கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 14,416 
 
 

கழுத்துல பெரிய டால் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க …”தட்டுல தட்சிணை போடுங்கோ” ”தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும்.

பலரும் முகம் சுளித்தனர். …. ”ஏன்டி பங்கஜம். குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கார். அவர் ஓரே பையன் அமெரிக்காவூல செட்டில்ட, கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான். அப்படி இருந்தும்…குருக்கள் அல்பமா ”தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.

அடிப்போடி, ”காசேதான் கடவுளடா” ஆசாமி அவரு, கோவில் நடைசாத்தற நேரம், சீக்கிரமா பிரகாரம் சுற்றிட்டு கிளம்பலாம்” என்றாள் பங்கஜம்.

பிரகாரம் சுற்றிய பனி இருவரும் ஓரமாய் உட்கார்ந்தனர்.

அப்போது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோவிலுக்குள் நுழைந்து ”சாமீ” என அந்த குருக்களை அணுகி கொஞ்சம் தயங்கி நின்றான். .

”கேட்டு…கேட்டு வாங்கிய மொத்த தட்சிணை பணத்தையும் அவனிடம் அள்ளி கொடுத்து விட்டு, கோபாலு உனக்கு காலேஸ் பீஸ் கட்டற அளவுக்கு போதுமான பணம் சேர்ந்துடுச்சு , ஆதரவற்ற உன்னை படிக்க வைக்கறதுதான் நான் செய்யற பூஜை என்றார் குருக்கள்.

கல்யாணி, பங்கஜம் ஆகிய இருவர் மனதிலும் சற்று முன்பு தரிசனம் செய்த மூலவர் மறைந்து ”குருக்கள்” பளிச்சென பதிந்தார்

– 25-1-2016

Ashokan இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க...

2 thoughts on “தட்சிணை

  1. கதையை பதிவிட்டமைக்கு நன்றி, சிற்றிதழ்களில் வெளியான கதைகளையும் அனுப்பலாமா, சந்தேகத்தை தெளிவு படுத்த கோருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *