கூகிள் பிறந்த (கற்பனைக்) கதை
கதையாசிரியர்: நஞ்சப்பன் ஈரோடு
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
அறிவியல் புனைவு
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 5,861
1997 ஆண்டில் ஒரு அழகான கோடை மாலை. ஸ்டான்போர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் செர்ஜி பிரின்னின் தங்கும் அறையில் லேரி பேஜ்ஜூம் செர்ஜி பிரின்னும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
லேரி கேட்டான். “நம்முடைய MS ப்ராஜெக்ட் ஒர்க்கிற்கு ஏதேனும் ஐடியா கிடைத்ததா?”
“ம்ஹ்ம், சுவாரஸ்யமான ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை.” என்றான் செர்ஜி பெருமூச்சு விட்டுக் கொண்டே.

“இரவு டின்னர் சாப்பிட்டுக் கொண்டே ஐடியாவை யோசிக்கலாமா?”
“நிச்சயமாக. டின்னருக்கு எங்கே போகலாம்?”
“ஏதாவது நல்லதொரு இந்தியன் உணவகத்துக்கு போகலாமென்று நினைக்கிறேன்.”
“ஓகே. பக்கத்தில் எங்காவது இந்தியன் உணவகம் இருக்கிறதா என்று இணையத்தில் தேடுகிறேன்.”
பத்து Yahoo தேடுதல்களுக்குப் பிறகு, செர்ஜி தளர்ந்து சரிந்தான். “அட ராமா. இந்த தளத்தில் ஒன்றைத் தேடி கண்டு பிடிப்பதற்குள் உயிர் போகிறது!”
ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு லேரி கேட்டான், “நான் நினைப்பதையே நீயும் நினைக்கிறாயா?”
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |
