களையெடுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 4,478 
 

பதவி உயர்வுடன் கிடைத்த இடமாற்றக் கடிதத்துடன் அந்த வங்கியின் கடமைகளைபொறுப்பேற்பதற்காக வந்திருக்கின்றேன்,வாடிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள்,மற்றும் நிலுவைகள் பற்றிய விபரங்களை பரிசீலித்துக்கொண்டிருக்கின்றேன், குறைந்தது இன்னும் மூண்றுநாட்களின் பின்புதான் முகாமையாளரின் ஆசனத்தில் அமரலாம் என நினைகிறேன்,அதன் பின்னர்தான் ஏற்கனவே கடமையாற்றிக்கொண்டிருக்கும் முகாமையாளரை அவருக்கு கிடைத்திருக்கின்ற கிளைக்கு சென்றுவிடுவார்.

காலை பத்து மணி “சார் சுகமாக இருக்கிறீர்களா”தேனீர்கப்புடன் என் முன்னால் நின்றுகொண்டிருந்தான்அங்கு சிற்றூளியனாக கடமையாற்றும் அருதயன், ”ஆ ..அருதயன் நீ எப்படி சுகமாக இருகிறாயா” பதிலிக்கு நானும் அதே வினாவை அவனிடம்கேட்டு விட்டு “பறவாயில்லை” என்று சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் “ஆறிப்போய்விடும் சார் கெதியாகுடிங்கோ” என்று சொல்லிவிட்டு மற்றசக ஊளியர்களின் பக்கமாக சென்றுவிடுகிறான்.

பதினைந்து வருடன்களுக்கு முன்னர் நான் வங்கியில் சேர்ந்த புதிதில் அம்பாரை கிளைக்கு நியமனம் பெற்று வந்திருந்தபோது, அங்கு கடமையாற்றும் எல்லோரும் பெரும்பாண்மை இன சகோதரர்கள், எனக்கு அவர்களின் மொழி பேசத்தெரியாதுஆனால்பேசுவதைஓரளவு,புரிந்துகொள்வேன்,வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை புரியாமல் தடுமாறும்போதெல்லாம் கைகொடுப்பது இந்த அருதயந்தான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அருதயநாதனுடன் பழகிய அந்த நாட்கள்,ஆரம்பத்தில் அவரவர் பெயரைக்கொண்டு அழைத்துக்கொள்வோம் காலப்போக்கில் நான்..நீ…மச்சான்…என்று அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம், இன்று அவன் என்னை சார் போட்டு அழைக்கும் போது அவனின் மன நிலை எப்படி என்று என்னால் புரிய முடியாவிட்டாலும், எனக்கு மனதளவில் சங்கடமாகவேஇருந்தது, இருந்தபோதும் எனது பதவி நிலையால் ஏற்றுக்கொண்டேஆகவேண்டிய நிலை. அவன் பிறந்ததுவாழந்தது எல்லாம் அம்பாரையை அண்டிய பகுதியில்தான் அவனது குடும்ப உறவினர்கள் எல்லாம் ஒரு, சிறிய, கிராமமாக, வாழ்கின்றார்கள், அனேகமானவர்கள் அரசகாரியாலயங்களில்தான் சிற்றூளியர்களாக கடமையாற்றுகின்றார்கள், தாய் மொழி தமிழ் என்றாலும் சிங்களமொழி சரளமாக பேசுவார்கள்.

அருதயன் வேலைக்கு வரும்போது வெள்ளை நிறசேட்டும் நீளகாட்சட்டையும் அணிந்திருப்பான்,கண்டதும், சிற்றூளியரென்று, உடனே, எவரும், எடை போட முடியாது,அனேகமான நேரங்களில் முகாமையாளரின் அறைக்குள் அவனை காணக்கூடியதாக, இருக்கும், காரியாலவேலை, முடிந்தநேரங்களில், முகாமையாளரின் சொந்த வீட்டுவேலைகளையும் கவனிதுக்கொள்வான் இதனால் இவனுக்கு முகாமையாளரிடம் ஒரு தனி மதிப்பும் இருந்தது, அதை ஒரு மூலதனமாக வைத்துக்கொண்டு அவனுக்கு இணங்கிப்போகாத சக ஊழியர்களை பற்றி உண்மைக்குப்புறம்பான, கட்டுக்கதைகளை, முகாமையாளரிடம், அள்ளிவைப்பதும், அதனால் சிலவேளைகளில் முகாமையாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் சில முறண்பாடுகள் ஏற்படுவதுமுண்டு.

காலப்போக்கில் அருதயனுக்கு விளங்கப்படுத்தும் நிலைக்கு சிங்களமொழியில் நான் தேர்ச்சிபெற்றிருந்தேன், அதனால் எனக்கும் முகாமையாளருக்கும் இடையில் அருதயனின் மொழிபெயர்ப்பு வேலைக்கு இடமிருக்கவில்லை.

சில வேளைகளில் முகாமையாளரைப் பற்றி என்னிடம் பொய்யான, குறைகளை சொல்லி எனக்கும் முகாமையாளருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் அளவிற்கு, பலமுறை முயற்சி செய்து, தோற்று போயிருக்கின்றான அப்போதெல்லாம் அவனுக்கு புத்திமதி சொல்லியிருக்கின்றேன்” உங்களுக்கென்ன நீங்க இப்ப மனேஜர்ர ஆள் நான் எது சொன்னாலும் உங்களுக்கு புரியாது” என்று சொல்லி கொண்டு ஏதோ உத்தமன் போல நழுவிடுவான்.

நானும் முகாமையாளரும்அவரது அறைக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே தேவையில்ல்லாமல் நுழைவதும் “கூப்பிடாமல் உள்ளே வரக்கூடாது” என்று முகாமையாளர் அவனோடு கடிந்து கொள்வதுமுண்டு.

“இவனோடு சற்று கவனமாக இருக்கவேண்டும் சார் அளவிற்கு மீறினால் தலைகுமேல் ஏறிவிடுவான்”

”நானும் கவனித்துதான் வருகிறேன் சரியான கோள்மூட்டி வேறு ஏதாவது கிளைக்கு, மாற்றும்படி, மாவட்ட முகாமையாளருக்கும், அறிவித்திருக்கின்றேன்” என்றார் முகாமையாளர்.

அதன் பின்னர் ஒருவாரத்தால் தூர இடத்திற்கு மாற்றலாகியிருந்தான், நானும் சில மாதங்களின்பின்நானும்கொழும்பிற்குமாற்றம்கேட்டுசென்றுவிட்டேன்.இப்போதுதான் சொந்த ஊருக்கு பதவிஉயர்வுடன் வந்திருக்கின்றேன்,அருதயனைத்தவிர எல்லோரும் எனக்கு அறிமுகம் இல்லாத புது முகங்கள்,நான் ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அருகில் வந்து ஒவ்வொருவரைப்பற்றியும் சில அறிமுக குறிப்புகளை சொல்லிவிட்டு சென்றுவிடுவான், ”அவள் அப்படித்தான் சார் வருகிற முகாமையாளர்கள கைக்குள்ள போட்டுகொள்வாள் ஜாக்கிறதயாக இருகவேண்டும் சார்”

“ஓ..அப்படியா” இவன் இன்னும் மாறவேயில்லை என எனக்குள்ளேயே நினைதுக்கொள்கிறேன்,அவன் சொன்ன அவளும் ,அவன்களும் ஏதோ அவனது பார்வையில் பிழையாகவும் குற்றமுள்ளவர்களாகவுமே இருந்தார்கள்.

”இது உங்கள் வங்கி எல்லோரும் ஒற்றுமையாகவும் மனவிருப்பத்துடனும் வேலைசெய்தால்தான் முன்னேற்றம் அடைய முடியும்,எனக்கு உன்களை பற்றி பெரிதாக தெரியாவிட்டலும் எல்லோரைப்பற்றியும் சுமார் பதினைந்து வருடன்களுக்கு முன் என்னோடு ஒன்றாக வேலைசெய்த அருதயன் அறிமுகபடுத்தியிருந்தார், அவர் அன்று எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கின்றார், மாறவே இல்லை அதனால்தானோ என்னவோ இன்னும் அவரது பதவியில் கூட மாறாமலே இருக்கின்றார்”

நான் சிலேடையாக கூறியது அவனுக்கும் புரிந்திருக்கவேண்டும், அவனது முகம்மாறியதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சக ஊளியர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே. அவனையும் அவதானித்தார்கள்.

அடுத்த நாள் அவன் சொன்ன அவள் என்முன்னால் அமர்ந்து, அவனை உடனடியாக இடமாற்றும்படியான எனது வேண்டுகோள் கடிதத்தின் விபரங்களை மாவட்ட முகாமையாளருக்கு அனுப்புவதற்கா சிறு குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள்.

(கற்பனை)

– தமிழன் வாரஇதழ், 09/04/22

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *