தந்திரம் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,542
கல்யாணிக்குக் கல்யாணம்.
எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற புதிய குடியிருப்பு.
புறப்படும் முன், பீரோவைத் திறந்து துணிமணிகளைச் சிதறியடித்தான்.
தேவையில்லாத காகிதங்களை வீடு முழுவதும் பறக்க விட்டான்.
‘என்னங்க…இப்பிடிப் பைத்தியம் போல நடந்துக்கிறீங்க..” என்றாள் மனைவி.
‘அடியே…நான் நல்லாத்தாதானிருக்கேன். இந்தப் பகுதியைப் பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். திருட்டுப் பயம் அதிகம்..
திருட வநபவன் இந்த சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே கொள்ளை போன இந்த வீட்டில் ஒன்றுமே கிடைகாது என
நினைத்துப் போயிடுவான். அதுக்குத்தான் இந்த தந்திரம்’ என்றான்-
கணவனை நினைத்துப் பெருமைப்பட்டாள்..!
– கோவில்பட்டி எஸ்.தங்கராஜ் (மே 2013)