வேஸ்ட் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,022
“என்ன அருணா இது, இப்படிச் சொதப்பிட்டியே?’ என்றான் கௌதம், மனைவியிடம்.
“என்ன சொல்றீங்க?’ என்றாள் அவள்.
“பின்னே? பர்த்டேக்கு டிரெஸ் எடுக்கப் போறேன்னு போய் எனக்குக் கண்றாவியான டிசைன்லே எடுத்திட்டு வநதிருக்கே.
பிள்ளைகளுக்காவது உருப்படியா எடுத்திருக்கியா?
தினேஷ் ஏற்கெனவே கலர் கொஞ்சம் கம்மி. அவனுக்கு எடுத்த சட்டையும் டார்க் கலர்லே… திவ்யாவுக்குக் காதிலே போடற
ரிங்ஸ் என்னடான்னா இத்தனை பெரிசா இருக்கு. எங்க ஆபீஸ்லே ரெண்டு மூணு நாளா ஆடிட் காரணமா கொஞ்சம் பிசியாயிட்டேன்ங்கறதாலே இப்படிப் பண்ணிட்டு வந்திருக்கியே?
சுருக்கமாச் சொல்றதுன்னா உன்னோட செலக்ஷன் எல்லாமே டோட்டல் வேஸ்ட் அருணா…’
“அப்படியா? நீங்களும் என்னோட செலக்ஷன்தான்கறதை ஞாபகம் வச்சுகிட்டுதானே பேசறீங்க?’ என்றாள் அவள், சலனமில்லாமல்.
– ஷேக் சிந்தா மதார் (மே 2013)
தொடர்புள்ள சிறுகதைகள்
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026