்றில் திசைமாறி அலைக்கழிக்க, 

நரிகளும் நாய்களும் ஊளையிட, 

பறவைகள் தன் சிறகுகளை பயத்தினால் படபடவென்று அடித்தபடி பறக்க, 

வௌவால்களும் கூகைகளும் தங்கள் சிறகை பட்பட்டென்று சத்தத்துடன் மாளிகையிலும் வெளிப்புறத் தோட்டத்திலும் கிறீச் என்ற ஓசையுடன் அங்குமிங்கும் அலைக்கழிய பெருத்த ஊழிக்காற்று வந்ததுபோல் மாளிகை சுவர்களெல்லாம் சடசடவென்று இடிந்துவிழ ஆரம்பித்தது . பிரபு எதைப் பற்றிய சிந்தனை எதுவும் சிறிதும் இல்லாது அம்மரத்தை நெருங்கினான் .

– தொடரும்…

– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *